Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பெண்களை உற்றுப் பார்த்தால் வழக்கு! கமிஷனர் கருத்தால் விவாதம்

Posted: 16 Aug 2016 02:31 AM PDT

திருவனந்தபுரம்: பெண்களை 14 நிமிடம் தொடர்ந்து உற்றுப் பார்த்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என கேரள சுங்க கமிஷனர் ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், பெண்களை 14 நிமிடங்கள் தொடர்ந்து உற்றுப் பார்த்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால், மாநிலத்தில் இதுவரை ஒரு வழக்குக்கூட பதிவு செய்யவில்லை. பெண்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தகாத வகையில் நடந்து கொண்டாலோ, மோசமான வார்த்தைகளால் துன்புறுத்தினாலோ, பெண்கள் உடனடியாக பதிலடி கொடுக்க ...

சேது கால்வாய் திட்டம் நிறைவேறினால் ரூ.600 கோடியில் புது பாலம்

Posted: 16 Aug 2016 09:29 AM PDT

ராமேஸ்வரம்: ''சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறினால் பாம்பனில், 600 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது,'' என, தென் னக ரயில்வேயின் பாலம் தொடர்புடைய முதன்மை பொறியாளர், எஸ்.சொக்கலிங்கம் தெரிவித்தார்.

ஆய்வு : ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில், மராமத்து பணிகள் நடக்கின்றன;இதை ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தென்னக ரயில்வேயின் பாலங்களுக்கான முதன்மை பொறியாளர் எஸ்.சொக்க லிங்கம் கூறியதாவது: பாம்பன் துாக்கு பாலத்தில், உப்பு காற்றில் சேதமடைந்த பகுதி யில்,தண்டவாளத்தை ...

காற்றாலை மின்சாரம் மீண்டும் அமோகம்

Posted: 16 Aug 2016 09:31 AM PDT

காற்றாலைகளில், மீண்டும் அதிகளவில் மின்சாரம் கிடைப்பதால், அதிகாரிகளும், உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங் களில், காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. மே மாதம் முதல், காற்று சீசன் துவங்கியதால், தமிழ்நாடு மின் வாரியம், தினமும் காற்றாலைகளில் இருந்து, சராசரியாக, 2,500 மெகாவாட் மின்சாரம் வாங்கியது. இதனால், அனல்மின் நிலையங்களில் உற்பத்தி அளவை, மின் வாரியம் குறைத்தது.
கடந்த மாதம் இறுதியில், காற்றாலை மின் உற்பத்தி, 500 மெகாவாட் கீழ் சென்றது. இப்போது, இரு வாரங்க ளாக,காற்றாலைகளில் இருந்து, அதிகளவில் ...

யார் ஆட்சியில் அதிக தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா?* சட்டசபையில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்

Posted: 16 Aug 2016 09:45 AM PDT

சென்னை:யாருடைய ஆட்சியில், அதிக தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன; மூடப்பட்டன என்பது குறித்து, சட்டசபையில் நேற்று, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே, கடும் வாக்குவாதம் நடந்தது.

சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - தா.மோ.அன்பரசன்: கடந்த தி.மு.க., ஆட்சியில், ஒரு லட்சம் கோடி ரூபாய், அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டு, எட்டு லட்சம் இளைஞர் கள் நேர்முகமாகவும், 15 லட்சம் இளைஞர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர். இவ்வாறு கூறிய அன்பரசன், தி.மு.க., ஆட்சி யில் வந்த தொழிற்சாலைகளின் பெயர்களை பட்டியலிட்டார்.அமைச்சர் எம்.சி.சம்பத்: உண்மைக்கு புறம்பான தகவல். அவர்கள் ...

'தி.மு.க.,வினர் செயலுக்காக வெட்கப்படுகிறேன்!' * சட்டசபையில் ஸ்டாலின் வேதனை

Posted: 16 Aug 2016 09:48 AM PDT

சென்னை:''தி.மு.க., உறுப்பினர்களின் செயலுக் காக, நான் வெட்கப்படுகிறேன்; வேதனைப் படுகிறேன். மன்னிப்பு கேட்கவும் தயார்,'' என, சட்டசபையில் , எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில், தி.மு.க., உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது, கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குறுக்கிட்டு, ஒரு கருத்தை கூறினார்; அதற்கு, தி.மு.க., உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அமைச்சர் கருத்தை, ஸ்டாலின் மறுத்தார். அதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சபை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன.சபாநாயகர்: ஒவ்வொரு நாளும், இப்படியே நேரத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் ...

பாதுகாவலரை செருப்பு மாட்ட வைத்த அமைச்சருக்கு சிக்கல்

Posted: 16 Aug 2016 09:50 AM PDT

புவனேஸ்வர்: ஒடிசா மாநில அமைச்சர், பொது நிகழ்ச்சியில், பாதுகாவலரை, தனக்கு செருப்பு மாட்டி விடும்படி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, சிறு மற்றும் குறு தொழில்கள் துறை அமைச்சராக இருப்பவர் ஜோகேந்திர பெஹரா, 74. கேன்ஜூஹார் என்ற இடத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், அவர் பங்கேற்றார். செருப்பை கழற்றி விட்டு, தேசியக் கொடியை ஏற்றினார்; பின், செருப்பை அணிய முற்பட்ட போது, அவரால் அணிய முடியவில்லை. இதையடுத்து, தன் பாதுகாப்பு பணிக்காக, அரசு நியமித்த ...

போராட்டம் நடத்திய 126 வக்கீல்களின் 'சஸ்பென்ஷன்'நிறுத்திவைப்பு!:இந்திய பார் கவுன்சில் தலைவர் அதிரடி உத்தரவு

Posted: 16 Aug 2016 10:23 AM PDT

சென்னை:புதிய விதிகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், 126 பேரை, 'சஸ்பெண்ட்' செய்து, பிறப்பித்த உத்தரவை, இந்திய பார் கவுன்சில் நிறுத்தி வைத்துள்ளது.

வழக்கறிஞர்கள் சட்டத்தில், புதிய விதிகளை, 2016, மே மாதம், சென்னை உயர் நீதிமன்றம் கொண்டு வந்தது. அதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது, மாவட்ட முதன்மை நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க, வகை செய்யப்பட்டுள்ளது.புதிய விதிகளுக்கு, வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், உயர் நீதிமன்ற முற்றுகை, நீதிமன்ற புறக்கணிப்பு ...

பாக்.,கில் நடக்கும் 'சார்க்' மாநாட்டை ஜெட்லி புறக்கணிப்பு?:ராஜ்நாத் சிங்கை அவமதித்ததற்கு பதிலடி

Posted: 16 Aug 2016 10:32 AM PDT

பாகிஸ்தானில் நடக்கும், 'சார்க்' எனப்படும், தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டை, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, பாக்., அவமதித்ததற்கு பதிலடியாக, இந்த அதிரடி நடவடிக்கையில்மத்திய அரசு இறங்கியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், சமீபத்தில், 'சார்க்' நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது; அதில் மத்திய அரசு சார்பில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அந்த மாநாட்டில், ராஜ்நாத் ...

திருநங்கையர் வழக்கு; ஐகோர்ட் கேள்வி

Posted: 16 Aug 2016 11:36 AM PDT

புதுடில்லி: 'திருநங்கையரின் ஆண் பெயர்களை, பெண் பெயர்களாக மாற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்' என, மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
டில்லியை சேர்ந்த இரு திருநங்கையர், தங்கள் பெயர்களை பெண் பெயர்களாக மாற்ற, அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும், தங்களிடம் பாகுபாடு காட்டும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ''திருநங்கையரின் பெயர்களை மாற்றம் செய்வதில் அரசுக்கு என்ன சிரமம்? பெயர் மாற்றம் தொடர்பாக, இதற்கு ...

டாக்டர் நடத்திய மரண விளையாட்டு:ஆறு பேரை கொலை செய்தது அம்பலம்

Posted: 16 Aug 2016 11:42 AM PDT

மும்பை:மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டாக்டர், ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேரை கொன்றது, போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை மங்கல் ஜெதே, 49, சமீபத்தில் காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி, உள்ளூர் ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.அதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த டாக்டர் சந்தோஷ் போல், 41, என்பவருடன், ஜெதேவுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. போலீஸ் ...

ரூ.186 கோடி தங்க குடத்தில் கை வைத்தது யார்?பத்மநாப சுவாமி கோவிலில் தொடரும் சர்ச்சை

Posted: 16 Aug 2016 12:19 PM PDT

புதுதில்லி:திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் மாயமாகியுள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில், தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தங்க குடங்கள் மாயமானது எப்படி என்ற விவரத்தை கண்டுபிடித்து, அதை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்' என,பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருக்கும் ரகசிய அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள், ஆபரணங் கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதுதொடர்பான விசாரணை, சுப்ரீம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™