Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


யா அல்லா! இஸ்லாமிய தாய்க்கு நேர்ந்த கதி.

Posted: 06 Aug 2016 10:28 AM PDT

யா அல்லா! இஸ்லாமிய தாய்க்கு நேர்ந்த கதி. இஸ்லாமிய தீவிரவாதம்,பயங்கரவாதம், ஐஎஸ்ஐஎஸ், தாலிபான் அமைப்புகளின் தாக்குதல்கள் என உலகெங்கும் தீவிரவாத செயல்கள் நடந்தேறி வருகின்றன. இவர்களின் தாக்குதல்கள் காரணமாக தாக்கியவர்கள் உயிரிழந்தோ,தப்பித்து விட்டோ அல்லது கைது செய்யப்பட்டு விடும் நிலையில் அப்பாவி மக்கள் பெரும் துன்பங்களை,இழப்புகளை சந்தித்து வருவதை தினமும் கான முடிகிறது. ஆனால் இதில் சம்பந்தப்படாமலே தங்கள் வேலை உண்டு வாழ்க்கை உண்டு என வாழும் இஸ்லாமியர்கள் படும் துன்பங்கள் தொல்லைகள் சந்தேகத்துடன் ...

அறிவோம்_அறியாததை சென்னை

Posted: 06 Aug 2016 10:06 AM PDT

#அறிவோம்_அறியாததை சென்னை சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது. மதராஸ் முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது. கோடம்பாக்கம் கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் ...

இந்த பொருட்களை மட்டும் ஃப்ரிட்ஜில வெக்காதீங்க...

Posted: 06 Aug 2016 06:48 AM PDT

பெரும்பாலானோருக்கு வாங்கும் ஒவ்வொரு பொருளும் கெட்டுப் போகக்கூடாது என்று ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் உணவுப் பொருட்களை அனைத்தையுமே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அவற்றுள் சில கெட்டுப் போய்விடும். சாப்பிடும் பிரட்டை காற்றுப்புகாத ஒரு கவரில் சுற்றி, ஈரப்பதமில்லாத இடத்தில் தான் வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்தால், அதனால் பிரட்டுகளில் பூஞ்சைகள் சீக்கிரம் வருவதோடு, கடினமாகவும் மாறிவிடும். பூண்டுகள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகக்கூடிய பொருள் அல்ல. அதிலும் ...

வேண்டுகோள்

Posted: 06 Aug 2016 06:02 AM PDT

வணக்கம். ஈகரை ஆசிரியர்களிடம் வேண்டுகோள். நான் செந்தலைக்குருவி எனும் கலை இலக்கியக் காலாண்டிதழில் தமிழ் இலக்கியப் பதிவு  சார்ந்த தொடர் ஒன்றை எழுதி வந்தேன். நான்கு தொடர்கள் வெளிவந்தன. பின்னர்  அவ்விதழ் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து என்னால் எழுத முடியவில்லை. தாங்கள் தங்கள் தளத்தில் எனக்கு எழுத வாய்ப்பளிக்க வேண்டுகிறேன். வாய்ப்பளிக்கும் நிலையில் நான் முன்புஎழுதிய நான்கு தொடரையும் பதிவு செய்த பின்  மற்ற  தொடர்களைப் பதிவிட அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.         ...

முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள்

Posted: 06 Aug 2016 06:01 AM PDT

முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் மின்னணு சாதனங்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதனால், நமக்கு முதுமை, அதன் காலத்திற்கு முன்பே வந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதாக, பல மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் பயன்படுத்துவதனால், "tech neck" என்னும் உடல் குறைபாடு ஏற்பட்டு, அது முதுமையான தோற்றத்தை மக்களுக்குத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். "tech neck" என்னும் உடல் குறைபாடு, நம் சருமத்தினை தொய்வுறச் செய்கிறது. தாடை எலும்பினை கீழாக இழுக்கிறது. இதனால், ...

ஞானத்தில் சிறந்த ஞானம் எது ?

Posted: 06 Aug 2016 06:00 AM PDT

ஒரு ஞானியைப் பார்த்து ஒருவர், "ஞானத்தில் சிற ந்த ஞானம் எது?" என்று கேட்டார். "இன்பத்தில் மகி ழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சொர்டைவயா மலும் இருப்பதுதான் ஞானம்" என்றார் ஞானி. வந் தவர், விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு ஞானி அருகில் மேய்ந்து கொண்டிருந்த வண்ணான் ஒருவனின் கழுதையை காட்டி இதை காலையிலும் மாலையிலும் பார்த் தால் உமக்கு புரியும் என்றார். ஞானி கூறிய படியே அவர் காலையும், மாலையும் கழுதையை கவ னித்தார். அவருக்கு ஒன்றும் புரியாமல் போகவே ஞானியிடம் கேட்டார். ஞானி விளக்கினார், இந்தக் ...

கடவுளைக் கண்ணால் காண முடியுமா? (திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை)

Posted: 06 Aug 2016 05:42 AM PDT

கடவுளைக் கண்ணால் காண முடியுமா? என்று ஒரு மாணவன் கிருபானந்த வாரியாரிடம் கேட்டான் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?'' "என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.'' "தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது ...

ரத்த அழுத்தம், புற்றுநோயைகுணப்படுத்தும் முள் சீத்தா!

Posted: 06 Aug 2016 05:14 AM PDT

ரத்த அழுத்தம், புற்றுநோயைகுணப்படுத்தும் முள் சீத்தா! முள் சீத்தா… இதை காட்டு ஆத்தாப்பழம் என்றும் சொல்வார்கள். கேரளாவில் ஆத்தா சக்கா என்ற பெயரிலும், இலங்கையில் காட்டு ஆத்தா, அன்னமுன்னா பழம், அண்ணவண்ணா பழம் என்பதுபோன்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். இது ஓர் அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக விளைகிறது. அதிகமான ...

எப்போதும் சொல்வோம் நமசிவாய !

Posted: 06 Aug 2016 05:11 AM PDT

எப்போதும் சொல்வோம் நமசிவாய ! இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் ...

தாமரைப்பூக்கள்

Posted: 06 Aug 2016 04:26 AM PDT

- என்னை தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன எப்பொழுதும் ஏனென்றே தெரியவில்லை – அவற்றின் நிறம்? நூதனமான அழகு? இதழ்களின் அடுக்கமைப்பு? பச்சிளம் குழந்தை போல மிருது? சூரியனைக் கண்டதும் காதலாகி மலர்ந்து விரியும் இயல்பு? – ஆனாலும் ஆற்றில் செல்லாது கடலிலும் கிடக்காது சிவப்போ வெள்ளையோ சிறுகுளத்துக்குள்தான்! – ————————— -விக்ரமாதித்யன்

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 06 Aug 2016 02:42 AM PDT



மென்பொருள் பொறியாளர் வாய்ப்பு

Posted: 06 Aug 2016 12:43 AM PDT

நண்பர்களே
                    நன் பணியாற்றும் பிரிவில் காலியிடங்கள் உள்ளன, தெரிந்தவர்கள் இருந்தால் அணுகவும்

php மற்றும் android குறைந்தது 2 வருட அனுபவம் வேண்டும், கல்வி தகுதி - இளங்கலை பொறியியல்(BE) மற்றும் முதுநிலை கம்ப்யூட்டர் (MCA)

நன்றி

என்றும் அன்புடன்
சின்னவன்

எந்த சந்தோஷமும் பயமாயிருக்கிறது

Posted: 06 Aug 2016 12:21 AM PDT

– விளிம்பு மனிதர்களை விமர்சிப்பது சுலபம் விளிம்பில் நின்று பார்த்தால்தான் தெரியும் – வீடு தேடி வருகின்றன பற்றுச்சீட்டுகள் வீட்டுக்காரியோடு நாளும் வளருகிறது விரோதமும் – கொள்ளையடித்து கொண்டு வந்து போடமுடியாது பிச்சையெடுத்து கொண்டு வந்து போடுகிறான் – எந்த சந்தோஷமும் பயமாயிருக்கிறது தொடர்ந்து வரும் துன்பம் – குத்தணும் வெட்டணும் சாகணும் விருதா வாழ்வுக்கு சிறிதே சுவாரஸ்யம் சேர்க்கணும் – கோழைகளே கோழைகளே கலைஞனோடு குடிக்கவே ஒரு தகுதி வேணும் கோழைகளே குடிப்பது விடுதலைக்கென்றால் அளவு ...

அமைப்பு

Posted: 06 Aug 2016 12:16 AM PDT

– நிதியுதவி கேட்டு எழுதியே கழிகிறது காலம் – நன்கொடையாளர்களுக்கு நன்றி சொல்லி தீரவில்லை இன்னும் – குறுக்குத்துறை வெள்ளம் கொண்டு போயிருக்கக் கூடாதா ஆதிநாளிலேயே – காட்டுத்தீ கடலலை கன்றுக்குட்டி – புட்டார்த்தி அம்மன் பேச்சை பொழுதுக்கும் கேட்டு வளர்ந்த பிள்ளை – ஜெயிக்க வேண்டும் சிம்மாசனம் வேண்டும் ஜிலு ஜிலுவென்று காற்று வீச வேண்டும் – ஜிகில் ஜிகில் ஜிகில் ஜிகில் ஜிகில் ஜிகில் – எந்த நந்தியும் சிவன் சொல்படிதான் – —————————- -விக்ரமாதித்யன்

தாய் மண்

Posted: 05 Aug 2016 10:18 PM PDT

தாய் மண் பலர் வாழ்ந்தபின் இறக்கிறார்கள் சிலர் இறந்தபின்னும் வாழ்கிறார்கள் ஆனால் நான் வாழ்ந்துக்கொண்டே இருக்கிரேன் காரணம் நானும் காதலிக்கிரேன் மற்ற ஆண்களைப்போல பெண்ணை அன்று என்னைப் ...

பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Posted: 05 Aug 2016 06:25 PM PDT

- பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகுபலி 2 படம் வெளிவருகிற தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஏப்ரல் 28 அன்று படம் வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு ...

வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி

Posted: 05 Aug 2016 06:21 PM PDT

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கி களுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஐபிபிஸ் நடத்தும் வங்கித் தேர் வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு களை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (தமிழ்நாடு) மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி, ...

முதல் பார்வை: திருநாள் – யாருக்கு? ஓகஸ்ட் 6, 2016 இல் 6:42 முப (சினிமா) · தொகு

Posted: 05 Aug 2016 06:20 PM PDT

- 25-வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு 'திருநாள்' திருப்புமுனையாக இருக்குமா? அல்லது இதுவும் இன்னொரு படம் என்ற ரீதியில் கடந்து போகுமா? என்ற யோசனையுடன் 'திருநாள்' பார்க்க கிளம்பினோம். 'அம்பாசமுத்திரம் அம்பானி 'படத்துக்குப் பிறகு இயக்குநர் ராம்நாத் இயக்கியுள்ள படம் 'திருநாள்'. நயன்தாராவும் நடித்திருப்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. திருநாள் எப்படி? கதை: சாக்கு மண்டியில் வேலை செய்யும் ஜீவா, சரத் லோஹிதஷ்வாவிடம் அடியாளாக இருக்கிறார். ஜீவா, நயன்தாராவைக் காதலிப்பது ...

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்

Posted: 05 Aug 2016 06:18 PM PDT

- வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு கமல்ஹாசன் கடந்த மாதம் சென்னை திரும்பினார். கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மாடியிலிருந்து படியில் இறங்கும்போது அவர் தவறி விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ...

ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்

Posted: 05 Aug 2016 05:30 PM PDT

- உலகில் உள்ள எந்த தொழிலையும், தொழிலாக பார்ப்பதோடு நின்று விடாமல், ஆத்மார்த்தமாய், ஒரு சாதனையாக மாற்றி, அதிலும் வெற்றி கொடி பறக்க விட்டு வருகின்றனர் நம் பெண்கள். - மேடை கச்சேரியில் பெண்கள் பாடுவதும், இசை கருவிகள் இசைப்பதும், அவ்வளவு பெரிய காரியமில்லையென்றே நாம் சொல்வோம். ஆனால், அதிலும் மிருதங்கம், கடம் போன்ற கடினமான கருவிகளை ஆண்கள் மட்டுமே கையாண்டு வந்த நிலை மாறி, இப்போது பெண்களும் வெற்றி ஸ்வரத்தோடு வலம் வர ஆரம்பித்துள்ளனர். - கச்சேரி என்றால் முதலில் வாய்ப்பாட்டு, வயலின், ...

எதில் அதிக குப்பை

Posted: 05 Aug 2016 05:15 PM PDT

- ஒரு துப்புரவுத் தொழிலாளி தெருவைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவ்வழியே ஒரு தத்துவ ஞானி சென்று கொண்டிருந்தார். – தொழிலாளியின் உழைப்பைக் கண்ட தத்துவ ஞானி, அவனிடம், ""நான் உன்னைப் பார்த்து இரக்கப்படுகிறேன். உன் வேலை மிகவும் கஷ்டமானது. எப்படித்தான் இதைச் சகித்துக் கொண்டு செய்கிறாயோ" என்றார். – அதற்கு அந்தத் தொழிலாளி, ""மிகவும் நன்றி ஐயா! என் வேலையின் சிரமத்தை உணர்ந்ததற்கு…, தங்களது வேலை என்ன?" என்று கேட்டான். – ""நான் மனிதர்களின் மனதைப் படிக்கிறேன். அவர்கள் செயல்களையும், விருப்பங்களையும் ...

ரயில் கீதம் அறிமுகம்

Posted: 05 Aug 2016 05:09 PM PDT

"ரயில் கீதம்' எனும் பாடலை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்தப் பாடலை வெளியிட்டார். 3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பாடல், விடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ரயில் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், ரயில்வே துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிணைப்பை அதிகரிக்கும் வகையிலும் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. வேகமாக ஓடும் ரயில்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரபல இசையமைப்பாளர் சரவண் ...

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு

Posted: 05 Aug 2016 05:06 PM PDT

- குஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதின் பட்டேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், 75 வயது நிரம்பியதும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி, அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என்ற எழுதப்படாத விதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் 75 வயது நிறைவடைய இருக்கும் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான ...

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி: ரயில்வே அறிவிப்பு

Posted: 05 Aug 2016 05:03 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு பணி உயர்வும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதன்படி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட உள்ளன. இதுதவிர முதல் 8 இடங்களுக்குள் வரும் வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், போட்டியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™