Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் 2.5 லட்சம் டன் உரம் தேக்கம் : உணவு தானிய உற்பத்தி இலக்கில் சிக்கல்?

Posted: 17 Aug 2016 09:23 AM PDT

தண்ணீர் பற்றாக்குறையில், சாகுபடி பாதிக்கப் பட்டதால், தமிழகம் முழுவதும், 2.5 லட்சம் டன் உரங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், வேளாண் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூனில் குறுவை போக நெல் சாகுபடி நடக்கும். விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாத புரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங் களில், குறுவை நெல் சாகுபடியுடன் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் நடக்கும்.தண்ணீர் பற்றாக்குறையால், டெல்டா மாவட் டங்கள் உட்பட பல மாவட்டங்களில் மேற்படி சாகுபடி பெரிய ...

அமைச்சர் உட்பட மூவரிடம் மாவட்ட செயலர் பதவி பறிப்பு

Posted: 17 Aug 2016 09:47 AM PDT

அமைச்சர் சண்முகநாதன் உட்பட, மூன்று பேரிடம் இருந்த மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

துாத்துக்குடி மாவட்ட செயலராக இருந்த, அமைச்சர் சண்முகநாதன், அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய மாவட்ட செய லராக, முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட செயலராக, முன்னாள் அ.தி.முக., கொறடா மனோகரன் இருந்தார். தற்போது அவர் நீக்கப்பட்டு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், புதிய மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலர் ...

நீதிபதிகள் நியமன விதிமுறைகள் : மீண்டும் வரைவு அனுப்பியது அரசு

Posted: 17 Aug 2016 10:03 AM PDT

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டு களுக்கான நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்ற வற்றுக் கான வழிகாட்டு வழிமுறைகளை வகுக்கும் திருத்தப்பட்ட வரைவை, சுப்ரீம் கோர்ட் பரிசீலனைக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது.

'கொலீஜியம்' :
நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும், 'கொலீஜியம்' முறைக்கு மாற்றாக, நீதிபதிகள் நியமன கமிஷனை, மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றத்தில் வெளிப்படைத் தன் மையை ஏற்படுத்தும் வகையில், அதற்கான
வழிகாட்டு வழிமுறைகளை ...

காஷ்மீரை பற்றி அல்ல; பயங்கரவாதத்தை பற்றி... பேசுவோம்: பாகிஸ்தானுக்கு இந்தியா தீர்க்கமான பதில்

Posted: 17 Aug 2016 10:24 AM PDT

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு நடத்த வரும்படி பாகிஸ்தான் விடுத்த அழைப்புக்கு, 'பேச்சுக்கு இந்தியா தயார்; ஆனால், பயங்கரவாதம் குறித்ததாக அது இருக்க வேண்டும்; காஷ்மீரை பற்றி பேசக் கூடாது' என, மத்திய அரசு, பதிலடியை கொடுத்துள்ளது.

ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில், ஒரு மாதத்துக்கு மேலாக நடக்கும் பல்வேறு வன்முறை சம்பவங்களில், 63 பேர் உயிர் இழந்தனர்; நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.இதற்கிடையே, பயங்கரவாதிக்கு ஆதரவாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட ...

உறியடி விழாவுக்கு கட்டுப்பாடு : உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

Posted: 17 Aug 2016 10:28 AM PDT

புதுடில்லி: உறியடி விழாவுக்கு மும்பை ஐகோர்ட் விதித்த கட்டுப்பாட்டை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.
மஹாராஷ்டிராவில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடி திருவிழா நடக்கும். ஒருவர் மீது ஒருவர் ஏறி, மனித, 'பிரமிட்' உருவாக்கி, உயரத்தில் தொங்கவிடப்படும் பானையை உடைக்க வேண்டும். இந்த விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதித்து, மும்பை ஐகோர்ட், 2014ல், தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ...

வேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள்18 லட்சம் பேர்! தமிழக அரசு விழிக்க வேண்டிய நேரமிது

Posted: 17 Aug 2016 10:54 AM PDT

தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.வேலைவாய்ப்பு இல்லாதவர்களில், பட்டதாரி களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அரசுத் துறை பணிகள், தனி யாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கு வதால், வேலைவாய்ப்புகள் ...

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒரு வாரம் 'சஸ்பெண்ட்' சட்டசபையில் கடும் அமளி - கூண்டோடு வெளியேற்றம்

Posted: 17 Aug 2016 11:27 AM PDT

சென்னை:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதை, சபைக்குறிப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை சபையில் இருந்து வெளியேற்றும் படி, சபைக் காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தர விட்டார். வெளியேற மறுத்ததால், ஸ்டாலின் உட்பட அனைவரையும், காவலர்கள், குண்டுக் கட்டாக துாக்கிச் சென்றனர்.இதையடுத்து, நேற்று சபைக்கு வந்திருந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 80 பேரும், ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதாக, சபாநாயகர் அறிவித்தார்.சட்டசபையில், நேற்று, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை; தகவல் ...

4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்:மணிப்பூருக்கு நஜ்மா ஹெப்துல்லா

Posted: 17 Aug 2016 12:10 PM PDT

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும் மணிப்பூர்,பஞ்சாப் மாநிலங்களுடன், அசாம் மற்றும் அந்தமான் - நிகோபர் தீவுகளுக் கும் புதிய கவர்னர்களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்து உள்ளார்.

மத்திய அமைச்சர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்த நஜ்மா ஹெப்துல்லா, 75, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் கவர்ன ராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேகாலயா கவர்னர், வி.சண்முகநாதன், மணிப்பூர் கவர்னர் பதவியையும் கூடுதலாக கவனித்து வந்தார்.ராஜினாமா:பா.ஜ.,வில், 75 வயதை கடந்தவர்கள், மத்திய அமைச்சர், மாநில முதல்வராக இருக்க முடியாது என்ற அடிப்படையில், மத்திய அமைச்சர் பதவியை, ...

துணை கலெக்டருக்கு 'பளார்' எம்.எல்.ஏ., அட்டூழியம்

Posted: 17 Aug 2016 12:17 PM PDT

மும்பை:மஹாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ., துணை கலெக்டர் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவ சேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராய்கட் மாவட்டத்தில், எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்காக, நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., சுரேஷ் லாட் மற்றும் துணை கலெக்டர் அபய்கர் குத்கார் பங்கேற்றனர். அப்போது, விவசாயி ...

பா.ஜ., - பி.டி.பி.,யே காரணம்: ப.சிதம்பரம்

Posted: 17 Aug 2016 12:33 PM PDT

புதுடில்லி : ஜம்மு-காஷ்மீர் பிரச்னை தீவிரமடைந்ததற்கு மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி அரசே காரணம் என காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி அரசே காரணம். பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்காமல், அதை பெரிதுபடுத்தும் வகையில், பிரதமர் மற்றும் உள்துறை, ராணுவ அமைச்சர்களின் பேச்சுகள் அமைந்துள்ளன. காஷ்மீரில் முதலில் அமைதி ...

ஜெ., செய்த சதி: ஸ்டாலின் ஆவேசம்

Posted: 17 Aug 2016 12:36 PM PDT

சென்னை:''போலீஸ் துறை மானியத்தில், எங்களை பங்கேற்க விடாமல் தடுப்பதற்காக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளோம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் அளித்த பேட்டி:நிதி நிலை அறிக்கையாக இருந்தாலும், மானிய கோரிக் கையாக இருந்தாலும், அவற்றின் மீது முறையாக பேசி, கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம். குறிப்பிட்ட சில நேரங்களில், சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க முடியாத நிலையில், வெளிநடப்பும் செய்துள்ளோம். சில நேரங்களில், அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்தாலும், எங்கள் கடமையை முழுமையாக செய்திருக்கி ...

ரெபிசாஜ் சுற்றில் சாக்ஷி வெற்றி

Posted: 17 Aug 2016 01:07 PM PDT

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் ரெபிசாஜ் சுற்றில், சாக்ஷி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் நடந்த ரெபிசாஜ் சுற்றில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெற்றி பெற்றார். மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு ...

மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்

Posted: 17 Aug 2016 02:34 PM PDT

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது.
முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™