Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேண்டுகோள்

Posted: 01 Aug 2016 01:12 PM PDT

வணக்கம். ஈகரை ஆசிரியர்களிடம் வேண்டுகோள். நான் செந்தலைக்குருவி எனும் கலை இலக்கியக் காலாண்டிதழில் தமிழ் இலக்கியப் பதிவு  சார்ந்த தொடர் ஒன்றை எழுதி வந்தேன். நான்கு தொடர்கள் வெளிவந்தன. பின்னர்  அவ்விதழ் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து என்னால் எழுத முடியவில்லை. தாங்கள் தங்கள் தளத்தில் எனக்கு எழுத வாய்ப்பளிக்க வேண்டுகிறேன். வாய்ப்பளிக்கும் நிலையில் நான் முன்புஎழுதிய நான்கு தொடரையும் பதிவு செய்த பின்  மற்ற  தொடர்களைப் பதிவிட அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.         ...

இளவட்டக்கல்

Posted: 01 Aug 2016 01:01 PM PDT

சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு. இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் பரிசுகள் உண்டு. (பெண் கொடுப்பதில்லை) இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ ...

சிறந்த பிறந்த நாள் பாடல்

Posted: 01 Aug 2016 11:19 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

என் ஏழ்மை தோற்றது

Posted: 01 Aug 2016 09:50 AM PDT

"கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Posted: 01 Aug 2016 09:49 AM PDT

புதுடில்லி: திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்த காரணத்தினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், கட்சி தலைவர் எனது கன்னத்தில் அறைந்தார் என்றும் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. டில்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை 2 நாட்களுக்கு முன்னர் சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்தார். இந்நிலையில் சசிகலாவை ஜெ., நேற்று போயஸ்கார்டனுக்கு அழைத்து விசாரித்துள்ளார். இவரிடம் கட்சி மூத்த நிர்வாகிகள் விசாரித்தததுடன் அவரை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தித்துள்ளனர். இந்நிலையில் ...

கார்மேக வண்ணா விரைந்து வா…!

Posted: 01 Aug 2016 09:38 AM PDT

- வாழ வகையற்ற வாழ்வுநிறை போராட்டம் ஆழம் அறியாமல் ஐயமது – சூழத் துயர்வீழத் தூங்காது தொண்டுசெய கண்ணா பயனேதும் இல்லையோ பார் ! – வேண்டித் தவமிருந் தெல்லா வினைகளையும் தாண்டிடவே உந்தன் தயைநாடத் – தீண்டாதே எப்பழியு மென்றுமெமை ஏந்தலே ! அப்பனே தப்பாமல் வந்தெமைத் தாங்கு ! – மண்ணில் மகிழ்ந்தாட மாதுயரை நீநீக்க பண்பாடி நித்தமும்நின் பார்வைபட – விண்பார்த்து விம்ம விரங்காயோ எம்கண்ணா வந்தருள்க இம்மண் சிறக்க எழுந்து ! – இல்லை மழையென வேங்கவெம் கண்ணன்நீ தொல்லை தருவையோ தீராமல் – வெல்லமன்றோ எல்லை ...

700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட்

Posted: 01 Aug 2016 09:27 AM PDT

700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் - நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் செலவுகளை குறைப்பதற்கு 700 நபர்கள் வரைக்கும் பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது. சிறப்பாக செயல்படாத பணியாளர்களை தாங்களாகவே வெளியேறுவது அல்லது பணி நீக்கம் செய்திருக்கிறது இந்த நிறுவனம். செயல்படாத சுமார் 1,000 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் உதவும் என்று இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் கூறினர். மொத்த ...

நரிமுக தரிசனம் கிடைக்கவேயில்லை …

Posted: 01 Aug 2016 09:23 AM PDT

யாத்ரீகன் ஒருவன் யாருமற்ற குளிரிரவில் வீட்டுத் திண்ணையில் தங்கச் சொன்ன உதவிக்காய் என் கை பார்த்து சோதிடம் சொன்னான். – நரி முகத்தில் விழித்தால் அடுக்கடுக்காய் அதிர்ஷ்டம் வரும். நரி முகத்தில் விழித்தாலொழிய நிம்மதியில்லை உனக்கு – நகர வாழ்க்கையில் நரிக்கு எங்கே போவது? அரைக்கம்பத்தில் பறக்கும் கொடி போல பூப்பூக்கும் கரும்புத் தோட்டங்களைத் தேடி இரவில் நரிகள் வருமாம் – கிராமத்துக்குச் சென்று காத்திருந்து பார்த்தேன் பயங்களை சாட்சி வைத்து பாம்புகள் கூடிய காட்சி தவிர நரிமுக தரிசனம் கிடைக்கவேயில்லை – நெற்றிக் ...

நேற்றைய விரிசல் ...!

Posted: 01 Aug 2016 09:21 AM PDT

வெகு நாள் சண்ட
இன்று பேச மாட்டாயா
நாளை பேச மாட்டாயா
என்று
ஒவ்வொரு நொடியும்
ஏங்கும் என்னை
தெளிவு படுத்தியது
நேற்றைய விரிசல் ...!

என் கவிதை

Posted: 01 Aug 2016 09:14 AM PDT

வரிசை யில் நிற்க ஆனை யிட்டேன் , என்னவளின் கவிதையில் ,தன்னையும் சேர்க்க வேண்டும் என்று என்னை முட்டிய அழகான சொற்களை.....காதல் இது தானாே

என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!

Posted: 01 Aug 2016 09:04 AM PDT

ரஜினிகாந்த் அமிதாப்பிடம் சொன்னார்… ''என்னைத் தெரியாத ஆளே கிடையாது. ஏதாவதொரு ஆள் பேர் சொல்லுங்க. அவர் நிச்சயமா என் நண்பராதான் இருப்பார்!'' அமிதாப் எரிச்சலுடன் கேட்டார், ''டாம் க்ரூஸை தெரியுமா?'' ''ஓ! அவன் என் பழைய நண்பன். வாங்க, போய்ப் பார்க்கலாம்!'' இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத் தட்டினர். டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார், ''தலைவா! வாங்க… வாங்க… நீங்க வந்ததுல மிக்க மகிழ்ச்சி. நீங்களும் உங்க நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் ...

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம்

Posted: 01 Aug 2016 07:02 AM PDT

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ?... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் தரவிறக்க சுட்டி -- தமிழ் வார்ஸ்

மனிதர்களின் கதை

Posted: 31 Jul 2016 11:48 PM PDT

ஒரு நதி போல வாழ்ந்தவன் கடல் போல முடிந்தான் – கனல் மாதிரி வளர்ந்தவன் காட்டுத்தீயாய் காலிபண்ணிப் போய்ச்சேர்ந்தான் – தென்றல் போலத்தான் இருந்தான் பிறகெப்படி புயல்போல ஆனான் – மண் மாதிரி இருந்தவன் ஆகாயமாய்க் கவிந்த அழகு தனி – இயற்கையை ரசிக்கவே இன்றைக்கு காசுபணம் வேண்டும் என்கிறான் இவன் – ———————— விக்ரமாதித்யன் பாதி இருட்டு பாதி வெளிச்சம் – கவிதை தொகுப்பிலிருந்து

ரூ.968 கோடி செலவில் இந்தியா–வங்காளதேசம் இடையே புதிய அகல ரெயில்பாதை இருநாட்டு ரெயில்வே மந்திரிகளும் அடிக்கல் நாட்டினார்கள்

Posted: 31 Jul 2016 10:39 PM PDT

அகர்தலா, இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவையும், வங்காளதேசத்தில் உள்ள அக்ஹாவ்ரா நகரையும் இணைக்கும் விதமாக ரூ.968 கோடி செலவில் 15 கி.மீ. தூரத்துக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அகர்தலா நகரில் நடந்தது. இதில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, வங்காளதேச ரெயில்வே மந்திரி மசிபுல் ஹோகியூ ஆகியோர் கலந்துகொண்டு ரெயில்பாதை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்கள். விழாவில் திரிபுரா முதல்–மந்திரி மாணிக் ...

ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

Posted: 31 Jul 2016 10:16 PM PDT

– கட்டிக்க எவனும் பொண்ணு தராம கஷ்டப்பட்டு பொண்ணு தேடுனா அவன் காவாலி… கட்டிக்கிட்ட பொண்டாட்டியவே கஷ்டப்பட்டு தேடுனா அவன் கபாலி! – ——————————————– ஓட்டலுக்குள் மூன்று பேர் நுழைந்தனர். சர்வரிடம் அதில் ஒருவர், ''ஸ்ட்ராங் டீ'' என்றார். இரண்டாமவர், ''லைட் டீ'' என்றார். மூன்றாமவர் ''கிளாஸை நன்றாகக் கழுவிவிட்டு ஒரு டீ'' என்றார். சிறிது நேரத்தில் மூன்று டீ கிளாஸ்களுடன் வந்த சர்வர், ''யாருங்க நன்றாகக் கழுவுன கிளாசில் டீ கேட்டது? இந்தாங்க!'' என்றார். – ———————————————— – இனி புதுப்பட ...

ஆன்டி வைரஸ்க்கு தமிழ்ல ‘அத்தைக்கிருமி’தானே?

Posted: 31 Jul 2016 10:14 PM PDT

தேமுதிக, தமாகாவுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம் – வைகோ # 'கபாலி' டயலாக் நம்ம அண்ணாத்தைக்குதான் பொருந்தும் – – தேவி கமல் – —————————————- – சல்மான் கானுக்கு ஒவ்வொண்ணா இப்படி ரிலீஸ் கொடுக்கிறதுக்கு பதிலா அவருக்கு லைஃப் டைமுக்கு மொத்த பேக்கேஜா ரிலீஸ் கொடுக்க சட்டத்தில் ஏதாவது இடம் இருக்கா யுவர் ஆனர்? – – மனுஷ்ய புத்திரன் – ——————————————- – ஆன்டி வைரஸ்க்கு தமிழ்ல 'அத்தைக்கிருமி'தானே? – – சுரேஷ்குமார் மடுரசி எம் – ——————————————– நெரிசலான பேருந்தில் அடுத்த நிறுத்தத்தில் ...

செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது பிரபுதேவாவின் ‘தேவி’

Posted: 31 Jul 2016 08:07 PM PDT

பிரபுதேவா நடித்துவரும் 'தேவி' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள புதிய படம் 'தேவி'. இதில் இந்தி நடிகர் சோனு சூட், எமி ஜாக்சன் நடித்துள்ளனர். மேலும், வில்லனாக அமலா பாலின் தம்பி அபிஜித் பால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இ றுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தை பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ...

என்னையவே சைலன்ட் மோட்லதான் போடுவா(ங்க)..!’’

Posted: 31 Jul 2016 07:54 PM PDT

''நேத்து சாயங்காலம் போன் பண்ணேன்… ஏன்டா எடுக்கல?'' – ''நான் வீட்டுக்குப் போன உடனே ஒய்ஃப் சைலன்ட் மோட்ல போட்ருவா!'' – ''உன் மொபைலை உன் ஒய்ஃப் ஏன் சைலன்ட் மோட்ல போடணும்?'' – ''மொபைல இல்ல! என்னையவே சைலன்ட் மோட்லதான் போடுவா(ங்க)..!'' – – அமுதன் சாந்தி – ————————————– கரூர்ல 1600 கோடி கன்டெய்னர் லாரி பத்தி நியூஸ் பார்த்ததும் வீட்டம்மா ''நம்ம ரோட்லயும் அதே மாதிரி ஒரு கன்டெய்னர் லாரி போச்சுங்க'' என்றார். ரோட்ல எந்த கன்டெய்னர் லாரிய பார்த்தாலும் ''இதிலயும் பணம்தான் இருக்குமா?''ன்னு ...

புயல் சின்னம் அறிவுக்கும் குழந்தைகள்...

Posted: 31 Jul 2016 07:52 PM PDT

@ameerfaj ''வேலைக்குப் போனா சரியாயிடும், கல்யாணம் பண்ணா சரியாயிடும், குழந்தை பொறந்தா சரியாயிடும்''னு ஒருத்தன் சொல்வான் பாரு... முதல்ல அவனை மிதிச்சா எல்லாம் சரியாயிடும்! - -------------------------------------------- - @i_am_v_jey வேம்பின் சக்தியுள்ள சோப்பு, எலுமிச்சையின் நலனுள்ள பேஸ்ட்டை கடையில வாங்குற மாதிரி அசல் ஆக்ஸிஜனையும் வாங்கிக்கலாம்னுதான் மரங்களை வெட்டறாங்க போல... - --------------------------------------------- - @skpkaruna உலகில் வேறெங்காவது, அந்த மாநில மொழியில் ...

இந்த வார திரைச்செய்திகள் - தொடர் பதிவு

Posted: 31 Jul 2016 07:50 PM PDT

இயக்குநர் விஜய்: பெற்றோர் சொல்லைத் தட்டமாட்டேன் - - நடிகை அமலா பாலும் இயக்குநர் விஜய்யும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் தற்பொழுது தமிழ்த் திரையுலகில் பரபரப்பான செய்தியாகும். - இதுபற்றி இயக்குநர் விஜய்யைத் தொடர்பு கொண்டபோது , "இந்தப் பிரச்சினை பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் எப்போதும் பெற்றோர் சொல்லைத்தான் கேட்பேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அதில் உறுதியாகவும் இருப்பேன். அமலா பால் பற்றி எதுவும் கூறத் தயாராக இல்லை," என்று கூறினார். - -------------------------

எனக்கேற்ற வேடங்க ளில் தொடர்ந்து நடிப்பேன் - கவுதமி

Posted: 31 Jul 2016 07:06 PM PDT

சினிமா தன் ரத்தத்தில் கலந்த ஒரு விஷயம் என்றும், அதனை விட்டுத் தம்மால் விலக முடியாது என்றும் நடிகைக் கௌதமி தெரிவித்திருக்கிறார். 'பாபநாசம்' படத்திற்குப் பின் கவுதமி தற்போது மோகன் லாலுடன் இணைந்து நடித்திருக்கும் 'நமது' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். 'நமது' திரைப்படத்தின் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி என்னைத் தொடர்பு கொண்டு படத்தின் கதையைக் கூறினார். கதை எனக்குப் பிடித்திருந்ததால் ...

புதுச்சேரியில் மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினி காந்தை விளம்பர தூதராக நியமிக்க...

Posted: 31 Jul 2016 06:58 PM PDT

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டது முதல், பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில், புதுச்சேரியில் மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினி காந்தை விளம்பர தூதராக நியமிக்க விரும்புவதாக கிரண் பேடி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- இந்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்கி இருக்கிறது. அதேபோல் தற்போது பொறுப்புகளையும் அளித்துள்ளது. நாங்கள் இனி தொழில் துறை ...

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்?

Posted: 31 Jul 2016 06:10 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும் மேலும் 300 பேரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான உத்தரவு ஒரிரு நாள்களில் அளிக்கப்பட உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பெரும் முறைகேட்டில் சிக்கிய இந்தப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, கடந்த மார்ச் மாதத்தில் கூடுதலாக இருந்த 370 உதவிப் பேராசிரியர்களை 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ...

திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு

Posted: 31 Jul 2016 06:09 PM PDT

திருமலை ஏழுமலையானின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஆகஸ்ட் மாத கோட்டாவை தேவஸ்தானம் வெளியிட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதில் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை திருமலைக்கு ...

நவீன தொழில்நுட்பம்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு!

Posted: 31 Jul 2016 06:05 PM PDT

- ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியர்களை ஊக்குவிக்கும் வகையிலான "ரன் ஃபார் ரியோ' என்ற ஓட்டத்தை தில்லியில் மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி. உடன் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோர். ------------------------------------------------------- - புதுதில்லி, ஜூலை 31: மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வு கண்டறியப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அகில ...

சொத்து விவரம் தாக்கல்: மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விதிவிலக்கு

Posted: 31 Jul 2016 06:02 PM PDT

லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோருக்கு தங்களது மனைவி, வாரிசுகளின் சொத்துப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்வதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்களது மனைவி, வாரிசுகள் ஆகியோரின் சொத்துப் பட்டியல், ஆண்டு வருமானம், பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து ரூ.1 கோடி அளவுக்கு மானியங்கள், வெளிநாட்டில் ...

ஆன்மிகத்தின் பெருமையை பறைசாற்றும் கண்காட்சி!

Posted: 31 Jul 2016 06:00 PM PDT

- ஹிந்து ஆன்மிகக் கண்காட்சியில் பங்கேற்க ஸ்ரீ சைலம் தேவஸ்தானத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள ரதம். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நாளை (ஆகஸ்ட் 2) 8ஆவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி தொடங்குகிறது. 350க்கும் மேற்பட்ட கலாசார, ஆன்மிக அமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பங்குபெற இருக்கின்றன. நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், ஊடகங்களும் இதன் புரவலர்களாகக் களம் இறங்கியிருக்கின்றன. வனம், வன விலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், ஜீவராசிகளிடம் கருணைகாட்டுவது, தாய் தந்தையர் ...

ஆறுதான் இல்லையோ…

Posted: 31 Jul 2016 05:55 PM PDT

தெருநாயை
விரட்டுவதுபோல
விரட்டுகிறார்கள்
–
ஏன்
என்றே
புரியவில்லலை
–
இல்லாத
கொடுமையாகத்தான்
இருக்க வேண்டும்
–
பொல்லாதவனென்ற
பேச்சு
வேற
–
சொல்லிச் சொல்லியே
நல்லவனையும்
நாசப்படுத்திவிடுவார்கள்போல
–
ஆறு போகிறது
அது வழியில் ஏகக்கழிவுகள் சுமந்து
–
ஆனாலும்
ஆறுதான் இல்லையோ
–
———————————
விக்ரமாதித்யன்

ஃபேஷனின் உச்சகட்டம்:

Posted: 31 Jul 2016 05:46 PM PDT

1. ஃபேஷனின் உச்சகட்டம்: ஜிப் வைத்த லுங்கி - 2. சோம்பேறித்தனத்தின் உச்சகட்டம்: காலை நடைப்பயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது - 3. ஆர்வக்கோளாறின் உச்சகட்டம்: வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது - 4. நேர்மையின் உச்சகட்டம்: பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது - 5. வறட்சியின் உச்சகட்டம்: பசு பால் பவுடராகக் கொடுப்பது - 6. நம்பிக்கையின் உச்சகட்டம்: 99 வயது ஆள், லைஃப்டைம் ரீசார்ஜ் செய்வது - 7. முட்டாள்தனத்தின் உச்சகட்டம்: கண்ணாடிக் கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது - 8. ...

‘‘ஹலோ... எப்படி இருக்கீங்க?’’

Posted: 31 Jul 2016 05:45 PM PDT

@BoopatyMurugesh தாத்தா, பாட்டியை எல்லாம் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிட்டு, ''நம்ம வீட்ல யாருக்கு வயசு அதிகம்''னா ''வேப்ப மரத்துக்கு''ன்னு சொல்றானுங்க விளம்பரங்களில்... - ------------------------------------------ - விடுதலைக்கு வாய்ப்பில்லை... சிறைகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம்! - - ராஜா சந்திரசேகர் - ------------------------------------------ - இதுவரை நிறைவேறாத ஆசைகளைவிட, நிறைவேறியும் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஆசைகள்தான் வாழ்க்கையில் நம்மை வழி நடத்துகின்றன... - - ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™