Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"மாஞ்சா' நூல் விவகாரம்: சுற்றுச்சூழல் துறைச் செயலர் மீது சிசோடியா புகார்

Posted: 17 Aug 2016 01:31 PM PDT

மாஞ்சா நூலுக்கு தடை விதிக்க வகை செய்யும் வரைவு அறிவிக்கையை தாமதமாக வெளியிட்ட தில்லி சுற்றுச்சுழல் துறைச் செயலர் சந்திரசேகர் பார்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

தில்லியில் மாஞ்சா நூலால் 200 பறவைகள் படுகாயம்

Posted: 17 Aug 2016 01:30 PM PDT

தில்லியில் மாஞ்சா நூலில் சிக்கி, புதன்கிழமை ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட பறவைகள் படுகாயம் அடைந்தன.

ஜாமியா பல்கலை. மாணவர்கள் போராட்டம் வாபஸ்

Posted: 17 Aug 2016 01:30 PM PDT

மாணவர் விடுதியில் காவல் துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டதாகக் கூறி சில தினங்களாக மேற்கொண்டிருந்த போராட்டத்தை ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை விலக்கிக் கொண்டனர். பல்கலைக்கழக துணைவேந்தர் அளித்த உறுதியின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

என்டிஎம்சி பள்ளிகளில் மின்னணு கல்வி முறை பயிற்றுவிப்பு திட்டம்

Posted: 17 Aug 2016 01:30 PM PDT

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பள்ளிகளில் மின்னணு கல்வி முறையிலான பயிற்றுவிப்பு (இ-லேர்னிங்) திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு: விரிவான அறிக்கை தயாரிக்க தில்லி அரசுக்கு என்ஜிடி உத்தரவு

Posted: 17 Aug 2016 01:29 PM PDT

தில்லியில் உள்ள அரசுக் கட்டடங்கள், பாலங்கள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தில்லி அரசு, டிடிஏ உள்ளிட்டவை விரிவான அறிக்கை தயாரிக்குமாறு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

"டிடிசி' பேருந்துகளில் இன்று பெண்களுக்கு இலவசப் பயணம்

Posted: 17 Aug 2016 01:29 PM PDT

ரக்ஷ பந்தனையொட்டி தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) இயக்கும் பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்துகள் நீங்கலாக) பெண்கள் இலவசமாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு அமைச்சர்கள் இன்று பதிலுரை

Posted: 17 Aug 2016 01:29 PM PDT

சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் அமளி காரணமாக, பேரவை நிகழ்ச்சிகள் முடித்து வைக்கப்பட்டன. இதனால், இரண்டு அமைச்சர்கள் வியாழக்கிழமை பதிலுரை அளிக்கின்றனர்.

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு முடிவில் மாற்றமில்லை: கேஜரிவால் திட்டவட்டம்

Posted: 17 Aug 2016 01:28 PM PDT

தில்லியில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பைக்கில் சென்ற சிறுவன் காயம்

Posted: 17 Aug 2016 01:27 PM PDT

காஜியாபாதில் தந்தையுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற சிறுவனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில் பலத்த காயமடைந்தான்.

சொத்து மோசடி: தலைமைக் காவலர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

Posted: 17 Aug 2016 01:27 PM PDT

சொத்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார் விவகாரத்தில் தலைமைக் காவலர், அவரது இரு சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது

Posted: 17 Aug 2016 01:27 PM PDT

தில்லி புறநகர்ப் பகுதியான நரேலாவில் 11 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடற்பயிற்சியாளர் கொலை வழக்கில் இருவர் கைது

Posted: 17 Aug 2016 01:26 PM PDT

கடந்த ஆண்டு அக்டோபரில் உடற்பயிற்சியாளர் கொல்லப்பட்ட வழக்கில் தில்லி நஜஃப்கர் பகுதியில் செயல்பட்டு வந்த கொள்ளைக் கும்பலின் தலைவன் டினுசாரியா மற்றும் அவனது கூட்டாளி மோஹித் கட்டாரியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பணம் வைத்து சூதாட்டம்: 3 இளைஞர்களிடம் விசாரணை

Posted: 17 Aug 2016 01:26 PM PDT

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று இளைஞர்களை தில்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, அவர்களது உறவினர்களும், குடும்பத்தினரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.25 லட்சம் பறிப்பு

Posted: 17 Aug 2016 01:26 PM PDT

தில்லியின் ரோகிணி பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி, ரூ.25 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 17 Aug 2016 01:26 PM PDT

நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகளை மூடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்குரைஞர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு ஒப்புதல்

Posted: 17 Aug 2016 01:25 PM PDT

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த வழக்குரைஞர்களை நியமிப்பதற்கு விதிக்கப்பட்ட உச்சவரம்பை விலக்கிக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தீஸ்தா சீதல்வாட் வங்கிக் கணக்குகள் முடக்கம்: குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 17 Aug 2016 01:25 PM PDT

நிதி மோசடியில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட், அவரது கணவர் மற்றும் அவரர்களது 2 தனியார் தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் உரிய பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அளித்தது.

லஷ்கர் பயங்கரவாதிக்கு செப். 15 வரை நீதிமன்றக் காவல்

Posted: 17 Aug 2016 01:25 PM PDT

லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் இளைஞரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சத்துணவு திட்டம்: திமுக - அதிமுக விவாதம்

Posted: 17 Aug 2016 01:24 PM PDT

சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக, பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே விவாதம் நடைபெற்றது.

சட்டப் பேரவை விவகாரம்: திமுகவினர் போராட்டம் - கைது

Posted: 17 Aug 2016 01:24 PM PDT

திமுக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் பேரவைத் தலைவர் தனபாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 204 பேருக்கு ரூ. 14 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Posted: 17 Aug 2016 01:23 PM PDT

திருத்தணியை அடுத்துள்ள கார்த்திகேயபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ. 14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வழங்கினார்.

நாளை "அம்மா' திட்ட முகாம்

Posted: 17 Aug 2016 01:23 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும், மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சிறு வியாபாரிகளுக்கு கடன் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

Posted: 17 Aug 2016 01:22 PM PDT

சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் தலா ரூ. 20 ஆயிரம் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலையோர சிறு கடை வியாபாரிகள் சிஐடியு சங்கம் சார்பில் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3-ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் கொலை செய்த தந்தை

Posted: 17 Aug 2016 01:22 PM PDT

கும்மிடிப்பூண்டி அருகே மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், அக் குழந்தையினை தந்தையே கழுத்தை நெரித்து கொலைசெய்தார். கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சி அமிர்தமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர்

மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் கைது

Posted: 17 Aug 2016 01:22 PM PDT

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைதுசெய்யப்பட்டார்.

பள்ளி வகுப்பறையில் உடைந்த மது புட்டிகள், ரத்தக்கரை

Posted: 17 Aug 2016 01:21 PM PDT

திருவள்ளூர் அருகே உள்ள தொடக்கப் பள்ளி வகுப்பறையில் உடைந்த மது புட்டிகள், ரத்தக் கரை இருந்ததால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Aug 2016 01:21 PM PDT

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசைக் கண்டித்து குழித்துறையில் மார்க்சிஸ்ட் நடைப்பயணம்

Posted: 17 Aug 2016 01:20 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடு தழுவிய இயக்கம் சார்பில் குழித்துறை நகராட்சிப் பகுதியில் பிரசார நடைப்பயணம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவில், கருங்கல் பகுதிகளில் 2.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 17 Aug 2016 01:20 PM PDT

நாகர்கோவில், கருங்கல் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற இரண்டே முக்கால் டன் (2,750 கிலோ) ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

களியக்காவிளை புனித அந்தோணியார் ஆலய விழா நாளை தொடக்கம்

Posted: 17 Aug 2016 01:20 PM PDT

களியக்காவிளை புனித அந்தோணியார் ஆலய பெருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 19) தொடங்கி ஆக. 28ஆம் தேதி நிறைவடைகிறது.

போக்குவரத்து நெரிசலால் அவதி கருங்கல்லில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Posted: 17 Aug 2016 01:20 PM PDT

கருங்கல்லில் முக்கிய சந்திப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சாலைப் பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனைவியை எரித்துக் கொல்ல முயன்றதாக கணவர் கைது

Posted: 17 Aug 2016 01:19 PM PDT

சுசீந்திரத்தில் மனைவியை எரித்துக் கொல்ல முன்றதாக கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் அருகேயுள்ள மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர்

அருமனை அருகே ஆசிரியை வீட்டில் திருட்டு முயற்சி

Posted: 17 Aug 2016 01:19 PM PDT

அருமனை அருகே ஆசிரியை வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.

மார்த்தாண்டம் அருகே வாழைகள் சேதம்: இளைஞர் கைது

Posted: 17 Aug 2016 01:19 PM PDT

மார்த்தாண்டம் அருகே வாழை மரங்களை வெட்டி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குமாரகோவிலில் பெளர்ணமி கிரிவலம்

Posted: 17 Aug 2016 01:18 PM PDT

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமார சுவாமி திருக்கோயிலில், வேல்முருகன் சேவா சங்க பக்தர்கள் புதன்கிழமை பெளர்ணமி கிரிவலம் வந்தனர்.

மாணவர்களுக்கு திறனறி தேர்வு சிறப்புப் பயிற்சி: முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

Posted: 17 Aug 2016 01:18 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் திறனறித் தேர்வுக்குத் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயகுமார்.

பொருள் விநியோகத்தில் முறைகேடு: ரேஷன் பணியாளர்களுக்கு ரூ. 22 ஆயிரம் அபராதம்

Posted: 17 Aug 2016 01:18 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொருள்கள் விநியோகத்தில் முறைகேடு செய்ததாக பணியாளர்களுக்கு ரூ.22,165 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

3 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

Posted: 17 Aug 2016 01:17 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தின் 3 வட்டங்களில் மூன்றாம் கட்டமாக அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 19) நடைபெறுகிறது.

குழித்துறை அஞ்சலக கட்டடப் பணிக்கு ரூ. 2 கோடி

Posted: 17 Aug 2016 01:17 PM PDT

குழித்துறையில் புதிதாக அஞ்சல் அலுவலகம் கட்டுவதற்கு மத்திய அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் நாகர்கோவில் முகாம் அலுவலகச்

திருவிதாங்கோடு கல்லூரியில் வேலை வழிகாட்டி நூல் வெளியீடு

Posted: 17 Aug 2016 01:17 PM PDT

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நூல் வெளியீட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவிலில் விருது வழங்கும் விழா

Posted: 17 Aug 2016 01:17 PM PDT

கலை, இலக்கிய மேம்பாட்டுப் பேரவை சார்பில் சிறந்த எழுத்தாளர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.

தி.நகரில் நவீன வாகன நிறுத்தம்: அமைச்சர் தகவல்

Posted: 17 Aug 2016 01:16 PM PDT

சென்னை, தியாகராய நகரில் 6 அடுக்கு நவீன வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

விவேகானந்தரின் கொள்கைகளை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்: சுவாமி விமூர்த்தானந்தர்

Posted: 17 Aug 2016 01:16 PM PDT

மாணவர், மாணவிகள் வெற்றி பெற விவேகானந்தரின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் தெரிவித்தார்

பேரவையில் இன்று...

Posted: 17 Aug 2016 01:11 PM PDT

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஆக. 18) கேள்வி நேரம் முடிந்ததும், சுகாதாரம்-குடும்ப நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

சத்தீஸ்கர்: 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

Posted: 17 Aug 2016 12:45 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட 4 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஊதிய நிலுவையாக ரூ.34,600 கோடி வழங்கவுள்ளது மத்திய அரசு

Posted: 17 Aug 2016 12:44 PM PDT

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் மொத்தம் ரூ.34,600 கோடி நிலுவைத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

வழக்குரைஞர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு

Posted: 17 Aug 2016 12:40 PM PDT

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த வழக்குரைஞர்களை நியமிப்பதற்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச எண்ணிக்கை கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தூத்துக்குடியில் 4ஆவது பைப் லைன் திட்டம் மூலம் 21இல் குடிநீர் சோதனை ஓட்டம்

Posted: 17 Aug 2016 12:35 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் 4ஆவது பைப் லைன் திட்டத்தின் மூலம், ஆக.21 ஆம் தேதிமுதல் குடிநீர் விநியோகித்து சோதனைஓட்டம் நடத்தப்பட உள்ளது.

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Aug 2016 12:35 PM PDT

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழவைப்பார் அலங்கார அன்னை ஆலய விழா தேர் பவனி

Posted: 17 Aug 2016 12:35 PM PDT

குளத்தூர் அருகே கீழவைப்பார் தூய மோட்ச அலங்கார அன்னை ஆலய திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேர் பவனி நடைபெற்றது.

சந்தையடியூர் கோயிலில் ஆடிமாத பால்முறைத் திருவிழா நிறைவு

Posted: 17 Aug 2016 12:34 PM PDT

உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் நான்கு நாள்கள் நடைபெற்ற ஆடி மாத பால்முறைத் திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

ஆறுமுகனேரி பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா

Posted: 17 Aug 2016 12:34 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது.

குடும்ப அட்டைகளில் திருத்தம்: இன்று சிறப்பு முகாம்

Posted: 17 Aug 2016 12:34 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தம் செய்வது தொடர்பான முகாம் வியாழக்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது.

ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழா கொடியேற்றம்

Posted: 17 Aug 2016 12:33 PM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கல்லூரி மாணவிக்கு ஓவியக் கலைஞர் விருது

Posted: 17 Aug 2016 12:33 PM PDT

ஆறுமுகனேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரா.கீர்த்தி கிருஷ்ணாவுக்கு சிறந்த ஓவியக் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மானிய டீசல் கடத்தியதாக 2 பேர் கைது

Posted: 17 Aug 2016 12:32 PM PDT

தூத்துக்குடியில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட டீசலை கடத்தியதாக இருவரை போலீஸார் புதன்கிழணை கைது செய்தனர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

Posted: 17 Aug 2016 12:32 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இலுப்பையூரணி பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் உரக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 17 Aug 2016 12:32 PM PDT

சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் உள்ள உரக்கடைகளில் வேளாண் சிறப்பு கண்காணிப்புக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

வானரமுட்டி ஆசிரியர் பயிற்சி விடுதியில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 17 Aug 2016 12:31 PM PDT

கோவில்பட்டியையடுத்த வானரமுட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி விடுதியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூரில் குப்பைத் தொட்டியில் ஆண் சிசு

Posted: 17 Aug 2016 12:31 PM PDT

திருச்செந்தூரில் குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த 6 மாத ஆண் சிசுவை போலீஸார் மீட்டனர்.

பகுதிநேர ரேஷன் கடை கோரி பொதுமக்கள் போராட்டம்

Posted: 17 Aug 2016 12:31 PM PDT

கோவில்பட்டியையடுத்த சிதம்பராபுரம் ஊராட்சி கழுகாசலபுரம் பகுதி மக்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐஐடி நுழைவுத் தேர்வு மாணவர்களுக்காக 3 தொலைக்காட்சி அலைவரிசைகள்

Posted: 17 Aug 2016 12:30 PM PDT

கல்வி ஒளிபரப்புச் சேவைக்காக 32 தொலைக்காட்சி அலைவரிசைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் தொடங்கவுள்ளது.

தீ விபத்தில் காயமடைந்த பெண் சாவு

Posted: 17 Aug 2016 12:30 PM PDT

கயத்தாறு அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் புதன்கிழமை இறந்தார். கயத்தாறு முத்துராமலிங்கனார் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி சண்முகத்தாய் (37). இவர் கடந்த

கோஷ்டி மோதல் : 7 பேர் காயம்; 20 பேர் மீது வழக்கு

Posted: 17 Aug 2016 12:28 PM PDT

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் உள்ள உணவகத்தில் கடந்த 15-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த இலக்கியவேந்தனுக்கும், லட்சுமணனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக

ஐ.நா. அலுவலகம் நோக்கி பேரணி சென்ற பிரிவினைவாத தலைவர் கைது

Posted: 17 Aug 2016 12:28 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில விவகாரத்தில் ஐ.நா. சபை உடனடியாக தலையிட வலியுறுத்தி, ஸ்ரீநகரில் இருக்கும் ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழு அலுவலகத்தை நோக்கி பேரணி சென்ற ஹுரியத் பிரிவினைவாதத் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் கைது செய்யப்பட்டார்.

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிர முயற்சி: எச். ராஜா பேட்டி

Posted: 17 Aug 2016 12:28 PM PDT

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா.

புதுகை விதவைப் பெண்ணை 2-வது திருமணம் செய்த மதுரை இளைஞர் கைது

Posted: 17 Aug 2016 12:27 PM PDT

முதல் திருமணத்தை மறைத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த விதவைப் பெண்ணை 2-வது திருமணம் செய்து ஏமாற்றிய மதுரை இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஆம்னி பேருந்தில் திடீர் தீ

Posted: 17 Aug 2016 12:27 PM PDT

தஞ்சையிலிருந்து சென்னையை நோக்கி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறம் திடீரென தீப்பற்றியது.

பயங்கரவாதத்தை ஒடுக்க முழு மூச்சுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்: அமெரிக்கா

Posted: 17 Aug 2016 12:27 PM PDT

தங்கள் நாட்டில் மட்டுமல்லாது இந்தியத் துணைக்கண்ட பிராந்தியம் முழுவதிலும் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறவிடாமல் தடுக்க பாகிஸ்தான் முழு மூச்சுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

லாரி மோதி விவசாயி சாவு

Posted: 17 Aug 2016 12:27 PM PDT

பட்டுக்கோட்டையில் புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

கும்பகோணம் அருகே தீ விபத்து

Posted: 17 Aug 2016 12:26 PM PDT

கும்பகோணம் அருகே உள்ள நந்திவனம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரசாமி மகன் செல்வராஜ் (53). செவ்வாய்க்கிழமை மாலை இவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

காஷ்மீர் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிதி: என்ஐஏ விசாரணை தொடக்கம்

Posted: 17 Aug 2016 12:26 PM PDT

காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றுவதற்குத் தேவையான நிதியை வெளிநாடுகளில் இருந்து சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகள் வாயிலாக அனுப்பும் விவகாரம் குறித்து தேசியப் புலானாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

டிராக்டர் மோதி தொழிலாளி சாவு

Posted: 17 Aug 2016 12:26 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சேது சாலையில் டிராக்டர் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

கந்தர்வகோட்டை அருகேபாலத்தில் கார் மோதி தம்பதி சாவு

Posted: 17 Aug 2016 12:25 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே பாலத்தில் கார் மோதியதில், வயதான தம்பதி புதன்கிழமை இறந்தனர்.

புதை சாக்கடை கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு: நெடுவாசல் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 17 Aug 2016 12:24 PM PDT

பெரம்பலூர் நகராட்சியினரால் செயல்படுத்தப்படும் புதை சாக்கடை கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஆட்சியர் க. நந்தகுமாரிடம் நெடுவாசல் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.

சமூகத் தொண்டு புரிந்த தனிநபர், நிறுவனங்கள் தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 17 Aug 2016 12:24 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தேசிய இளைஞர் விருது பெற ஆக.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

தேசத் துரோக சட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted: 17 Aug 2016 12:24 PM PDT

தேசத் துரோகம் தொடர்பான சட்டப்பிரிவை மத்திய, மாநில அரசுகள் தவறுதலாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 17 Aug 2016 12:23 PM PDT

மகனின் மர்ம சாவுக்கு காரணமான தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவனின் பெற்றோர் பெரம்பலூர் ஆட்சியர் க. நந்தகுமாரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.

காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள், காவலர் பலி

Posted: 17 Aug 2016 12:23 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேரும், காவலர் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 2 ராணுவ வீரர்களும், காவலர் ஒருவரும் காயமடைந்தனர்.

பேரவைத் தலைவரின் உருவபொம்மை எரிப்பு: திமுகவினர் 44 பேர் கைது

Posted: 17 Aug 2016 12:23 PM PDT

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர் 44 பேரை பெரம்பலூர் போலீஸார் புதன்கிழமை மாலை கைது செய்தனர்.

டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு

Posted: 17 Aug 2016 12:23 PM PDT

பெரம்பலூர் அருகே சாலையோரப் பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிமேலும் 6 பேர் காயமடைந்தனர்.

பிகார்: கள்ளச்சாராயத்துக்கு 13 பேர் பலி

Posted: 17 Aug 2016 12:22 PM PDT

பிகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகாரில் கடந்த ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. எனினும்,

தா. பழூர் அருகே பெண்ணுக்குத் தீ வைத்தவர் கைது

Posted: 17 Aug 2016 12:22 PM PDT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இளம்பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த இளைஞரை தா.பழூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அண்ணா பல்கலை. மண்டல கோகோ: செந்தூரான் கல்லூரி சிறப்பிடம்

Posted: 17 Aug 2016 12:21 PM PDT

அண்ணா பல்கலைக்கழகத்தின் 16-வது மண்டல அளவிலான கோ-கோ போட்டியில் செந்தூரான் பொறியியல் கல்லூரி அணி சிறப்பிடம் பிடித்துள்ளது.

வாகவாசல் அரசுப் பள்ளியில்வளர் இளம் பருவத்தினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted: 17 Aug 2016 12:21 PM PDT

புதுக்கோட்டை அருகேயுள்ள வாகவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியில் வோல்ட் விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில், வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி மாணவியை காணவில்லை எனப் புகார்

Posted: 17 Aug 2016 12:21 PM PDT

விராலிமலை அருகே கல்லூரி மாணவியை காணவில்லை என மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.

திமுகவினர் சாலை மறியல்; உருவ பொம்மை எரிப்பு

Posted: 17 Aug 2016 12:20 PM PDT

சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் சட்டப்பேரவைத் தலைவரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் புதன்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.டி.பி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 17 Aug 2016 12:20 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஆர்டிபி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆசிரியை பணியிட மாற்றம்: பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Posted: 17 Aug 2016 12:20 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வரகூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளை

கரூரில்தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Aug 2016 12:19 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தொலைத்தொடர்பு ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை வட்டங்களில் பிறப்பு, இறப்பு பதிவு மையம் அமையும்

Posted: 17 Aug 2016 12:19 PM PDT

கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய வட்டங்களில் பிறப்பு, இறப்பு பதிவு மையம் அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

தென்னிலை அருகே பைக் மீது கார் மோதல்: விவசாயி சாவு

Posted: 17 Aug 2016 12:19 PM PDT

தென்னிலை அருகே பைக் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.

தவுட்டுப்பாளையத்தில் மணல் அள்ள எதிர்ப்பு: இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

Posted: 17 Aug 2016 12:18 PM PDT

தவுட்டுப்பாளையத்தில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்களை சாதனையாளர்களாக்கும் வல்லமை ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ளது

Posted: 17 Aug 2016 12:17 PM PDT

மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வல்லமை ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ளது என்றார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மு. ராமசாமி.

அரியலூர் அருகேலாரிகள் மோதல்: ஓட்டுநர் சாவு

Posted: 17 Aug 2016 12:17 PM PDT

அரியலூர் அருகே புதன்கிழமை அதிகாலை லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜயங்கொண்டத்தில் ரத்த தான முகாம்

Posted: 17 Aug 2016 12:17 PM PDT

ஜயங்கொண்டம் ராயல் சென்டினியல் அரிமா சங்கம், ஜயங்கொண்டம் மாடர்ன் கல்லூரி மற்றும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைஆகியவை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவன் தற்கொலை

Posted: 17 Aug 2016 12:16 PM PDT

ஜயங்கொண்டம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் விஜய் (17). இவர், விளந்தை ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 17 Aug 2016 12:16 PM PDT

அரியலூர் மாவட்டம்,செந்துறை வெற்றி விநாயகா மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

நீச்சல் பயணத்தை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறேன்

Posted: 17 Aug 2016 12:16 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் வென்றதன் மூலம் எனது நீச்சல் பயணத்தை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறேன் என்று அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் கூறினார்.

கற்கும் பாரதம்: ஆக. 21-ல் அடிப்படை எழுத்தறிவு தேர்வு

Posted: 17 Aug 2016 12:16 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் "கற்கும் பாரதம்' திட்டத்தின் கீழ் பயன்பெறும் 15 முதல் 80 வயதுக்குட்பட்ட எழுத,படிக்கத் தெரியாத பயனாளிகள் 295 பேருக்கு ஆக. 21-ல்(ஞாயிற்றுக்கிழமை) அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™