Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு ரூ.23.57 கோடி நிதி ஒதுக்கீடு: வழக்குரைஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Posted: 12 Aug 2016 01:29 PM PDT

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு கூடுதல் கட்டடங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் கட்ட ரூ. 23.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் அதிமுகவினர், வழக்குரைஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஈக்காட்டில் நூலகர் தின விழா

Posted: 12 Aug 2016 01:28 PM PDT

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ஊர்ப்புற நூலகத்தில் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்தநாளையொட்டி நூலகர் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடும்பநல அறுவைச் சிகிச்சை தர உறுதி பணிமனைக் கூட்டம்

Posted: 12 Aug 2016 01:27 PM PDT

திருவள்ளூரில் சுகாதாரத் துறை சார்பில் குடும்ப நல அறுவைச் சிகிச்சை தர உறுதி பணிமனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இருசக்கர வாகன விபத்தில் இருவர் சாவு

Posted: 12 Aug 2016 01:27 PM PDT

திருவள்ளூர் அருகே நெடுஞ்சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில், இருவர் உயிரிழந்தனர்.

கல்லூரி பேருந்து மீது லாரி மோதல்: 9 மாணவர்கள் காயம்

Posted: 12 Aug 2016 01:26 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த தண்டலச்சேரி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மீது லாரி மோதியதில் மாணவர்கள் 9 பேர் காயமடைந்தனர்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கல்: போராட்டம் தாற்காலிகமாக நிறுத்தம்

Posted: 12 Aug 2016 01:26 PM PDT

திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகள் 32 பேருக்கு முதல் கட்டமாக தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை வழங்கியது. இதைத்தொடர்ந்து காத்திருப்புப் போராட்டம் தாற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

வேன் மீது ஆம்னி பேருந்து மோதி 10 பேர் சாவு: திருச்சி அருகே பயங்கர விபத்து

Posted: 12 Aug 2016 01:26 PM PDT

திருச்சி மாவட்டம், வளநாடு கைகாட்டி அருகே வெள்ளிக்கிழமை காலை வேன் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.

திரைப்பட விருது விழா பிரமாண்டமாக நடத்தப்படும்: முதல்வர் ஜெயலலிதா

Posted: 12 Aug 2016 01:24 PM PDT

திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, விரைவில் பிரமாண்டமாக நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் கூறினார்.

முதல்வருக்கு நடிகர் சங்கம் நன்றி

Posted: 12 Aug 2016 01:24 PM PDT

தமிழ்த் திரையுலகினரை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப் பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியைத் தெரிவித்துள்ளது.

ரயிலில் பணம் கொள்ளை: சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடக்கம்

Posted: 12 Aug 2016 01:23 PM PDT

சேலம் ரயிலில் ரிசர்வ் வங்கிப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சேலத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தேசிய நூலகர் தின கொண்டாட்டம்

Posted: 12 Aug 2016 01:11 PM PDT

இந்திய நூலகத் தந்தை டாக்டர்.சீர்காழி இராமாமிர்த அரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் வெள்ளிக்கிழமை தேசிய நூலகர் தினம் கொண்டாடப்பட்டது.

வேறொரு பெண்ணுடன் கணவர் தலைமறைவு: பச்சிளங்குழந்தையுடன் மனைவி ஆட்சியரிடம் புகார்

Posted: 12 Aug 2016 01:08 PM PDT

இரு மகள்கள் மற்றும் மனைவி ஆகியோரைத் தவிக்கவிட்டு,மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவரை கண்டுபிடித்து தருமாறு பச்சிளங்குழந்தையுடன் இளம்பெண் வெள்ளிக்கிழமை ஆட்சியர் கு.கோவிந்தராஜை சந்தித்து மனு கொடுத்தார்.

உரிய பாதுகாப்பு  தரக்கோரி யோகா அமைப்பினர் ஆட்சியரிடம் மனு

Posted: 12 Aug 2016 01:07 PM PDT

ஆக.12: ஈஷா யோகா வகுப்புகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு வழங்கினர். மனுவில் அவர்கள் கூறியிருப்பது: ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு உயர்ந்த சிந்தனையுடன் பல்வேறு மன்றங்கள் மூலம் யோகா அறிவியலை உலகுக்கு வழங்கி வருகிறார். ஈஷா அறக்கட்டளை செயல்படும் தலைமை இடம் அனைத்து தரப்பு மக்களுக்கும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக மையம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஈஷா தன்னார்வ தொண்டர்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் நிகழாமல் இருக்கவும், யோகா வகுப்புகள் இடையூறு இன்றி நடைபெறவும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் நாளை ஒற்றுமை ஓட்டம்

Posted: 12 Aug 2016 01:06 PM PDT

கரூர் மாவட்ட பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.14) ஒற்றுமை தொடர் ஜோதி ஓட்டம் நடைபெறுவதாக கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட பாஜக இளைஞரணி புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வீடுகளில் சிசிடிவி கேமராக்கள்  பொருத்துவது அவசியம் : எஸ்பி

Posted: 12 Aug 2016 01:06 PM PDT

உயிரையும்,உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது அவசியம் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகர்.

கரூரில் கர்ணப்புறா பந்தயம் தொடக்கம்

Posted: 12 Aug 2016 01:05 PM PDT

கரூரில் கர்ணப் புறா பந்தயம் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டிஜிட்டல் கல்வியறிவு மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை: ஆளுநர் கிரண் பேடி

Posted: 12 Aug 2016 01:04 PM PDT

டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

க.பரமத்தி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 12 Aug 2016 01:04 PM PDT

க.பரமத்தி ஒன்றியத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆடி வெள்ளி: திருவெற்றியூர் கோயிலுக்கு பாதயாத்திரை

Posted: 12 Aug 2016 01:04 PM PDT

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

விஜயகாந்த்துக்கு எதிரான பிடியாணை ரத்து: செப். 12-இல் நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 12 Aug 2016 01:04 PM PDT

பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் முதல்வரை அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராகாத தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டை வெள்ளிக்கிழமை ரத்து செய்த நீதிமன்றம், அவர் செப்டம்பர் 12-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது.

திருப்புவனம் அருகே பேருந்து, லாரி மோதல்: பயணி சாவு

Posted: 12 Aug 2016 01:03 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், பயணி ஒருவர் உயிரிழந்தார்.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்

Posted: 12 Aug 2016 01:03 PM PDT

 நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கமுதி, முதுகுளத்தூரில் வட்டார அளவில் கேரம் போட்டிகள்

Posted: 12 Aug 2016 01:03 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர் வட்டார அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

விருப்பத்தின் பேரில்தான் சகோதரிகள் தங்கியுள்ளனர்: ஈஷா மையத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

Posted: 12 Aug 2016 01:03 PM PDT

கோவை ஈஷா மையத்தில் சகோதரிகள் விருப்பத்தின் பேரில்தான் தங்கியுள்ளனர். அவர்களை அவர்களது பெற்றோர் எந்த நேரத்திலும் அனுமதி பெற்று சந்திக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்மரக் கடத்தல் வழக்கு: 32 தமிழகத் தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுப்பு

Posted: 12 Aug 2016 01:02 PM PDT

செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யபட்ட 32 தமிழகத் தொழிலாளர்களுக்கு ஜாமீன் வழங்க திருப்பதி நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால், இதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

உச்சிப்புளி காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகை

Posted: 12 Aug 2016 01:02 PM PDT

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி காவல் நிலையத்தை தர்காவலசை கிராமப் பெண்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

செக்காலை தூய சகாய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 12 Aug 2016 01:02 PM PDT

காரைக்குடியில் செக்காலை தூய சகாய மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாருக்கு காவல் நீட்டிப்பு

Posted: 12 Aug 2016 01:02 PM PDT

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாரநாடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா

Posted: 12 Aug 2016 01:02 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், மாரநாடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி உற்சவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு: ஆக. 26-இல் மீண்டும் ஆய்வு நடத்த முடிவு

Posted: 12 Aug 2016 01:02 PM PDT

முல்லைப் பெரியாறு அணையில், வெள்ளிக்கிழமை துணைக் குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி மீண்டும் ஆய்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஆடி கடைசி வெள்ளி: மடப்புரம், தாயமங்கலம், பிரத்யங்கிரா கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

Posted: 12 Aug 2016 01:01 PM PDT

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மடப்புரம், தாயமங்கலம் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் எப்போது?

Posted: 12 Aug 2016 01:01 PM PDT

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் எப்போது போடப்படும் என்று திமுக உறுப்பினர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.

ஆர்.கே.நகர் தொகுதி விவகாரம்: அதிமுக-திமுக இடையே கடும் மோதல்

Posted: 12 Aug 2016 01:01 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தொடர்பாக திமுக உறுப்பினரின் கருத்துகளுக்கு, அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

வழிப்பறி செய்தவர் கைது

Posted: 12 Aug 2016 01:01 PM PDT

பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்லம் மகன் முருகன் (43).

மாணவர் விடுதியில் திருட்டு: 3 பேர் கைது

Posted: 12 Aug 2016 01:00 PM PDT

பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிலைய மாணவர் விடுதியில், சில தினங்களுக்கு முன் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள் திருடிச் செல்லப்பட்டன.

திருவாடானை அருகே 27 பவுன் நகை திருட்டு

Posted: 12 Aug 2016 01:00 PM PDT

திருவாடானை அருகே தெற்கு ஆண்டாவூரணியைச் சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. இவரது மனைவி தனமேரி (40). இவர், கடந்த 3 ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, திருச்சிக்கு சென்றுவிட்டார். வியாழக்கிழமை இரவு ஊருக்கு திரும்பிய இவர், வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டுள்ளார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து, தனமேரி அளித்த புகாரின்பேரில், எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாலாற்றில் தடுப்பணை விவகாரம்: மாநிலங்களவையில் திமுக - அதிமுக கடும் வாக்குவாதம்

Posted: 12 Aug 2016 01:00 PM PDT

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டிய தடுப்பணைகள் விவகாரத்தை எழுப்புவது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக - திமுக உறுப்பினர்கள் இடையே வெள்ளிக்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ராமேசுவரம் திருக்கோயில் ஆடித் திருவிழா: சுவாமி, அம்மன், பெருமாள் தங்க கேடயத்தில் வீதியுலா

Posted: 12 Aug 2016 01:00 PM PDT

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விருந்து வைபவத்தில் கலந்துகொள்வதற்காக, சுவாமி, அம்மன், பெருமாள் தங்கக் கேடயத்தில் எழுந்தருளினர். 

காரைக்குடியில் ஆக.20, 21-இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Posted: 12 Aug 2016 12:59 PM PDT

காரைக்குடி நகராட்சியின் தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மாற்றியை செப்பனிடும் பணி நடைபெறவிருப்பதால், ஆகஸ்ட் 20, 21 தேதிகளில் நகரில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் வினா-விடை போட்டி

Posted: 12 Aug 2016 12:59 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் வினா-விடை போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றல் தடைச் சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 12 Aug 2016 12:58 PM PDT

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013-இன் விதிகள் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வானொலியில் மாநில மொழிகளில் செய்தி ஒலிபரப்பு நிறுத்தம் கூடாது: வைகோ, ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 12 Aug 2016 12:58 PM PDT

அகில இந்திய வானொலியில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் செய்தி ஒலிபரப்பை மத்திய அரசு நிறுத்தக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரத்தில் உலக இளைஞர் தின விழா

Posted: 12 Aug 2016 12:58 PM PDT

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை உலக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 12 Aug 2016 12:57 PM PDT

மாணவர் சேர்க்கை இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடலாடி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 12 Aug 2016 12:57 PM PDT

கடலாடியில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தங்கம் பவுனுக்கு ரூ.104 குறைவு

Posted: 12 Aug 2016 12:57 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.23,752-க்கு விற்பனையானது.

ராஜகாளியம்மன் கோயில் பால்குட திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Posted: 12 Aug 2016 12:57 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருள்மிகு ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, பால்குடம், அக்னிகுண்டம் இறங்குதல் மற்றும் பூத்தட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராமநாதபுரத்தில் ஈஷா யோகா மையத்துக்கு பாதுகாப்பு வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை

Posted: 12 Aug 2016 12:57 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஈஷா யோகா மையத்தின் சமூகநலப் பணிகள் சிறப்பாகவும், தொய்வின்றியும் நடக்க போதிய பாதுகாப்பு வழங்குமாறு, அம் மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஆட்சியர் எஸ். நடராஜனிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

பெயரை மாத்துங்க..!

Posted: 12 Aug 2016 12:56 PM PDT

உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை

Posted: 12 Aug 2016 12:56 PM PDT

வரலொட்டியில் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்படுத்த தடை

Posted: 12 Aug 2016 12:55 PM PDT

ராஜபாளையம் நகர், புறநகர் பகுதிகளில் பேருந்துகள் காற்று ஒலிப்பானை (ஏர்-ஹாரன்) பயன்படுத்த காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆக.18-இல் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 12 Aug 2016 12:55 PM PDT

விருதுநகர் மாவட்ட அனைத்துப் பள்ளி 14 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் ஆக.18-இல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

எலுமிச்சை விலை மீண்டும் உயர்வு

Posted: 12 Aug 2016 12:54 PM PDT

ஆடி மாதத்தில் கோயில் விழாக்களுக்கு எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை கிலோ ரூ.150 ஆக அதிகரித்துள்ளது.

தேங்காய்நார் மெத்தை நிறுவனத்தில் தீ

Posted: 12 Aug 2016 12:54 PM PDT

ராஜபாளையம் அருகே தேங்காய் நார் மூலம் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார் தீயில் எரிந்து நாசமானது.

இனியும் தகாது தாமதம்!

Posted: 12 Aug 2016 12:53 PM PDT

உயர் நீதிமன்றங்களில் தற்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், காலியாகவுள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் 43 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு விசாரணையின் போது சுட்டிக் காட்டியுள்ளது.

ஆக.15-இல் கிராம சபை கூட்டம்: நியாய விலை கடை கணக்குகள் சமூக தணிக்கை

Posted: 12 Aug 2016 12:53 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆக.15-இல் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் நியாய விலை கடைகளின் கணக்குகள் சமூக தணிக்கை செய்யப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ராஐபாளையம்}திருச்செந்தூர் இடையே பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க கோரிக்கை

Posted: 12 Aug 2016 12:53 PM PDT

ராஐபாளையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளை ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லாங்கிணறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவதி

Posted: 12 Aug 2016 12:52 PM PDT

மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

மனம் திருந்த வழியுண்டு!

Posted: 12 Aug 2016 12:52 PM PDT

சிறைத்துறை நிர்வாகம், சிறைவாசிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைபற்றி உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டதாலேயே ஒருவர் அவரது மனிதத்தன்மையை இழந்து விடுவதில்லை. அவருக்கு எல்லாவித மனித உரிமைகளும் உள்ளன என்றும் அந்த உரிமைகளை அவருக்கு மறுக்கலாகாது என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

100 நாள் வேலைத் திட்டம்: ஆக. 17-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 12 Aug 2016 12:52 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட செயல்பாடுகள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஆகஸ்ட் 17 இல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மல்லாங்கிணறு பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாததால் பாதிப்பு

Posted: 12 Aug 2016 12:51 PM PDT

மல்லாங்கிணறு பேரூராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல் அலுவலர் பணியிடம் நிரப்பப்படாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்படைந்துள்ளது.

நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்: பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு

Posted: 12 Aug 2016 12:51 PM PDT

விருதுநகர், ராஜபாளையத்தில் இருந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என காவல் ஆய்வாளர் பிரபாகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சிவகாசி அருகே இரு தரப்பினர் மோதல்:  22 பேர் மீது வழக்கு

Posted: 12 Aug 2016 12:50 PM PDT

சிவகாசி அருகே கங்காகுளம் - செங்கமலநாச்சியார்புரம் சாலையில் இரு தரப்பினர் இடையே மோதல் சூழ்நிலை நிலவுவதால், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக 22 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இருக்கன்குடியில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 12 Aug 2016 12:50 PM PDT

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நேசிப்போம், வாசிப்போம்

Posted: 12 Aug 2016 12:50 PM PDT

மனித குலத்தின் உன்னத கண்டுபிடிப்பு புத்தகம். ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம்புத்தகங்கள் மூலம் நாம் பெறும் அறிவே கல்விச் செல்வம் எனப்படுவது.

விருதுநகர் அருகே மோதல்: 10 பேர் கைது

Posted: 12 Aug 2016 12:49 PM PDT

விருதுநகர் அருகே சீனியாபுரத்தில் முன் விரோதம் காரணமாக இரண்டு தரப்பினர் மோதிக் கொண்டதில் ஏழு பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 10 பேரை வியாழக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்: இந்திய தேசிய அறிவியல் கழக மூத்த விஞ்ஞானி பேச்சு

Posted: 12 Aug 2016 12:49 PM PDT

மாணவ, மாணவிகள் பள்ளி பருவத்திலேயே அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என இந்திய தேசிய அறிவியல் கழக மூத்த விஞ்ஞானி டி.ஜே.பாண்டியன் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டையில் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் திறப்பு

Posted: 12 Aug 2016 12:48 PM PDT

அருப்புக்கோட்டையில் விருதுநகர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மதிவாணன், தேவதாஸ் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனர்.

இருக்கன்குடியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அவதி

Posted: 12 Aug 2016 12:48 PM PDT

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவின்போது அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால், பக்தர்கள் அவதியடைந்தனர்.

பழனி நகராட்சி அலுவலகம் முன் ஓய்வுபெற்ற பெண் துப்புரவு பணியாளர் தர்னா

Posted: 12 Aug 2016 12:47 PM PDT

ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து பழனி நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்ற பெண் துப்புரவு பணியாளர், மகனுடன் தர்னாவில் ஈடுபட்டார்.

போடி அருகே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Posted: 12 Aug 2016 12:47 PM PDT

போடி அருகே சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு கலைக் கல்வி பயிற்சி

Posted: 12 Aug 2016 12:46 PM PDT

ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஓவிய ஆசிரியர்களுக்கு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான கலைக் கல்வி செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

25 மாவட்டங்களில் ரூ.159 கோடியில் 80 புதிய பாலங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 12 Aug 2016 12:46 PM PDT

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் ரூ.159.74 கோடி மதிப்பில் 80 புதிய பாலங்கள் கட்டப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கொடைக்கானலில்  காட்டெருமை உண்ணியால் தோல் நோய் பாதிப்பு: சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 12 Aug 2016 12:46 PM PDT

கொடைக்கானலில் காட்டெருமைகளின் உண்ணிப் பூச்சிகளால் பொதுமக்களுக்கு தோல் வியாதிகள் ஏற்படுவதை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளர் பள்ளி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: ஆக.18-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

Posted: 12 Aug 2016 12:45 PM PDT

அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியலுக்கு ஆக.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50,000 நூல்கள் கணினியில் பதிவு

Posted: 12 Aug 2016 12:45 PM PDT

சென்னை மாநில செய்தி நிலைய நூலகத்தில் 50 ஆயிரம் நூல்கள் கணினியில் பதிவு செய்து எளிதாகத் தேடி எடுக்க நவீன மென்பொருள் அமைக்கப்படும் என்று செய்தி-விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் சி.ராஜு அறிவித்தார்.

மேகமலை வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்: 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 12 Aug 2016 12:44 PM PDT

மேகமலை வனத்துறை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர், ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர்.

ரூ.697 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கடற்கரைப் பகுதி மேலாண்மைத் திட்டம்

Posted: 12 Aug 2016 12:44 PM PDT

தமிழகத்தில் ரூ.697.68 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கடற்கரைப் பகுதி மேலாண்மைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு: ஆக. 26-இல் மீண்டும் ஆய்வு நடத்த முடிவு

Posted: 12 Aug 2016 12:44 PM PDT

முல்லைப் பெரியாறு அணையில், வெள்ளிக்கிழமை துணைக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

110-ஆவது விதி மீது விவாதம்: திமுக - காங்கிரஸ் வெளிநடப்பு

Posted: 12 Aug 2016 12:44 PM PDT

110-ஆவது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கை தொடர்பான விவாதத்தில் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படாததைக் கண்டித்து, பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

மதுரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஓய்வுபெற்ற எஸ்.ஐ., மனைவி சாவு: நான்கு வழிச்சாலையில் விபத்துகளை  தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்

Posted: 12 Aug 2016 12:43 PM PDT

மதுரை அருகே தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஓய்வுபெற்ற சார்பு-ஆய்வாளரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். அப்பகுதியில் தொடரும் விபத்துகளை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகளில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்

Posted: 12 Aug 2016 12:43 PM PDT

சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு: உத்தமபாளையம் பகுதியில் நாற்று நடும் பணி தீவிரம்

Posted: 12 Aug 2016 12:42 PM PDT

முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் நீர் திறப்பால் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நெற்பயிர் நாற்று நடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

சிவாஜி சிலையை இடமாற்றுவது அரசின் விருப்பமில்லை: முதல்வர்

Posted: 12 Aug 2016 12:42 PM PDT

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை இடமாற்றம் செய்வது என்பது அரசினுடைய விருப்பமில்லை என்றும், நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாகவே அப்படிச் செய்ய வேண்டியது உள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தில் முதன்முறையாக அரசினர் மகளிர் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு

Posted: 12 Aug 2016 12:42 PM PDT

தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல் எம்விஎம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல், மின்னணு வாக்குப் பதிவு மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமைச்சர்களின் அறிவிப்புகளுக்குப் பிறகு 110-ஆவது விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவது ஏன்? முதல்வர் விளக்கம்

Posted: 12 Aug 2016 12:41 PM PDT

அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு, 110-ஆவது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது ஏன் என்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.

கொடைக்கானல் நகர் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

Posted: 12 Aug 2016 12:41 PM PDT

கொடைக்கானல் நகரில் காட்டெருமை, காட்டுப்பன்றி ஆகியவை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பழனி நகராட்சிப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Posted: 12 Aug 2016 12:41 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலரை, நகராட்சி மேலாளர் (பொறுப்பு) தாக்கியதைக் கண்டித்து நகராட்சி பணியாளர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"சென்னை புறநகரில் ரூ.744 கோடியில் சாலை விரிவாக்கம்'

Posted: 12 Aug 2016 12:41 PM PDT

சென்னை புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.744 கோடி செலவில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

குறைகளை தீர்த்துக் கொள்ள ஓய்வூதியர்கள் 3 மாதம் காத்திருக்க தேவையில்லை:ஆட்சியர்

Posted: 12 Aug 2016 12:40 PM PDT

குறைகளை தீர்த்துக் கொள்ள ஓய்வூதியர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரை காத்திருக்க தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

கூடங்குளம் அழைத்துச் செல்வீர்களா? காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி

Posted: 12 Aug 2016 12:40 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.பாண்டி (முதுகுளத்தூர்) கோரிக்கை விடுத்தார்.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித் தேரோட்டம்

Posted: 12 Aug 2016 12:40 PM PDT

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கடைசி ஆடி வெள்ளியையொட்டி வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.

மீன் வளர்ப்பு குளம் அமைக்க மானியம்

Posted: 12 Aug 2016 12:39 PM PDT

தேனி மாவட்டத்தில் சொந்த நிலத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசு ரூ.2.10 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்குகிறது.

10 மாவட்டங்களில் ரூ.5.5 கோடியில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கம்

Posted: 12 Aug 2016 12:39 PM PDT

சென்னை மற்றும் பத்து மாவட்ட தலைநகரங்களில் ரூ.5.5 கோடி செலவில் "அம்மா சுற்றுச்சூழல் அரங்கம்' அமைக்கப்படவுள்ளதாக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கம் மூலம் கொப்பரை கொள்முதல் திட்டம்: விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார்

Posted: 12 Aug 2016 12:39 PM PDT

ஆக. 12: வெளிச் சந்தைகள் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க கொண்டு வரப்பட்ட கொப்பரை கொள்முதல் திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

குரூப்-4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை

Posted: 12 Aug 2016 12:39 PM PDT

டிஎன்பிஎஸ்சி. குரூப்-4 தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கோரி மனு

Posted: 12 Aug 2016 12:39 PM PDT

தேனி மாவட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்க கோரி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் வலுப்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

Posted: 12 Aug 2016 12:36 PM PDT

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களும், புலனாய்வு அமைப்புகளுக்கான சட்ட பாதுகாப்பு வழிமுறைகளும் வலிமைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

"நிர்பயா' நிதி திட்டம்: 983 ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள்

Posted: 12 Aug 2016 12:36 PM PDT

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள 983 ரயில் நிலையங்களில் நிர்பயா நிதியத்தின் கீழ் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மாயமான விமானத்தில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மத்திய அரசு

Posted: 12 Aug 2016 12:35 PM PDT

சென்னையிலிருந்து அந்தமானுக்குச் சென்றபோது மாயமான இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துளளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™