Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தால் பாதிப்பு: தி.மு.க., மீது ஜெ., குற்றச்சாட்டு

Posted: 11 Aug 2016 07:48 AM PDT

சென்னை:''மெட்ரோ ரயில் திட்டத்தில், தமிழகத்தை வஞ்சிக்கிற ஷரத்துகளைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தி.மு.க., அரசு கையெழுத்திட்டுள்ளது,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சட்டசபையில், அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில், தமிழக அரசும், மத்திய அரசும், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக போட்ட, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழகம் எப்படி வஞ்சிக்கப்பட்டிருக்கிறது, தமிழகத்திற்கு எப்படி அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை, தொழில் துறை அமைச்சர் சம்பத், விபரமாக கூறினார். அவர் பல விபரங்களை சொன்னார். அதை எளிதாக, பாமர ...

'எதையும் சந்திக்க நான் தயார்' ஜெ.,வுக்கு சசிகலா புஷ்பா சவால்

Posted: 11 Aug 2016 07:53 AM PDT

''எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடட்டும்; அதை எதிர்கொள்ளும் வல்லமை உள்ளது,'' என, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா கூறினார்.

அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., என்னும் அடிமைக் கூட்டத்தில், என்னையும் ஒருத்தியாக, வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். நான், பல நாட்கள் குமுறிக் கொண்டு இருந்ததுபோல, பலரும் அ.தி.மு.க.,வில் குமுறுகின்றனர்; விரைவில், அவர்களும் வெளியே வருவர். சென்னை, போயஸ் தோட்டத்தில் நடந்ததைக் கூறியதற்கு, பழிவாங்கும் முயற்சியாக, என் வீட்டில், எப்போதோ வேலை பார்த்த பெண்களை துரத்திப் பிடித்து, அவர்கள் மூலம் ...

அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு...ஆயத்தம்! ஊதிய ஒப்பந்த பேச்சை தமிழக அரசு துவக்காததால் கடுப்பு

Posted: 11 Aug 2016 09:12 AM PDT

ஊதிய ஒப்பந்த பேச்சை தமிழக அரசு துவக்காததால், அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றன.

வரும், 27ல், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவ தோடு, செப்., 2ல், மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்துள்ளன.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.55 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர் களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய ஒப்பந்தம் போடப்படும். 13வது ஊதிய ஒப்பந்தத்தை வரும், செப்., 1ம் தேதி அமல் படுத்த வேண்டும்; இதுவரை, ஊதிய ஒப்பந்த பேச்சுக்கான எந்த முயற்சியும் அரசு எடுக்காத தால், ...

பணிபுரியும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு: புதிய மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியது மத்திய அரசு

Posted: 11 Aug 2016 10:20 AM PDT

புதுடில்லி:அரசு துறைகளில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்குமான பேறுகால விடுப்பை, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக உயர்த்த வகை செய்யும் மசோதா, அனைத்து கட்சிகளின்ஆதரவுடன், ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, தற்போது, 26 வாரங்கள், முழு சம்பளத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில், 12 வாரங்கள் மட்டுமே, பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.போதிய அளவில் பேறுகால விடுப்பு வழங்காததால், பிறந்த குழந்தைகள் தாய் ...

சுதந்திர தினத்தில் என்ன பேச வேண்டும்? மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி

Posted: 11 Aug 2016 10:50 AM PDT

புதுடில்லி:வரும், 15ம் தேதி, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்ற உள்ள சுதந்திர தின உரையில், என்னென்ன விஷயங்கள் இடம்பெற வேண்டும் என, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடி வரும், 15ல், தன் சுதந்திர தின உரையை ஆற்ற உள்ளார். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், இந்த உரையில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்ற கருத்தை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.பிரதமர் அலுவலக இணையதளம், இதற்கான மொபைல், 'ஆப்' ஆகியவற்றில், பொதுமக்கள் தங்கள் கருத்தை பதிவு ...

தாய்லாந்து ஓட்டலில் இரட்டை குண்டுவெடிப்பு; ஒருவர் பலி

Posted: 11 Aug 2016 11:36 AM PDT

ஹாவ் ஹின் : தாய்லாந்து ஓட்டலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர்.
தாய்லாந்தின் ஹாவ் ஹின் பகுதியில் பீச் ஓட்டலில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இக்குண்டுவெடிப்பு தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார். வெளிநாட்டு பயணிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மொபைல் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

எந்த தொழிலும் வெளி மாநிலங்களுக்கு செல்லாது! * சட்டசபையில் ஜெ., திட்டவட்டம்

Posted: 11 Aug 2016 11:40 AM PDT

சென்னை:''தமிழகத்திற்கு வர வேண்டிய, எந்த தொழிற்சாலைகளும், வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும், தமிழகத்தில் இருந்து, எந்த தொழில் முதலீட்டாளர்களும், வெளி மாநிலங்களுக்கு செல்ல மாட்டார்கள்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - டி.ஆர்.பி.ராஜா: தி.மு.க., ஆட்சியில், 2007ல், தொழில் கொள்கை வெளியிடப்பட்டது.அமைச்சர் சம்பத்: முதல்வர் ஜெயலலிதா ஆட்சி யில், 1992ல் தான் முதன்முறையாக, தொழில் கொள்கை வெளியிடப்பட்டது.ராஜா: விவசாயத் துறையில், விளை பொருட் களுக்கு உரிய விலை கிடைக்க, சிறப்பு மண்ட லங்களை ...

சுவாதி கொலை வழக்கு: வீடியோ எடுக்க அனுமதி

Posted: 11 Aug 2016 11:54 AM PDT

சென்னை:மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமாரை, சிறையில் வீடியோ எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஜூன், 24ல், மென்பொறியாளர் சுவாதி, வெட்டி கொல்லப்பட்டார். ரயில் நிலையம் அருகில் உள்ள கட்டடத்தில் இருந்த கேமராவில் பதி வான உருவம்தான் கொலையாளி என, போலீஸ் தரப்பில் சந்தேகப்பட்டனர்.போலீசார் மனு:அதைதொடர்ந்து, ஜூலை, 2ல், திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சி புரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவனை, போலீசார் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன், கண்காணிப்பு கேமரா பதிவு களை, ...

ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

Posted: 11 Aug 2016 12:16 PM PDT

ரியோ டி ஜெனிரோ : ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் காலிறுதிக்கு முன்னேறி இந்திய ஆண்கள் அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ‛பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஹாக்கி அணி, லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. அடுத்த போட்டியில் ஜெர்மனியிடம் வீழ்ந்த இந்திய அணி, 3வது போட்டியில் அர்ஜென்டினாவை சாய்த்தது. தனது 4வது லீக் போட்டியில் வலிமையான நெதர்லாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. கனடாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் டிரா செய்தால் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறலாம் என்ற ...

ரயில் கொள்ளையில் துப்பு துலக்குவதில் சிக்கல் நீடிப்பு தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் அறிவிப்பு

Posted: 11 Aug 2016 12:48 PM PDT

ரயில் கொள்ளையில் துப்பு துலங்காததால், சி.பி.சி.ஐ.டி., போலீசார், விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். 'கொள்ளையர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம் - சென்னை விரைவு ரயிலில், மேற்கூரையில் துளையிட்டு, ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான, 5.75 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.எழும்பூரில்...: இந்த கொள்ளை சம்பவம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். பணம் கொள்ளை அடிக்கப்பட்ட ரயில் பெட்டி, சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ளது. அந்த பெட்டியை, டி.ஜி.பி., அசோக்குமார், சி.பி.சி.ஐ.டி., கூடுதல் ...

நாட்டு நடப்பு; வெளிநடப்பு' அமைச்சர் பேச்சால் அமளி

Posted: 11 Aug 2016 01:11 PM PDT

சென்னை:''தி.மு.க., உறுப்பினர்களுக்கு பிடிக்காத வார்த்தை, நாட்டு நடப்பு; பிடித்த வார்த்தை, வெளிநடப்பு,'' என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்தால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

சட்டசபையில், நேற்று தன் பதிலுரையில், ஊரக தொழில் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்படி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., உறுப்பினர்கள் எழுந்து, முன்வரிசைக்கு வந்தனர். அவர் கூறிய வார்த்தையை நீக்க கோரினர்.பதிலுக்கு, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 10 நிமிடங்களுக்கு மேலாக அமளி நிலவியது. இதையடுத்து, அமைச்சருக்கு பதிலளிக்க, தி.மு.க.,வுக்கு வாய்ப்பு ...

அறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை விஞ்சிய இந்திய வம்சாவளி சிறுவன்

Posted: 11 Aug 2016 01:28 PM PDT

லண்டன்; அறிவுத்திறனில் தலைசிறந்த விஞ்ஞானிகளான , ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஐஸ்டீன் ஆகியோரை, இந்திய வம்சாவளி சிறுவன் வென்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பார்க்கிங்சைப் என்ற நகரில் புல்வுட் பள்ளி படித்து வரும் இந்திய வம்சாவளி தருவ் 10, இவரது தந்தை வங்கி அதிகாரியாக உள்ளார். தாயார் ஆசிரியர். லண்டனில் மென்சா அறிவுத்திறன் சொசைட்டி என்ற அமைப்பு உள்ளது. இந்த சொசைட்டியில் உலகின் அதிக அறிவுத்திறன் வாய்ந்தோர் குழு உள்ளது. இதில் உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவில் தருவ் இணைந்துள்ளார். இந்த சொசைட்டி ...

துறைமுகங்கள் தனியார் மயமாகாது: நிதின் கட்கரி

Posted: 11 Aug 2016 01:44 PM PDT

புதுடில்லி : நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் தனியார் மயமாகாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுகுறித்து லோக்சபாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது: மிகப்பெரிய துறைமுகங்களை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. தனியார் துறைமுகங்களை விட, அரசு துறைமுகங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன; இவற்றை நவீனப்படுத்துவதற்காகத் தான், துறைமுகங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ...

ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் ; சானியா ஜோடி கால் இறுதிக்கு தகுதி

Posted: 11 Aug 2016 03:26 PM PDT

ரியோ டி ஜெனிரியோ: ரியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் பரிவில் இந்தியாவின் சார்பில் விளையாடிய சானியா- போபண்ணா ஜோடி இன்று ஆஸ்திரேலியாவின் ஸ்டோசர் - பியர்ஸ் ஜோடியை எதிர் கொண்டனர். இதில் சானியா ஜோடி 7-5, 6-4 என்ற செட் புள்ளியில் 2 செட்களையும் கைபற்றி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கால் இறுதி போட்டி நாளை இரவு 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடக்கிறது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™