Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி!

Posted: 19 Aug 2016 12:54 PM PDT

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உறவுகளுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!

தளத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

இனிமேல் தினமும் ஈகரையில் இணைவேன், ஆனால் முன்பு போல் அதிக நேரம் இணைந்திருக்க முடியாது! நக்கல் நாயகம்

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Posted: 19 Aug 2016 12:37 PM PDT

அனைவருக்கும் மிக்க நன்றி ! உங்கள் அனைவரின் அன்பான பிரார்ததனைகளுக்கு மிக்க நன்றி உறவுகளே!.... கண் ஆபரேஷன் நல்லபடி நடந்து முடிந்தது. . . இன்று இரண்டாவது செக் அப் செய்து வந்தோம், படிப்பதற்கு மட்டும் இனி கண்ணாடி போதும் என்று டாக்டர் சொன்னார் , கண்ணாடிக்கு எழுதியும் கொடுத்து இருக்கிறார். என்றாலும் தொடர்ந்து இங்கு இணைந்து இருக்க இன்னும் சிறிது காலம் ஆகும் என்று எண்ணுகிறேன். அன்பான Guest, உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்!

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Posted: 19 Aug 2016 12:29 PM PDT

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! எனக்கு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது .............கடந்த 15 நாட்களாக படிப்பது கொஞ்சம் கலங்கலாக தெரிகிறது என்று இன்று check up காக சென்றோம் ......டாக்டர் check up செய்து, வரும் ஞாயிறு காலை ஆபரேஷன் செய்வதாக சொல்லிவிட்டார்.............. எப்படியும் குறைந்தது 15 -20 நாட்கள் கழித்து தான் என்னால் இங்கு வர இயலும் என்று தோன்றுகிறது. அன்புடன், கிருஷ்ணாம்மா

கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்

Posted: 19 Aug 2016 11:04 AM PDT

நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம சிந்தையோடு அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு அதனுள் ஆர்வத்தோடு நுழைந்தான். சத்திரத்து நிர்வாகி அவனை வரவேற்று உட்கார வைத்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தான். ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை ...

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Posted: 19 Aug 2016 09:56 AM PDT

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து


பெட் மின்டனில் இறுதி சுற்றில் விளையாடிய சிந்து முதல் செட்டில் ஜெயித்தாலும் 2,3 செட்டில் தோற்று ,வெள்ளிப் பதக்கம் வென்றார். .
வாழ்த்துவோம் அவரை அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

எதை எழுத

Posted: 19 Aug 2016 09:01 AM PDT

கவிதை எழுத எனக்கும் ஆசைதான், ஆனாலும் பேனா கையில் பிடித்தவுடன், அரசியலா, சமூக கருத்தா, காதலா எதை எழுத என்று யோசிக்கவே நேரம் சரியாக இருக்கிறது!! அரசியலை பாடினால் எங்கிருந்து அம்பு வரும் யார் எய்தவர் என்று தெரியாது!! சமூகத்தை பாடினால் ஜெயிலுக்கு போகணும், ஆம் இங்கே சமூகத்தின் அவலத்தை கூறினால் குற்றவாளி!! காதலை பாடினால் காதல் கிறுக்கன் என்றொரு பெயர் வருகிறதே!! ஆக, கவிதை எழுதுவது பெரிய விசயமல்ல அறிவுள்ள எல்லோரும் அருமையாய் எழுதலாம், ஆனால் எதை எழுத ஒரு கவியாய் ...

பாரம்பரிய மருத்துவம் வீடியோ தொகுப்புகள் தேவை

Posted: 19 Aug 2016 08:58 AM PDT

ஜீ தமிழ் டிவி - பாரம்பரிய மருத்துவம் - மருத்துவர் அவர்களின் 2015-2016 வீடியோ தொகுப்புகள் தேவை.

பெண்ணே நீ சிந்திக்க

Posted: 19 Aug 2016 07:35 AM PDT

பெருநாளைக்குப் புதுத்துணி வாங்க குடும்பத்தோடு துணிக்கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் சகோதரர். அப்போது அங்கு வந்த அவரது நண்பர், "அந்தக் கடைக்கா போற? புதுக்கடையாச்சே…. ரொம்ப நவநாகரீகமா வேற இருக்கு… பொம்பளைப் புள்ளைகளை வேற கூட்டிட்டுப் போற, ட்ரஸ்ஸை அங்க வச்செல்லாம் போட்டுப் பாக்கவேணாம்.  எங்கப் பாத்தாலும் ஒரே கேமராவை ஒளிச்சி வச்சு படம் புடிச்சி, பணங்கேட்டு மிரட்டுற கதையாத்தான் இருக்கு" என்று உண்மையான அக்கறையோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்!! கடைகளில் மட்டுமல்ல, தங்கும் ஹோட்டல் அறைகளில், தியேட்டர், ...

ரியோ ஒலிம்பிக்கில் நடந்த அசம்பாவிதங்கள்.

Posted: 19 Aug 2016 07:17 AM PDT

முதல் நாள் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்த போது சாலையில் நின்ற ஒருவர் ஒரு வாளி தண்ணீரை ஊற்றினார். உடன் அவர் கைது செய்யப்பட்டார். இன்னொருவர் ஓடிச் சென்று தீபத்தை கைப்பற்ற முனைந்த போது பாதுகாவல் படையினரால் அகற்றப்படடார். ஒலிம்பிக் தீபத்தை கையேந்தி வந்த போது, ஜாகுவார் -புலி- ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது. கைப்பந்தாட்டத் திடல் நடக்கும் திடலுக்கு அருகே உள்ள கடற்கரையில் பெண் ஒருவரின் உடற் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த இடத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. காயம் எதுவும் ...

மணிபல்லவம் நூல் தேவை

Posted: 19 Aug 2016 05:29 AM PDT

மணிபல்லவம் நூல் தேவை. பகிரவும். நன்றி.

கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் புத்தகம் அதன் உரையுடன் கூடிய புத்தகம்

Posted: 19 Aug 2016 04:31 AM PDT

அய்யா,

கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம்  அதன் உரையுடன் கூடிய புத்தகம் எனக்கு தேவைப்படுகிறது.
தயவு செய்து எந்த பதிப்பு நன்றாக இருக்கும் மற்றும் அது எங்கு கிடைக்கும்  என்பதை கூறுமாறு தங்களைக்
கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

ரா.திருமுருகன்

வந்தாச்சு தமிழ்நாடு பிரிமீயர் லீக்: கோப்பையை அறிமுகப்படுத்திய தோனி!

Posted: 19 Aug 2016 02:23 AM PDT

- தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கோப்பையை, இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் தோனி சென்னையில் இன்று அறிமுகபப்டுத்தினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. சென்னை, மதுரை, தூதுக்குடி உள்ளிட்ட எட்டு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன. இந்த கோப்பைக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ...

புத்தகங்கள் நல்ல நண்பனுக்கு அடையாளம்

Posted: 19 Aug 2016 01:53 AM PDT

சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நூலக விழாவில், புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:- நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் நூலக விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தற்போதைய நிலையில் வெற்றி பெற்றவர்களின் நூல்களை படிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அந்த சாதனையாளர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பாக எந்த அளவுக்கு தோல்வியைத் தழுவினார்கள் என்பதையும் அறிய வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும் ...

சாதனைக்கு வயதில்லை

Posted: 19 Aug 2016 01:14 AM PDT

- சாகாவரம் பெற்ற இலக்கியங்களை படைத்தபோது ரவீந்திரநாத் தாகூரின் வயது 60க்கும் மேல். – மராட்டியர்களையும், சீக்கியர்களையும் ஜாட்டுகளையும் போரில் வென்றபோது ஔரங்கசீப்புக்கு வயது 85. – வங்க மன்னன் துக்ரில் கானை நேருக்கு நேர் சண்டையிட்டுக் கொன்றபோது அடிமை வம்சத்தைச் சேர்ந்த அரசன் பார்பனுக்கு வயது 80. – ——————–

வள்ளலார்

Posted: 19 Aug 2016 12:12 AM PDT

தலை ஏழு வள்ளல்கள்: – சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன். – —————————– – இடை ஏழ வள்ளல்கள் : - அந்திமான், சிசுபாலன், அக்ரூரன், வக்கிரன், சந்திமான், கர்ணன், சந்தன். – ——————————— – கடை ஏழு வள்ளல்கள் : - பாரி, எழிலி, நள்ளி, ஆய், மலையன், ஓரி, பேகன். – ————————————- - இவர்களில் யாருக்கும் வள்ளலார் என்று பேர் கிடையாது. ராமலிங்க சுவாமிகளுக்குத்தான் அந்தப் பெரும் பேர் கிடைத்தது. ஏன்? அவர்களெல்லாம், அள்ளிக் கொடுத்தது பொருள். அழியக்கூடியது. ...

வினா விடைகள் – தெரிந்துகொள்வோம்

Posted: 18 Aug 2016 11:24 PM PDT

– "TNPSC" வினா விடைகள் – தெரிந்துகொள்வோம் — 1. நம்முடலில் காது,மூக்கு, தொண்டை இவற்றையிணைத்து காற்றழுத்தம் நிலைபெற உதவும் குழாய்கள் எவை? – எஸ்டேஷியன் குழாய்கள். – ———————————————– – 2. மை நிரப்பி எழுதக் கூடிய பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்? – திரு. வாட்டர்மேன். – ———————————————— – 3. தாவரங்களுக்கும் உயிருண்டு என்றறிந்தவர் யார்? – - டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ். – —————————————————- – 4. சர்க்கோஃபேகஸ் என்பது என்ன? – கல்லாலான சவப் பெட்டி – ———————————————- – 5. மனித ...

ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Aug 2016 10:25 PM PDT

தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு- தர நிர்ணய சட்டத்தின்படி, இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகத்தின் பெயர் இல்லை. இருப்பினும், பக்ரீத் பண்டிகைக்காக தமிழகத்துக்கு கொண்டு வந்து ஒட்டகங்கள் வெட்டப்படுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் குற்றம் என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் உள்ளிட்ட பலர் ...

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்

Posted: 18 Aug 2016 10:22 PM PDT

விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி, இணையத்தில் உள்ள தளங்களைப் பார்வையிடுவதுடன், பயனுள்ள வேறு பல வசதிகளையும் அனுபவிக்கலாம். இந்த வசதிகள் பல்வேறு வகையானவை. கூடுதல் பயன்களைத் தருவதுடன், நம்முடைய நேரத்தையும் இவை மிச்சப்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காணலாம். டேப்களை பின் செய்திடுக – குரோம் பிரவுசரில் பல இணைய தளங்களைத் திறந்து இயங்கிக் கொண்டிருக்கையில், எந்த இணைய தளம், எந்த டேப்பில் திறக்கப்பட்டுள்ளது ...

மூலிகை விடுகதைகள்

Posted: 18 Aug 2016 10:06 PM PDT

--- 1- பித்தத்தை தணிப்பதில் இவனை மிஞ்ச ஆளில்லை யார் அவன்? - 2- அட்டகாசமான மணத்துக்குச் சொந்தக்காரி அஜீரணத்தைப் போக்கும் அரசி- அவள் யார்? - 3) மஞ்சள் காமாலை மட்டுமல்ல, மன நலக்கோளாறை   சரி செய்வேன் - நான் யார்? - 4) தோல் நோய் போக்குவேன், குப்பை மேட்டுக் குன்றிமணி- நான் யார்? - 5) மணப்பெண் கைகளை அழகாக்குவேன் -சேற்றுப் புண்ணுக்கும் மருந்தாவேன் - நான் யார்? - 6) சமையலுக்கு உதவும் மணமான தக்காளி, வாய்ப்புண்ணுக்கும் மருந்தாவேன்- நான் யார்? - 7) நெய்யில் வதக்கித் தந்தால், நெஞ்சு ...

வேலன்:-இணையம் மூலம் பண்பலை பாடல்களை கேட்க.

Posted: 18 Aug 2016 09:56 PM PDT

கணிணியில் பணிபுரியும் சமயம் வேலைபளு தெரியாமல் இருக்க பாடல்கள் கேட்போம். தனியாக பண்பலை பா டல்களை கேட்காமல் கணிணியின் மூலமாகவே  பாடல்கள் கேட்க இந்த இணையதளம் உதவுகின்றது. இணையம் ;மூலம் பண்பலை மற்றும் பாடல்களை கேட்க இங்கு  கிளிக் செய்யவும்.இதில் இணையதளம ;மூலம் பதிவிறக்கம் செய்தபின் கிளிக் செய்திட உங்களுடைய ப்ரவ்சரை தேர்வு செய்யவும். ப்ரவ்சரின வலது மூலையில் இதனுடைய ஐகான் வந்து அமர்ந்துகொள்ளும்; அதனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு Favorites.Facorite ...

ரக்‌ஷாபந்தனாம்...உஷாரா இருங்க மக்கா!

Posted: 18 Aug 2016 09:39 PM PDT

- இன்னிக்குப் பெண்களெல்லாம் பல ஆண்களுக்கு பல்பு கொடுத்துக் கலங்கடிக்கும் தினம். அட.. அதான் பாஸ் ரக்ஷாபந்தன். இன்னிக்கு திடீரெனப் பாசத்தைக் கொட்டி கதறவைக்கும் இந்தப் பெண்களைப் பார்த்து எப்படியெல்லாம் பதறவேண்டியிருக்கு பாருங்க ஃப்ரெண்ட்ஸ்… * ஆண்கள், பெண்களிடம் கையில் ரோஜாப்பூவைக் கொடுத்துக் காதலிப்பதாகச் சொல்லிக் 'கிலி' கிளப்ப காதலர் தினத்தைத் தேர்ந்தெடுத்தால், தங்களைக் காதலிப்பதாகப் பின்னால் சுற்றும் ஆண்களுக்கு ஆப்படித்து ஆஃப் செய்வதற்காகவே (dialogue courtesy : கேப்டன்) பெண்கள் ...

புத்தகங்கள் நல்ல நண்பனுக்கு அடையாளம் ...

Posted: 18 Aug 2016 09:36 PM PDT

சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நூலக விழாவில், புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:- நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் நூலக விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தற்போதைய நிலையில் வெற்றி பெற்றவர்களின் நூல்களை படிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அந்த சாதனையாளர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பாக எந்த அளவுக்கு தோல்வியைத் தழுவினார்கள் என்பதையும் அறிய வேண்டும். ஒவ்வொரு ...

ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Aug 2016 09:35 PM PDT

தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு- தர நிர்ணய சட்டத்தின்படி, இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகத்தின் பெயர் இல்லை. இருப்பினும், பக்ரீத் பண்டிகைக்காக தமிழகத்துக்கு கொண்டு வந்து ஒட்டகங்கள் வெட்டப்படுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் குற்றம் என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் உள்ளிட்ட ...

தமிழில் யுனானி மருத்துவப் பாடங்கள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Aug 2016 08:17 PM PDT

உருது மொழியில் உள்ள யுனானி மருத்துவப் பாடங்களை விரைவாகத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 மாவட்ட மருத்துவமனைகள், 8 தாலுகா மருத்துவமனைகள், 27 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 24 உதவி மருத்துவ அதிகாரிகளை நேரடியாகத் தேர்வு செய்வது தொடர்பாக 2012 நவம்பர் 16-இல் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பாணை வெளிட்டது. இதில் 4 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 7 இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 10 இடங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், ...

ரியோ ஒலிம்பிக்:- இன்றைய செய்திகள்

Posted: 18 Aug 2016 08:14 PM PDT

காலிறுதியில் ஸ்ரீகாந்த்! - - யோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையை சுற்றில் 21-19, 21-19 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஜோர்சென்சனை வீழ்த்தினார். இதன்மூலம் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!

Posted: 18 Aug 2016 08:13 PM PDT

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இன்று மாலை திருச்சி வந்த விமானத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று மாலை புறப்பட்டது. திருச்சி விமான நிலையத்தை இந்த விமானம் அடைந்த பொழுது, ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. அப்பொழுது அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யபட்டது. இதன் மதிப்பு ரூ.1.25 கோடி ஆகும். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™