Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தலில் ஜெ., - ரூ.24.55 லட்சம்; கருணாநிதி - ரூ.19 லட்சம் செலவு இவ்வளவுதானாம்!* வேட்பாளர்கள் சமர்ப்பித்த கணக்கை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Posted: 18 Aug 2016 10:44 AM PDT

சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சமர்ப்பித்த, தேர்தல் செலவு கணக்கு விபரத்தை, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமின்றி, எல்லா தலைவர்களும் மிகக் குறைந்த தொகையையே, செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, 24.55 லட்சம் ரூபாய்; கருணாநிதி, 19 லட்சம் ரூபாய், செலவு கணக்கு காண்பித்துள்ளனர். அதை பார்க்கும் போது, 'உண்மையிலேயே இவ்வளவுதானா' என, கேட்க தோன்றும் அளவுக்கு உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலுக்கு, ஏப்., 29ல் மனு தாக்கல் துவங்கியது; மே, 16ல் தேர்தல் நடந்தது; 19ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. சட்டசபை ...

'கூட்டணியில் சேர்க்க வேண்டாம்' : விஜயகாந்துக்கு எதிராக திரும்பும் பா.ஜ.,

Posted: 18 Aug 2016 10:49 AM PDT

'தமிழகத்தில் உருவம் இழந்து நிற்கும், தே.மு.தி.க.,வுடன், உள்ளாட்சி தேர்தலில், எக்காரணம் கொண்டும் கூட்டணி சேரக் கூடாது' என, பா.ஜ., தொண்டர்கள், கட்சித் தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரிய ஓட்டை : தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், மிகுந்த வற்புறுத்தலின் காரணமாக, தமிழக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, விஜயகாந்த் போட்டியிட்டார்; பா.ஜ., கூட ஓரிடத்தில் வெற்றி பெற்றது. ஆனால்,
அனைத்து இடங்களிலும், தே.மு.தி.க.,தோல்வியை தழுவியது; அதன் ஓட்டு வங்கியிலும், பெரிய ஓட்டை விழுந்தது. பலவீனத்தை உணராமல், பா.ஜ.,வை ...

மத்திய அமைச்சர் மீது ராணுவத் தளபதி 'பகீர்: திட்டமிட்டு பழிவாங்கியதாக குற்றச்சாட்டு

Posted: 18 Aug 2016 10:56 AM PDT

புதுடில்லி:''ராணுவ தலைமை தளபதியாக இருந்த, தற்போதைய மத்திய அமைச்சர், வி.கே.சிங், எனக்கு பதவி உயர்வு கிடைக்கக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டு, என் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறினார்,'' என, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக், சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளார்.

ராணுவ தலைமை தளபதியாக உள்ள ஒருவர், தனக்கு முன், அந்தப் பதவியில் இருந்தவர் மீது பகிரங்கமாக புகார் கூறியது இதுவே முதல் முறை.தடை விதித்து...: ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பணி யாற்றி ஓய்வு பெற்ற ரவி தஸ்தானே என்பவர் சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கு தொடர்ந்துள் ளார்; அதில் அவர் ...

கொள்கைகளில் சமரசம் செய்யக்கூடாது: பிரதமர் மோடி பேச்சு

Posted: 18 Aug 2016 12:06 PM PDT

புதுடில்லி: பா.ஜ., தொண்டர்களால் வளர்ந்த கட்சி எனவும், எப்போதும்நமது கொள்கைகளில் சமரசம் செய்யக்கூடாது எனவும் பிரதமர் மோடி கூறினார்.டில்லியில் பா.ஜ., புதிய தலைமை அலுவலகத் திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி புதிய அலுவலகத் திற்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜ., தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ரக்ஷா பந்தன் தினத்தன்று, தேசத்திற்கு இந்தியா வின் மகள் சாக்சி மாலிக் பெருமை சேர்த்துள்ளார். பா.ஜ., ஆரம்பிக்கப்பட்ட போது, பலஏற்றத்தாழ்வுகளை ...

'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் மறுசீராய்வு

Posted: 18 Aug 2016 12:14 PM PDT

புதுடில்லி:மத்திய அரசு, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மறுசீராய்வுப் பணிகளை துவங்கியுள்ளது.

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவித்து, இந்தி யாவை, சர்வதேச தயாரிப்பு மையமாக உருவாக்குவதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, கடந்த, 2014 செப்டம்பரில், 'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விபரங்கள் சேகரிப்பு: அதே ஆண்டு டிசம்பரில், இத்திட்டத்தின் கீழ், வாகனம், உணவு பதப்படுத்துதல், ரசாயனம் உள்ளிட்ட, 25 முக்கிய துறைகளுக்கான, குறுகிய மற்றும் நீண்டகால ...

ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதியில் வெற்றி பெற்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 18 Aug 2016 12:16 PM PDT

ரியோ டி ஜெனீரோ : ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரேசிலின் ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பாட்மின்டன் அரையிறுதியில், இந்திய வீராங்கனை சிந்து, ஜப்பான் வீராங்கனை நொசாம்பி ஓக்குஹாராவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கத்தை சிந்து உறுதி செய்துள்ளார். பைனலில் வெற்றி பெற்றால் தங்கம் ...

14 பேருக்கு சீட்; மனைவிக்கு அமைச்சர் பதவி சித்து நிபந்தனையால் கெஜ்ரிவால் கலக்கம்

Posted: 18 Aug 2016 12:31 PM PDT

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான, நவ்ஜோத் சித்து விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை ஏற்பதில், பெரும் தயக்கமும், சிக்கலும் உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியில், அவர் இணைவதற்கான வாய்ப்புகள், குறைந்து வருகின்றன.

பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, அக்கட்சியிலிருந்து, நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர். பஞ்சாபில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜூலை, 18ல், தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை, அதிரடியாக ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.பா.ஜ., தலைமை மீது குற்றஞ்சாட்டிய ...

கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு சட்டசபையில் ஜெ., அறிவிப்பு

Posted: 18 Aug 2016 12:42 PM PDT

சென்னை:''தமிழக அரசின் இசைவு பெறாமல், காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசித்தால், சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கை களையும், தமிழக அரசு மேற்கொள்ளும்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று, 110 விதியில், அவர் வெளியிட்ட அறிவிப்பு:மேகதாது அணை திட்டத்தை, நிறைவேற்றப் போவதாக, கர்நாடக மாநில முதல்வர், சுதந்திர தின விழா உரையில் தெரிவித்துள்ளது,டெல்டா விவசாயிகளை, மிகுந்த கவலைக்கு ஆளாக்கிஉள்ளது. கர்நாடகாவில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக,தமிழக சட்டசபையில் இரண்டு தனி தீர்மானங்கள் நிறைவேற்றப் ...

சபை வளாகத்தில் நுழைய தடை தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா

Posted: 18 Aug 2016 12:51 PM PDT

சென்னை:சட்டசபை வளாகத்திற்குள் செல்ல, தடை விதித்ததை எதிர்த்து, கோட்டையில், நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 80 பேரை, ஒரு வாரத்திற்கு, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று முன்தினம், சபாநாயகர் தனபால் உத்தர விட்டார். வழக்கமாக, சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள், சபை வளாகத்தில் அமைந் துள்ள, நான்காம் எண் நுழைவு வாயில் வழியாக செல்வர்.நேற்று காலை, 9:15 மணிக்கு, தி.மு.க., -எம்.எல்.ஏ.,க் கள் சபைக்கு வந்தனர். நான்காம் எண் நுழைவு வாயிலில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ...

'டிஜிட்டல் முகவரி எண்:' தமிழக அரசு புதிய திட்டம்

Posted: 18 Aug 2016 01:02 PM PDT

சென்னை:அனைத்து முகவரிகளையும், விரைவாக கண்டறியும் வகையில், 'தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முகவரி எண்' உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன், நேற்று சட்டசபையில் வெளி யிட்ட அறிவிப்புகள்:* தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்கள் மற்றும் முகவரிகளுக்கு, தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் மேற்கோள் அமைப்பு உருவாக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு முகவரியும், அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட, வரிவடிவ குறியீடு எனப்படும் தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முகவரி எண் மூலம் ...

சிந்து கடந்து வந்த பாதை

Posted: 18 Aug 2016 01:26 PM PDT

புதுடில்லி : இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து(21) ரியோ ஒலிம்பிக்கில் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ஐதராபாத்தை சேரந்த பாட்மின்டன் வீராங்கனையான புசார்லா வெங்கட சிந்து என்பதன் சுருக்கமே பி.வி.சிந்து. இவரது தந்தை ரமணா, தாய் விஜயா இருவரும் வாலிபால் வீரர்கள். ஆனால் சிந்துவுக்கு சிறுவயது முதலே பாட்மின்டனில் ஆர்வம். தனது 8 வயது முதல் பாட்மின்டன் மட்டையை கையில் ஏந்த ஆரம்பித்த சிந்து, பயிற்சியாளர் கோபிசந்த் பயிற்சியில் பட்டை தீட்டப்பட்டார்.
6 சர்வதேச பட்டங்கள்:
சிந்து இதுவரை 6 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். 2011ம் ...

பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு தொடருகிறது: அமித்ஷா

Posted: 18 Aug 2016 03:02 PM PDT

புதுடில்லி : பா.ஜ., மத்தியில் பதவியேற்றபோது இருந்த மக்கள் ஆதரவு, இன்னும் தொடருகிறது என பா.ஜ., தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித்ஷா தெரிவித்ததாவது : பா.ஜ., 11 கோடி உறுப்பினர்களை உடைய கட்சி. 1,000 எம்.எல்.ஏ.,க்கள், 300 எம்.பி.,க்கள், 15 மாநிலங்களில் ஆளும் கட்சி அந்தஸ்து என, பா.ஜ., வளர்ந்துள்ளது. 2014ல், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பதவியேற்றபோது இருந்த மக்கள் ஆதரவு, இன்னும் தொடருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ...

சிரியா போர் கொடூரம்: வைரலாக பரவும் சிறுவனின் வீடியோ

Posted: 18 Aug 2016 03:46 PM PDT

அலெபோ: சிரியாவின் வடக்கு பகுதியில் நடந்த வான் தாக்குதலில் இடிந்து தரை மட்டமான கட்டடம் ஒன்றில், உயிருடன் மீட்கப்பட்ட 5 சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிரியாவின் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள போர் களம் நிறைந்த பகுதி. இங்கு குவாட்ரிஜ் என்ற பகுதி மீது நடந்த வான் தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.
இக்கட்டடத்தில் மீட்புபணிகள் நடந்தன. அப்போது 5 வயது சிறுவன் ஒருவன் கட்டட இடிபாடுகளில் இருந்து உயிருடன் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™