Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆதார் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்
- ஆலங்குடி குருபகவான் கோயிலில் இன்று குருபெயர்ச்சி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- கவிஞர் வைதீஸ்வரனுக்கு சிற்பி இலக்கிய விருது
- ஆவின் பாலை லிட்டர் ரூ.25-க்கு கொடுக்க வேண்டும்
- தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு
- காலமானார்: எம்.ஐ.சந்தியாகு உடையார்
- முதுநிலை ஹோமியோபதி: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
- அண்ணாமலைப் பல்கலை.யில் மீன்வள அறிவியல், பி.பார்ம். படிப்புகளுக்கு 4,5-இல் கலந்தாய்வு
- ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்
- உயர் நீதிமன்ற பெயர் மாற்ற தீர்மானம்: வைகோ வரவேற்பு
- முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடங்கின: ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
- சுவாதி கொலை வழக்கு: ராம்குமாருக்கு ஆக.12 வரை காவல் நீட்டிப்பு
- ஆளும்கட்சியைத் தட்டிக்கேட்கும் உரிமை திமுகவுக்கு மட்டுமே உண்டு
- பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: ஆகஸ்ட் 24-க்கு ஒத்திவைப்பு
- இளவரசன் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு
- மாணவர் பேரவை மலரில் தேசவிரோத கருத்து: புதுச்சேரி மத்திய பல்கலை. முன் பாஜகவினர் மறியல்; 100 பேர் கைது
- சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட பெண், 3 மாத குழந்தை சடலங்கள் மீட்பு
- வெப்பச்சலனம்: ஓரிரு இடங்களில் மழை
- மாயமான விமானத்தைத் தேடும் பணி: உள் வட்டப் பகுதியில் சாகர் நிதி; வெளி வட்டப் பகுதியில் ரத்னாகர் கப்பல்
- மேட்டூரில் ஆடிப் பெருக்கு: பாதுகாப்புப் பணியில் 300 போலீஸார்
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
- வட்டாட்சியர் நெருக்கடி கொடுத்ததாக புகார்: விஏஓ விஷம் குடித்து தற்கொலை முயற்சி: நடவடிக்கை கோரி குடும்பத்தினர் மனு
- சுருக்கில் சிக்கிய சிறுத்தை சாவு
- மழையும் அழிவும்!
- நடக்கவிருப்பது சரித்திரமா? சறுக்கலா?
- சேமிக்க வேண்டுமய்யா...
- மது, கள்ளச்சாராயத் தீமை - விழிப்புணர்வு பிரசாரம்
- வரியில்லாத பட்ஜெட் வழங்கியவர் முதல்வர்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு
- ஆடிப்பெருக்குக்காக ஆற்றுநீரை மறித்து மணல் திட்டு: நெரூர் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
- ஆடிப்பெருக்கு: பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க வேண்டாம்
- புழுதியைக் கிளப்பும் லாரிகளால் அவதி மணல் குவாரிக்கு டோக்கன் கொடுக்கும் மையத்தை மாற்ற வலியுறுத்தல்
- 50 இடங்களில் நெல் உலர்த்தும் களங்கள்: அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு
- பணிபுரியும் மகளிருக்கான கடன் உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு
- திருவண்ணாமலை கோயில் கோபுர விரிசலைச் சீரமைக்க நடவடிக்கை
- கெயில் எரிவாயு குழாயை சாலையோரத்தில் பதிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதி
- உங்களைத் தவிர வேறு யார் இருக்கா? துரைமுருகன் பேச்சால் பேரவையில் சிரிப்பொலி
- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
- 2 கோடியைத் தாண்டியது குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை: சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
- மெஜாரிட்டி,மைனாரிட்டி யார்? பேரவையில் விவாதம்
- அமுதம்-காமதேனு கடைகளில் விலை வித்தியாசம் ஏன்?
- யார் ஆட்சியில் அரிசி கடத்தல் நடந்தது? திமுக-அதிமுக வாக்குவாதம்
- பேரவையில் இன்று....
- "நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
- தாம்பரம் - திண்டிவனம்: ஆறு வழி சாலையாக்க ஆய்வு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
- ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் வந்தால் நாடு தழுவிய போராட்டம்: பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது எச்சரிக்கை
- "நிலம் கையகப்படுத்துதல் பிரச்னையால் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் தாமதம்'
- குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் ராஜிநாமா
- சவூதியில் சிக்கியிருக்கும் 10,000 இந்தியர்களும் தாயகம் அழைத்து வரப்படுவார்கள்: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி
- ராஜீவ் கொலை கைதிகள் வழக்கு: விசாரணை ஆக. 8-க்கு ஒத்திவைப்பு
- காஷ்மீர் விவகாரத்தை கையாளுவதில் மத்திய அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- "17 மாவட்டங்களில் மட்டுமே திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை முற்றிலும் ஒழிப்பு'
- அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட வன விலங்குகள் மீட்பு
- மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க மத்திய அமலாக்கத் துறை எதிர்ப்பு
- மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நாளை தாக்கல்
- பாஜக கூட்டணி அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுகிறது: மம்தா
- மகாராஷ்டிரத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை
- நேரடி வரிகள் விதிப்பு வாரியத் தலைவராக ராணி சிங் நாயர் நியமனம்
- புதிதாகப் பொறுப்பேற்ற 172 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மோடி இன்று கலந்துரையாடல்
- மானிய விலை சமையல் எரிவாயு விலை ரூ.1.93 அதிகரிப்பு
- ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து நர்சிங் யாதவ் விடுவிப்பு: ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லை
- கிங்ஸ்டன் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா
- 2012 லண்டன் ஒலிம்பிக்
- ஆதார் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்
- ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் வந்தால் நாடு தழுவிய போராட்டம்: பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது எச்சரிக்கை
- டெங்கு பாதிப்பு எதிரொலி: மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி
- ஆமிர்கான் குறித்த பாரிக்கர் கருத்து: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
- அடிக்கடி பயணம்: பிரதமர் மோடி, கேஜரிவால் மீது அஜய் மாக்கன் சாடல்
- தில்லி உயிரியல் பூங்காவில் 33 மான்கள் இறப்பு: மாநிலங்களவையில் தகவல்
- வீட்டின் கூரை இடிந்து தாய், 2 குழந்தைகள் சாவு
- பழைய டீசல் வாகனங்களை ஒழித்துவிட்டு புதிய வாகனங்கள் பதிவு செய்யுங்கள்: என்ஜிடி உத்தரவு
- விளையாட்டு கிராமத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
- காஜியாபாதில் ஒருவர் சுட்டுக் கொலை
- பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியை மோசமாக நடத்தியதாக மருத்துவர் மீது புகார்: மகளிர் ஆணையம் அழைப்பாணை
- ஆப்கன் ஹோட்டலில் தலிபான் தாக்குதல்: காவலர் பலி; 11 வெளிநாட்டினர் உயிர் தப்பினர்
- ஐ.நா. முன்வைத்த அமைதித் தீர்வு: யேமன் கிளர்ச்சியாளர்கள் நிராகரிப்பு
- சிரியாவில் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்ச்சி: 5 பேர் பலி
- விளம்பர ஒப்பந்த முறைகேடு வழக்கு: ஷீலா தீட்சித்தை விடுவித்தது லோக் ஆயுக்த
- சாலை குழியில் ஒருவர் பலியான சம்பவம்: நீதி விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவு
- ஆதாய விலை கிடைக்க விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
- பேருந்துகளுக்கான தனிப் பாதை திட்டம்: தில்லி அரசிடம் மீண்டும் கோப்புகளை கோருகிறார் துணைநிலை ஆளுநர்
- ஹாரி பாட்டர் நாவல்களை வரி விடாமல் ஒப்பிக்கும் பெண்!
- சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக கோரிக்கை
- பாகிஸ்தான் ஹெராயின் கடத்தல்: 13 அரசு விமான பணியாளர்கள் கைது
- தாம்பரம் - திண்டிவனம்: ஆறு வழி சாலையாக்க ஆய்வு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
- நடுக்கடலில் தத்தளித்த 6,500 அகதிகள் மீட்பு
- பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
- கிருஷ்ணா புஷ்கர கல்யாண ரத யாத்திரை: நாளைத் தொடக்கம்
- உண்டியல் காணிக்கை ரூ. 2.87 கோடி
- திருமலையில் 100 ஹெக்டேர் பரப்பளவில் சந்தன மரக் கன்றுகள் நட ஏற்பாடு
- நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?
- இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை
- கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்மிக வகுப்புகள் தொடக்கம்
- வேலூர் ஏரியில் மதகு அடைப்பான் அமைக்கக் கோரிக்கை
- புண்ணிய நதிகள் சங்கமிக்கும் சங்கு தீர்த்தம்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு உதயமாகும் அதிசயம்
- இன்று ஆடிப் பெருக்கை ஒட்டி பலத்த பாதுகாப்பு: பாலாறு தடுப்பணை, கனகநாச்சியம்மன் கோயிலில் ஆட்சியர் நேரில் ஆய்வு
- ரயில்வே துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- திமிரியில் சேக்கிழார் திருமுறை மாநாடு
- குடியிருப்புகளை அபகரிக்க முயற்சி: பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
- அதிமுக பொதுக் கூட்டம்
- இஸ்லாமியர்களின் உண்மையான பாதுகாவலர் ஜெயலலிதாதான்: அமைச்சர் நீலோபர் கபில்
| ஆதார் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல் Posted: 01 Aug 2016 02:30 PM PDT அரசின் பல்வேறு சேவைகளை இணைய வழியில் சுலபமாகப் பெறுவதற்காக பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் செல்லிடப்பேசி எண்களை இணைக்க வேண்டும் என்று இந்திய பிரத்யேக அடையாள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| ஆலங்குடி குருபகவான் கோயிலில் இன்று குருபெயர்ச்சி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 01 Aug 2016 02:29 PM PDT அருள்மிகு குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.2) காலை 9.30 மணியளவில் பெயர்ச்சியடைகிறார். இதை முன்னிட்டு நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது. |
| கவிஞர் வைதீஸ்வரனுக்கு சிற்பி இலக்கிய விருது Posted: 01 Aug 2016 02:28 PM PDT சிற்பி இலக்கிய விருது, கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுக்கு வழங்கப்படுவதாக சிற்பி அறக்கட்டளை தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். |
| ஆவின் பாலை லிட்டர் ரூ.25-க்கு கொடுக்க வேண்டும் Posted: 01 Aug 2016 02:28 PM PDT ஆவின் பால் லிட்டர் ரூ.25 கொடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு Posted: 01 Aug 2016 02:27 PM PDT தூத்துக்குடி அருகே படகு இயந்திரம் பழுதானதால் நடுக்கடலில் இரண்டு நாள்களாக தத்தளித்த 7 மீனவர்களை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் திங்கள்கிழமை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். |
| காலமானார்: எம்.ஐ.சந்தியாகு உடையார் Posted: 01 Aug 2016 02:26 PM PDT சென்னை வியாசர்பாடி சாஸ்திரிநகரைச் சேர்ந்த தியாகி எம்.ஐ.சந்தியாகு உடையார் (88) உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலமானார். |
| முதுநிலை ஹோமியோபதி: தரவரிசைப் பட்டியல் வெளியீடு Posted: 01 Aug 2016 02:25 PM PDT முதுநிலை ஹோமியோபதி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சுயநிதி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் எம்.டி. ஹோமியோபதி படிப்புக்கான 15 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. |
| அண்ணாமலைப் பல்கலை.யில் மீன்வள அறிவியல், பி.பார்ம். படிப்புகளுக்கு 4,5-இல் கலந்தாய்வு Posted: 01 Aug 2016 02:24 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்ஸி.,) மருந்தாக்கியல் பட்டயப் படிப்புக்கு (டி.பார்ம்.,), மருந்தாக்கியல் நிறைஞர் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 4-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம் Posted: 01 Aug 2016 02:22 PM PDT ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. இதில், சர்வதேச யோகா நிபுணர் பாபா ராம்தேவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். |
| உயர் நீதிமன்ற பெயர் மாற்ற தீர்மானம்: வைகோ வரவேற்பு Posted: 01 Aug 2016 02:22 PM PDT சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். |
| முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடங்கின: ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை Posted: 01 Aug 2016 01:22 PM PDT தமிழகம் முழுவதும் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்கின. கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்டால், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| சுவாதி கொலை வழக்கு: ராம்குமாருக்கு ஆக.12 வரை காவல் நீட்டிப்பு Posted: 01 Aug 2016 01:21 PM PDT சென்னையில் மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து எழும்பூர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| ஆளும்கட்சியைத் தட்டிக்கேட்கும் உரிமை திமுகவுக்கு மட்டுமே உண்டு Posted: 01 Aug 2016 01:20 PM PDT ஆளும் கட்சியைத் தட்டிக்கேட்கும் உரிமை திமுகவுக்கு மட்டுமே உண்டு என்று சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
| பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: ஆகஸ்ட் 24-க்கு ஒத்திவைப்பு Posted: 01 Aug 2016 01:20 PM PDT விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| இளவரசன் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு Posted: 01 Aug 2016 01:19 PM PDT தருமபுரி இளவரசன் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| மாணவர் பேரவை மலரில் தேசவிரோத கருத்து: புதுச்சேரி மத்திய பல்கலை. முன் பாஜகவினர் மறியல்; 100 பேர் கைது Posted: 01 Aug 2016 01:19 PM PDT புதுச்சேரி மத்திய பல்கலை. மாணவர் பேரவை ஆண்டு மலர் புத்தகத்தில், தேச விரோத கருத்துகள் இடம் பெற்றிருந்ததாகக் கூறி, பல்கலைக்கழகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். |
| சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட பெண், 3 மாத குழந்தை சடலங்கள் மீட்பு Posted: 01 Aug 2016 01:18 PM PDT சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட நிலையில் பெண் மற்றும் மூன்று மாத குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வெப்பச்சலனம்: ஓரிரு இடங்களில் மழை Posted: 01 Aug 2016 01:18 PM PDT வெப்பச்சலனத்தின் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| Posted: 01 Aug 2016 01:17 PM PDT சென்னை அருகே மாயமான விமானம் விழுந்ததாகக் கருதப்படும் இடத்தில், உள் சுற்றுவட்டாரப் பகுதியில் தேடும் பணியில் சாகர்நிதி கப்பலும், வெளி சுற்றுவட்டாரப் பகுதியில் ரத்னாகர் கப்பலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. |
| மேட்டூரில் ஆடிப் பெருக்கு: பாதுகாப்புப் பணியில் 300 போலீஸார் Posted: 01 Aug 2016 01:16 PM PDT ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, மேட்டூரில் டிஎஸ்பி நடராஜன் தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். |
| தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் Posted: 01 Aug 2016 01:15 PM PDT தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 4 ஆவது அலகில் திங்கள்கிழமை பழுது ஏற்பட்டது. ஏற்கெனவே 3 ஆவது அலகில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை இரவு நிலவரப்படி 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படவில்லை. |
| Posted: 01 Aug 2016 01:15 PM PDT வட்டாட்சியர் நெருக்கடி கொடுத்ததால் மனமுடைந்த கிராம நிர்வாக அலுவலர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். |
| சுருக்கில் சிக்கிய சிறுத்தை சாவு Posted: 01 Aug 2016 01:15 PM PDT கூடலூரில் சுருக்கில் சிக்கிய சிறுத்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. |
| Posted: 01 Aug 2016 12:52 PM PDT இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், கோடையில் கடுமையான வறட்சியும் மழைக் காலங்களில் வெள்ளமும்தான். ஊழலைவிட, பாதுகாப்பு செலவினங்களைவிட நமது முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடையாக இருப்பவை இவைதான். |
| நடக்கவிருப்பது சரித்திரமா? சறுக்கலா? Posted: 01 Aug 2016 12:50 PM PDT "தேர்தல் முடிந்து விட்டது... ட்ரம்ப் வெற்றி பெற்றுவிட்டார்.' ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கப்பட்டவுடன், அமெரிக்காவின் முதன்மை நாளிதழ்களில் ஒன்றான "யு.எஸ்.ஏ. டுடே'யில் வெளியான ஒரு கட்டுரையின் தலைப்பு இது. அதாவது ஹிலாரியை வேட்பாளராக அறிவித்ததால் ட்ரம்பின் வெற்றி உறுதியாகிவிட்டதாம். |
| Posted: 01 Aug 2016 12:49 PM PDT இந்தியர்களின் ஓய்வுகால வாழ்க்கைக்கான சேமிப்பு குறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் இயங்கி வரும் வங்கி நிறுவனம் ஒன்று அண்மையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. |
| மது, கள்ளச்சாராயத் தீமை - விழிப்புணர்வு பிரசாரம் Posted: 01 Aug 2016 12:46 PM PDT மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மது மற்றும் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்துப் பேசியது: |
| வரியில்லாத பட்ஜெட் வழங்கியவர் முதல்வர்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு Posted: 01 Aug 2016 12:45 PM PDT மக்களுக்காக வரியில்லாத பட்ஜெட் வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயாபஸ்கர். |
| Posted: 01 Aug 2016 12:29 PM PDT நெரூர் அருகே மணல் லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| ஆடிப்பெருக்கு: பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க வேண்டாம் Posted: 01 Aug 2016 12:28 PM PDT செவ்வாய்க்கிழமை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் நிலையில் யாரும் காவிரி மற்றும் அமராவதி ஆற்றின் நீர்நிலைகளில் பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். |
| புழுதியைக் கிளப்பும் லாரிகளால் அவதி மணல் குவாரிக்கு டோக்கன் கொடுக்கும் மையத்தை மாற்ற வலியுறுத்தல் Posted: 01 Aug 2016 12:28 PM PDT கரூர் அருகே மணல் குவாரிக்கு மணல் ஏற்றச் செல்லும் லாரிகளுக்கு வழங்கப்படும் டோக்கன் மையத்தில் அதிகளவில் லாரிகள் நிறுத்தப்பட்டு அவை மண் புழுதியைக் கிளப்பி விட்டுச் செல்வதால் டோக்கன் வழங்கும் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| 50 இடங்களில் நெல் உலர்த்தும் களங்கள்: அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு Posted: 01 Aug 2016 12:25 PM PDT காவிரி டெல்டா மாவட்டங்களில் 50 நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்தார். |
| பணிபுரியும் மகளிருக்கான கடன் உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு Posted: 01 Aug 2016 12:24 PM PDT பணிபுரியும் மகளிருக்கு மத்திய-நகர கூட்டுறவு வங்கிகளில் அளிக்கப்படும் கடன் ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்தார். |
| திருவண்ணாமலை கோயில் கோபுர விரிசலைச் சீரமைக்க நடவடிக்கை Posted: 01 Aug 2016 12:23 PM PDT திருவண்ணாமலை கோயிலின் ராஜகோபுர விரிசலைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார். |
| கெயில் எரிவாயு குழாயை சாலையோரத்தில் பதிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதி Posted: 01 Aug 2016 12:22 PM PDT விவசாயிகளைப் பாதிக்காத வகையில், கெயில் எரிவாயு குழாயை சாலை ஓரத்தில்தான் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறினார். |
| உங்களைத் தவிர வேறு யார் இருக்கா? துரைமுருகன் பேச்சால் பேரவையில் சிரிப்பொலி Posted: 01 Aug 2016 12:21 PM PDT "உங்களைத் தவிர எங்களுக்கு (திமுக) வேறு யார் இருக்காங்க' என்று பேரவைத் தலைவர் தனபாலைப் பார்த்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதால் அவையில் சிரிப்பொலி எழுந்தது. |
| ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் சவால் Posted: 01 Aug 2016 12:20 PM PDT ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக, சட்டப் பேரவையில் அமைச்சர் வேலுமணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார். |
| 2 கோடியைத் தாண்டியது குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை: சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல் Posted: 01 Aug 2016 12:19 PM PDT தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2 கோடியே 3 லட்சமாக உயர்ந்துள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். |
| மெஜாரிட்டி,மைனாரிட்டி யார்? பேரவையில் விவாதம் Posted: 01 Aug 2016 12:18 PM PDT தமிழகத்தில் மெஜாரிட்டி ஆட்சி, மைனாரிட்டி ஆட்சி தொடர்பாக, திமுக-அதிமுக இடையே விவாதம் எழுந்தது. |
| அமுதம்-காமதேனு கடைகளில் விலை வித்தியாசம் ஏன்? Posted: 01 Aug 2016 12:18 PM PDT தமிழக அரசின்கீழ் செயல்படும் அமுதம், காமதேனு அங்காடிகளில் விற்கப்படும் பொருள்களில் விலை வித்தியாசம் இருப்பதற்கான காரணங்களை அமைச்சர்கள் சட்டப்பேரவையில் விளக்கினர். |
| யார் ஆட்சியில் அரிசி கடத்தல் நடந்தது? திமுக-அதிமுக வாக்குவாதம் Posted: 01 Aug 2016 12:18 PM PDT யார் ஆட்சியில் அரிசி கடத்தல் அதிகமாக நடந்தது என்பது தொடர்பாக, திமுக-அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார். |
| Posted: 01 Aug 2016 12:17 PM PDT சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமையன்று (ஆக. 2) வனம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டம் ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. |
| "நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் Posted: 01 Aug 2016 12:16 PM PDT நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு ("நீட்') மூலம் நிரப்ப வகை செய்யும் இரு சட்டத் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின. |
| தாம்பரம் - திண்டிவனம்: ஆறு வழி சாலையாக்க ஆய்வு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 01 Aug 2016 12:16 PM PDT சென்னை தாம்பரம் - திண்டிவனம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. |
| ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் வந்தால் நாடு தழுவிய போராட்டம்: பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது எச்சரிக்கை Posted: 01 Aug 2016 12:15 PM PDT "சார்க்' அமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இஸ்லாமாபாதுக்கு வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவரும், |
| "நிலம் கையகப்படுத்துதல் பிரச்னையால் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் தாமதம்' Posted: 01 Aug 2016 12:14 PM PDT கங்கை நதிக்கரையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் மையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால் கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டம் தாமதமாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் ராஜிநாமா Posted: 01 Aug 2016 12:14 PM PDT முக்கியப் பொறுப்புகளில் இருந்து 75 வயதுக்கு மேற்பட்டோர் விலக வேண்டும் என்ற பாஜக தலைமையின் உத்தரவை ஏற்று, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் படேல் ராஜிநாமா செய்துள்ளார். |
| சவூதியில் சிக்கியிருக்கும் 10,000 இந்தியர்களும் தாயகம் அழைத்து வரப்படுவார்கள்: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி Posted: 01 Aug 2016 12:13 PM PDT சவூதி அரேபியாவில் சிக்கியிருக்கும் 10,000 இந்தியர்களும் நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்படுவார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்தார். |
| ராஜீவ் கொலை கைதிகள் வழக்கு: விசாரணை ஆக. 8-க்கு ஒத்திவைப்பு Posted: 01 Aug 2016 12:12 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு கைதிகளை விடுவிக்கும் விவகாரம் தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. |
| காஷ்மீர் விவகாரத்தை கையாளுவதில் மத்திய அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 01 Aug 2016 12:11 PM PDT ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலைக் கையாளுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. |
| "17 மாவட்டங்களில் மட்டுமே திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை முற்றிலும் ஒழிப்பு' Posted: 01 Aug 2016 12:11 PM PDT "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் துப்புரவுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், நாடு முழுவதிலும் உள்ள 686 மாவட்டங்களில் வெறும் 17 மாவட்டங்களில் மட்டுமே திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. |
| அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட வன விலங்குகள் மீட்பு Posted: 01 Aug 2016 12:11 PM PDT அஸ்ஸாமில் காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் பத்திரமாக மீட்கப்பட்டன. |
| மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க மத்திய அமலாக்கத் துறை எதிர்ப்பு Posted: 01 Aug 2016 12:10 PM PDT ஏர்செல் - மேக்சிஸ் பங்குகள் விற்பனை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் |
| மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நாளை தாக்கல் Posted: 01 Aug 2016 12:08 PM PDT நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதா (ஜிஎஸ்டி) மாநிலங்களவையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 3) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. |
| பாஜக கூட்டணி அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுகிறது: மம்தா Posted: 01 Aug 2016 12:07 PM PDT மத்தியில் ஆட்சி புரியும் பாஜக கூட்டணி அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவர்களது வலையில் விழ வேண்டாம் என்று சிறுபான்மை சமூகத்தினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். |
| மகாராஷ்டிரத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை Posted: 01 Aug 2016 12:07 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்குப் பகுதியான விதர்பாவை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற திட்டம் மாநில அரசுக்கு இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். |
| நேரடி வரிகள் விதிப்பு வாரியத் தலைவராக ராணி சிங் நாயர் நியமனம் Posted: 01 Aug 2016 12:07 PM PDT மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் தலைவராக மூத்த வருவாய் சேவைத்துறை (ஐஆர்எஸ்) அதிகாரி ராணி சிங் நாயர் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். |
| புதிதாகப் பொறுப்பேற்ற 172 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மோடி இன்று கலந்துரையாடல் Posted: 01 Aug 2016 12:06 PM PDT புதிதாகப் பொறுப்பேற்றுள்ள 172 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாட இருக்கிறார். |
| மானிய விலை சமையல் எரிவாயு விலை ரூ.1.93 அதிகரிப்பு Posted: 01 Aug 2016 12:06 PM PDT மானிய விலையில் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விலை உருளைக்கு ரூ. 1.93 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. |
| ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து நர்சிங் யாதவ் விடுவிப்பு: ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லை Posted: 01 Aug 2016 12:05 PM PDT இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவை ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துள்ளது தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா). இதனால் அவர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் இருந்த தடை விலகியுள்ளது. |
| கிங்ஸ்டன் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா Posted: 01 Aug 2016 12:04 PM PDT மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாளில் குடிநீர் இடைவேளையின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 138 ஓவர்களில் 5 விக்கெ ட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்திருந்தது. |
| Posted: 01 Aug 2016 12:04 PM PDT 30-ஆவது ஒலிம்பிக் போட்டி 2012 ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 12 வரை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இதன்மூலம் நவீன ஒலிம்பிக் போட்டியை மூன்று முறை நடத்திய முதல் நகரம் என்ற பெருமை லண்டனுக்கு கிடைத்தது. |
| ஆதார் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல் Posted: 01 Aug 2016 12:03 PM PDT அரசின் பல்வேறு சேவைகளை இணைய வழியில் சுலபமாகப் பெறுவதற்காக பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் செல்லிடப்பேசி எண்களை இணைக்க வேண்டும் என்று இந்திய பிரத்யேக அடையாள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் வந்தால் நாடு தழுவிய போராட்டம்: பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது எச்சரிக்கை Posted: 01 Aug 2016 12:03 PM PDT "சார்க்' அமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இஸ்லாமாபாதுக்கு வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவரும், ஜமாத்-உத்-தாவா (ஜேயுடி) அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீது எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| டெங்கு பாதிப்பு எதிரொலி: மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி Posted: 01 Aug 2016 12:02 PM PDT டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், தலைநகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவற்றில் அடுத்த 3 மாதம் வரை, 10 - 20 சதவீதம் வரை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தில்லி அரசு அனுமதியளித்துள்ளது. |
| ஆமிர்கான் குறித்த பாரிக்கர் கருத்து: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி Posted: 01 Aug 2016 12:01 PM PDT ஹிந்தி நடிகர் ஆமிர்கானை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைமுகமாக தாக்கிப் பேசிய விவகாரத்தை முன்வைத்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர். |
| அடிக்கடி பயணம்: பிரதமர் மோடி, கேஜரிவால் மீது அஜய் மாக்கன் சாடல் Posted: 01 Aug 2016 12:01 PM PDT தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பணியாற்றாமல் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக பிரதமர் மோடி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் மீது தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் சாடியுள்ளார். |
| தில்லி உயிரியல் பூங்காவில் 33 மான்கள் இறப்பு: மாநிலங்களவையில் தகவல் Posted: 01 Aug 2016 12:00 PM PDT தில்லி உயிரியல் பூங்காவில் ரேபிஸ் நோய் காரணமாக 33 புள்ளி மான்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாதவ் தேவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| வீட்டின் கூரை இடிந்து தாய், 2 குழந்தைகள் சாவு Posted: 01 Aug 2016 12:00 PM PDT மேற்கு தில்லி உத்தம் நகரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் பெண், அவரது இரு குழந்தைகள் உயரிழந்தனர். அவரது கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
| பழைய டீசல் வாகனங்களை ஒழித்துவிட்டு புதிய வாகனங்கள் பதிவு செய்யுங்கள்: என்ஜிடி உத்தரவு Posted: 01 Aug 2016 11:59 AM PDT "பழைய டீசல் வாகனங்களை ஒழித்துவிட்டு, புதிய டீசல் வாகனங்களை பதிவு செய்யுங்கள்' என்று வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது. |
| விளையாட்டு கிராமத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 01 Aug 2016 11:59 AM PDT ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியினரின் மடிக் கணினி, டி-சர்ட் உள்ளிட்டவை திருடு போனதைத் தொடர்ந்து ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| காஜியாபாதில் ஒருவர் சுட்டுக் கொலை Posted: 01 Aug 2016 11:59 AM PDT காஜியாபாதின் கவி நகர் பகுதியில் குடிபோதையிலிருந்த ஒரு கும்பலுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியை மோசமாக நடத்தியதாக மருத்துவர் மீது புகார்: மகளிர் ஆணையம் அழைப்பாணை Posted: 01 Aug 2016 11:58 AM PDT உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷகரில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியை, மருத்துவ பரிசோதனையின்போது மோசமாக நடத்தியதாக ஒரு மருத்துவர் மீது புகார் எழுந்துள்ளது. |
| ஆப்கன் ஹோட்டலில் தலிபான் தாக்குதல்: காவலர் பலி; 11 வெளிநாட்டினர் உயிர் தப்பினர் Posted: 01 Aug 2016 11:57 AM PDT ஆப்கன் தலைநகர் காபூலில் வெளிநாட்டினர் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் தலிபான் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்த்திய தாக்குதலில் காவலர் உயிரிழந்தார். |
| ஐ.நா. முன்வைத்த அமைதித் தீர்வு: யேமன் கிளர்ச்சியாளர்கள் நிராகரிப்பு Posted: 01 Aug 2016 11:57 AM PDT யேமன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஐ.நா. முன்வைத்த அமைதித் தீர்வை ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிராகரித்தனர். |
| சிரியாவில் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்ச்சி: 5 பேர் பலி Posted: 01 Aug 2016 11:57 AM PDT சிரியாவில் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதிலிருந்த 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: |
| விளம்பர ஒப்பந்த முறைகேடு வழக்கு: ஷீலா தீட்சித்தை விடுவித்தது லோக் ஆயுக்த Posted: 01 Aug 2016 11:57 AM PDT தில்லி அரசின் விளம்பரங்களை கையாள்வதற்கான ஒப்பந்ததை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை விடுவித்து தில்லி லோக் ஆயுக்த நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. |
| சாலை குழியில் ஒருவர் பலியான சம்பவம்: நீதி விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவு Posted: 01 Aug 2016 11:56 AM PDT தில்லியின் வஸந்த் குஞ்ச் பகுதியில் சாலையோர குழியில் தடுமாறி விழுந்தவர், டேங்கர் லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தில் போக்குவரத்து காவல் துறையை சாடியுள்ள தில்லி அரசு, இதுதொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. |
| ஆதாய விலை கிடைக்க விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல் Posted: 01 Aug 2016 11:55 AM PDT ஆதாய விலை கிடைக்க விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திங்கள்கிழமை அதிமுக கோரிக்கை விடுத்தது. |
| பேருந்துகளுக்கான தனிப் பாதை திட்டம்: தில்லி அரசிடம் மீண்டும் கோப்புகளை கோருகிறார் துணைநிலை ஆளுநர் Posted: 01 Aug 2016 11:55 AM PDT தில்லி நகர சாலைகளில் பேருந்துகளுக்கென தனிப் பாதையை ஒதுக்கும் திட்டம் தொடர்பான கோப்புகளை, தில்லி அரசிடம் மீண்டும் கோரியுள்ளார் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங். இதனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. |
| ஹாரி பாட்டர் நாவல்களை வரி விடாமல் ஒப்பிக்கும் பெண்! Posted: 01 Aug 2016 11:55 AM PDT புகழ்பெற்ற ஹாரி பாட்டர் நாவல்களின் அனைத்து அத்தியாயங்களையும் வரி விடாமல் ஒப்பிக்கும் அளவுக்கு அசாத்திய நினைவுத் திறன் கொண்ட பெண் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். |
| சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக கோரிக்கை Posted: 01 Aug 2016 11:54 AM PDT சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது. |
| பாகிஸ்தான் ஹெராயின் கடத்தல்: 13 அரசு விமான பணியாளர்கள் கைது Posted: 01 Aug 2016 11:54 AM PDT போதை மருந்து கடத்தியதாக பாகிஸ்தானின் அரசு விமானப் பணியாளர்கள் 13 பேரை போதைப் பொருள் ஒழிப்பு இலாகாவினர் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| தாம்பரம் - திண்டிவனம்: ஆறு வழி சாலையாக்க ஆய்வு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 01 Aug 2016 11:53 AM PDT சென்னை தாம்பரம் - திண்டிவனம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. |
| நடுக்கடலில் தத்தளித்த 6,500 அகதிகள் மீட்பு Posted: 01 Aug 2016 11:53 AM PDT கடந்த வியாழக்கிழமை முதல் 6,530 அகதிகள் நடுக்கடலிலிருந்து மீட்கப்பட்டனர் என்று இத்தாலி கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர். |
| Posted: 01 Aug 2016 11:53 AM PDT பாடியில் கோயிலுக்குள் சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார். |
| கிருஷ்ணா புஷ்கர கல்யாண ரத யாத்திரை: நாளைத் தொடக்கம் Posted: 01 Aug 2016 11:53 AM PDT திருமலையிலிருந்து கிருஷ்ணா புஷ்கர மேளாவை முன்னிட்டு,திருக்கல்யாண ரத யாத்திரை புதன்கிழமை திருமலையில் இருந்து தொடங்குகிறது. |
| உண்டியல் காணிக்கை ரூ. 2.87 கோடி Posted: 01 Aug 2016 11:52 AM PDT திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.87 கோடி வசூலானது. |
| திருமலையில் 100 ஹெக்டேர் பரப்பளவில் சந்தன மரக் கன்றுகள் நட ஏற்பாடு Posted: 01 Aug 2016 11:52 AM PDT திருமலையில் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் சந்தன மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. |
| நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா? Posted: 01 Aug 2016 11:52 AM PDT ஆம்பூர் - வாணியம்பாடி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு நகர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். |
| இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை Posted: 01 Aug 2016 11:52 AM PDT திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தருக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. |
| கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்மிக வகுப்புகள் தொடக்கம் Posted: 01 Aug 2016 11:52 AM PDT ஸ்ரீமத் ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டை முன்னிட்டு ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு தேசபக்தி-தெய்வபக்தி இணைந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. |
| வேலூர் ஏரியில் மதகு அடைப்பான் அமைக்கக் கோரிக்கை Posted: 01 Aug 2016 11:52 AM PDT அரக்கோணத்தை அடுத்த வேலூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் மழைநீரை சேமிக்க உடனடியாக மதகு அடைப்பானை உடனே அமைத்துத் தர அரக்கோணம் ஒன்றிய பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. |
| புண்ணிய நதிகள் சங்கமிக்கும் சங்கு தீர்த்தம்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு உதயமாகும் அதிசயம் Posted: 01 Aug 2016 11:51 AM PDT திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற சங்கு தீர்த்த புஷ்கர மேளா, லட்சதீபப் பெருவிழாவுடன் செவ்வாய்க்கிழமை (ஆக.2) நடைபெறுகிறது. திருக்கழுகுன்றத்தை வேதமலை என்றும் அழைக்கின்றனர். |
| Posted: 01 Aug 2016 11:51 AM PDT வாணியம்பாடி அருகே ஆந்திர அரசு உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணை, கனகநாச்சியம்மன் கோயில் ஆகியவற்றை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். |
| ரயில்வே துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 01 Aug 2016 11:51 AM PDT ஆம்பூரில் வீடுகளை காலிச் செய்ய வலியுறுத்துவதாக, ரயில்வே துறையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் முன் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| திமிரியில் சேக்கிழார் திருமுறை மாநாடு Posted: 01 Aug 2016 11:51 AM PDT ஆற்காட்டை அடுத்த திமிரியில் 14-ஆவது ஆண்டு சேக்கிழார் திருமுறை மாநாடு திமிரி தனுமத்தியம்பாள் சமேத சோமநாத ஈஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| குடியிருப்புகளை அபகரிக்க முயற்சி: பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் Posted: 01 Aug 2016 11:51 AM PDT குடியிருப்புகளை அபகரிக்க முயற்சிப்பதைத் தடுக்க வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண்கள் திங்கள்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 01 Aug 2016 11:51 AM PDT ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் தென் நந்தியாலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இஸ்லாமியர்களின் உண்மையான பாதுகாவலர் ஜெயலலிதாதான்: அமைச்சர் நீலோபர் கபில் Posted: 01 Aug 2016 11:51 AM PDT இஸ்லாமியர்களின் உண்மையான பாதுகாவலர் ஜெயலலிதா தான் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் கூறினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |