Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு ஆன்-லைனில் இனி விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Posted: 18 Aug 2016 01:31 PM PDT

வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் திமுக நாடகம்

Posted: 18 Aug 2016 01:30 PM PDT

சட்டப்பேரவையில் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசாமல் திமுக அமளியில் ஈடுபடுவது அரசியல் நாடகம் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

7-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த செலவாகும் ரூ. 500 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்

Posted: 18 Aug 2016 01:29 PM PDT

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் ஏற்படும் செலவு ரூ. 500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும்

Posted: 18 Aug 2016 01:29 PM PDT

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நடைபெற உள்ள விவசாயிகளின் போராட்டத்துக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும்

Posted: 18 Aug 2016 01:28 PM PDT

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குவாதத்தைத் தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தென்மண்டல விநாடி- வினா போட்டிக்கு பள்ளிகள் தேர்வு

Posted: 18 Aug 2016 01:28 PM PDT

தென் மண்டல அளவிலான விநாடி- வினா போட்டிக்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் மாலையணிவித்து மரியாதை

Posted: 18 Aug 2016 01:28 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அவர்களது உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் சதானந்த கவுடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

களியக்காவிளை அருகே மாணவர்களுக்கு யோகா பயிற்சி

Posted: 18 Aug 2016 01:28 PM PDT

களியக்காவிளை அருகே மீனச்சல் கிராமத்தில் சிவசேனை கட்சி சார்பில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுக் கணக்கு விவரம் வெளியீடு

Posted: 18 Aug 2016 01:27 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் செலவுக் கணக்கு விவரங்கள் தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிற்றுந்து வசதி கோரி கிராமப் பெண்கள் மனு

Posted: 18 Aug 2016 01:27 PM PDT

கிராமப்புறங்களுக்கு சிற்றுந்துகளை இயக்கக்கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் மனு

Posted: 18 Aug 2016 01:27 PM PDT

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

மதனை ஆகஸ்ட் 30-க்குள் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Aug 2016 01:26 PM PDT

"வேந்தர் மூவிஸ்' நிறுவன நிர்வாகி மதனை ஆகஸ்ட் 30-க்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குமரி மாவட்டத்துக்கு விரைவில் 300 புதிய அரசுப் பேருந்துகள்: விஜயகுமார் எம்.பி.

Posted: 18 Aug 2016 01:26 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் 300 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என விஜயகுமார் எம்.பி. தெரிவித்தார்.

பாஜக இருசக்கர வாகனப் பேரணி: பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Posted: 18 Aug 2016 01:26 PM PDT

70ஆவது சுதந்திர தின விழா மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி பாஜக சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

Posted: 18 Aug 2016 01:26 PM PDT

படகு இன்ஜின் பழுதடைந்ததால், நடுக்கடலில் தத்தளித்த மண்டபம் பகுதி மீனவர்கள் 5 பேரை, புதன்கிழமை போலீஸார் மீட்டனர்.

குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்

Posted: 18 Aug 2016 01:25 PM PDT

குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தங்கம் பவுனுக்கு ரூ.24 உயர்வு

Posted: 18 Aug 2016 01:25 PM PDT

ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 24 அதிகரித்து ரூ.23,904-க்கு விற்பனையானது.

ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை வழக்கு: மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு

Posted: 18 Aug 2016 01:25 PM PDT

வங்கிப் பணம் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியில் மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

நெல்லுக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 18 Aug 2016 01:25 PM PDT

நெல்லுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி பணம் கொள்ளை: சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. விசாரணை

Posted: 18 Aug 2016 01:25 PM PDT

சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் ரிசர்வ் வங்கி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 18 Aug 2016 01:24 PM PDT

நாகர்கோவில் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில், நகை மற்றும் பணத்தை  திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸுக்கு ராக்கி கட்டினார் தமிழிசை

Posted: 18 Aug 2016 01:24 PM PDT

மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு வியாழக்கிழமை ராக்கி கட்டினார்.

மார்த்தாண்டம் அருகே பணியிலிருந்த காவலர் மயங்கி விழுந்து சாவு

Posted: 18 Aug 2016 01:24 PM PDT

மார்த்தாண்டம் அருகே பணியிலிருந்த தலைமைக் காவலர் மயங்கி விழுந்து இறந்தார்.

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: கோதையாற்றிலிருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

Posted: 18 Aug 2016 01:24 PM PDT

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கோதையாற்றில் களியல் பகுதியிலிருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

ஆட்டோக்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி

Posted: 18 Aug 2016 01:23 PM PDT

அனைத்து ஆட்டோக்களிலும் 3 மாதங்களுக்குள் ஜி.பி.ஆர்.எஸ். கருவியை பொருத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடிக்கால் வெள்ளாளர் "குடிகார வேளாளர்' ஆனது

Posted: 18 Aug 2016 01:22 PM PDT

தமிழக அரசால் இணையதளம் மூலம் அளிக்கப்பட்டுவரும் சாதிச் சான்றிதழில் சாதிப் பெயர் மாறுவதால் பாதிக்கப்படும் சமுகத்தினர் இந்த குழப்பத்தைக் களைய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

ஜெயலலிதா தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 18 Aug 2016 01:21 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே. நகரில் முதல்வர் ஜெயலலிதா பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரிய வழக்கில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தேரியில் வீட்டுமனைகளாகும்  விளைநிலங்கள்: தடுத்த நிறுத்த ஆட்சியரிடம் வலியுறுத்தல்

Posted: 18 Aug 2016 01:21 PM PDT

புத்தேரியில் விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாணிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

இலங்கை துறைமுகத்தில் தவித்த சின்னமுட்டம் மீனவர்கள் 4 பேர் மீட்பு

Posted: 18 Aug 2016 01:21 PM PDT

படகு பழுதானதால் இலங்கை துறைமுகத்தில் தவித்த கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

லாரி மீது கார் மோதல்: தாய்-மகள் சாவு

Posted: 18 Aug 2016 01:21 PM PDT

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Aug 2016 01:20 PM PDT

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வஞ்சிக்கப்படும் தமிழகம்!

Posted: 18 Aug 2016 01:20 PM PDT

கர்நாடகத்தின் கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, அந்த மாநில முதல்வர் சித்தராமையா சுதந்திர தின விழாவில் பேசுகையில் வெளியிட்ட அறிவிப்பால், தமிழக விவசாயிகள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

அம்பலக்கடை மகாவிஷ்ணு கோயிலில் ரூ.14.34 லட்சத்தில் திருப்பணி தொடக்கம்

Posted: 18 Aug 2016 01:19 PM PDT

அம்பலக்கடை மகாவிஷ்ணு கோயிலில் ரூ.14.34 லட்சத்தில் திருப்பணிகள் புதன்கிழமை தொடங்கின.

இரணியல் பெண் எஸ்.ஐ., தலைமைக் காவலருக்கு பிடிஆணை: பத்மநாபபுரம் நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Aug 2016 01:19 PM PDT

இரணியல் காவல் உதவி ஆய்வாளர், கொற்றிகோடு தலைமைக் காவலர் ஆகிய இருவருக்கும் பத்மநாபபுரம் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிந்தித்தால் தீரும் சிக்கல்!

Posted: 18 Aug 2016 01:18 PM PDT

மிகப்பெரிய நெருக்கடிகளையெல்லாம் ஊதித்தள்ளிவிடும் ஆற்றல்கொண்ட பலர் மிகமிக எளிய, சின்னச் சிக்கல்களைத் தீர்க்க வழிதெரியாமல் விழிப்பதும் உண்டு. பல நேரங்களில் உடனடித் தேவைகளை உணர்ந்தாலே போதும், வழி திறந்துவிடும்.

ஊக்குவிப்பு தேவை

Posted: 18 Aug 2016 01:12 PM PDT

அண்மைகாலமாக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு சாதனங்கள், அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) தொழில்நுட்பம், தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் செயலிகள் இவற்றின் காரணமாக முன் எப்போதையும்விட இம்முறை ஒலிம்பிக் போட்டி முடிவுகளை தெரிந்துகொள்வதில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சம்பா சாகுபடிக்காக ரூ.64.30 கோடி மானியம்: நெல் விதைப்புக்காக ஏக்கருக்கு ரூ.600: நடவு இயந்திரத்துக்காக ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம்

Posted: 18 Aug 2016 12:50 PM PDT

மேட்டூர் அணையில் தேவையான நீர் கிடைக்கப் பெறாத நிலையில், நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ரூ.64.30 கோடி மானியம் வழங்கப்படும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை

Posted: 18 Aug 2016 12:47 PM PDT

தமிழகத்தில் 27 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 7 துணை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இணையதள சேவையில் புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் புறநகர் பேருந்து நிலையம்

Posted: 18 Aug 2016 12:45 PM PDT

புறநகர் பேருந்து நிலையம் வண்டலூருக்குப் பதிலாக, நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் அமைக்கப்படும் என்றும் இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது என்றும் வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தகவல் தொழில்நுட்ப மென்திறன் பயிற்சி

Posted: 18 Aug 2016 12:45 PM PDT

பட்டப்படிப்பில் இறுதியாண்டு பயிலும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தகவல் தொழில்நுட்ப மென்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல அனுமதி மறுப்பு: பேரவை நுழைவாயிலில் திமுக எம்எல்ஏக்கள் தர்னா

Posted: 18 Aug 2016 12:44 PM PDT

எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மு.க.ஸ்டாலின் தலைமையில் இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப் பேரவை நுழைவாயிலில் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா

Posted: 18 Aug 2016 12:41 PM PDT

காவிரின் ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை

Posted: 18 Aug 2016 12:39 PM PDT

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

80 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது: பேரவைத்தலைவர் திட்டம்

Posted: 18 Aug 2016 12:38 PM PDT

திமுக எம்.எல்.ஏ.க்கள் 80 பேரின் இடைநீக்க உத்தரவை, மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கல் 2 முறை வெளிநடப்பு செய்தனர்.

கடத்தப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பினார்: 9 பேரிடம் விற்ற கடத்தல் கும்பல் கைது

Posted: 18 Aug 2016 12:37 PM PDT

வடகிழக்கு தில்லியில் இருந்து கடத்தப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வீட்டிற்கு திரும்பினார். பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட அந்தச் சிறுமி 9 பேரிடம் மாறி மாறி விற்கப்பட்டு,

சோனியா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Posted: 18 Aug 2016 12:36 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக் குறைவு காரணமாக தில்லி சர் கங்காராம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றங்களில் தேதி குறிப்பிடாமல் நிலுவையில் உள்ள 33 லட்சம் வழக்குகள்

Posted: 18 Aug 2016 12:36 PM PDT

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தீர்வு ஏதும் காணப்படாமலும், அடுத்தகட்ட விசாரணை தேதி குறிப்பிடாலும் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

தியாகிகளுக்கான ஓய்வூதியத்தில் ரூ.5 ஆயிரம் உயர்வு

Posted: 18 Aug 2016 12:35 PM PDT

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற பல்வேறு வகை போராட்டங்களில் ஈடுபட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் மாத ஓய்வூதியத்தில் ரூ. 5,000 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா வரும்போது எஃப்16 தயாரிப்பு குறித்து பேசுவேன்: அமெரிக்க அமைச்சர்

Posted: 18 Aug 2016 12:33 PM PDT

அமெரிக்காவின் எஃப் 16 உள்ளிட்ட அதி நவீன போர் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து, தனது இந்திய வருகையின்போது பேசவிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் விமானப் படைப் பிரிவு அமைச்சர் டெபோரா லீ ஜேம்ஸ் தெரிவித்தார்.

பாகிஸ்தானே முடிவு செய்யவேண்டும்: இந்தியா

Posted: 18 Aug 2016 12:32 PM PDT

வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் தான் முடிவெடுக்க வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைக்கான நெறிமுறைகள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted: 18 Aug 2016 12:32 PM PDT

தனியார் மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை மையங்களிலும், அவசர சிகிச்சை மையங்களிலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்வது பற்றி ஏதேனும் வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளனவா என்று கேட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தியாகத்தில் பாஜகவுக்கு நிகராக எந்தக் கட்சியும் இல்லை: மோடி

Posted: 18 Aug 2016 12:30 PM PDT

சுதந்திரத்துக்குப் பிறகு தேசத்தின் நலனுக்காக பாஜக செய்த தியாகங்களைப் போல வேறு எந்தக் கட்சியும் செய்ததில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமர்நாத் யாத்திரை நிறைவடைந்தது

Posted: 18 Aug 2016 12:28 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கிய புனித அமர்நாத் யாத்திரை, ரக்ஷா பந்தன் பண்டிகையான வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

ரியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: சாக்ஷிக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Posted: 18 Aug 2016 12:28 PM PDT

ரியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாக்ஷி மாலிக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பசு பாதுகாவலர்களால் பாஜக தொண்டர் அடித்துக் கொலை

Posted: 18 Aug 2016 12:27 PM PDT

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் பசுப் பாதுகாவலர்களால் பாஜக தொண்டர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

பலூசிஸ்தான் குறித்த கருத்து: வரம்பு மீறுகிறார் பிரதமர் மோடி: பாகிஸ்தான்

Posted: 18 Aug 2016 12:26 PM PDT

பலூசிஸ்தான் விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளைத் தெரிவிப்பதன் வாயிலாக தனக்குரிய வரம்பை இந்தியப் பிரதமர் மோடி மீறுகிறார் என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: மரத்துக்கு ராக்கி கட்டினார் நிதீஷ்குமார்!

Posted: 18 Aug 2016 12:25 PM PDT

ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள ஒரு மரத்துக்கு முதல்வர் நிதீஷ் குமார் ராக்கி கயிற்றைக் கட்டினார்.

காஷ்மீர்: சிதம்பரத்தின் பேச்சு அரசியல் சந்தர்ப்பவாதம்

Posted: 18 Aug 2016 12:24 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னை குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியிருப்பது, "அரசியல் சந்தர்ப்பவாதம்' என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

நாட்டின் வயதான பெண் புலி மரணம்

Posted: 18 Aug 2016 12:22 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், ரண்தாம்போர் தேசிய புலிகள் சரணாலயத்தில் வசித்து வந்த இந்தியாவின் வயதான பெண் புலியான

எனது பதவி உயர்வைத் தடுக்க வி.கே.சிங் சூழ்ச்சி செய்தார்: உச்ச நீதிமன்றத்தில் ராணுவத் தளபதி பிரமாணப் பத்திரம் தாக்கல்

Posted: 18 Aug 2016 12:21 PM PDT

எனது பதவி உயர்வைத் தடுக்க ராணுவத்தின் அப்போதைய தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் வி.கே. சிங் சூழ்ச்சி செய்தார் என்று தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

காஷ்மீரில் மீண்டும் வன்முறை: ஒருவர் பலி

Posted: 18 Aug 2016 12:20 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிரேவ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் விரிவுரையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்; 18 பேர் காயமடைந்தனர்.

சிரியா அவலத்தை விளக்கும் படம்!

Posted: 18 Aug 2016 12:17 PM PDT

அலெப்போ நகரில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் காயமடைந்து, ரத்தக்களறியான முகத்துடன் அவசர உதவி ஊர்தியில் அமர்ந்திருக்கும் 5 வயது சிறுவனின் படம், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள பிரதமர் இந்தியா வர வாய்ப்பு

Posted: 18 Aug 2016 12:15 PM PDT

அண்மையில் நேபாளத்தில் பிரதமராகப் பதவியேற்ற பிரசண்டா, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருவார் என்று கருதப்படுகிறது.

துருக்கி: கார் குண்டு வெடிப்புகளில் 14 பேர் பலி

Posted: 18 Aug 2016 12:14 PM PDT

துருக்கியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 220 பேர் காயமடைந்தனர்.

ஆட்சியைக் கவிழ்க்க குலெனுக்கு நிதியுதவி? துருக்கி நிறுவனங்களில் போலீஸார் அதிரடி சோதனை

Posted: 18 Aug 2016 12:13 PM PDT

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மதபோதகர் ஃபெதுல்லா குலெனுக்கு நிதியுதவி அளிப்பதாக சந்தேகிக்கப்பட்ட வணிக நிறுவனங்களில் அந்த நாட்டுப் போலீஸார் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மானாமதுரை பேரூராட்சியில் கூடுதலாக 3 வார்டுகள் பெண்களுக்கு ஓதுக்கீடு

Posted: 18 Aug 2016 12:12 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேரூராட்சியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டின்படி பெண்களுக்கு கூடுதலாக 3 வார்டுகள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நகராட்சிக்கான தமிழக முதல்வர் விருது: ராமநாதபுரத்துக்கு 3 ஆவது இடம்

Posted: 18 Aug 2016 12:11 PM PDT

தமிழக அளவில் சிறந்த நகராட்சியாக ராமநாதபுரம் 3 ஆவது இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கி கௌரவித்திருப்பதாக, அதன் நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.எஸ். சந்தானலெட்சுமி  தெரிவித்துள்ளார்.

ஹிந்து திருமண சட்ட மசோதா: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல்

Posted: 18 Aug 2016 12:11 PM PDT

ஹிந்து திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் ஹிந்து திருமணச் சட்ட மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

சி.கே.மங்கலம் பள்ளியில் வட்டார விளையாட்டுப் போட்டி

Posted: 18 Aug 2016 12:11 PM PDT

திருவாடானை அருகே சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவில் விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் வட்டார அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள்

Posted: 18 Aug 2016 12:10 PM PDT

முதுகுளத்தூர் வட்டார அளவில், 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

விஷ ஊசி போடப்பட்டதால் 104 முன்னாள் விடுதலைப் புலிகள் சாவு?

Posted: 18 Aug 2016 12:10 PM PDT

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு, மறுவாழ்வு மையங்களில் விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதனால் அவர்களில் 104 பேர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூர் அருகே  இறந்த கிராமக் கோயில் காளைக்கு அஞ்சலி

Posted: 18 Aug 2016 12:10 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பட்டமங்கலம் அருகேயுள்ள வெளியாரி வீரன் கோயில் காளை இறந்ததையொட்டி, வியாழக்கிழமை கிராம மக்கள் காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாகிஸ்தானில் 11 பயங்கரவாதிகள் பலி

Posted: 18 Aug 2016 12:10 PM PDT

பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 18 Aug 2016 12:10 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 18 Aug 2016 12:09 PM PDT

ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

கரூர் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Posted: 18 Aug 2016 12:09 PM PDT

திருவாடானையில் பயணியை நள்ளிரவில் வேறு இடத்தில் இறக்கிவிட்டது தொடர்பாக, கரூர் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜராக வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

லிபியாவில் கார் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

Posted: 18 Aug 2016 12:09 PM PDT

லிபியாவில் உள்ள சிர்டே நகரில் அரசுக்கு ஆதரவான படையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்புகளில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

Posted: 18 Aug 2016 12:08 PM PDT

படகு இன்ஜின் திடீரென பழுதடைந்ததால், நடுக்கடலில் தத்தளித்த மண்டபம் பகுதி மீனவர்கள் 5 பேரை, புதன்கிழமை போலீஸார் மீட்டனர்.

பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் காதல் ஜோடி மனு

Posted: 18 Aug 2016 12:08 PM PDT

பரமக்குடி கல்லூரியில் பயிலும் காதல் ஜோடி, வியாழக்கிழமை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் தங்களுக்கு பாதுகாப்புத் தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அழகப்பா பல்கலை.யில் மூத்த குடிமக்கள் தின விழா

Posted: 18 Aug 2016 12:07 PM PDT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மூத்த குடிமக்கள் தின விழா நடைபெற்றது.

கோயில் திருவிழா கொண்டாட தடை: வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 18 Aug 2016 12:07 PM PDT

கமுதி அருகே செய்யாமங்களத்தில் பூங்குழலி அம்மன் கோயில் திருவிழாவைக் கொண்டாட வருவாய் மற்றும் காவல் துறையினர் தடைவிதித்ததால், வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 18 Aug 2016 12:06 PM PDT

தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் காஸ்மாஸ் அரிமா சங்கம் சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடந்தது.

இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெண்கலம் வென்றார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்

Posted: 18 Aug 2016 12:06 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.

முதுகுளத்தூர் வட்டார தடகளப் போட்டிகள்: பள்ளிவாசல் பள்ளி சாம்பியன்

Posted: 18 Aug 2016 12:06 PM PDT

முதுகுளத்தூர் வட்டார அளவில் புதன்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான தடகளப்போட்டிகளில் பள்ளிவாசல் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

காலி மனைகளுக்கு வரி செலுத்த அறிவிப்பு

Posted: 18 Aug 2016 12:05 PM PDT

காரைக்குடி நகராட்சி எல்கைக்குள்பட்ட பகுதியில் உள்ள காலி மனை இடங்களுக்கு வரி செலுத்தவேண்டும் என்று, நகராட்சி ஆணையர் பெ. விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து

Posted: 18 Aug 2016 12:05 PM PDT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கல்லூரி மாணவியை புதன்கிழமை கத்தியால் குத்திய இளைஞர், தானும் குத்திக்கொண்டார்.

காரைக்குடி வட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

Posted: 18 Aug 2016 12:04 PM PDT

காரைக்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Posted: 18 Aug 2016 12:04 PM PDT

பரமக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குற்றச் செய்திகள்

Posted: 18 Aug 2016 12:03 PM PDT

விருதுநகர் அருகே புதன்கிழமை இரவு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் ரயில்வே ஊழியர் உயிரிழந்தார்.

மகளிர் 200 மீ. ஓட்டம்: தங்கம் வென்றார் தாம்சன்

Posted: 18 Aug 2016 12:00 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின் எலைன் தாம்சன் தங்கம் வென்றார்.

சிவகாசியில் அச்சு மை ஆலையில் தீ விபத்து

Posted: 18 Aug 2016 11:59 AM PDT

சிவகாசியில் வியாழக்கிழமை ஆப்செட் அச்சு மை தயாரிக்கும் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடி பகுதிகளில் ஆகஸ்ட் 20 மின்தடை

Posted: 18 Aug 2016 11:59 AM PDT

விருதுநகர், அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடி பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்தம்: பபிதா தோல்வி

Posted: 18 Aug 2016 11:58 AM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 53 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பபிதா குமாரி தோல்வி கண்டார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேதமடைந்த காத்திருப்போர் கூடம் சீரமைக்கப்படுமா?

Posted: 18 Aug 2016 11:58 AM PDT

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேதமடைந்துள்ள காத்திருப்போர் கூடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறியியல் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பு தொடக்கம்

Posted: 18 Aug 2016 11:57 AM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் வியாழக்கிழமை மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.

நின்ற லாரி மீது ஆட்டோ மோதி ஒருவர் சாவு

Posted: 18 Aug 2016 11:57 AM PDT

ராஜபாளையம் அருகே புதன்கிழமை நின்ற லாரி மீது ஆட்டோ மோதி ஒருவர் உயிரிழந்தார்.

ஒலிம்பிக்: இந்தியா இன்று...

Posted: 18 Aug 2016 11:57 AM PDT

ஒலிம்பிக்: இந்தியா இன்று...

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 18 Aug 2016 11:57 AM PDT

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல் சார்பு-ஆய்வாளரை கத்தியால் குத்திய வழக்கு: இளைஞர் கைது

Posted: 18 Aug 2016 11:56 AM PDT

அருப்புக்கோட்டையில் காவல் சார்பு- ஆய்வாளரைக் கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்ட இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிவகாசியில் கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்க கோரிக்கை

Posted: 18 Aug 2016 11:55 AM PDT

சிவகாசியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™