Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஒருவருக்குக் கூட ஆதார் எண் கிடைக்காதே..!

Posted: 05 Aug 2016 02:32 PM PDT

மாநகராட்சியில் இருப்பதுபோல் உள்ளது

Posted: 05 Aug 2016 01:12 PM PDT

திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேச்சால், மாநகராட்சி மன்றத்தில் இருப்பதுபோல் உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றது யார் ஆட்சியில்? திமுக-அதிமுக விவாதம்

Posted: 05 Aug 2016 01:10 PM PDT

உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக யாருடைய ஆட்சியில் நடைபெற்றது என்பது தொடர்பாக, திமுக-அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டச் சென்ற 32 தமிழகத் தொழிலாளர்கள் கைது

Posted: 05 Aug 2016 01:09 PM PDT

செம்மரம் வெட்டச் சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 32 பேரை ஆந்திர அதிரடிப் படையினர் ரேணிகுண்டா அருகே வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

உயர் அழுத்த மின்கம்பிகளை பூமிக்குள் பதிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி

Posted: 05 Aug 2016 01:08 PM PDT

மழைக் காலத்துக்குள் பூமிக்குள் உயர் அழுத்த மின்கம்பிகள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

5 அரசு பாலிடெக்னிக்குகள், 3 அரசு கல்லூரிகள் தொடக்கம்

Posted: 05 Aug 2016 12:44 PM PDT

ஆர்.கே. நகர் உள்பட 5 இடங்களில் புதிதாக பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளையும் (பாலிடெக்னிக்குகள்), 3 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளையும் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா: அன்னையின் திருவுருவ பவனி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

Posted: 05 Aug 2016 12:44 PM PDT

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் திருவுருவ பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னையை தரிசித்தனர்.

வீடு திரும்பினார் கமல்

Posted: 05 Aug 2016 12:43 PM PDT

கால் எலும்புமுறிவுக்காக, கடந்த 20 நாள்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வெள்ளிக்கிழமை (ஆக.5) அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பினார்.

துணை மருத்துவப் படிப்புக்கு 18 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted: 05 Aug 2016 12:42 PM PDT

துணை மருத்துவப் படிப்புகளுக்கு 18 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

டி.வி.டி.க்கள் உள்பட ரூ.5.28 கோடி பொருள்கள் பறிமுதல்

Posted: 05 Aug 2016 12:42 PM PDT

திருட்டு சி.டி. விற்பனையைத் தடுக்கும் பொருட்டு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5.28 கோடி மதிப்புள்ள பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மானுட அலட்சியம்!

Posted: 05 Aug 2016 12:41 PM PDT

இயற்கையின் சீற்றத்தால் மரணங்கள் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. மனிதத் தவறால் நேரிடும் விபத்து மரணங்களையும்கூட மன்னித்துவிடலாம். ஆனால் மானுட அலட்சியத்தால் நேரிடும் மரணங்களுக்கு யாரைப் பொறுப்பாக்குவது?

பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 05 Aug 2016 12:40 PM PDT

சிவகாசியில் உள்ள வெடி பொருள்கட்டுப்பாட்டுத் துறை சார்பில் பட்டாசுத் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெல்ஜியம் பல்கலைக்கழகத்துடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 05 Aug 2016 12:39 PM PDT

பெல்ஜியம் கென்ட் பல்கலைக்கழகத்துடன், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

காய்கறி விலை குறைந்தது

Posted: 05 Aug 2016 12:39 PM PDT

ராஜபாளையம் உழவர் சந்தை மற்றும் வாரச் சந்தையில் காய்கறிகளின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

Posted: 05 Aug 2016 12:38 PM PDT

விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ். நாங்கூரை சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தேக்கு மரத்தைக் கறையான் தின்னலாமா?

Posted: 05 Aug 2016 12:37 PM PDT

நர்சிங் யாதவ் என்னும் இந்திய மல்யுத்த வீரர் ரியோ ஒலிம்பிக்கில் 74 கிலோ எடை பிரிவில் பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தார். அவரிடம் கடந்த ஜூன் மாதம் 25- ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது

அரசு மருத்துவமனை அருகே கழிவுநீரால் துர்நாற்றம்

Posted: 05 Aug 2016 12:37 PM PDT

விருதுநகர் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகே செல்லும் வாறுகால் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் நோயாளிகள் மட்டுமன்றி, பள்ளி மாணவர்களும் அவதிப்படுகின்றனர்.

கோயில் அருகே குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு

Posted: 05 Aug 2016 12:37 PM PDT

சிவகாசி விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயில் அருகே நடைபாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு நிலவுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.34 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Posted: 05 Aug 2016 12:36 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 5,601 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கனகராஜ் தெரிவித்தார்.

வங்கிகளின் கடமை

Posted: 05 Aug 2016 12:36 PM PDT

ஓரிரு மாத முன்பு, பாரத ஸ்டேட் வங்கி, தங்களால் நியமனம் செய்யப்பட்ட முகவர் (ரிலையன்ஸ் அசெட்ஸ்) மூலமாகக் கல்விக் கடன் பெற்ற மாணவனுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது, அந்தத் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல், குறிப்பிட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இந்தச் சம்பவம் பற்பல கேள்விகளை எழுப்புகின்றன.

விருதுநகரில் மாநில அளவிலான கணினி அறிவியல் திறனாய்வு போட்டி

Posted: 05 Aug 2016 12:36 PM PDT

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கணினி அறிவியல் திறனாய்வு போட்டியில் விவி பெண்கள் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

பள்ளிகளில் காலை உணவாக ரவா கேசரி, கேழ்வரகு புட்டு, சேமியா கேசரி வழங்க பரிந்துரை

Posted: 05 Aug 2016 12:35 PM PDT

அரசு தொடக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக தினமும் கோதுமை உப்புமா, கேழ்வரகு புட்டு, ரவா கேசரி, சேமியா கேசரி, ஜவ்வரிசி கஞ்சி வழங்க அரசுக்கு சத்துணவுத் துறை பரிந்துரை அனுப்பியுள்ளது.

சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

Posted: 05 Aug 2016 12:34 PM PDT

ராஐபாளையம் முடங்கியார் ரோட்டில் இருந்து பிரியும் செண்பகத்தோப்பு சாலையை இருவழிப்பாதையாக அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருக்கன்குடியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 05 Aug 2016 12:34 PM PDT

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி அருகே லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 05 Aug 2016 12:34 PM PDT

பழனி அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

மாற்றுப் பணி வழங்கக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Aug 2016 12:33 PM PDT

மாற்றுப் பணி வழங்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

90 வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தக் கட்டடம்

Posted: 05 Aug 2016 12:33 PM PDT

நிகழாண்டில் 90 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

திண்டுக்கல் அருகே 1008 லிங்க பிரதிஷ்டைக்கு சிறப்பு யாகம்

Posted: 05 Aug 2016 12:33 PM PDT

திண்டுக்கல் அருகே தனியார் அமைப்பு சார்பில் கட்டப்பட்டு வரும் கோயிலில் 1008 லிங்க வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சியை நகராட்சியாக்க திமுக உறுப்பினர் விடுத்த கோரிக்கையால் பரபரப்பு

Posted: 05 Aug 2016 12:32 PM PDT

திண்டுக்கல் மாநகராட்சியை மீண்டும் நகராட்சியாக தரம் குறைக்கவேண்டும் என, திமுக உறுப்பினர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2,323 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி

Posted: 05 Aug 2016 12:32 PM PDT

2,323 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.

கொடைக்கானலில் பழங்குடி இன மக்கள் போராட்டம்

Posted: 05 Aug 2016 12:32 PM PDT

கொடைக்கானலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியன சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தற்கொலை செய்த மாணவரின் சடலத்தை பெற்றோர் ஏற்பு

Posted: 05 Aug 2016 12:31 PM PDT

கொடைக்கானலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவரின் சடலத்தை 3 நாள்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

"மாண்புமிகு மேயர்' என மா.சு. கூறியதால் சிரிப்பலை

Posted: 05 Aug 2016 12:31 PM PDT

சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலை "மாண்புமிகு மேயர்' என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தவறி அழைத்ததால், முதல்வர் ஜெயலலிதா உள்பட அவையில் இருந்த எம்எல்ஏக்கள் சிரித்துவிட்டனர்.

பெரியகுளம் மறுவாழ்வு மைய காப்பகத்தில் அதிகாரிகள் விசாரணை

Posted: 05 Aug 2016 12:31 PM PDT

பெரியகுளத்தில் செயல்பட்டுவரும் மதரஸா மறுவாழ்வு மைய காப்பகத்தில் பெண்கள் கொடுமைப்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு வியாழக்கிழமை சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மைனாரிட்டி ஆட்சி விமர்சனம்: திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

Posted: 05 Aug 2016 12:31 PM PDT

திமுக ஆட்சியை (2006-11) மைனாரிட்டி ஆட்சி என ஆளும்கட்சி விமர்சித்தாலும் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம்: போலீஸாருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தள்ளு முள்ளு

Posted: 05 Aug 2016 12:30 PM PDT

பழனியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  தனிவட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால், போலீஸாருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

காவல் துறை மானிய கோரிக்கை மீது 22-இல் விவாதம்

Posted: 05 Aug 2016 12:30 PM PDT

காவல், தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பதிலாக, ஆகஸ்ட் 22-இல் நடைபெறுகிறது என சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

சின்னமனூர் அருகே ஓடையில் கட்டிய ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு

Posted: 05 Aug 2016 12:30 PM PDT

சின்னமனூர் அருகே ஓடையை ஆக்கிரமித்து கட்டிய வீடு, நீதிமன்ற உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.

பழனி அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு 10,008 வளையல் அலங்காரம்

Posted: 05 Aug 2016 12:29 PM PDT

பழனி இடும்பன் கோயில் அருகேயுள்ள ஸ்ரீபஞ்சமுக பிரபஞ்சநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு 10,008 வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அம்மா உணவகங்களில் 31.81 கோடி இட்லிகள் விற்பனை

Posted: 05 Aug 2016 12:29 PM PDT

சென்னையில் அம்மா உணவகங்களில் 31.81 கோடி இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தேனியில் ஊராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Aug 2016 12:29 PM PDT

தேனியில் சிஐடியூ ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொடைக்கானலில் காட்டெருமைகள் உலா: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

Posted: 05 Aug 2016 12:28 PM PDT

கொடைக்கானலில் காட்டெருமைகள் சர்வசாதாரணமாக உலா வருவதால், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஆடிப்பூரம்: சின்னாளப்பட்டி கோயிலில் வளைகாப்பு

Posted: 05 Aug 2016 12:28 PM PDT

ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, சின்னாளப்பட்டியில் உள்ள அம்மன் கோயில்களில் வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் நாமத்துவாரில் ஆடிப்பூர விழா

Posted: 05 Aug 2016 12:27 PM PDT

பெரியகுளம் நாமத்துவாரில் ஆடிப்பூர  விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோட்டூர், நீடாமங்கலத்தில் ரூ.40 கோடியில் சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 05 Aug 2016 12:27 PM PDT

கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டு இரு சேமிப்புக் கிடங்குகள் ரூ.40 கோடியில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆக.9-இல் சிறுபான்மையினர் ஆணையக் குழு வருகை

Posted: 05 Aug 2016 12:27 PM PDT

தேனி மாவட்டத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகை தருகின்றனர்.

மீனவர்களுக்கு சூரிய மின் விளக்குகள்

Posted: 05 Aug 2016 12:27 PM PDT

மீனவர்களுக்கு சூரிய மின் சக்தி விளக்குகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம்-உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, அமைச்சர் வேலுமணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:-

"வலங்கைமானில் நவீன அரிசி ஆலை'

Posted: 05 Aug 2016 12:26 PM PDT

வலங்கைமானில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் அரைவைத் திறன் கொண்ட நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

வகுப்பறையை பூட்டிச் சென்ற தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

Posted: 05 Aug 2016 12:26 PM PDT

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளை பூட்டி சாவிகளை எடுத்துச்சென்ற தலைமையாசிரியர், வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுகவால் முடியாததை அதிமுக முடித்தது: முதல்வர் ஜெயலலிதா

Posted: 05 Aug 2016 12:26 PM PDT

வீராணம் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் திமுக கைவிட்டது; அது அதிமுக ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முல்லைப் பெரியாற்றில் மணல் கடத்தலை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 05 Aug 2016 12:26 PM PDT

முல்லைப் பெரியாற்றில் மணல் கடத்தல் அதிகரித்து வருவதைத் தடுக்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டடத்துக்கு பேரவையை மாற்றியது ஏன்? முதல்வர் ஜெயலலிதா கேள்வி

Posted: 05 Aug 2016 12:25 PM PDT

கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டடத்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையை மாற்றியது ஏன் என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திடம் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

போடியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Posted: 05 Aug 2016 12:25 PM PDT

போடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

17 கோயில் குளங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு

Posted: 05 Aug 2016 12:24 PM PDT

சென்னையில் 17 கோயில் குளங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.

போடி அரசு மருத்துவமனையில் "பிசியோதெரபி' பிரிவு தொடக்கம்

Posted: 05 Aug 2016 12:24 PM PDT

போடி-தருமத்துப்பட்டி ரூடாட் தொண்டு நிறுவனம் சார்பில், போடி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிசியோதெரபி பிரிவு தொடங்கப்பட்டது.

ஆண்டிபட்டி ஒன்றியக் குழு கூட்டம்

Posted: 05 Aug 2016 12:24 PM PDT

ஆண்டிபட்டி ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவர் ரமாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 281 ஊராட்சிகளில் "அம்மா' திட்ட முகாம் நிறைவு: ஆட்சியர்

Posted: 05 Aug 2016 12:23 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 306 ஊராட்சிகளில், 281 ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்தார்.

"எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

Posted: 05 Aug 2016 12:23 PM PDT

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவக்கழகத்தை (எய்ம்ஸ்) அமைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் மயிலாடுதுறை தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் வலியுறுத்தினார்.

சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 05 Aug 2016 12:23 PM PDT

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தில்லி காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்தியா - இலங்கை அமைச்சர்கள்,மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை: ஆகஸ்ட் இறுதிக்குள் நடத்த சுஷ்மா உறுதி

Posted: 05 Aug 2016 12:21 PM PDT

இந்தியா - இலங்கை அமைச்சர்கள், மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை இம்மாத இறுதிக்குள் தில்லியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

தமிழக நலன்களில் மத்திய அரசுக்கு அக்கறை உண்டு

Posted: 05 Aug 2016 12:20 PM PDT

தமிழக நலன்களில் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் அக்கறை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

மும்பையில் பலத்த மழை: ரயில் சேவை பாதிப்பு

Posted: 05 Aug 2016 12:20 PM PDT

மும்பையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால், அந்த நகரிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் இயல்புநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், நகரின் சில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், நகரின் மையப் பகுதியில் புறநகர் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை: 2.16 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Posted: 05 Aug 2016 12:19 PM PDT

ஜம்மு-காஷ்மீரில், கடந்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கிய புனித அமர்நாத் யாத்திரையில், இதுவரை 2.16 லட்சம் பேர் கலந்து கொண்டு, பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வதா? மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு

Posted: 05 Aug 2016 12:18 PM PDT

சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார்.

பாகிஸ்தான் சிறையில் இந்தியர் மீது தாக்குதல்

Posted: 05 Aug 2016 12:17 PM PDT

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் மீது சக கைதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசு மீது பாஜக எம்.பி. தாக்கு

Posted: 05 Aug 2016 12:17 PM PDT

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாளும் முறை தவறானது என்று ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. ஆர்.கே.சிங் குற்றம்சாட்டினார்.

அமித் ஷா தலைமையில் ஆக. 27-இல் பாஜக மாநில முதல்வர்கள் கூட்டம்

Posted: 05 Aug 2016 12:16 PM PDT

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, வரும் 27-ஆம் தேதி நடத்தவுள்ளார்.

5 மாநிலங்களில் "எய்ம்ஸ்' தரத்திலான மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசு

Posted: 05 Aug 2016 12:16 PM PDT

ஆந்திரம், உத்தப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் "எய்ம்ஸ்' தரத்திலான மருத்துவக் கல்லூரிகள் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Posted: 05 Aug 2016 12:15 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்குப் பகுதியில் சட்டம் - ஒழுங்கு நிலைமையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் வன்முறை: மேலும் 3 பேர் பலி

Posted: 05 Aug 2016 12:14 PM PDT

ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 3 பேர் பலியாகினர். 150 பேர் காயமடைந்தனர்.

நாட்டில் 893 பேருக்கு ஒரு மருத்துவர்: மத்திய அரசு தகவல்

Posted: 05 Aug 2016 12:14 PM PDT

நாட்டில் 893 பேருக்கு 1 மருத்துவர் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிகார் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 89-ஆக உயர்வு

Posted: 05 Aug 2016 12:14 PM PDT

பிகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89-ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிர ஆற்றுப்பால விபத்து: மேலும் 3 உடல்கள் கண்டெடுப்பு: பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு

Posted: 05 Aug 2016 12:13 PM PDT

மகாராஷ்டிரத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து 2 பேருந்துகள் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: விரைவில் முடிவெடுப்பதாக சந்திரபாபு நாயுடுவிடம் மோடி உறுதி

Posted: 05 Aug 2016 12:12 PM PDT

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

மன்மோகன் சிங் வலியுறுத்தல்

Posted: 05 Aug 2016 12:11 PM PDT

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக தாம் பிரதமராக இருந்தபோது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

மும்பை நில குத்தகை ஊழல் குறித்து விசாரணை: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

Posted: 05 Aug 2016 12:11 PM PDT

மும்பையில் அரசு நிலங்களை குத்தகைக்கு விட்டதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் 5ஆவது நாளாக போராட்டம்

Posted: 05 Aug 2016 12:10 PM PDT

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜராத்தின் புதிய முதல்வர் விஜய் ரூபானி: துணை முதல்வர் நிதின் படேல்

Posted: 05 Aug 2016 12:10 PM PDT

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக மாநில பாஜக தலைவர் விஜய் ரூபானியை அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். இதேபோல், துணை முதல்வராக நிதின் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர் கொலை வழக்கு: சோட்டா ராஜனுக்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 05 Aug 2016 12:09 PM PDT

பத்திரிகையாளர் ஜே டே கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு எதிராக மும்பையில் உள்ள திட்டமிட்ட குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் (எம்சிஒசிஏ) சிபிஐ துணை நிலை குற்றப்பத்திரிகையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு: சீனா நம்பிக்கை

Posted: 05 Aug 2016 12:08 PM PDT

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றியதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர்: பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

Posted: 05 Aug 2016 12:08 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், தாண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு பெண் உள்பட 3 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்.

சோனியா உடல் நிலையில் முன்னேற்றம்

Posted: 05 Aug 2016 12:08 PM PDT

தோள் பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக முன்னேற்றம் கண்டு வருவதாக, அவர் சிகிச்சைப் பெற்று வரும் தில்லி சர் கங்காராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மாநில அமைச்சர்களில் 34% பேர் மீது குற்ற வழக்குகள்: 76% பேர் கோடீஸ்வரர்கள்

Posted: 05 Aug 2016 12:07 PM PDT

நாட்டில் உள்ள 29 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள அமைச்சர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அமைச்சர்களில் 34 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், 75 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

விழாக்கோலம் பூண்டது ரியோ

Posted: 05 Aug 2016 12:06 PM PDT

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி மரக்காணா மைதானத்தில் சனிக்கிழமை அதிகாலையில் தொடங்குவதையொட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரம் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்திய ஹாக்கி அணியின் 36 ஆண்டுகால ஏக்கம் தீருமா?

Posted: 05 Aug 2016 12:05 PM PDT

ஒலிம்பிக் போட்டியில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இந்திய ஹாக்கி அணி, கடந்த 36 ஆண்டுகளாக ஒரு பதக்கம்கூட வெல்லவில்லை. அந்த ஏக்கத்துக்கு இந்த முறை முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென் கொரிய வீரர் உலக சாதனை

Posted: 05 Aug 2016 12:04 PM PDT

ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் 72 அம்புகள் எய்தல் போட்டியின் ரேங்கிங் சுற்றில் தென் கொரியாவைச் சேர்ந்த உலக சாம்பியனான கிம் ஊ ஜின் 700 புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

தங்கம் வெல்வாரா ஜிது ராய்?

Posted: 05 Aug 2016 12:04 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் சனிக்கிழமை நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய், குருபிரீத் சிங் ஆகியோர் களம் காண்கின்றனர்.

ஹெராத் ஹாட்ரிக்; வெற்றிப் பாதையில் இலங்கை: ஒரே நாளில் 21 விக்கெட்டுகள் சரிவு

Posted: 05 Aug 2016 12:03 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை நெருங்கியுள்ளது.

இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted: 05 Aug 2016 12:01 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்: இந்தியர்கள் இன்று களமிறங்கும் போட்டிகள்

Posted: 05 Aug 2016 12:01 PM PDT

இந்தியர்கள் இன்று களமிறங்கும் போட்டிகள்

கால்பந்து: பிரேசிலுக்கு ஏமாற்றம்

Posted: 05 Aug 2016 11:59 AM PDT

ஒலிம்பிக் கால்பந்துப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரேசில்-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

தங்கம் வென்றால் ரூ.1 கோடி: ரயில்வே அறிவிப்பு

Posted: 05 Aug 2016 11:59 AM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

தொடக்க விழாவுக்கு முன்னரே துயரம்: கொள்ளையன் சுட்டுக் கொலை

Posted: 05 Aug 2016 11:59 AM PDT

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னரே, ரியோ நகரில் கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் 400 ரன்கள் குவிப்பு

Posted: 05 Aug 2016 11:58 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 136 ஓவர்களில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

மதேசி போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு: நேபாள அரசு அறிவிப்பு

Posted: 05 Aug 2016 11:57 AM PDT

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மதேசி பிரிவினர் நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கு ஃபெதுல்லா குலென் கண்டனம்

Posted: 05 Aug 2016 11:56 AM PDT

கடந்த மாதம் துருக்கியில் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குத் தூண்டுகோலாக இருந்தததாக கூறி, தனக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்ததற்கு மத போதகர் ஃபெதுல்லா குலென் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சரக்கு போக்குவரத்துக்கு சொந்த விமானம்: அமேஸான் அறிமுகம்

Posted: 05 Aug 2016 11:56 AM PDT

பிரபல இணையதள வர்த்தக நிறுவனமான அமேஸான் சரக்கு போக்குவரத்துக்கென சொந்த விமான சேவையை தொடங்கியுள்ளது.

எல்லா பயங்கரவாத தாக்குதல்களையும் தடுக்க முடிவதில்லை: ஒபாமா கவலை

Posted: 05 Aug 2016 11:55 AM PDT

உலகில் எல்லா பயங்கரவாதத் தாக்குதல்களையும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லையே என்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறினார்.

வங்கதேசம்: ரம்ஜான் தொழுகையில் தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை

Posted: 05 Aug 2016 11:54 AM PDT

வங்கதேசத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகையின்போது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார்.

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: "பெண்களை தெய்வீக அம்சமாக நினைத்துப் போற்றுவோம்'

Posted: 05 Aug 2016 11:52 AM PDT

பெண்களைப் போற்றும் வகையில் நடைபெற்ற "கன்யா வந்தனம்' நிகழ்ச்சியில் "பெண்களை தெய்வீக அம்சமாக நினைத்துப் போற்றுவோம்; அவர்களுக்கு உரிய மரியாதை அளிப்போம்' என சிறுவர்கள் உறுதியேற்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™