Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு மெத்தனம் என சுப்ரீம் கோர்ட் குட்டு! 75 பேர் பட்டியலுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதா என கண்டிப்பு

Posted: 12 Aug 2016 08:28 AM PDT

புதுடில்லி:'நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது.

ஐகோர்ட்டுகளுக்கான, 75 நீதிபதிகள் நியமனம் மற்றும் பணி இடமாற்றம் தொடர்பாக அளித்த பட்டியலுக்கு ஒப்புதல் தராமல், எட்டு மாதங் களாக இழுத்தடிப்பு செய்வதை சகித்துக் கொள்ள முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பல்வேறு கோர்ட்டுகளில், அதிக அளவில் வழக்குகள் தேங்கியுள்ளதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ...

'ஜெ., தொகுதி பற்றி பேசக்கூடாதா?' அமைச்சருடன் ஸ்டாலின் மோதல்

Posted: 12 Aug 2016 08:39 AM PDT

சென்னை:முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதி பற்றி, தி.மு.க., உறுப்பினர் குறைகளை அடுக்கியதால், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சட்டசபையில், நேற்று நடந்த சுற்றுச்சூழல் மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்:தி.மு.க., - சுதர்சனம்: சென்னைக்கு குடிநீர் தரும் புழல், சோழவரம் ஏரிகளை சுற்றி, புதிய குடியிருப்புகள் அதிகரித்துள்ளன; அங்கு கழிவுகளை கொட்டுவதாலும், பாதாள சாக் கடை திட்டம் இல்லாததாலும், நீர் நிலை பாதிக்கப் படுகிறது.விபத்தில் சிக்கியவர்களை, ...

குளச்சல் துறைமுகத்தால் மத்திய அரசுக்கு ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு தவிர்ப்பு

Posted: 12 Aug 2016 09:28 AM PDT

மதுரை: ''குளச்சல் இனையம் வர்த்தக துறைமுகம் அமைவதால் மத்திய அரசுக்கு ஆண்டிற்கு, 1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு தவிர்க்கப்படும்,'' என, துறைமுக திட்ட சிறப்பு அதிகாரியும், துாத்துக்குடி, வ.உ.சி., துறைமுக தலைவருமான ஆனந்த சந்திரபோஸ் தெரிவித்தார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதி, 20 மீட்டர் ஆழம் கொண்டது. இம்மாவட்டத்தின் தொழில் மேம்பாட்டை கருத்திற்கொண்டு இனையம் வர்த்தக துறைமுகம் அமைக்கும் பணியை, துாத்துக்குடி, வ.உ.சி., துறைமுகத்
திடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. ஸ்பெயின் நாட்டின், 'டைப்சா பிசிஜி' ஆய்வு நிறுவன ...

'தமிழகத்திற்கு கூடுதலாக 562 மெகாவாட் மின்சாரம்'

Posted: 12 Aug 2016 09:31 AM PDT

மதுரை: ''தமிழகத்திற்கு முதல் அலகில் இருந்து, 562 மெகாவாட் மின்சாரம் தரப்படுகிறது. இரண் டாவது அலகிலும், 562 மெகாவாட் தரப்படும்,'' என, கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: கடந்த, 2013ம் ஆண்டு கூடங்குளத்தில் மின் உற்பத்தி
துவங்கியது. இதுவரை, 10,800 மில்லியன் மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில் தற்போது, 230 - 300 மெகாவாட் மின் உற்பத்திநடக்கிறது. இம்மாத இறுதியில், வணிக ரீதியிலான உற்பத்தி முழு அளவில் துவங்கும். தமிழகத்திற்கு முதல் அலகில், 562 மெகாவாட் மின்சாரம் தரப்படுகிறது. இரண்டாவது ...

ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் அசாம் முந்தியது:சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றி அசத்தல்

Posted: 12 Aug 2016 09:42 AM PDT

கவுஹாத்தி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, அசாம் சட்டசபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் மாநிலமாக, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் திகழ்கிறது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த ஆண்டு, மே மாதம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசு மேற்கொண்ட சமரச பேச்சுக்களைத் ...

சிவாஜி சிலையை மாற்றுவது அரசின் விருப்பம் அல்ல: ஜெ.,

Posted: 12 Aug 2016 09:56 AM PDT

சென்னை: ''சிவாஜி கணேசன் சிலையை மாற்ற வேண்டும் என்பது, அரசின் விருப்பம் அல்ல; அது நீதிமன்றத்தின் உத்தரவு,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - வாகை சந்திரசேகர்: அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் நினைவிடம், சென்னை, கடற்கரையில் இருப்பதுபோல், நடிப்பால் தமிழுக்கு பெருமை சேர்த்த, நடிகர் சிவாஜி கணேசன் சிலை, தற்போதுள்ள இடத்தில்
இருப்பது சிறப்பு; அதை இடமாற்றம் செய்யக் கூடாது.
முதல்வர் ஜெயலலிதா: சிவாஜி கணேசன் சிலை, தற்போது இருக்கிற இடத்தைவிட்டு மாற்ற வேண்டும் என்பது, அரசின் விருப்பம் அல்ல; அது, ...

காஷ்மீரில் அமைதி திரும்ப நடவடிக்கை: மோடி

Posted: 12 Aug 2016 10:51 AM PDT

புதுடில்லி:''ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து தரப்பினரின் குறைகளுக்கும் தீர்வு காண்பதற்கு, அரசின் கதவுகள் திறந்தே உள்ளன,''என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப் பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த வன்முறைகளால், கடந்த ஒரு மாதமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இந்த பிரச்னை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதன்படி, டில்லியில் நேற்று நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி ...

வெஸ்ட் இண்டீஸ் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்

Posted: 12 Aug 2016 11:47 AM PDT

செயின்ட் லூசியா : வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 353 ரன்கள் எடுத்தது. பின் தனது முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. 3வது நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானது.
இந்நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர் பரத்வைட்(64) அரைசதம் எடுத்து கைகொடுத்தார். பிராவோ 29 ரன்களிலும், சாமுவேல்ஸ் ...

காஸ் மானிய சேமிப்பு எவ்வளவு: சி.ஏ.ஜி., அறிக்கையில் அம்பலம்

Posted: 12 Aug 2016 12:03 PM PDT

புதுடில்லி:'சமையல் காஸ் நேரடி மானிய திட்டத்தால், அரசு சேமித்துள்ளதாக கூறப்படும் தொகையில், 15 சதவீதம் மட்டுமே உண்மையில் சேமிக்கப்பட்ட தொகை' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சமையல் காஸ் மானியத் தொகை, பயனாளி களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப் படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் சேமிக்கப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. மிச்சமான தொகை: இந்நிலையில், இந்த நேரடி மானிய திட்டம் குறித்த சி.ஏ.ஜி., அறிக்கை, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அந்த அறிக்கை யில் ...

ஒலிம்பிக் : 20 கி.மீ., நடை போட்டியில் மணிஷ் சிங் 13வது இடம்

Posted: 12 Aug 2016 12:34 PM PDT

ரியோ : ஒலிம்பிக் 20 கி.மீ., நடை போட்டி பைனலில் இந்திய வீரர் மணிஷ் சிங் 13வது இடம் பிடித்தார்.

ஒலிம்பிக் 20 கி.மீ., நடை போட்டி பைனலில் இந்திய வீரர்கள் மணிஷ் சிங், குர்மீட் சிங் மற்றும் கணபதி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மணிஷ் சிங் ஒரு மணி நேரம் 21 நிமிடங்களில் (1:21:21) கடந்து 13வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். மற்ற இருவரும் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இப்போட்டியில் சீன வீரர் வாங் சென் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களில் (1:19:14) கடந்து தங்கம் ...

தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' கட்டாயமாகிறது

Posted: 12 Aug 2016 12:50 PM PDT

மும்பை:மத்திய அரசு, அனைத்து நகைகளும், 'ஹால்மார்க்' முத்திரையுடன் தான் விற்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.

தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த, இந்திய தர நிர்ணய கழகத்தின், 'ஹால்மார்க்' முத்திரை உதவுகிறது. இதை கட்டாயமாக்கு வதற்கான விதிமுறைகளுக்கு, மத்திய அரசு, 2000ல், ஒப்புதல் அளித்தது; எனினும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், அனைத்து நகைகளும் ஹால் மார்க்முத்திரையுடன் தன் விற்கப்பட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, இந்திய ஹால்மார்க் மையங்கள் கூட்டமைப்பின் துணை ...

கொள்ளை நடந்த ரயில் பெட்டி- சோதனை ஓட்டம்

Posted: 12 Aug 2016 01:05 PM PDT

சென்னை : ரூ.5.75 கோடி கொள்ளை நடந்த ரயில் பெட்டி எழும்பூர் முதல் தாம்பரம் வரை சோதனை ஓட்டம் துவங்கியது.
கடந்த செவ்வாயன்று, சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.5.75 கோடி பணம், ரயில் மேற்கூரையில் துளையிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளை நடந்த ரயில் பெட்டி எழும்பூர் முதல் தாம்பரம் வரை சோதனை ஓட்டம் துவங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் காட்சிகளை பதிவு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™