Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நான் டாக்டர் நீ ஆக்டர்

Posted: 17 Aug 2016 10:49 AM PDT

- கல்யாணம் முடிஞ்சு இரண்டு வாரிசுகளும் வநதாச்சு. ஆனா வீட்டு வி.ஐ.பி.களை வெளியிலயே காட்டாம பொத்திப் பொத்தி வைத்திருக்கிறார் நடிகர் விமல். - ஒரு ஸ்பெஷல் ஃபேமிலி இண்டர்வியூக்கு எண்ட்ரி கொடுக்கச் சொன்னோம். 'மன்னர் வகையறா'வில் இருந்தவர் முழு மனதோடு சம்மதித்தார். - சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேருக்குமே நல்ல பழக்கம். அக்ஷயா எனக்கு சொந்த மாமா பொண்ணு. அவங்க திண்டுக்க. நான் மணப்பாறை. பக்கம் பக்கம். அவங்க வீட்ல வசதி அதிகம். அவங்க அளவுக்கு இல்ல நம்ம வீடு. அவங்க மேல ஆசை வந்த நாள்ல இருந்து உள்ளுக்குள்ளயே வச்சிருந்தேன். - நாம ...

கடைசி பக்கம் – ஒரு பக்க கதை

Posted: 17 Aug 2016 10:45 AM PDT

உறவுகள் யாருமற்ற தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த அந்த மூதாட்டிக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிந்தது. அவரின் ஒரே ஆறுதல், தொலைக்காட்சிப் பெட்டிதான்! – டி.வி. தொடர்களில், சினிமாக்களில் வரும் அத்தனை கேரக்டர்களையும் தனக்கு நெருக்கமானவர்களாக நினைத்து ஒன்றிப் போய் விடுவார். – திடீரென நேற்று இடியும் மின்னலுமாக மழை கொட்டிய நேரத்தில் டி.வி. ஏதோ ஆகிவிட்டது. ''இனி இது தேறாது. புதிதுதான் வாங்க வேண்டும்'' என சொல்லிவிட்டார் மெக்கானிக். – மூதாட்டி கடைக்குப் போனார். எல்.சி.டி, எல்.இ.டி என அகன்ற திரைகளில் ...

எல்லா பிரச்னைகளுக்கும் காரணம், நம்பிக்கைதான்…!

Posted: 17 Aug 2016 10:44 AM PDT

@raajaacs இதமான குளிரை போர்வையும் ரசிக்கிறது. – ——————————- @Sricalifornia எல்லோருக்கும் 'பைத்தியம்' என்ற பட்டம் ஒரு முறையாவது பொருந்தியிருக்கும். – ————————————- – @Alexxious ஒரு பைத்தியக்காரனின் கட்டற்ற சுதந்திரம் எப்போதும் பொறாமை கொள்ளச் செய்கிறது!!! – ———————————— – @ writercsk உண்மையான அன்பிற்கு ரிமைண்டர்கள் அவசியமில்லை. – ————————————-

மனிதநேயம்’: ஒலிம்பிக்கில் வெற்றியை பொருட்படுத்தாமல் கீழே விழுந்த பெண்ணை தூக்கிவிட்ட வீராங்கனை

Posted: 17 Aug 2016 10:43 AM PDT

- ரியோவில் நேற்று பெண்களுக்கான 5000 மீட்டர் 2-வது அரையிறுதி ஓட்டப் பந்தயத்தில் வீராங்கனைகள் மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தனர். - அப்போது, அமெரிக்காவின் அப்பே டி அக்னோஷ்டினோ, நியூசிலாந்தின் நிக்கி ஹம்ப்ளின் ஆகியோர் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டனர். இதில் அமெரிக்க வீராங்கனையின் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்து அவதி பட்டார். நியூசிலாந்து வீராங்கனை பரிதாபப்பட்டு அமெரிக்க வீராங்கனையிடம் வந்து நலம் விசாரித்து, எழுப்பி விட்டார். பின் இருவரும் ஓட துவங்கினர். சில மீட்டர் தூரம் ...

மொய் – ஒரு பக்க கதை

Posted: 17 Aug 2016 10:42 AM PDT

கல்யாண வீட்டில் தன் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார் தொழிலதிபர் ரங்கசாமி. ''என்னடா சம்பிரதாயம் இது? ஒரு வாய் சோறு போட்டுட்டு மொய்ங்கிற பேருல, பணத்தைக் கறந்துடறாங்க. யார் இவங்களைக் கூப்பிடச் சொன்னது? என்னிக்கு இந்தக் கலாசாரம் நம்ம நாட்டுல இருந்து ஒழியுமோ?'' – பந்தியில் விருந்து முடிந்ததும் சத்தமாக சலித்துக் கொண்டவர், வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையைத் துப்ப மண்டபத்தின் பின்பக்கம் சென்றார். அங்கே மணமகனின் தந்தையின் கையை மணமகளின் தந்தை பிடித்துக் கொண்டு கெஞ்சுவது அவர் காதில் விழுந்தது. ''சம்பந்தி, ...

அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக

Posted: 17 Aug 2016 10:40 AM PDT

நண்பர்களே!அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக. பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.நன்றி பதிவிறக்க சுட்டி இப்படிக்கு தமிழ்நேசன் நேரடி லிங்க்: http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_29.html

மன்னிப்பு கோரி ...!

Posted: 17 Aug 2016 10:33 AM PDT

மன்னிப்பு கோரி
மேல் முறையீடு
செய்கிறது மனம்
ஆனால் ...

இரக்கமில்லாமல்
வந்து வந்து குவிகிறது
பேசி விட்ட வெறுப்புகளும்
நடந்து கொண்ட வேதனையும் ...!

வீட்டுக் குறிப்புகள் 10

Posted: 17 Aug 2016 10:32 AM PDT

* பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவை
கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும்
கலந்து கொண்டால் போதும்
–
* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக மாறாது!
–

– கோகிலம் சநதிரஜோதி, பொறையார்.
–
——————————————-

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...

Posted: 17 Aug 2016 10:27 AM PDT

சமீபத்தில் ஒரு திருமணவிழாவுக்குச் சென்றிருந்தேன். திருமணத்தைப் பார்த்துவிட்டு சாப்பிட்டு முடித்தவுடன் மொய் எழுத வந்தேன். அவ்வளவாக கூட்டம் இல்லை… மாப்பிள்ளையின் தந்தை மொய் எழுதுபவர் அருகில் உட்கார்ந்திருந்தார். நான் மொய் எழுதவிட்டு வெற்றிலைபாக்கு எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து இருநூறு ரூபாய் மொய் எழுதினார்.அப்போது மாப்பிள்ளையின் தந்தை 'ஏங்க மூணுமாசத்துக்கு முன்னாடி உங்க பொண்ணு கல்யாணத்துக்கு வந்து முந்நூறு மொய் எழுதினேன். நூறைக் குறைச்சிட்டீங்களே!' என்றார். அந்த ...

நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:

Posted: 17 Aug 2016 10:20 AM PDT

நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை: ஆம் நண்பர்களே…! 'அம்மா' என்றழைக்க தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்…" என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும்வரையில் எங்களைத் தவிர்த்தார். அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் ...

ஒரு மடங்கு அதிகம் ...!

Posted: 17 Aug 2016 10:19 AM PDT

உன்னை
நினைக்கும் போதெல்லாம்
இதயம் கனக்கிறது  
என்றேன்
எவ்வளவு என்றான்?
உன்
தாயின் அன்பை விட
ஒரு மடங்கு அதிகம் என்றேன் !

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Posted: 17 Aug 2016 10:16 AM PDT

- திருமணமான தம்பதிகள் பரஸ்பர உடன்பாட்டில் விவாகரத்துக் கேட்டால், அதற்குப் பின்னால் உள்ள காரண காரியங்களை ஏன் எதற்கு என்று கேட்டு, விவாகரத்தை மறுப்பது நீதிமன்றத்தின் வேலையில்லை என்று ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(புதன்) ஒரு வழக்கின் தீர்ப்பில், நீதிபதி கே.கே.சசிதரன், நீதிபதி என். கோகுல்ராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். திருநெல்வேலி குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. 2013 மே மாதம் திருமணமான தம்பதியர், ...

நம்பிக்கை…!

Posted: 17 Aug 2016 10:15 AM PDT


-
பயம்
–
வெடித்து விடுமோ
என்ற பயத்திலேயே
பெரிதாக்கப்படுவதில்லை
பெரும்பாலான பலூன்களும்
பிரச்சினைகளையும்!
–
——————-

என் கவிதை

Posted: 17 Aug 2016 10:13 AM PDT

வரிசையில் நிற்க ஆணையிட்டேன் , என்னவளின் கவிதையில் ,தன்னையும் சேர்க்க வேண்டும் என்று என்னை முட்டிய அழகான சொற்களை.....காதல் இது தானாே

தமிழுக்கும் அமுதென்று பேர்.

Posted: 17 Aug 2016 09:55 AM PDT

தமிழுக்கும் அமுதென்று பேர்.   ஒரு தொலைக்காட்சியில் , க்விஸ் நிகழ்ச்சி நடக்கிறது . நடத்துபவர் 'ல' " ள" குழப்பம் அதில் அதிகம் உண்டு வெள்ளம் என்பதற்கு "வெல்லம்" என்கிறார் உங்கள் முன்னால், என்பதற்கு உங்கல்  முன்னால் என்பார் . திருத்த முடியுமா என்னால் ? முடியாது . ஆனால் , இது மாதிரி எழுத்துப் பிழைகள்  ஈகரையில் வராமல் இருக்க , நம்மால் முடியும் எழுதிய வரிகளை , முன்னோட்டத்தில் ,பாருங்கள் . தவறு எனப் படுவதையும் ,சந்தேகப்படுவதையும்  "ta.wiktionary.org " மூலம் சரி பாருங்கள்  . கணம் --கனம், ...

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 17 Aug 2016 08:17 AM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

கம்பன் எழுதாத காதல் வரி

Posted: 17 Aug 2016 08:08 AM PDT


-
உனது விழியால் பேசினாய்
புதுமொழி
அதை எனது இதய அச்சகத்தில்
கோர்த்து பிரசுரித்தேன்
அதில் இருந்தது
அழகான காதல் கவி
–
>சி.வெ.குமார்
–

—————————–

இணைத்து கொண்டமைக்கு நன்றி

Posted: 17 Aug 2016 06:35 AM PDT

இ[b]ணை[/b]த்து  கொண்டமைக்கு நன்றி

குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Posted: 17 Aug 2016 06:03 AM PDT

பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும், குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும். - இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி (2.8.16) செவ்வாய்க்கி ழமை கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் ...

புத்தகம் தேவை...

Posted: 17 Aug 2016 05:05 AM PDT

அன்பர்களே ...
Excel VBA Programming PDF File தமிழில் தேவை link இருந்தால் பகிரவும்

நாந்தானுங்க கிறுக்கினேன்

Posted: 17 Aug 2016 05:03 AM PDT

நம்ம நாட்டுலதான்யா எல்லாமே இலவசம், மாசமாய் இருக்கும்போது மருத்துவம் இலவசம், கொழந்த பொறந்தா பணமும், பால் பவுடரும் இலவசம், வளரும்போது படிப்பு இலவசம், படிச்சிட்டு வேல இல்லையா மாசா மாசம் பணமும் தந்து ஆக்கித் திங்க அரிசி, பருப்பு இலவசம்!! இம்புட்டும் தந்து - நீ பத்தலன்னு சொன்னா வீடும், கரண்டும் இலவசம், கண்ணாலத்துக்கு தாலிக்கு தங்கம் இலவசம், படிப்ப பொறுத்து அது கொஞ்சம் கூட கொறைய கெடைக்கும்!! அப்புறம் எப்படிப்பா நாங்க வேலைக்குப் போறது கஷ்டப்படுறது!! இத்தன செய்யறதுக்குப் பதிலா வீடு ...

மலேசிய எண்ணெய் கப்பல் கடத்தல்

Posted: 17 Aug 2016 04:46 AM PDT

கோலாலம்பூர் : இந்தோனேஷிய கடல் பகுதியில் மலேசிய எண்ணெய் க ப்பல் கடத்தப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் 400,000 டாலர் மதிப்பிலான டீசல் இருந்ததாக மலேசிய கடல்சார் அமலாக்க முகமை இயக்குனர் ஜெனரல் அகமது புழி அப் ககர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கப்பல் இந்தோனேஷியாவின் படாம் தீவு அருகே கடத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தோனேஷிய அதிகாரிகளுடன் சேர்ந்து கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை தேடி வருவதாகவும் மலேசியா தெரிவித்துள்ளது. - --------------- தினமலர்

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )

Posted: 17 Aug 2016 02:33 AM PDT

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம்  (தொடர் ) ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா? நிசசயமாக உண்டு இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான்  பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை  உருவாக்கி  பேய் போன்று  பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர்  புத்திசாலிகள்  என்று தம்மை  உருவகித்துக்கொள்வோர் . அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால்  நானும்  அதேமான நிலையில்  இன்றை வரை இருந்தவன் . ஆனால் இப்போது  அந்த பேய்களுடன் நட்பும்  பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு  என்று அர்த்தம் ...

திருநங்கையர் வழக்கு; ஐகோர்ட் கேள்வி

Posted: 17 Aug 2016 01:48 AM PDT

புதுடில்லி: 'திருநங்கையரின் ஆண் பெயர்களை, பெண் பெயர்களாக மாற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்' என, மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. டில்லியை சேர்ந்த இரு திருநங்கையர், தங்கள் பெயர்களை பெண் பெயர்களாக மாற்ற, அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும், தங்களிடம் பாகுபாடு காட்டும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, "திருநங்கையரின் பெயர்களை மாற்றம் செய்வதில் அரசுக்கு என்ன ...

நிறைவேறாத வில்லன் ஆசை!

Posted: 17 Aug 2016 01:37 AM PDT

- வருடங்கள் எத்தனை ஓமனாலும், பதட்டமில்லாமல் நின்று நிதானமாக கில்லி அடிப்பது விக்ரம் ஸ்டைல், எண்ணிக்கையைப் பொருட்படுத்தாத நம்பிக்கை நடிகர், நடிப்பில் பலமுகம் காட்டுபவரை இருமுகன் ஸ்பாட்டில் சந்தித்தோம். இருமுகனில் ஒரு முகம் இது, இன்னொரு முகம் எது? - அதுதாங்க இது… (சிரிக்கிறார்) இதுல ரெண்டு கெட் அப்ல வர்றேன். தாடியுடன் ஒரு முகம் அழகா ஒரு முகம் நயன்தாரா, நித்யாமேனன்னு டூ கார்ஜியஸ் கேர்ள்ஸ். காதல் காமெடி கலந்த கமர்ஷியல் கதகளியா இருக்கும். இதில் தாடிதான் ஸ்பெஷலா? - படத்துல நிறைய ஸ்பெஷல் ...

அப்பா அன்பு சுதந்திரமும், அக்கறையும் - – தீபலட்சுமி ஜெயகாந்தன்

Posted: 17 Aug 2016 01:29 AM PDT

- அப்பாவைப் பத்தி எழுது, அப்பாவைப் பத்திஎழுதுன்னா என்ன எழுதுவது? – அப்பாவின் நக்கல் நையாண்டிகளுக்கு ஆளாகி இருந்தால் தெரியும் என் தர்மசங்கடம்! – அதீத நுண்ணுணர்வு மற்றும் அழகியலுடன் எதையாவது நான் வலிந்து எழுதி திருப்தி கொள்ள நினைத்தால், அப்பா கண்முன் வந்து, அசடே என்று சொல்வது போல இருக்கிறது. – ஒரு தெனாவட்டான தன்னம்பிக்கையையும், அப்பாவைத் தொடர்புபடுத்தி முன்னிறுத்திக் கொள்வதில் ஒரு எச்சரிக்கை கலந்த தயக்கத்தையும் ஒருசேர அளித்தவர் அப்பா, இரண்டுக்காகவும் அவருக்கு மனமார நன்றிதான் சொல்லத் ...

கல் உப்புஒரு வரப்பிரசாதம்!!

Posted: 16 Aug 2016 11:36 PM PDT

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்! - மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்! - மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க… கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!! - அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க…; கண்ணை மூடிக்கிட்டு, ...

கூகிள் டியோ (Google DUO app ) செயலி அறிமுகம்.

Posted: 16 Aug 2016 11:21 PM PDT

DUO செயலியினை இன்று பயனர்கள் மத்தியில்   முதல் முறையாக கூகிள் கொண்டுவந்துள்ளது.   இதை  ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஒ.ஸ்  கருவிகளில் பயன்படுத்த முடியும்.   மற்ற வீடியோ கால்களை விட  கூடுதல் செயல்களைக் கொண்ட  டியோ செயலி  -KNOCK KNOCK - என்றும் அழைக்கப்படுகிறது.  ஒருவர் கதவை தட்டும் போது முன்ஜாக்கிரதையாக யாரென்று பார்த்த பின்பு கதவை திறப்பதை போன்ற ஒரு  சிறிய நுணுக்கத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது வீடியோ காலிங்கில் ஒருவர் அழைப்பு வரும்போது கூடவே எதிர்  முனையில் இருப்பவரை நேரடியாக வீடியோ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™