Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சமூக விழுமியம் : தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) தொடர்ச்சி

Posted: 12 Aug 2016 01:09 PM PDT

நற்றிணையின் தொடர்ச்சி அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பயன்படுத்தும் பொருட்கள் அவள் நிலம் சார்ந்ததாகவே இருக்கும். அவள் தந்தையோ தமையனோ வேற்றுப்புலம் சென்றாலும் அங்கிருந்து பூ கொண்டுவந்து கொடுத்ததாகப் பதிவில்லை. ஆகையினால் அவள் கூந்தல் மணம் வேறுபட்டிருப்பதற்குக் காரணம் தலைவன் தன் நிலத்துப் பூவினையோ அல்லது அவள் நிலத்துப் பூவினையோ தலைவிக்குச் சூட்டுதலே ஆகும். இதற்குரிய பதிவுகளும் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன. ஆகவே திருமணத்திற்கு முன்பு பெண்ணின் கூந்தல் வேறுபட மணம் வீசினால் அதற்கு ஒரே காரணம் ...

ஆடு மேயுது, தோல் காயுது - அது என்ன? -

Posted: 12 Aug 2016 09:18 AM PDT

1) ஆடு மேயுது, தோல் காயுது - அது என்ன? - 2) ஒற்றைக்காலைத் தூக்கியபடி ஓடையிலே மீன் பிடிக்கிறான் - அவன் யார்? - 3) பச்சையம்மாள் வாயில் மட்டும் செந்தூரம் அது என்ன? - 4) அள்ளி அடைத்தாலும் அடுத்தடுத்து கேட்பான் அவன் யார்? 5) கறுப்புப் பாத்தியிலே வெள்ளைச் செடி -அது என்ன? - 6) உள்ளிருந்தபடியே உத்தரவிடுவான் - அவன் யார்? - 7) ஈரப்புடவைக்காரி, இருபத்தெட்டு சுற்றுக்காரி அவள் யார்? - 8) எந்த எழுத்து மணக்கும், எந்த எழுத்து எழுதும் எந்த எழுத்து சுடும்? - 9) அசந்த நேரத்தில் இவன் ஆட்சி ...

கல்லும் கசியும் - அது என்ன? - விடுகதைகள்

Posted: 12 Aug 2016 09:18 AM PDT

1) கல்லும் கசியும் - அது என்ன? - 2) கடித்து இரண்டாக்கும், ஆனால் தின்னாது - அது என்ன? - 3) மழைக்கு அசையாது, வெயிலுக்கு வாடாது, அது என்ன? - 4) ஆடாமல் அசையாமல் படுத்திருப்பான் ஆளரவம் கேட்டாலும் அச்சம் காட்ட மாட்டான்- அவன் யார்? - 5) வெள்ளிக் கம்பியாய் வந்தவன் வீதியில் ஊர்ந்து போகிறான் - அது என்ன? - 6) பூத்தது ஒரே பூ, தலையில் வைத்தால் தாங்க முடியாது - அது என்ன? - 7) காற்றுக்கு பறப்பான், சிறு குண்டூசிக்கு இறப்பான் அவன் யார்? - 8) பந்தலிலே தொங்குதடி பாம்புக் கூட்டம் அது என்ன? ...

புன்னகை தரும் பொலிவு…!!

Posted: 12 Aug 2016 09:13 AM PDT

ஆடைகளும் அலங்காரங்களும் தராத பொலிவை ஒரு புன்னகை தந்து விடும்! – —————————— – நம்பிக்கை உள்ள ஒருவன், ஆர்வம் மட்டும் உள்ள 99 பேர்களுக்கு ஈடாவான்! – ஜான்ஸ்டூவார்மிஸ் – ————————————- – ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதன் கனவில் இருக்கிறான்…! – ———————————— – தைரியமுள்ளவனுக்கு அதிர்ஷ்டம் துணை புரிகிறது! – ——————————— – துன்பத்தைப் பொறுப்பதே துன்பத்தை வெல்வதாகும்! – காம்ப்பெல் – ———————————- – மனைவி என்பவள் வாலிபத்தில் காதலி நடு வயதில் தோழி முதுமையில் தாய் – பேகன்! – ———————————

கவலை எனும் காட்டு தீயை அணைக்கும் ஒரே தண்ணீர் …!!

Posted: 12 Aug 2016 09:13 AM PDT

நமது கவலை எனும் காட்டு தீயை அணைக்கும் ஒரே தண்ணீர் (தண்ணீ) தான் – #புரிந்தவன் புத்திசாலி – ————————————- – விருப்பங்கள் அதிகமாக அதிகமாக துன்பங்களும் அதிகமாகிவிடுகின்றன – ————————– – ஆன்மீகவாதியை நம்புவதை விட அரசியல்வாதியை நம்பு ஏனென்றால் முதாலாமவன் சிறிது சிறிதாக கொல்வான் இரண்டாமவன் உடனே கொன்றுவிடுவான். – ————————————— அன்று அறிவுப் பசியைத் தீர்த்த புத்தகங்கள் இன்று வயிற்றுப் பசியைத் தீர்க்க நிற்கின்றன தராசில் விற்பனைக்காக – ——————————— – என்றாவது ஒரு நாள் வாழ்வில் ...

வாழ்க்கையும் , வழுக்கையும் ஒண்ணு ….!

Posted: 12 Aug 2016 09:12 AM PDT

வாழ்க்கையும் , வழுக்கையும் ஒண்ணு ஆரம்பகாலத்துல கஷ்டமா இருக்கும் அப்புறம் போக போக பழகிடும் – —————————————– – எல்லா தண்ணீ யும் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டியதா இருக்கு குளிப்பதற்கும் சரி குடிப்பதற்கும் சரி #தண்ணீர் பஞ்சம் – ——————————————- – ஸ்பீடு பிரேக் அங்க அங்க போடுறது முக்கியமில்ல , ஸ்பீடா வர வண்டிக்கு பிரேக் இருக்கா என்பது தான் முக்கியம் – —————————————— நான் வீழ்ந்து விட்டேன் என்று எண்ணி யாரும் கை தட்டி சிரித்து விடாதீர்கள் நான் வீழ்ந்ததே முளைப்பதற்கு தான் – – ——————————— – அன்பு ...

செப்.9-ல் 'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸ்: கெளதம் மேனன்

Posted: 12 Aug 2016 09:01 AM PDT

- அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு | கோப்பு படம் --------------- செப்டம்பர் 9ம் தேதி சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' வெளியாகும் என இயக்குநர் கெளதம் மேனன் அறிவித்திருக்கிறார். - கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா' . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை 'ஒன்றாக என்டர்டெயின்மன்ட்' நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன். - இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் ...

விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் தொடரி Vs இருமுகன்

Posted: 12 Aug 2016 09:00 AM PDT

- விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை கணக்கில் கொண்டு தனுஷின் 'தொடரி' மற்றும் விக்ரமின் 'இருமுகன்' ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. - பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் தயாராகி வரும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. - தற்போது இப்படத்தின் அனைத்து கிராபிக்ஸ் பணிகளும் முடிந்து தணிக்கைக்கான பணிகள் ...

பாலாறு.. பாழ் ஆறா?

Posted: 12 Aug 2016 08:04 AM PDT

அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் வட மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு தொடர்ந்து பால் வார்த்துக் கொண்டிருந்த ஆறு பாலாறு, அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் படிப்படியாக நீர்வரத்துக் குறைந்து, தற்போது பெருமழை வௌ்ளக் காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடிவரும் ஆறாக நீர் வரத்து சிறுத்துப்போனது. இனி வரும் நாட்களில் அதற்குள் வழியற்றுப்போகும் வகையில், சமீபத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த ஒரு தடுப்பணையின் உயரத்தை மேலும் ஏழடி உயர்த்திக் கட்டிவிட்டது ஆந்திர அரசு. வேலூர், ...

மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே

Posted: 12 Aug 2016 07:48 AM PDT

படம்- பெண்மணி அவள் கண்மணிக்காக! இயற்றியவர்: கவிஞர் வாலி பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணிம் இசை: சங்கர் கணேஷ் – ————————————- மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள் மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலை தான் சொர்க்கம் என்றால் மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள் (மூங்கிலிலை) – மாம்பூக்களே மைனாக்களே கல்யாணப்பாவை என் கண்ணீரை பாருங்கள் நாணல்களே நாரைகளே பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள் பேரம் பேசவே கல்யாண சந்தையோ பெண்கள் யாவரும் வெள்ளாட்டு ...

யூகமும் வியூகமும்

Posted: 12 Aug 2016 05:57 AM PDT

- காதலனுடன் ரகசியமாய் கைபேசியில் பேசியதை வேவு பார்த்து கண்டு பிடித்து பிடுங்கி வீசிய என் அம்மா... - அவர்கள் சொன்ன பையனுடன் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது முதல் புது மாப்பிள்ளை அன்பளித்த புதிய கைபேசியில்... - நான் புழக்கடையில் பேசுவதை கதவருகே நின்றும் கிணற்றடியில் பேசுவதை ஜன்னலோரம் மறைந்தும் போர்வைக்குள் பேசுவதை கூர்ந்து கேட்டு உணர்ந்தும் உள்ளுக்குள் பூரிக்கிறாள் பாவம்... - நான் பழைய காதலனுடன் கல்யாணத்துக்கு முன்... ஓடிப்போக திட்டமிடும் பேச்சு அது என்பது புரியாமல்! - ---------------------------------- இயக்குநர் ...

ஒய்யாரமாக ஊஞ்சலாடுகிறாள்...!!

Posted: 12 Aug 2016 05:56 AM PDT

- ஒருவன் உயிர் ஊசலாடுகிறது ! ஒய்யாரமாக ஊஞ்சலாடுகின்றாள் ! - -------------------------------- - பாரம் இழுப்பவர்கள் கோபம் கொண்டால் இப்படித்தான் ! - ----------------------- - முதுகைக் காட்டினால் குதிரையும் குதிரை சவ்வாரி செய்யும் ! - ------------------------ - கன்னியைக் காதலித்து ஏமாற்றுவோருக்கு இதுதான் தண்டனையோ ? - ------------------------------ - மலர் ஊஞ்சலில் மங்கையின் ஆட்டம் வாலிபர்களின் நோட்டம் ! - ----------------------------- - செலவின்றிச் ...

விசிறி விற்பவர் வியர்வையில்....!

Posted: 12 Aug 2016 05:51 AM PDT

- - சிப்பிக்குள் அலைந்து கொண்டேயிருக்கிறது அலையின் உயிர் - ஆர்.எம்.பாண்டியன் - ---------------------------- - வியர்வை சொட்ட சொட்ட விற்கிறார் விசிறி - எஸ்.விஜயகுமார் - ------------------------ - வண்டுகளின் சத்தத்தை ரசித்தன் புல்லாங்குழல்கள் மூங்கில் காடு - முகிலரசு - ------------------------- - அளக்கப்பட்டது பால் கன்றினால் காயம்பட்டன வெறும் காம்புகள் - இதயநேசன் - ------------------------ - இதயவலியை மருத்துவ கருவிகள் அறியுமோ வாசலில் கடன்காரன் - வம்பனார் ...

மலர்களின் அணிவகுப்பு

Posted: 12 Aug 2016 05:48 AM PDT

- - அழகாதானிருக்கிறது அழுதாலும் மழலை முகம் - மு.தாஜூதின் - ------------------ - கூடு கட்டிய குருவி பறந்தது கூட்டில் கால்கள் வானில் சிறகுகள் - புதுகை பூவண்ணன் - -------------------- - மே தினக் கூட்டத்திற்கு மேடை போட்டதற்கு கூலி தரவில்லை இன்னும் - சிவகவி காளிதாசன் - ---------------------- - காலை நேரம் மலர்களின் அணிவகுப்பு மழலையர் பள்ளி - பொன்.தங்கராசு - ----------------------- - ஊட்டி சென்றேன் குளிரவில்லை சுட்டது பஸ் கட்டண உயர்வு - ஆர்.எம்.பாண்டியன் - -------------------------- படித்ததில் ...

நாகபாம்புடன் செல்பி எடுத்த வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Posted: 12 Aug 2016 05:14 AM PDT

- குஜராத் மாநிலத்தில் நாகப்பாம்புடன் செல்பி எடுத்துக்கொண்ட வாலிபர் ஒருவருக்கு அம்மாநில அரசு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. குஜராத்தில் உள்ள வதேரா நகரை சேர்ந்த வாலிபர் யாஷிஷ் பரோட் சில தினங்களுக்கு முன்னர் பாட்டில் ஒன்றில் நாகப்பாம்புவை அடைத்து வைத்து அதனுடன் செல்பி எடுத்துள்ளார். மேலும், '1,000 ரூபாய்க்கு நாகப்பாம்பு விற்பனைக்கு உள்ளது' என தலைப்பிட்டு பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சில தினங்களில் இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் லக் போடு உள்ளனர். இதுமட்டுமில்லாமல், ...

வாயடைக்க வைத்த பதில்கள்-

Posted: 12 Aug 2016 05:05 AM PDT

சில நேரங்களில் சிலர் பேசும்போது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் கேள்விகளை எழுப்பக்கூடும். - அத்தகைய சிக்கலான நேரங்களிலும் சரியான பதில்களை சாமர்த்தியமாக கூறி, கேள்வி கேட்டவர்களையே வாயடைக்க வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று - நமது நாடு சுதந்திரம் பெற்றவுடன், புதிய ராணுவ தளபதியைத் தேர்வு செய்வதற்காக, மூத்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அப்போதைய பிரதமர் நேரு, " நாம் ராணுவத்தில் பணி புரியத்தான் கற்றிருக்கிறோமே தவிர, தலைமை ஏற்று வழி நடத்த ...

மொழி தெரியாததேன்:

Posted: 12 Aug 2016 05:04 AM PDT

நமது முன்னாள் தளபதி பீல்டு மார்ஷல் சா் மானெக்ஷா ஒரு சமயம் ஆமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார். உடனே கூட்டத்தினர், " குஜராத்தியில் பேசுங்கள்; நீங்கள் குஜராத்தி மொழியில் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம்", என்றனர். உடனே பேச்சை சற்று நேரம் நிறுத்திய மானெக்ஷா, கூட்டத்தினரை முறைத்து பார்த்தார். பின் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நான் எனது பதவி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக வீரர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டபோது தமிழ் கற்றுக் கொண்டேன். ...

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

Posted: 12 Aug 2016 05:02 AM PDT

83 வயதான அமெரிக்க முதியவர் ஒருவர் விமானம் மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது. உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, " இதற்கு முன் பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?" என கிண்டலாக கேட்டார். " வந்திருக்கிறேன்" என அந்த முதியவர் பதில் அளித்தார். " அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே" என அந்த அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார். ...

“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு

Posted: 12 Aug 2016 05:01 AM PDT

- "காரக்டர்' என்ற தலைப்பில் ஆசிரியர் சாவி 1961ஆம் ஆண்டில் எழுதி வெளிவந்த கட்டுரை. "சீ! கய்தே, இன்னாடா அப்படிப் பாக்கறே, எரிச்சுடற மாதிரி. இந்த அம்மாக்கண்ணுகிட்டே வெச்சுக்காதே உன் வேலையெல்லாம். ஆப்பக் கரண்டியாலேயே ரெண்டு போட்டுடுவேன், – ஆமாம். நெதம் நெதம் வந்து நாஷ்டா பண்ணிட்டுப் போனியே, அதைப்போல பாக்கியைக் குடுக்க புத்தி வாணாம்? அறிவு கெட்டவனே! பெரிய ஆம்பிளையாட்டமா மீசையை வச்சுக்கினு வந்துட்டான். வெக்கமில்லேடா உனக்கு?" – "மோவ், தாஸ்தி பேசாத மோவ்! பாக்கி வேணும்னா மரியாதையாக் கேட்டு ...

மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Posted: 12 Aug 2016 02:42 AM PDT

- சவுதி அரேபியாவில், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை வழங்குமாறு அந்த நாட்டு மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பள  பாக்கியை வழங்குவதற்காக,  சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 100 மில்லியன் சவுதி ரியால் கடனாக வழங்கப்பட்டுள்ளது. - சவுதி அரேபியாவில், சில தனியார் நிறுவனங்களில் வேலை இழந்த தொழிலாளர்கள்,  அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். குறிப்பாக சவுதி ஓஜர் மற்றும் சவுதி பின்லேடன் கட்டுமான நிறுவனங்களில்  மட்டும் 2,500க்கும் ...

மர்மமென்ன? **************

Posted: 12 Aug 2016 02:39 AM PDT

மர்மமென்ன? ********************* வார்த்தை வலை வீசி வன்முறைகள் பல கூட்டும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்புக் காதை அல்ல அவன் மோன மொழி பேசி ஊனை உருகவைக்கும் ஓசை இல்லா திருவாசகம் காலை ஒருகூடல் மாலை மறுகூடலென காமக் கவி பாடும் முக்கூடல் பள்ளு அல்ல அவன் இன்ப வேள்வியிலும் துன்பம் சூழ்கையிலும் அத்வைதம் ஆகிவிடும் திருக்கோவையார் சிற்றின்பக் கதை எல்லாம் சிலாகித்துப் பேசும் குறுந்தொகை அல்ல அவன் பேரின்ப உலகுக்கு சேரும் கதை சொல்லும் பெரிய புராணம் அவன் காதல் ...

பீட்ரூட்டை ஏன் முழுசா குழம்புல போட்டிருக்கே..?

Posted: 12 Aug 2016 02:18 AM PDT


-

பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

Posted: 12 Aug 2016 01:12 AM PDT

ஒரு வங்கிக் கொள்ளையின்போது கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினர். "இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது. ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது!" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள். – மனதை மாற்றும் முறை என்பது இதுதான். – கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையர்களுள் ஒருவன் கேட்டான்… "வாருங்கள்! சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்" என்று. மற்றொருவன் சொன்னான், – "பொறு, அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்". இதுதான் அனுபவத்தின் சிறப்பு. – வங்கியின் ...

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Posted: 11 Aug 2016 11:35 PM PDT

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

உலகின் மிகச் சிறந்த பெண் வேண்டும்…!!

Posted: 11 Aug 2016 11:11 PM PDT

– ஒருவன் பல மாதங்களாக கடவுளை நோக்கி கடுமையாக தவம் இருந்தான். அவன் தவத்தில் மெச்சிய கடவுள், "வேண்டும் வரத்தைக் கேள்" என்றார். – "உலகின் மிகச்சிறந்த டிரிங்க்கும் உலகின் மிகச் சிறந்த பெண்ணும் வேண்டும்" என்று கேட்டான் அவன். கடவுள் "அப்படியே ஆகட்டும்" என்று மறைந்தார். அடுத்த நொடி, அவனருகில் கங்கை தீர்த்தம் இருந்தது. அன்னை தெரசாவும் இருந்தார். – —————- நீதி: Investments are subject to market risks. Please read the offer document carefully before investing! –

அருட்பா - அகப்பா - ஆதிரா

Posted: 11 Aug 2016 11:07 PM PDT

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க  அடிகளாரின் திருஅருட்பாவில் அமைந்துள்ள அகப்பாடல்களையும் அதன் விளக்கத்தையும் இத்திரியில் தொடர் பதிவாக எழுதலாம் என்று தொடங்கியுள்ளேன். காலம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்வேன் என்னும் நம்பிக்கையில். வள்ளல் பெருமானின் அருளாசியுடனும் என் ஈகரை உறவுகளின் அன்பாசியுடனும் இத்திரி வெற்றியடைய வேண்டும். என் காலம் வெல்லட்டும். முதல் திருமுறை பதிகம் 20 ஆற்றா விரகம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் பதிக விளக்கம்: தணிகை மலையில் எழுந்தருளியுள்ள ...

இது இத்தாலி போலீஸ்!

Posted: 11 Aug 2016 09:44 PM PDT

- இத்தாலியில் தனிமையில் வாடிய முதிய தம்பதியருக்கு போலீசார் சமையல் செய்து உணவு பரிமாறிய புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. - ரோம் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில், 94 வயதான மைக்கேல் தனது 89 வயது மனைவி ஜோலேவுடன் வசித்து வருகிறார். கடந்த 70 வருடங்களாக இந்த தம்பதியினர் இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தற்போது யாரும் இல்லை. இரு நாட்களுக்கு முன், இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. அக்கம் ...

விடுதலைக்காக போராடிய வீரமங்கைகள் –

Posted: 11 Aug 2016 09:43 PM PDT

- இந்தியர்கள் அனைவர் மனதிலும் என்றென்றும் நீங்காமல் இருக்க வேண்டிய நாள் ஆகஸ்ட் 15 அல்லவா? - ஆமாம்! நாம் சுதந்திர மனிதர்களாக, இந்தியர்களாக இன்று இருப்பதற்கு, இந்த பொன்னான நாள்தானே பெருந்துவக்கம்! - சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? - எவ்வளவு பேர் – எவ்வளவு தியாகங்கள்… தியாகம் என்பது சின்ன விஷயத்தி லிருந்து வாழ்வு, உயிர் என்னும் பெரிய விஷயம் வரை நீண்டது. தன்னலமற்ற எண்ணற்றோரின் தியாகமே நமது இந்த வாழ்வு. - சுதந்திர போராட்டத்தில் பெண்கள்! - பெண்மை என்பதே தியாகத்தால் உருவானது. அவர்களின் ...

அர்ஜூனனின் வீரம்!

Posted: 11 Aug 2016 07:30 PM PDT

- இந்திரலோகத்தில், அர்ஜுனன் மிக இன்பமாக இருந்தான். ஒருநாள் – இந்திரன் அவனைத் தனியே அழைத்து, "அர்ஜுனா, நிவாதகவசர்கள் என்ற மூன்றுகோடி அரக்கர்கள், நாற்புறமும் சமுத்திரத்தினால் சூழப்பட்ட ஒரு தீவில் வசிக்கின்றனர். அவர்கள் என் பகைவர்கள். நீ அவர்களுடன் போரிட்டு அழிக்க வேண்டும்," என்றான். இந்திரதேவன் அழகிய ரதத்தை வரவழைத்தான். மாதலி சாரதியாக ஏறி அமர்ந்தான். இந்திரன் தன் கரத்தால் மணி மகுடம் சூட்டி ஆபரணங்கள் பூட்டினான். எவ்விதக் கூரம்பினாலும் துளைக்க முடியாத கவசத்தை அணிவித்தான். காண்டீபத்தைக் ...

திருப்பித்தராத அடி .........!

Posted: 11 Aug 2016 07:29 PM PDT

"இந்த அடியை மறக்காதே நாளைக்கு வரும் போது தா .......!"  என்று அருளுவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் வளவன்.  ஆனால் இன்று அருளுவிற்கு விழுந்த அடி சற்று பலமாகவே விழுந்து ஒரு விரலும் பதிந்து விட்டது. ஆனால் அப்போதைக்கு வலிக்கவேயில்லை அருளுக்கு ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவனது அம்மா சட்டையை கழட்டும்போது ஆஆவென்று கத்தினான் . என்னாடா என்று உருத்து பார்த்தவள் பதறினாள் . யாருப்பா அடிச்சா ? பள்ளியில்  ஆசிரியர்கள் அடித்தார்களா ? இல்லை சாலையில் செல்பவர்கள் அடித்தார்களா ? எப்படி வந்தது இந்த வீக்கம் ...

கொசுவ சின்னதா படைச்சதற்கு நன்றி...!

Posted: 11 Aug 2016 06:50 PM PDT

''நீ புத்திசாலி... உனக்கு சொல்ல வேண்டியதில்லை'' என்று சொல்லியே புத்திசாலித்தனமாக யோசிக்க வைப்பவர்கள் புத்திசாலிகள்! - - சுமிதா ரமேஷ் - ------------------------------------------ - @SriLiro 'நாம அம்மாவுடன் வாழ முடியலையே... இவன் மட்டும் எப்படி சேர்ந்து இருக்கலாம்'ங்கிற சாடிசத்தின் வெளிப்பாடுதான் தனிக்குடித்தனம். - -------------------------------------------- - @mulIai10 மார்கழி மாதத்து காலை ஒன்றில் இறந்து போய்விட வேண்டும்... வீசும் காற்றே சொர்க்கத்துக்குக் கொண்டு போய்டும் ...

ஸ்கூட்டி பழுதானால் பதறுவான்...!!

Posted: 11 Aug 2016 06:49 PM PDT

@naatupurathan அம்மா போக்குவரத்துக் கழகம்னு மாற்றாது, இந்த நான்கரை ஆண்டுகளும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்னே நீடிக்கச் செய்த ஜெ.வின் பெருந்தன்மையில் பூரித்தே போகிறேன்! - -------------------------------------- - @indirajithguru எல்லோருக்குள்ளும் ஒரு மெக்கானிக் தூங்குகிறான். தன் வண்டி பழுதானால் கூட எழுவதில்லை. ஏதோ ஒரு ஸ்கூட்டி பழுதானால் மட்டும் பதறியடித்து எழுகிறான்! - ------------------------------------ 'நரசிம்மா' படத்தில் கரன்ட்டுக்கே ஷாக் கொடுப்பார் கேப்டன். அப்பேர்ப்பட்ட ...

கனிமொழி எம்.பி. பெயரைப் பயன்படுத்தி மோசடி: புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Aug 2016 06:43 PM PDT

கனிமொழி எம்.பி பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரை, தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா ஏ.காளப்பூரைச் சேர்ந்த ராஜரத்தினம் தாக்கல் செய்த மனு: தேவகோட்டையைச் சேர்ந்தவர் சரவணன், அவரது மனைவி மீனாள் ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். அப்போது, தங்களுக்கு கனிமொழி எம்.பி., அவரது தாயார் ராசாத்தி அம்மாள் ஆகியோரை நன்றாக தெரியும், ரூ. 8 லட்சம் பணம் கொடுத்தால் அவர்கள் ...

மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?

Posted: 11 Aug 2016 06:41 PM PDT

மெட்ரோ ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன் என்பது தொடர்பான முதல்வரின் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திணறி நின்றார். முதல்வரும், பேரவைத் தலைவரும் தொடர்ந்து அந்தக் கேள்வியையே எழுப்பினாலும், அதற்கு டி.ஆர்.பி.ராஜா நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. சட்டப் பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, தமிழகத்தில் இருந்து தொழில் முதலீட்டாளர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™