Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சித்தர் புத்தகங்கள் தேவை

Posted: 18 Aug 2016 11:03 AM PDT

சித்த மருத்துவ புத்தகங்கள் சித்தர் சம்பந்தமான புத்தகங்கள் இருந்தால் பதிவிடவும் நன்றி ஐயா

என்றும் அன்புடன்
ஜெ.செந்தில்குமார்
இலண்டன்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 18 Aug 2016 10:33 AM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

வாழ்த்தலாம் வாங்க ayyasamy ram அவர்களை...

Posted: 18 Aug 2016 10:08 AM PDT

புதிய நிர்வாகக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ayyasamy ram  அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

கடந்து வந்த பாதை.

Posted: 18 Aug 2016 10:07 AM PDT

கடந்து வந்த பாதை காலத்தின் விழுமியங்களை விழுங்கி கொண்டு முன்னோக்கி செல்லும் பாதையை சற்று பின்னோக்கி பார்க்கிறேன்! பனிச் சாரலில் வழிந்தோடும் இன்பம் மழலைப் பருவத்தில்! இல்லாத போதும் இருப்பதை பங்கிட்டுக் கொள்ளும் சகோதர பாசத்தில்! சாதீய அவமானங்களோடே கிழிசல்களை நேர்த்தியாய் உடுத்தி பள்ளிச் செல்லும் பரிகாசமாய் பார்க்கும் சமூகத்தில்!! காளைக்கு உண்டான செருக்கு கண்களில் மிளிர காதல் மோகத்தில் சோகத்தை புதைத்து காதலின் அணைப்பில்!! கனவுகள் உலகத்து இன்பங்களை ...

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 18 Aug 2016 10:04 AM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

ஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து, பதக்கம் உறுதியானது

Posted: 18 Aug 2016 09:47 AM PDT

ரியோடி ஜெனிரோ,பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நடைபெற்ற பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹராவை பிவி சிந்து எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஒகுஹராவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இதன் ...

கொளுத்தும் வெயில்… எத்தனை நாளைக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 18 Aug 2016 08:56 AM PDT

சென்னை: தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களைத் தவிர்த்து, சென்னை உட்பட பரவலாக வெப்பம் வாட்டி வருகிறது. – கத்திரி வெயில் போல கொளுத்தும் வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். – இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய அறிக்கையில், இன்னும் சில நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – மேலும், வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. – —————————————– தினமணி

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங்

Posted: 18 Aug 2016 08:53 AM PDT

அஞ்சல் வழி கல்வி டிப்ளமோ எஞ்சினியர்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் இந்தியத் தொடர்வண்டி அமைச்சகத்தின் (Ministry of Indian Railways) தொழில்நுட்பச் சார்பு நிறுவனமாக இந்திய இருப்புப்பாதைப் பொறியாளர்கள் நிறுவனம் (The Institution of Permanent Way Engineers (India)) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அஞ்சல் வழியில் இரண்டு பருவங்களைக் (Semster) கொண்ட ஓராண்டுக்கால அளவிலான Diploma in Railway Engineering என்ற படிப்பை நடத்திவருகிறது. இந்தப் பட்டயப்படிப்பில் 2016-17ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ...

தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!

Posted: 18 Aug 2016 08:51 AM PDT

அறிவிப்பு குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 போட்டித் ேதர்வை எதிர்பார்த்து நீண்ட நாட்களாகக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வருடாந்திர கால அட்ட வணையில் கொடுக்கப்பட்டிருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட சுமார் 500 இடங்களை அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது டி.என்.பி.எஸ்சி. இந்த வாய்ப்பினை போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு ...

ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!

Posted: 18 Aug 2016 08:49 AM PDT

வாய்ப்புகள் --- இந்திய கடற்படையில் டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2) பணிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்‌ஷன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் இந்த பணிகள் உள்ளன. மெக்கானிக்கல் பிரிவில் 192 பணியிடங்களும், கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரிவில் 133 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 161 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 486 பணியிடங்கள். - 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், டிராப்ட்ஸ்மேன்ஷிப் ஐ.டி.ஐ. 2 ஆண்டு டிப்ளமோ ...

கனாக் காணும் கண்கள் மெல்ல…

Posted: 18 Aug 2016 08:17 AM PDT

படம் – அக்னி சாட்சி இசை – எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் வரிகள் – கவிஞர் வாலி படம் வெளிவந்த வருடம் – 1982 நடித்தவர்கள் – சிவக்குமார், சரிதா – —————————– கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக் கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே! – கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக் கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே! உலாப் போகும் நேரம் கண்ணே! – குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் ...

நம்பினால் நம்புங்கள்

Posted: 18 Aug 2016 08:16 AM PDT

- *1992ல் எடுக்கப்பட்ட 'சாப்ளின்' வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாப்ளினின் அம்மாவாக நடித்தது அவரது மகளே! - -------------------------------------------- *ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி ஓடும் முறையை உருவாக்கியவர்கள் நாஜிக்களே! - --------------------------------------------- - *மின்னலின் வெப்பமானது சூரியப் பரப்பின் நேரடி வெப்பத்தை விடவும் 5 மடங்கு அதிகம். - -----------------------------------------

வெண்கலம் வென்றார் சாக்ஷி மாலிக்

Posted: 18 Aug 2016 07:56 AM PDT

- ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். – மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்‌ஷி மாலிக் , வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார். – இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது. – ———————————— தினமணி

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...

Posted: 18 Aug 2016 05:42 AM PDT

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. முருங்கைப் காய் இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய ...

போர்ச்சுகல் பாலைவனத்தில் மர்ம உயிரினம்; ஏலியனா?(வீடியோ)

Posted: 18 Aug 2016 05:39 AM PDT

போர்ச்சுகல் பாலைவனத்தில் மர்ம உயிரினம் ஒன்று தென்பட்டுள்ளது. அது ஏலியன் என்று சொல்லப்படும் வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் உண்மையில் இருக்கிறார்கள் என்று இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வமான வெளியீடும் வந்ததில்லை. அமெரிக்காவில் ஏரியா 51 என்று சொல்லக்கூடிய பகுதியில் மட்டும் ஏலியன்கள் தென்படுவதாக ஏராளமான செய்திகள் எப்போதும் வந்து கொண்டிருக்கும். அந்த பகுதியை வேற்று கிரகவாசிகள் வந்து செல்லும் பகுதியாகவே அனைவரும் ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 18 Aug 2016 05:35 AM PDT

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Posted: 18 Aug 2016 05:16 AM PDT

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்

Posted: 18 Aug 2016 05:15 AM PDT

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம், நிலம் கையகப் படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர்ப் பேருந்துகள் புறப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னையை அடுத்த வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூடுவாஞ்சேரிக்கு ...

இந்தியா சுதந்திர நாடு

Posted: 18 Aug 2016 04:34 AM PDT

இந்தியா சுதந்திர நாடு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஆனாலும் கற்பழிப்பும் கொலையும் நடக்கும்!! இந்தியா சுதந்திர நாடு ஆனாலும் உன் கருத்தை உரக்க சொல்ல உன்னில் பயம் வரும்!! இந்தியா சுதந்திர நாடு ஆனாலும் உன்னால் சாதீய தீயில் குளிர் காயாமல் இருக்க முடியாது!! இந்தியா சுதந்திர நாடு ஆனாலும் முதுகெலும்பை உடைத்து ரத்தம் உறிஞ்சி விவசாயியை சாகவைப்போம்!! இந்தியா சுதந்திர நாடு கல்விக்கடனை வசூலிக்க கடன்காரனையே கையாளாய் நிறுத்துவோம்!! இந்தியா சுதந்திர நாடு ஆனாலும் பக்கத்து ...

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Posted: 18 Aug 2016 04:26 AM PDT

- ஏறக்குறைய எல்லா நடிகைகளுமே இன்று 'ஆபாசமாக நடிக்க மாட்டேன். ஆனால் கவர்ச்சியாக நடிக்க ஆட்சேபணை எதுவும் இல்லை' என்று தான் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் இந்தக் கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் எல்லைக்கோடுதான் எது என்று சில நடிகைகளைக் கேட்ட போது : ரத்தி ஜவர்ச்சி என்பது கலை நுணுக்கம் கலந்த ஒன்றாகும். அதாவது உடலை அங்கும் இங்குமாகத் தெரிந்தும், தெரியாமலும் காட்டும் போது அது கவர்ச்சியாகும். அப்படி இல்லாமல் உடலைக் கலைநயம் இல்லாமல் திறந்து போட்டு, வெளிச்சம் கூட்டிக் காட்டும்போது அது ஆபாசமாகிறது. ...

விடை பெறுகிறேன் ...!

Posted: 18 Aug 2016 04:19 AM PDT

நினைவை விட்டு தூக்கியெறிந்த பின்னும் கனவை வைத்து சுமக்குகிறேன் திறந்தது காதல் கதவு உள்ளே புகுந்ததும் புத்தி பேதலித்து தேடினேன் எனை மறந்த போதும் வேறொன்றை தேடிப் போனாயோ என்ற ஆதங்கம் என்னை ஆழமாக தேடு என்றதும் தவறை மறந்து தேடினேன் எவளோ ஓருத்திக்கு லைக் போட்டதும் கொதித்தெழுந்து சண்டையிட்டேன் எனக்குள்ளே சமாதனப்படுத்தியது இவன் வேற மாதிரியோ என்று விழித்துக்கொண்டேன் விதியை மிஞ்சிய உறவு இவ்வுலகில் வேறொன்றும் இல்லை என   விடை பெறுகிறேன்   காதலிலிருந்து  ...!

நான் ரசித்தவை - மீம்ஸ்கள்

Posted: 18 Aug 2016 03:30 AM PDT

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மீம்ஸ்கள் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மீம்ஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மீம்ஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

எல்லைக்கோடு: அ.வேளாங்கண்ணி

Posted: 18 Aug 2016 02:28 AM PDT

- எல்லை இல்லா அன்பை மட்டும் எடுத்துக் கொள்வோம் உலகிலே எல்லைக் கோடு போடும் கூட்டம் இருக்க வேண்டாம் அருகிலே – தொல்லை தரும் எல்லைச் சண்டை நிதமும் நமக்குத் தேவையா தோளின் மேலே கையைப் போட்டு இருந்தால் கலக்கம் இல்லையே – எல்லைக் கோடே இல்லா உலகம் பிறந்து விட்டால் நல்லது எல்லைக் காக சண்டை போட்டால் உயிருக் கில்லை நல்லது – அன்பை மனதில் கொண்டோர் மட்டும் புதிய உலகில் பிறக்கட்டும் அன்பைக் கொன்று பிரிவை வளர்ப்போர் மறைந்து எங்கோ போகட்டும் – எல்லை காக்கும் வீரர் வாழ்க்கை முடியும் வரைக்கும் ...

பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே.

Posted: 18 Aug 2016 02:20 AM PDT

அழுக்காறு என ஒரு பாவி ... பொறாமையை இப்படித்தான் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். செல்வத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாது பொறாமை, தீய வழிகளிலும் செலுத்திவிடும் என்கிறார். தீமையே நினைக்கும் பகைவனைக் காட்டிலும் பொறாமையில் புகையும் நண்பன் கொடியவன் என ஆங்கில வழக்கும் இப்பாவியைப் பழிக்கிறது. பொறாமைப்படுவது ஆண்களில் அதிகமா அல்லது பெண்களில் அதிகமா என்பது, முடிவே பெறாத வாதங்களாய் நீள்கிறது. மனதுக்குள்ளே மறைத்துக் கொள்ளத் தெரியாததால், பெண்களின் தரப்புக்கு இதில் பின்னடைவே.   தன்னிடம் இல்லாத ஒன்று தனக்கு ...

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Posted: 18 Aug 2016 02:05 AM PDT

– - Pandit Shiv Kumar Sharma playing on the சண்டூர் ------------------------------------------------------------------ - பண்டிட் சிவக்குமார் சர்மா சந்தூர் வாத்தியக் கலைஞர் – கிராம்பு என்பது அந்தச் செடியின் விரியாத மொட்டுப்பகுதி – அமெரிக்காவின் தேசிய விளையாட்டு பேஸ் பால் – இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியபட்டா – கர்ணனின் பெற்றோர் குந்தி தேவி, சூரிய பகவான் – ——————————————- தொகுத்தவர்: பிரபாவதி கிருஷ்ணமூர்த்தி

ஆறு வித்தியாசங்கள் - கண்டு பிடியுங்கள்

Posted: 18 Aug 2016 01:58 AM PDT


-
--மீனலோசனி பட்டாபிராமன்,

வெளி நாட்டு விடுகதைகள்

Posted: 18 Aug 2016 01:55 AM PDT

பர்மா. 1.வெளுக்காத போர்வை வெள்ளையாக இருக்கும்,நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும். 2.ஒரு கோப்பை பசும்பால் ஊரெல்லாம் பெருகிடுமாம். 3.சின்னம் சிறு அறையில் சீராக வாழ்ந்திடுவார், கறுத்த உடை அணிவார் , கவலையில்லாத் துறவி அவர், கள்ளைக் குடித்திடுவார் கடவுளை பாடிடுவார். பாகிஸ்தான். 4.நீரிலே வாழும் மீன் அல்ல,கொம்புமே உண்டு மாடல்ல. 5.தன் தலையை தானே விழுங்கும் பிராணி எது? 6.இளமையில் கொம்புண்டு,வளர்ந்ததும் கொம்பில்லை. விடுவிக்கப்படடால் அடுத்த நாடு மலேசியா.

பால் நிலாவுக்குள் அழியாத அமாவாசை - விடுகதைகள்

Posted: 17 Aug 2016 10:17 PM PDT

- 1-பால் நிலாவுக்குள் அழியாத அமாவாசை - அது என்ன? - 2-பச்சை நிறத்தாளுக்கு பவள நிற மூக்கு - அவள் யார்? - 3-சிலுசிலுத்த தண்ணீரில் செம்மறியாடு மேயுது அது என்ன? - 4-செடியில்லாமலே பூத்தது, ராத்திரியில் மட்டும் அது என்ன? - 5-எண்ணெய் படாத கயிறு, தரையில் உருளும் கயிறு, கண்ணில் பட்டாலே கலவரம்தான் - அது என்ன? - 6-கைக்கு அலங்காரம், கலகல சங்கீதம் - அது என்ன? -

நடிகை ஜோதிலட்சுமி நினைவலைகள்!

Posted: 17 Aug 2016 07:00 PM PDT

- பெரிய இடத்துப் பெண்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜோதிலட்சுமி தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனது நடனம் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகையானார். எழுபதுகளில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தொடர்ந்து ஜோதிலக்‌ஷ்மிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு பல ஹிட் பாடல்கள் அவரது நடனத்துடன் வெளிவந்தன. நடிப்பு மட்டுமன்றி இவர் தனது சகோதரியும் நடிகையுமான  விட்டலாச்சார்யா படப் புகழ் ...

பதிலடி தருவோம் எல்லையைத் தாண்டினால் !

Posted: 17 Aug 2016 06:12 PM PDT

- எல்லைக்கோடு : கா. மகேந்திரபிரபு - நாட்டின் எல்லை முற்றம் நம் மண்ணின் பரப்புக்குள்ளே ! தேசக்கதவுகள் நிலைகொள்ள தேசத்தின் எல்லைக்குள் பாதுகாப்பு ! – எல்லைக்கொடி பறக்கும் எங்கள் வீரர்களின் வீரத்திலே எதிலும் வெற்றி காணும் பாரதம் எல்லைக்கோடு என்ன ஒரு சவாலா ? – அண்டை நாடுகளின் ராணுவம் அந்நியர்களின் ஊடுருவல்கள் மண்ணாசையை வெல்வோம் மண்ணின் மைந்தர்களே வாரீர் ! – வீரமுழக்கம் – சுபாஷ் சந்திரபோஸின் வீரம் வீரர்களே வாரீர் ! எல்லைச்சாமிகள் நீங்கள் ! அந்நியர்களின் படையெடுப்பை தடுப்போம் ஆங்கிலேயத்தைப் ...

கூழாங்கற்கள்...!!

Posted: 17 Aug 2016 06:02 PM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*

எல்லைக் கோடு: சாலை நந்தகோபால் கிருஷ்ணமூர்த்தி

Posted: 17 Aug 2016 05:54 PM PDT

- எல்லைக் கோட்டைக் காக்கின்றோம்! என்றும் காப்போம் இமைக்காது! தில்லைப் பெருமான் பேர்சொல்லி திக்கை நாங்கள் காக்கின்றோம்! – சொல்லில் ஆணை பிறந்துதுமே துணிந்து நாங்கள் போரிடுவோம்! ஒல்லை ஏதும் நேராமல் உவந்து கோட்டைக் காப்போமே! – சொல்லை ஏற்றுப் பணி செய்வோம்! சுகத்தை தியாகம் செய்கின்றோம்! கல்லும் முள்ளும் மலைமற்றும் கார்கில் பனியும் பொருட்படுத்தோம்! – வில்லும் நாணும் தேவையில்லை! விருப்பால் சேவை செய்திடுவோம்! அல்லல் அடையோம்! அகமகிழ்ந்தே அன்னை நாட்டைக் காத்திடுவோம்! – ————————————- கவிதைமணி படம்- ...

முன்பதிவின்றி பயணிக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு

Posted: 17 Aug 2016 05:36 PM PDT

முன்பதிவு செய்யாமல் பயணிப்பதற்கான பிரத்யேக ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். இதைத் தவிர பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட மேலும் 3 வகையான புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தப் போவதகாவும் அவர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுரேஷ் பிரபு, இதுதொடர்பாக பேசியதாவது: ஏழை மக்கள் அனைவருக்கும் ரயில் போக்குவரத்து சேவையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்குத் ...

பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

Posted: 17 Aug 2016 05:36 PM PDT

பாம்பன் கடலில் சூறாவளி வீசி வருவதால் துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. – மேற்கு வங்கத்துக்கும், ஒடிஸா பகுதிக்கும் இடைப்பட்ட கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. – இதன் தாக்கமாக, பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. – ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். – ———————————————— தினமணி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™