Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆடிப்பட்டத்தில் சம்பா சாகுபடி சிக்கல் : நெல் விதைப்பு பணியே துவங்கவில்லை

Posted: 01 Aug 2016 09:32 AM PDT

மேட்டூர் அணை நீர் திறப்பு தாமதமாவதால், நடப்பாண்டு, ஆடிப்பட்டத்தில் டெல்டா மாவட்டங்களில், 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும், ஜூன், 12ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலுார் ஆகிய, நான்கு டெல்டா மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கரிலும்; சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட, எட்டு காவிரி கரையோர மாவட்டங்களில், 5.10 லட்சம் ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும்.
13.10 லட்சம் ஏக்கரில்
2 லட்சம் ஏக்கரில்...: கடந்த மூன்று ...

அடுத்த ஆண்டு முதல் 'நீட்' கட்டாயம் : மசோதா நிறைவேறியது

Posted: 01 Aug 2016 09:48 AM PDT

புதுடில்லி: அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

அவசர சட்டம் : இந்த ஆண்டு மட்டும், இந்த நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும்
அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.இதனிடையில், பொது நுழைவுத் தேர்வை அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கான, இந்திய ...

பதவி விலக முடியாது என சசிகலா புஷ்பா எம்.பி., முரண்டு! உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ராஜ்யசபாவில் புகார் * அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி முதல்வர் ஜெ., அதிரடி

Posted: 01 Aug 2016 10:25 AM PDT

டில்லி விமான நிலையத்தில், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவுடன் கைகலப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க., - எம்.பி., சசிகலா புஷ்பாவை, பதவி விலகும்படி, கட்சி தலைமை உத்தரவிட்டது.

ஆனால், 'பதவி விலக முடியாது' என, முரண்டு பிடிக்கும் சசிகலா புஷ்பா, அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக, ராஜ்யசபாவில் நேற்று பிரச்னையை கிளப்பினார். தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, பரபரப்பு புகார் தெரிவித்ததை அடுத்து, அவரை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.துாத்துக்குடி மாவட் டம், முதலுார் அடுத்த அடையல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா புஷ்பா.இவரது ...

குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்தி பென் படேல்...ராஜினாமா ! அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது பா.ஜ.,

Posted: 01 Aug 2016 10:30 AM PDT

புதுடில்லி:பா.ஜ., ஆளும் குஜராத் மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் பதவியில் இருந்து, ஆனந்தி பென் படேல், 74, நேற்று ராஜினாமா செய்தார்.

பா.ஜ., ஆளும் குஜராத், சமாஜ்வாதி ஆளும் உ.பி., உட்பட, ஐந்து மாநிலங்களில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், மத்தியில் ஆளும் பா.ஜ., தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் வென்று பிரதமரானார். அதை தொடர்ந்து, அமைச்சராக இருந்த ஆனந்தி பென் படேல், குஜராத் முதல்வரானார்.'கடந்த இரு ஆண்டுகளில், ...

மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியில் சிக்னல் அனுப்பும் கருவியே இல்லையாம்!

Posted: 01 Aug 2016 10:33 AM PDT

நடுவானில் மாயமான ஏ.என்.32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டியில், கடலுக்கு அடியிலிருந்து சிக்னல் அனுப்பும் கருவி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஜூலை, 22ல், சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏ.என்.32 ரக, விமானப் படை விமானம், 29 பேருடன் மாயமானது. அந்த விமானம், சென்னையில் இருந்து, 250 கி.மீ., தொலைவில் மாயமானதாக கூறப்படுகிறது. வங்கக் கடலில், பல ஆயிரம் சதுர கி.மீ., பரப்பில் அதை தேடி வருகின்றனர். எனினும்,
இதுவரை அந்த விமானம் பற்றிய தகவலோ, உடைந்த பாகங்களோ சிக்கவில்லை.
இந்நிலையில் அந்த விமானத்தில், விபத்தில் சிக்கினால் கண்டுபிடிக்க உதவும் ...

தலைநகர் டில்லியிலும் கலாமுக்கு நினைவிடம்

Posted: 01 Aug 2016 10:34 AM PDT

புதுடில்லி: மக்களை கவர்ந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, டில்லியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம், அதிகமானோரை ஈர்த்து வருகிறது.
டில்லி, ஐ.என்.ஏ., டில்லி ஹாட் பகுதியில் அமைந்துள்ளது கலாமின் நினைவிடம். அவருடைய முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, இந்த நினைவிடத்தை, சமீபத்தில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். இளைஞர்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும், குடும்பம் குடும்பமாக, அதிக அளவில், இங்கு வந்து செல்கின்றனர்.
கலாமின் முழு உருவச் சிலை, அவர் பயன்படுத்திய பொருட்கள் ...

'என்னை காப்பாத்துங்க!'சசிகலா கண்ணீர்

Posted: 01 Aug 2016 10:38 AM PDT

''என்னை ராஜினாமா செய்யும்படி, அ.தி.மு.க., தலைமை நிர்ப்பந்திக்கிறது. என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; என்னை காப்பாற்றுங்கள்,'' என, சசிகலா புஷ்பா கண்ணீர் விட்டு கதறிய கதறலில், அரை மணிநேரத்திற்கும் மேலாக, ராஜ்யசபா அமளிக்காடானது.

ராஜ்யசபாவில், நேற்று அலுவல்கள் துவங்கிய சில நிமிடங்களில், சசிகலா புஷ்பா எழுந்து, ''என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் என் எம்.பி., பதவியிலிருந்து விலகும்படி, என் கட்சி தலைவரால் நிர்ப்பந்திக்கப்படுகிறேன்,'' என்றார். உடனே, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனாலும், சசிகலா புஷ்பா ...

சட்டசபையில் பேச முடியவில்லை ஸ்டாலின் ஆதங்கம்

Posted: 01 Aug 2016 10:48 AM PDT

ஈரோடு:''சட்டசபையில், பொதுமக்கள் பிரச்னைகளை பேச முடியவில்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, பல்வேறு கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று மாலை நடந்தது. இதில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:இங்கே, 4,000 பேர் கட்சியில் இணைந்துள்ளனர். ஆட்சி பொறுப்பில் இருப்பது நாம் தானா என்ற சந்தேகம் எழுகிறது. சட்டசபை தேர்தலில் நாம் தோற்ற கட்சி. வெற்றி பெற்ற கட்சியில் இணைவதை போல், பல்வேறு கட்சியினர் இன்று இணைந்துள்ளனர். ஆளுங்கட்சியை தட்டி கேட்கும் உரிமை நமக்கு உள்ளது. சட்டசபையில் ஒத்திவைப்பு ...

சென்னை உயர் நீதிமன்றம் இனி 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்'

Posted: 01 Aug 2016 10:50 AM PDT

சென்னை,:சென்னை உயர் நீதிமன்றத்தை, 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என, பெயர் மாற்றம் செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில், நேற்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபையில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா, இதற்கான அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்து பேசியதாவது:மத்திய அரசு பம்பாய், கல்கத்தா மற்றும், மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றம் செய்வதற்காக, 'உயர் நீதிமன்றங்கள் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு - 2016'ஐ, லோக்சபாவில் ஜூலை, 19ல் அறிமுகம் செய்துள்ளது.இதில், குறிப்பிடப்பட்ட நாளில் இருந்து, 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பது, சென்னை ...

என்.ஜி.ஓ.,க்கள் மூலம் நன்கொடை வசூல்? ; வங்கி ஊழியர்களுக்கு சி.வி.சி. எச்சரிக்கை

Posted: 01 Aug 2016 10:55 AM PDT

புதுடில்லி:'பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள், என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகள் அமைத்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.

வர்த்தக உறவுபொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், தம் மனைவியர் மூலம், என்.ஜி. ஓ.,க்களை உருவாக்கி, தாம் பணியாற்றும் நிறுவனங்களில் வர்த்தக உறவு வைத்துள்ள ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் நன்கொடை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ...

புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி; நிறுவனங்களுக்கு அரசு ஊக்கம்

Posted: 01 Aug 2016 12:43 PM PDT

புதுடில்லி : புதிய பொருட்கள், புதிய சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் கூறியதாவது: கடந்த, 2015 நிலவரப்படி, சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு, 2.2 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தரமான பொருட்களை ஏற்றுமதி செய்யவும், சிறப்பான, 'பேக்கிங்' மற்றும் 'பிராண்டு' ...

சவுதியில் தவிப்போரை மீட்க தீவிர நடவடிக்கை; சுஷ்மா சுவராஜ் உறுதி

Posted: 01 Aug 2016 01:21 PM PDT

புதுடில்லி: ''சவுதியில் தவிக்கும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு, தேவையான உணவு வழங்கப்படுகிறது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள், தீவிரமாக நடக்கின்றன,'' என, பார்லிமென்ட்டில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து, பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் அறிக்கை தாக்கல் செய்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததால், சவுதி அரேபியாவில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், எண்ணெய் ...

வைக்கோலில் எத்தனால் தயாரிக்க அரசு ஊக்கமளிக்கும்; அமைச்சர் நிதின் கட்கரி

Posted: 01 Aug 2016 02:27 PM PDT

நாக்பூர் : ''வைக்கோல், கோதுமை தவிடு, பருத்தி போன்றவற்றின் மூலம், எத்தனால் தயாரிக்கும் கொள்கை திட்டம் குறித்து, மத்திய அரசு விரைவில் பரிசீலிக்க உள்ளது,'' என, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு...
நாக்பூரில் அவர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கருத்தரங்கில் மேலும் பேசியதாவது: மஹாராஷ்டிராவின் நெற்களஞ்சியமாக, விதர்பா பிராந்தியத்தில் உள்ள, பந்தாரா மாவட்டம் திகழ்கிறது. இங்கு, வைக்கோல் கழிவுகள் முழுவதும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. வைக்கோலில் இருந்து, எத்தனால் தயாரிக்கலாம். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™