Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உருளைக்கிழங்கு பாலக் மசாலா

Posted: 06 Aug 2016 10:00 PM PDT

செய்முறை: உருளைக் கிழங்கை நன்றாக அலம்பிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெய்விட்டு வதக்க வேண்டும்.

மகளிர் ஹாக்கி: இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

Posted: 06 Aug 2016 02:28 PM PDT

ஒலிம்பிக் போட்டிக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

டென்னிஸில் வரலாறு படைத்த ஆஸி. வீரர்

Posted: 06 Aug 2016 02:28 PM PDT

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மான் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் லிதுவேனியாவின் ரிகார்டாஸ் பெராங்கிûஸ தோற்கடித்தார்.

ஹாக்கி: வெற்றியோடு தொடங்கியது இந்தியா

Posted: 06 Aug 2016 02:27 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது.

டென்னிஸ்: பயஸ்-போபண்ணா ஜோடி தோல்வி

Posted: 06 Aug 2016 02:26 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ரோஹன் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டது.

முதல் தங்கத்தை தட்டிச் சென்றது அமெரிக்கா

Posted: 06 Aug 2016 02:25 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் அமெரிக்காவின் விர்ஜினியா திரேஷர் தங்கம் வென்றார்.

10 மீ. ஏர் பிஸ்டல்: ஜிது ராய் ஏமாற்றம்

Posted: 06 Aug 2016 02:24 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஜிது ராய்க்கு கடைசி இடமே கிடைத்தது.

இன்று களம் காணுகிறார் தீபா கர்மாகர்

Posted: 06 Aug 2016 02:22 PM PDT

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் வீராங்கனையான தீபா கர்மாகர் (22), ஞாயிற்றுக்கிழமை களமிறங்குகிறார்.

10 மீ. ஏர் ரைபிள்: இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

Posted: 06 Aug 2016 02:22 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டீலா, அயோனிகா பால் ஆகியோர் தகுதிச்சுற்றோடு வெளியேறினர்.

துடுப்பு படகு: காலிறுதியில் போகனால் பாபன்

Posted: 06 Aug 2016 02:18 PM PDT

ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் துடுப்பு படகுப் போட்டியில் இந்திய வீரர் போகனால் பாபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தங்கம் பவுனுக்கு ரூ.288 குறைவு

Posted: 06 Aug 2016 02:14 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.23,720-க்கு விற்பனையானது.

தஞ்சாவூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 06 Aug 2016 02:14 PM PDT

சம்பா சாகுபடிக்காக கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினர் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

வேளாண் பல்கலை. பெயரில் போலி பணி நியமன ஆணை

Posted: 06 Aug 2016 02:13 PM PDT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கி ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போலீஸாரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

மெட்ரோ ரயில் விரிவாக்கம்: தமிழக அரசு ஆலோசனை

Posted: 06 Aug 2016 02:12 PM PDT

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தில் மழை வாய்ப்பு

Posted: 06 Aug 2016 02:11 PM PDT

வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்னணு முறையில் நெல் கொள்முதல்: முதல்வருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பாராட்டு

Posted: 06 Aug 2016 02:11 PM PDT

தமிழக சட்டப்பேரவையில் மின்னணு நெல் கொள்முதல் திட்டத்தை அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாராட்டியுள்ளார்.

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வளம் பெறுங்கள்!

Posted: 06 Aug 2016 02:10 PM PDT

அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

325 தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கல்

Posted: 06 Aug 2016 02:10 PM PDT

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் 325 அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

இந்த வார கலாரசிகன்

Posted: 06 Aug 2016 01:32 PM PDT

என் எழுத்துலக ஆசான் சாவி சாரின் பிறந்தநாள் நூற்றாண்டு வருகிற 10-ஆம் தேதி தொடங்குகிறது. அவரது பிறந்தநாள் நூற்றாண்டின்போது அவர் ஆசிரியராக இருந்த "தினமணி கதிர்' இதழில் அவருக்காக சிறப்பு மலர் கொண்டுவர முடிந்தது என்பதில் நான் அடையும் மகிழ்ச்சியை வார்த்தையில் வடிக்க இயலாது.

காளியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

Posted: 06 Aug 2016 01:32 PM PDT

குடியாத்தத்தை அடுத்த கல்மடுகு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆடி மாத 3-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தடுப்பணையை உயர்த்தி கட்டியது ஆந்திர அரசு செய்த அநீதி: வைகோ கண்டனம்

Posted: 06 Aug 2016 01:31 PM PDT

பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை உயர்த்திக் கட்டியது தமிழக விவசாயிகளுக்கு ஆந்திர அரசு செய்த அநீதி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

நக்ஸல்கள் தாக்குதலில் உயிர் நீத்த போலீஸாருக்கு நினைவஞ்சலி

Posted: 06 Aug 2016 01:31 PM PDT

திருப்பத்தூர் அருகே கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, நக்ஸலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்த போலீஸாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தடுப்பணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அன்புமணி

Posted: 06 Aug 2016 01:31 PM PDT

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலம் பிரதமரிடம் வலியுறுத்த, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

புகழேந்திப் புலவர் பற்றிய புதுத் தகவல்

Posted: 06 Aug 2016 01:30 PM PDT

புகழேந்திப் புலவர், பாண்டிய மன்னனின் அரவணைப்புக்கு உரியவராய் இருந்தவர். இவருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் புலமைக் காய்ச்சல் இருந்தது என்றும், இவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் விநோதரச மஞ்சரி கூறும். இவர் தமிழகத்தைத் தாண்டி, அயல்நாடு சென்று வந்ததாகச் செய்தி இல்லை.

உரத் தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Posted: 06 Aug 2016 01:30 PM PDT

ஆம்பூர் அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை ஒன்றுதிரண்டனர்.

மகளிருக்கு வேலைவாய்ப்பை தரும் பிபிஓ பயிற்சிக்கான தேர்வு

Posted: 06 Aug 2016 01:30 PM PDT

மகளிருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரும் இலவச பிபிஓ பயிற்சிக்கான தேர்வு விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

சங்க இலக்கியத்தில் விளம்பரக் கூறுகள்

Posted: 06 Aug 2016 01:30 PM PDT

உலகம் விளம்பரத்தால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினாலும் மிகையாகாது. மனித வாழ்வில் விளம்பரம் அந்த அளவிற்கு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

கிரானைட் கல் கடத்தல்: 5 லாரிகள் பறிமுதல்

Posted: 06 Aug 2016 01:30 PM PDT

நாட்டறம்பள்ளி அருகே கிரானைட் கல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் காந்திநகர் வழியாக

மனைவி தீக்குளிப்பு: காப்பாற்ற முயன்ற கணவரும் சாவு

Posted: 06 Aug 2016 01:29 PM PDT

அரக்கோணம் அருகே தீக்குளித்த தனது மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் பலத்த தீக்காயமடைந்து இறந்தார்.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

Posted: 06 Aug 2016 01:29 PM PDT

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வேலூர் சிறையில் முருகன், நளினி சந்திப்பு

Posted: 06 Aug 2016 01:29 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி தம்பதியர் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 140 பேருக்கு பணியிட மாறுதல் ஆணை

Posted: 06 Aug 2016 01:29 PM PDT

வேலூரில் நடைபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வில் 140 பேருக்கு பணியிட மாறுதலுக்கான ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

அரக்கோணத்தில் மின்தடை நாள் மாற்றம்

Posted: 06 Aug 2016 01:28 PM PDT

அரக்கோணம், அதன் சுற்றுப்புற பகுதிகளில் திங்கள்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மின்தடை நாள் மாற்றப்பட்டுள்ளது.

குட்டையிலிருந்து இளைஞர் சடலம் மீட்பு

Posted: 06 Aug 2016 01:28 PM PDT

 ஆற்காடு அருகே குட்டையில் இளைஞர் சடலமாகக் கிடந்தார்.

நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை: எம்எல்ஏ வலியுறுத்தல்

Posted: 06 Aug 2016 01:28 PM PDT

நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்க வேண்டுமென ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணி கோரிக்கை விடுத்தார்.

மும்மணிகள்

Posted: 06 Aug 2016 01:27 PM PDT

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சி., கல்கி ஆகிய மூவரும் ஒரு விழாவில் கலந்து கொண்டனர்.

சொல்லின் செல்வர்

Posted: 06 Aug 2016 01:27 PM PDT

ஓர் ஊரில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

எட்டும் இரண்டும்

Posted: 06 Aug 2016 01:25 PM PDT

மணிவாசகரின் ஒவ்வொரு சொல்லும், சொற்றொடரும் பல மெய்யியல் கருத்துகளை மிக நுட்பமாக (சூட்சுமமாக) விளக்குபவை. அத்தகைய சொற்றொடர்களுள் ஒன்றுதான் "எட்டும் இரண்டும்'! அதற்கான விளக்கத்தைக் காண்போம்.

திரிகடுகம் நல்லாதனார்

Posted: 06 Aug 2016 01:24 PM PDT

வெளிப்படுத்தலாகாத மறையினை, உள்ளத்தடக்காத நண்பனும்; மனையறத்திற்குத் தக்க மாண்பினை விரும்பாமல், விட்டு நீங்கிய மனைவியும்; எவ்விடத்திலும் கறுவுறுதலை (செற்றம் - கறு; கோபம், அகங்காரம்) மேற்கொண்டு உரையாடும் குற்றேவலாளனும் ஆகிய இம்மூவரும் ஒற்றாள்(ஒற்றர்) எனப்படுவர்.

"தூய்மை இந்தியா' திட்டமானது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: வெங்கய்ய நாயுடு

Posted: 06 Aug 2016 01:11 PM PDT

"தூய்மை இந்தியா திட்டமானது ஓர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அதனை வெறுமனே ஓர் அரசுத் திட்டமாகப் பார்க்கக் கூடாது' என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

ராமேசுவரம்-தலைமன்னார் இடையே பாலம் கட்டும் திட்டமில்லை: இலங்கை அமைச்சர்

Posted: 06 Aug 2016 01:09 PM PDT

இந்தியாவின் ராமேசுவரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கடலுக்கு மேல் பாலம் கட்டும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும்: ஜேட்லி

Posted: 06 Aug 2016 01:08 PM PDT

சமூக வலைதளங்களில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக்கொண்டார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு எதிராக கேரளத்தில் இடதுசாரிகள் அட்டூழியம்: கிரண் ரிஜிஜு

Posted: 06 Aug 2016 01:05 PM PDT

கேரளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தோர் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.

கிண்டி கிங் ஆய்வகம் உள்பட அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள்

Posted: 06 Aug 2016 01:03 PM PDT

சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் பாம்பு விஷ முறிவு மருந்து உற்பத்திப் பிரிவு உள்பட அரசு மருத்துவமனைகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கிரிமினல் அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு அஸ்ஸாம் நீதிமன்றம் சம்மன்

Posted: 06 Aug 2016 01:01 PM PDT

கிரிமினல் அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வரும் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை (சம்மன்) அனுப்புவதற்கு அஸ்ஸாம் மாநில நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

காஷ்மீர் நிலவரம்: பிரதமரின் மெüனம் வருத்தத்துக்குரியது: ஒமர் அப்துல்லா தாக்கு

Posted: 06 Aug 2016 01:00 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் வன்முறை சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மெüனம் சாதிப்பது வருத்தத்துக்குரியது என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

பிரான்ஸ் மதுபான விடுதியில் தீவிபத்து: 13 பேர் பலி

Posted: 06 Aug 2016 12:45 PM PDT

பிரான்ஸ் நாட்டின் மதுபான விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

யேமனில் அனைத்து தரப்பிலும் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா. அறிக்கை

Posted: 06 Aug 2016 12:44 PM PDT

யேமனில் அனைத்து தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

வட கொரியா நடவடிக்கைகள்: அமெரிக்கா - சீனா ஆலோசனை

Posted: 06 Aug 2016 12:44 PM PDT

சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தும் வட கொரியாவின் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவும் சீனாவும் ஆலோசனை நடத்தின.

ஹிந்து மருத்துவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

Posted: 06 Aug 2016 12:41 PM PDT

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துருக்கி கிளர்ச்சியில் பங்கா? அமெரிக்கா மீண்டும் மறுப்பு

Posted: 06 Aug 2016 12:41 PM PDT

துருக்கியில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் அமெரிக்காவுக்குப் பங்கில்லை என்று அந்த நாட்டுத் தூதர் ஜான் பாஸ் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐ.நா. பொதுச்செயலர் தேர்வில் குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை

Posted: 06 Aug 2016 12:40 PM PDT

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்வில் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

ஆப்கன்: சாலையோர குண்டு வெடிப்பில் 10 பேர் பலி

Posted: 06 Aug 2016 12:38 PM PDT

ஆப்கானிஸ்தானின் பக்டியா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த இருவேறு சாலை குண்டுவெடிப்புகளில் 10 பேர் பலியாகினர்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா லாபம் ரூ.167 கோடி

Posted: 06 Aug 2016 12:36 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா முதல் காலாண்டில் ரூ.167 கோடி லாபம் ஈட்டியது.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் 31% உயர்வு

Posted: 06 Aug 2016 12:34 PM PDT

வீட்டு வசதிக் கடன் வழங்கி வரும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் முதல் காலாண்டு லாபம் 31% அதிகரித்தது.

பங்குச் சந்தை: ஏற்றம்-இறக்கம் நிறைந்த வாரம்

Posted: 06 Aug 2016 12:33 PM PDT

ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றத்தால் கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

தெலங்கானாவில் புதிய அனல் மின் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

Posted: 06 Aug 2016 12:30 PM PDT

தெலங்கானா சிறப்பு அனல் மின் திட்டத்தின் முதல் ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா ராமகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

தில்லி-மும்பை இடையே சோதனை ஓட்டம்: 17 நிமிடங்கள் தாமதமாக சென்ற "டால்கோ' ரயில்!

Posted: 06 Aug 2016 12:23 PM PDT

தில்லியில் இருந்து மும்பைக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட "டால்கோ' அதிவேக ரயில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 17 நிமிடங்கள் தாமதமாக சென்றடைந்தது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் தீ மிதித் திருவிழா

Posted: 06 Aug 2016 12:23 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ மிதித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான

குர்கான்: வெளிநாட்டினர் குறித்து தகவல் தெரிவிக்காத ஹோட்டல் நிர்வாகிகள் கைது

Posted: 06 Aug 2016 12:23 PM PDT

குர்கானில் வெளிநாட்டினர் தங்கியிருப்பது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்காத ஹோட்டல்களின் உரிமையாளர்கள், மேலாளர் என மூவர் கைது செய்யப்பட்டனர்.

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மார்க்சிஸ்ட வலியுறுத்தல்

Posted: 06 Aug 2016 12:22 PM PDT

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தில்லி, என்சிஆர் இக்னோ மைய மாணவர்களுக்கு ஆக. 12-இல் வளாக வேலைவாய்ப்பு நேர்காணல்

Posted: 06 Aug 2016 12:22 PM PDT

தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) மையங்களில் இறுதியாண்டு பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வளாக வேலைவாய்ப்பு நேர்காணலுக்கு

தேசிய மனித உரிமைகள், மகளிர் ஆணையங்களில் தேமுதிக புகார்: சசிகலா புஷ்பா விவகாரம்

Posted: 06 Aug 2016 12:22 PM PDT

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றில் தேமுதிக புகார் அளித்துள்ளது.

இரு வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: யுஜிசிக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 06 Aug 2016 12:21 PM PDT

நாட்டின் 70-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை அனைத்துக் கல்லூரிகளிலும் இரு வாரங்களுக்குக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டிடிஇஏ பள்ளிகளில் கல்வி கண்காட்சி

Posted: 06 Aug 2016 12:21 PM PDT

தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் கல்விக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாணவர்களின் கற்றல் திறனையும் கற்பனைத் திறனையும் அதிகரிக்கும் நோக்கில் டிடிஇஏவின் ஏழு பள்ளிகளிலும் இக்கண்காட்சியை நடத்த டிடிஇஏ நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் தலையீடு: கிரண் பேடி மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

Posted: 06 Aug 2016 12:21 PM PDT

புதுச்சேரி அரசின் அன்றாடச் செயல்பாடுகளில் தலையிடுவதாக அதன் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கெளரவ ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆராய அரசு செயலர் தலைமையில் குழு

Posted: 06 Aug 2016 12:20 PM PDT

நிலையான ஊதியம், மாதந்தோறும் விடுப்பு போன்ற கெளரவ ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆராய நிதித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் உயர் நிலைக் குழுவை தில்லி அரசு அமைத்துள்ளது.

ரூ.3 கோடி போதைப் பொருளுடன் நைஜீரியர் உள்பட மூவர் கைது

Posted: 06 Aug 2016 12:20 PM PDT

தில்லியில் ரூ.3 கோடி போதைப் பொருளுடன் நைஜீரியர் உள்பட மூவரை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தில்லி மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கூறியதாவது:

பதவியை தவறாக பயன்படுத்துவதாக ஸ்வாதி மாலிவாலுக்கு எதிராக புகார்

Posted: 06 Aug 2016 12:20 PM PDT

தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், தனது பதவியை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் (ஏசிபி) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் சுகாதார வணிக உரிமம்: தெற்கு தில்லியில் நாளை முதல் அமல்

Posted: 06 Aug 2016 12:19 PM PDT

உணவகம் முதல் அழகு நிலையங்கள் வரையிலான சுகாதாரம் சார்ந்த வணிகத்துக்கான சுகாதார வணிக உரிமத்தை இணைய வழியில் (ஆன்லைன்) பெறும் திட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் தெற்கு தில்லி மாநகராட்சியில் (எஸ்டிஎம்சி) அமலுக்கு வருகிறது.

தில்லியில் மிதமான மழை: புழுக்கத்தால் மக்கள் அவதி

Posted: 06 Aug 2016 12:19 PM PDT

தில்லியின் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 90 சதவீதமாக அதிகரித்ததால், புழுக்கம் தாங்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

தில்லி பல்கலை. பேராசிரியரின் கார் மோதி சிறுவன் பலி

Posted: 06 Aug 2016 12:19 PM PDT

தில்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஓட்டிய கார் மோதி, சைக்கிளில் சென்ற 9 வயது சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலிகைப் பண்ணையை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள்

Posted: 06 Aug 2016 12:18 PM PDT

உத்தரமேரூர் அருகேயுள்ள மூலிகைப் பண்ணையை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர். உத்தரமேரூரை அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை மூலிகைப் பண்ணை உள்ளது. இங்கு, ஏராளமான அரிய வகை மூலிகை மரங்களும், செடிகளும் உள்ளன.

பாதியில் நிற்கும் சமுதாயக் கூடப் பணி: விரயமாகும் அரசுப் பணம்

Posted: 06 Aug 2016 12:17 PM PDT

காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலையில் கட்டப்பட்ட சமுதாயக் கூட கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், அரசுப் பணம் விரயமாவதோடு, அக்கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.

அம்மன் கோயில்களில் தீமிதி விழா

Posted: 06 Aug 2016 12:17 PM PDT

செங்கல்பட்டு - மணப்பாக்கம், மாமல்லபுரம் - கடும்பாடி அம்மன் கோயில்களில் தீமிதி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை கணினிமயமாக்க கோரிக்கை

Posted: 06 Aug 2016 12:17 PM PDT

தமிழகத்தில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை 100 சதவீதம் கணினிமயமாக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட பணியாளர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு

Posted: 06 Aug 2016 12:16 PM PDT

திருவள்ளூரை அடுத்த திரூரில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாமும், விவசாயக் கண்காட்சியும் சனிக்கிழமை நடைபெற்றன.

திருத்தணி நகரை நவீனமயமாக்க வேண்டும்: எம்எல்ஏ பேச்சு

Posted: 06 Aug 2016 12:16 PM PDT

திருத்தணி நகராட்சி அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீனமயமாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் வேண்டுகோள் விடுத்தார்.

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரி சாம்பியன்

Posted: 06 Aug 2016 12:15 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரி அணி, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது.

தாக்குதலில் இருந்து நெற்பயிரைக் காக்கும் சிலந்தி கட்டுப்பாடு மேலாண்மை

Posted: 06 Aug 2016 12:15 PM PDT

தற்போதுள்ள பருவத்தில் நெற்பயிரைத் தாக்கும் சிலந்தியைக் கட்டுப்படுத்தாமல் விட்டால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி அறிவுறுத்தியுள்ளார்.

கார் திருட்டு தொடர்பாக இருவர் கைது

Posted: 06 Aug 2016 12:15 PM PDT

கும்மிடிப்பூண்டி அருகே கார் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெரிய புலியூரில் "அம்மா' திட்ட முகாம்: 38 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

Posted: 06 Aug 2016 12:15 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய புலியூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.

ரயில் நிலைய சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 06 Aug 2016 12:14 PM PDT

வேப்பம்பட்டு ரயில் நிலைய சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திருநின்றவூரில் 24 மணி நேர அரசு மருத்துவமனை கோரி மனு

Posted: 06 Aug 2016 12:14 PM PDT

திருநின்றவூரில் 24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

Posted: 06 Aug 2016 12:14 PM PDT

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆம் ஆண்டு தொடக்க விழாவும், முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குமரியில் 16 குடும்பங்களுக்கு ரூ.23.15 லட்சம் நிவாரணம் அளிப்பு

Posted: 06 Aug 2016 12:13 PM PDT

மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் குமரியைச் சேர்ந்த 10 மீனவக் குடும்பத்தினருக்கும், முதல்வரின் பொதுநிவாரண நிதியின் கீழ் 6 குடும்பத்தினருக்கும் என 16 குடும்பத்தினருக்கு ரூ. 23 லட்சத்து 15 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.

தேங்காய்க்கு உரிய விலை வழங்கக் கோரி நூதன போராட்டம்

Posted: 06 Aug 2016 12:13 PM PDT

தேங்காய்க்கு உரிய விலை வழங்க வலியுறுத்தி ஈத்தாமொழியில் தேங்காய் உடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் கருத்தரங்கு

Posted: 06 Aug 2016 12:12 PM PDT

கன்னியாகுமரியில் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வது, அதனை எதிர் கொள்வது குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கோதநல்லூர் பகுதியில் நாளை முதல் 6 நாள்களுக்கு மின்தடை

Posted: 06 Aug 2016 12:12 PM PDT

தக்கலையில் இருந்து செல்லும் கோதநல்லூர் மின் பாதையில் மின்கம்பம் நடும்பணி மற்றும் மின்கம்பம் மாற்றும் பணி நடைபெற இருப்பதால் ஆக.8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாள்ர் சங்கரநாராயண பிள்ளை தெரிவித்துள்ளார்..

கருங்கல்லில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Posted: 06 Aug 2016 12:12 PM PDT

கருங்கல்லில் நடைபெற்றுவரும் குமரி-பழய உச்சக்கடை சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மரியா தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 06 Aug 2016 12:12 PM PDT

குமரன்குடி மரியா தொழில்நுட்பக் கல்லூரியில் ஆட்டோ மொபைல் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தல்

Posted: 06 Aug 2016 12:11 PM PDT

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழை அங்கீகரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்

Posted: 06 Aug 2016 12:11 PM PDT

உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் அறிவுறுத்தினார்.

நாகர்கோவிலில் ரேஷன் கடை திறப்பதில் திமுக-அதிமுக மோதல்: போலீஸ் குவிப்பு

Posted: 06 Aug 2016 12:11 PM PDT

நாகர்கோவிலில் ரேஷன் கடை திறப்பதில் அதிமுக}திமுக இடையே மோதல் ஏற்பட்டது. நாகர்காúவில் நகராட்சி 25 ஆவது வார்டுக்குள்பட்ட, பார்வதிபுரம் இம்மானுவேல் தெருவில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து(நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏவாக இருந்த

ரூ.307 கோடியில் மேம்பாலங்கள்: வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி

Posted: 06 Aug 2016 12:10 PM PDT

குமரி மாவட்டத்தில் மேம்பாலங்கள் கட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஆலஞ்சி கடைவரம்பு சானல் பகுதியில் தூர்வாரும் பணி

Posted: 06 Aug 2016 12:10 PM PDT

கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி கடைவரம்பு சானல் பகுதியில் ரூ.2 லட்சம் செலவில் தூர்வரும் பணி நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில் கண்காட்சியில் அசத்திய 22 வகை நாய்கள்: விஜயகாந்தின் 10 வகை நாய்கள் பங்கேற்பு

Posted: 06 Aug 2016 12:10 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 22 வகையான நாய்கள் பார்வையாளர்களை அசத்தின. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்குச் சொந்தமான 10 வகை நாய்களும் பங்கேற்றன.

தூத்துக்குடியில் சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு

Posted: 06 Aug 2016 12:09 PM PDT

தூத்துக்குடியில் மூன்று சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருச்செந்தூரில் கோயில் கொடை விழா

Posted: 06 Aug 2016 12:09 PM PDT

திருச்செந்தூர் வீரமாடசாமி கோயில் கொடை விழா நடைபெற்றது.

காமநாயக்கன்பட்டி மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்

Posted: 06 Aug 2016 12:08 PM PDT

கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™