Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அனுமதியின்றி பேரணி: பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் 35 பேர் கைது

Posted: 30 Aug 2016 01:24 PM PDT

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி பேரணி சென்றதாக பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இளம் பெண் கழுத்தை நெரித்துக்கொலை; 45 பவுன் நகைகள் கொள்ளை

Posted: 30 Aug 2016 01:23 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள படப்பையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் செவ்வாய்க்கிழமை கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார். மேலும், வீட்டிலிருந்த 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

செங்கல்பட்டு நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மோதல்

Posted: 30 Aug 2016 01:22 PM PDT

செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது.

மடிக்கணினி திருடிய சிறுவன் கைது

Posted: 30 Aug 2016 01:21 PM PDT

காஞ்சிபுரம் அருகே மடிக்கணினியை திருடிய சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

கருவூல உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 30 Aug 2016 01:20 PM PDT

திருவள்ளூர் மாவட்ட கருவூலத்தில் 3 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

Posted: 30 Aug 2016 01:20 PM PDT

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தேமுதிக மாநில மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி

Posted: 30 Aug 2016 01:19 PM PDT

திருவள்ளூரில் விபத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் பல மாதங்களாக இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

2 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீஸில் கணவர் புகார்

Posted: 30 Aug 2016 01:18 PM PDT

மாமல்லபுரம் அருகே 2 குழந்தைகளுடன் தனது மனைவி மாயமானதாக அவரது கணவர் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்று 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 30 Aug 2016 01:18 PM PDT

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், அவசர கால மருத்துவப் பணியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் புதன்கிழமை (ஆக.31) நடைபெறவுள்ளது.

கார் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் சாவு

Posted: 30 Aug 2016 01:17 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.

இருவேறு இடங்களில் விபத்து: இருவர் சாவு

Posted: 30 Aug 2016 01:16 PM PDT

காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கோயில் குளத்தில் பெண் சடலம் மீட்பு

Posted: 30 Aug 2016 01:15 PM PDT

திருவள்ளூர் அருகே கோயில் குளத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

போலி மருத்துவர் கைது

Posted: 30 Aug 2016 01:15 PM PDT

கும்மிடிப்பூண்டி அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

பள்ளிக் கல்வி அமைச்சரானார் மாஃபா கே.பாண்டியராஜன்

Posted: 30 Aug 2016 01:03 PM PDT

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

கிரீமிலேயர் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்

Posted: 30 Aug 2016 01:02 PM PDT

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் உச்சவரம்பை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக புதுச்சேரி அரசும் மனு தாக்கல்

Posted: 30 Aug 2016 01:02 PM PDT

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நிகழ் நீர்ப் பருவ ஆண்டில் 57.052 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.

இனிமேதான் ஜாக்கிரதையா இருக்கணும்..!

Posted: 30 Aug 2016 12:48 PM PDT

பழையன களைதல்

Posted: 30 Aug 2016 12:42 PM PDT

நாடு முழுவதிலும், பதினைந்து ஆண்டுகள் பழைமையான கனரக டீசல் வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும், அந்த வாகனங்கள் சாலையில் ஓடினால் அல்லது நிறுத்தப்பட்டுக் கிடந்தால் அதைப் பறிமுதல் செய்யவும் வகை செய்யும் சட்ட வரைவு, விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவிருக்கிறது.

தாய்மண் உயிர்மண்ணாக வேண்டும்!

Posted: 30 Aug 2016 12:40 PM PDT

"தாய் மண்ணே வணக்கம்' என்றால் "வந்தே மாதரம்' என்றுணர்ந்து நாட்டைக் காக்கும் நாட்டுப்பற்று என்று பொருள் கொண்டு வாழவேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற இந்திய எல்லையில் காவல்புரிந்து வீரமரணத்திற்குத் தயாராகும் ராணுவ வீரர்கள் நாட்டுப்பற்றுக்கு அர்த்தமாகிறார்கள்.

செப்.19-ல் சிஐடியு ஆர்ப்பாட்டம்

Posted: 30 Aug 2016 12:36 PM PDT

கரூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் ஆகியோருக்கு கடந்த இரு மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்புக் குழந்தைகளுக்கு கையடக்கக் கணினியில் பயிற்சி

Posted: 30 Aug 2016 12:36 PM PDT

புற உலக சிந்தனையற்றோர் உள்ளிட்ட சிறப்புக் குழந்தைகளின் தகவல் பரிமாற்ற குறைபாடுகளைக் களைய அவர்களுக்கு கையடக்கக் கணினியில் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு தின  விழிப்புணர்வு ஓவியப்போட்டி

Posted: 30 Aug 2016 12:35 PM PDT

கரூரில் தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

சிறுவாணி நதிநீர் பிரச்னைக்கு திமுகவே காரணம்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

Posted: 30 Aug 2016 12:35 PM PDT

சிறுவாணி நதிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தமே காரணம் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்த திமுக, அதிமுக மீது பழி போடப் பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பூலாம்பாளையம், காதப்பாறை ஊராட்சிகளில் துப்புரவுப் பணி

Posted: 30 Aug 2016 12:35 PM PDT

கரூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் பூலாம்பாளையம், செல்லரப்பாளையம், காதப்பாறை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

வீடுகள்தோறும் கழிப்பறை அவசியம்

Posted: 30 Aug 2016 12:34 PM PDT

கரூர் மாவட்டம், கோம்புப்பாளையம் ஊராட்சி சார்பில் 100 சதவீதம் அனைத்து வீடுகளிலும்,கழிப்பறைகள் கட்டுதல் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி கோம்புப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமுடிவாக்கத்தில் அடுக்குமாடி தொழில் வளாகம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 30 Aug 2016 12:34 PM PDT

சென்னை அருகேயுள்ள திருமுடிவாக்கத்தில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இறால் வளர்ப்பு பயிற்சி முகாம்

Posted: 30 Aug 2016 12:34 PM PDT

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் தருவைக்குளம் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையின் சார்பில், இறால் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் உள் வளாக பயிற்சி  நடைபெற்றது.

"ஆர்.கே.நகரில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா'

Posted: 30 Aug 2016 12:33 PM PDT

ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட தண்டையார்பேட்டையில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்றக் கூட்டம்

Posted: 30 Aug 2016 12:33 PM PDT

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற ஆய்வுக் கூட்டம்  விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு

Posted: 30 Aug 2016 12:33 PM PDT

தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் கோவில்பட்டி கோட்ட மாநாடு நடைபெற்றது.

பேரவையில் இன்று...

Posted: 30 Aug 2016 12:32 PM PDT

பேரவையில் புதன்கிழமை (ஆக.31) கேள்வி நேரத்துக்குப் பிறகு, தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

அமலிநகர் அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Posted: 30 Aug 2016 12:32 PM PDT

திருச்செந்தூர் அமலிநகர் தூய அமலி அன்னை ஆலய திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

"உயர்நீதிமன்ற அரசு கிளை அச்சகத்துக்கு புதிய இயந்திரம்'

Posted: 30 Aug 2016 12:32 PM PDT

சென்னை உயர்நீதிமன்ற அரசு கிளை அச்சகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய இயந்திரம் கொள்முதல் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிறுவாணி விவகாரம்: திமுக -காங்கிரஸ் வெளிநடப்பு

Posted: 30 Aug 2016 12:32 PM PDT

சிறுவாணி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக - காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

வஃக்பு வாரிய சொத்துகளை மீட்க வேண்டும்: பேரவையில் கோரிக்கை

Posted: 30 Aug 2016 12:31 PM PDT

வஃக்பு வாரிய சொத்துகளை மீட்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதம்:-

கயத்தாறு அருகே ரூ.1 லட்சம், நகைகள் திருடிய இளைஞர் கைது

Posted: 30 Aug 2016 12:31 PM PDT

கயத்தாறு அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை மற்றும் ரூ. 1லட்சத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

100-ஆவது நாளில் அதிமுக ஆட்சி: மலர் அலங்காரத்தில் பேரவை மண்டபம்

Posted: 30 Aug 2016 12:31 PM PDT

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்று புதன்கிழமையுடன் (ஆக. 31) நூறு நாள்கள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடும் வகையில், சட்டப்பேரவை மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் அருகே சிறுமி பலாத்கார வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை

Posted: 30 Aug 2016 12:31 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

பேரவை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏன்? பேரவைத் தலைவர் விளக்கம்

Posted: 30 Aug 2016 12:31 PM PDT

பேரவை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுவது ஏன் என்பது தொடர்பாக பேரவைத் தலைவர் ப.தனபால், அவை முன்னவரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

அதிமுக எம்எல்ஏ பேச்சால் திமுகவினர் அமளி

Posted: 30 Aug 2016 12:30 PM PDT

அதிமுக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் பேச்சால், சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி

Posted: 30 Aug 2016 12:30 PM PDT

காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கவிதைப் போட்டி: தூத்துக்குடி மாணவி சிறப்பிடம்

Posted: 30 Aug 2016 12:30 PM PDT

தேசிய அளவிலான கவிதைப் போட்டியில்,  தூத்துக்குடி சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவி தர்ஷினி சிறப்பிடம் பெற்றார்.

தூத்துக்குடியில் மீனவர் மர்மச் சாவு

Posted: 30 Aug 2016 12:29 PM PDT

தூத்துக்குடியில் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரிக்கடலில் மேலடுக்கு சுழற்சி: இன்று மழைக்கு வாய்ப்பு

Posted: 30 Aug 2016 12:29 PM PDT

குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் புதன்கிழமை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவில்பட்டி அரசு நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை

Posted: 30 Aug 2016 12:29 PM PDT

அரிமா இயக்க நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு கிளை நூலகத்தில் 100 மாணவிகளை நூலக உறுப்பினர்களாக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் இன்று செவிப்பறை குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறியும் முகாம் தொடக்கம்

Posted: 30 Aug 2016 12:28 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் செவிப்பறை குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறியும் முகாம் புதன்கிழமை (ஆக.31) தொடங்குகிறது.

உள்ளாட்சித் தேர்தலை தனித்தே சந்திக்க பாஜக விரும்புகிறது

Posted: 30 Aug 2016 12:28 PM PDT

உள்ளாட்சித் தேர்தலை தனித்தே சந்திக்க பாஜக விரும்புகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Aug 2016 12:27 PM PDT

தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித்

Posted: 30 Aug 2016 12:27 PM PDT

தற்போது தான் நடித்துவரும் 2.0 திரைப்படத்துக்குப் பின், மீண்டும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

விநாயகர் சிலை பாதுகாப்புக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Aug 2016 12:27 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டியில் காவல் துறை - விநாயகர் சிலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் சிஐடியூ, ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

Posted: 30 Aug 2016 12:26 PM PDT

விளாத்திகுளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை வாகனம் மீது கார் மோதல்: நடிகர் அருண் விஜய் கைது எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது

Posted: 30 Aug 2016 12:26 PM PDT

சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறை வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் அருண் விஜய் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஆற்றூர் கல்லூரியில் இளம் விஞ்ஞானிகள் தேர்வு முகாம்

Posted: 30 Aug 2016 12:26 PM PDT

குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானிகள் தேர்வுக்கான முகாம் மார்த்தாண்டம் அருகேயுள்ள ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

பி.எட். கலந்தாய்வு: 1,314 இடங்கள் நிரம்பின: 69 பேர் பி.இ. பட்டதாரிகள்

Posted: 30 Aug 2016 12:25 PM PDT

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.) சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு செவ்வாய்கிழமை முடிவடைந்த நிலையில் 1,314 பேர், தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். சேர்க்கை பெற்றவர்களில் 69 பேர் பொறியியல் (பி.இ.) பட்டதாரிகள். இவர்கள் தேர்வு செய்துள்ள கல்லூரிகளில் சேர செப்டம்பர் 2-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சித்திரங்கோடு - சுவாமியார்மடம் சாலைப் பணி: எம்எல்ஏ ஆய்வு

Posted: 30 Aug 2016 12:25 PM PDT

சித்திரங்கோடு - சுவாமியார்மடம் சாலைப் பணியை பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோதங்கராஜ் ஆய்வு செய்தார்.

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்யத் திட்டம்

Posted: 30 Aug 2016 12:25 PM PDT

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

நதிநீர் விவகாரங்கள்: பேரவையில் இன்று தனி தீர்மானத்துக்கு வாய்ப்பு

Posted: 30 Aug 2016 12:23 PM PDT

சிறுவாணி, காவிரி நதிநீர் பிரச்னைகள் தொடர்பாக, சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் புதன்கிழமை கொண்டு வரப்பட இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

குமரி மாவட்ட திருக்குறள் ஆய்வு மையக் கூட்டம்

Posted: 30 Aug 2016 12:23 PM PDT

குமரி மாவட்டத் திருக்குறள் ஆய்வு மையக் கூட்டம் கோட்டாறில் நடைபெற்றது.

சரியான முறையில் சுவாதி கொலை வழக்கு விசாரணை: நீதிமன்றத்தில் போலீஸார் தகவல்

Posted: 30 Aug 2016 12:23 PM PDT

சுவாதி கொலை வழக்கு விசாரணை சரியான முறையில் நடப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர்.

குலசேகரம் அருகே மாணவி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 11 ஆண்டு சிறை

Posted: 30 Aug 2016 12:22 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பி தர தயார்: உயர்நீதிமன்றத்தில் எஸ்ஆர்எம் கல்வி அறக்கட்டளை தகவல்

Posted: 30 Aug 2016 12:22 PM PDT

"வேந்தர் மூவிஸ்' மதன் வசூலித்த ரூ.69 கோடி பணத்தைத் திருப்பி செலுத்துவதற்கு தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஆர்.எம். கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜனதாதள இளைஞரணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Posted: 30 Aug 2016 12:22 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட ஜனதாதளம் இளைஞரணி செயற்குழுக் கூட்டம் மேல்புறத்தில் நடைபெற்றது.

ஒணம் பண்டிகை: முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27% போனஸ்

Posted: 30 Aug 2016 12:21 PM PDT

குமரி மாவட்ட முந்திரி ஆலைத் தொழிலாளர்களுக்கு திருவோணம் பண்டிகையையொட்டி நிகழாண்டு 27 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"கேட்' தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 30 Aug 2016 12:21 PM PDT

"கேட்' (பட்டதாரி நுண்ணறி தேர்வு) 2017 நுழைவுத் தேர்வுக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வாழை சாகுபடியில் தமிழகம் முதலிடம்: ஆட்சியர்

Posted: 30 Aug 2016 12:21 PM PDT

இந்தியாவில் வாழை சாகுபடியில் தமிழகம் முதன்மை வகிக்கிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண்.

நியாயமான விலை நிர்ணயம் கோரி தேங்காய் உடைப்பு போராட்டம்

Posted: 30 Aug 2016 12:21 PM PDT

தேங்காய் கிலோவுக்கு ரூ. 28 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜாவூர் பகுதியில் இயங்கும் கல்குவாரியை மூடாவிட்டால் போராட்டம்: ஆட்சியரிடம் மனு

Posted: 30 Aug 2016 12:19 PM PDT

ராஜாவூர் பகுதியில் செயல்படும் கல்குவாரியை மூடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவிலில ஆகஸ்ட் 31 மின் தடை

Posted: 30 Aug 2016 12:19 PM PDT

நாகர்கோவில் நகர் பகுதியில் புதன்கிழமை(ஆக.31) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பிரதமரைக் குறைகூறுவதில்தான் ஆம் ஆத்மியின் கவனம் உள்ளது: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Posted: 30 Aug 2016 12:18 PM PDT

"தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி பிரதமர் நரேந்திர மோடியைக் குறைகூறுவதில்தான் முழுக்கவனம் செலுத்துகிறது; தில்லி நகரைத் தூய்மையாக பராமரிப்பதில் கவனம் செலுத்துவது இல்லை' என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் 5 நாள்கள் நீடித்த நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ்

Posted: 30 Aug 2016 12:18 PM PDT

நாகர்கோவிலில் நகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து நகர்மன்றத் தலைவர் உள்பட 27 உறுப்பினர்கள் கடந்த 5 நாள்களாக மேற்கொண்டிருந்த உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இடஒதுக்கீட்டை 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் அதாவலே வலியுறுத்தல்

Posted: 30 Aug 2016 12:18 PM PDT

அரசு வேலை மற்றும் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளார்.

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பயங்கரவாத வழக்கு: மத்திய அரசுக்கு சொலிசிட்டர் ஜெனரல் ஆலோசனை

Posted: 30 Aug 2016 12:17 PM PDT

சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் மீதும், அவரது அமைப்பின் மீதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூங்கா திறப்பு

Posted: 30 Aug 2016 12:17 PM PDT

நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

காஷ்மீரின் பதற்ற நிலையைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள்: மெஹபூபா எச்சரிக்கை

Posted: 30 Aug 2016 12:17 PM PDT

காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் இருந்து பிஎஸ்எஃப் வாபஸ்

Posted: 30 Aug 2016 12:17 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள், அந்தப் பணியில் இருந்து செவ்வாய்க்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

"மண் மணம் மாறாத குமரி எழுத்தாளர்கள்'

Posted: 30 Aug 2016 12:17 PM PDT

குமரி மாவட்ட எழுத்தாளர்கள் எங்கு சென்றாலும் அவர்களது மண் மணம் மாறாது என்றார் செம்மொழித் தமிழாய்வு நிறுவன பதிவாளர் முகிலை ராசபாண்டியன்.

ஹரப்பா நாகரிக தோலாவீரா நகரம் சுனாமியால் அழிந்திருக்கலாம்: ஆய்வில் தகவல்

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

குஜராத் மாநிலத்தில் உள்ள ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த தோலாவீரா துறைமுக நகரம், சுனாமி எனும் ஆழிப் பேரலையால் அழிந்திருக்கலாம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மலைக் கிராம பள்ளிகளுக்கு சரிவர பணிக்குச் செல்லாத ஆசிரியர்கள்!

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

மலைக் கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிக்கு ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் சரிவர செல்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் திடீர் மழை

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலில் தவித்து வந்த காஞ்சிபுரம் மக்கள் செவ்வாய்க்கிழமை பெய்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜவ்வாதுமலைப் பகுதியில் ரூ.1.47 கோடி செலவில் சந்தன மரக்கன்றுகள்: ஆட்சியர் தகவல்

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

ஜவ்வாது மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 1.47 கோடி செலவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் சந்தன மரக் கன்றுகள் மறு உற்பத்தி செய்து நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

விளையாட்டுப் போட்டியில் வேலூர் காவலர்கள் சிறப்பிடம்

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

காவலர்களுக்கான மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை, பளு தூக்குதல் போட்டிகளில் வேலூர் மாவட்டக் காவலர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

உ.பி. தேர்தலில் இணைந்து போட்டியிட இடதுசாரிகள் முடிவு

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 6 இடதுசாரிக் கட்சிகள் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

விளையாட்டு ஊக்க உதவித் தொகை பெறத் தகுதியான வீரர்கள் வருகிற செப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

செப்.14-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் செப்.14-ஆம் தேதி நடைபெறுகிறது.

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Posted: 30 Aug 2016 12:16 PM PDT

வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. 

மூப்பனார் நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

அரக்கோணம் நகர தமாகா சார்பில் மூப்பனார் நினைவுதினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விபத்தில் கணவர் சாவு: துக்கத்தில் மனைவி தற்கொலை: சடலம் வர தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியல்

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் வரத் தாமதமானதால் அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொழிலகத்தில் தீ விபத்து, ரசாயன கசிவு பாதுகாப்பு ஒத்திகை

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

ராணிப்பேட்டை ஸ்டால் இந்தியா நிறுவன தொழிலகத்தில் தீ விபத்து மற்றும் ரசாயன கசிவு தடுப்பு, பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் பெரியசாமி பங்கேற்று ஆய்வு ஆலோசனைகள் வழங்கினார்.

ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா கையெழுத்து

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறை முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதிமுகவில் இணைந்த தமாகா இளைஞர் அணியினர்

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த தமாகா இளைஞர் அணியினர் 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனர்.

அடகு கடையின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

வாணியம்பாடியில் அடகு கடையின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி, ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கிணற்றிலிருந்து இளைஞர் சடலம் மீட்பு

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

குடியாத்தம் அருகே காணாமல் போன இளைஞரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

திருட்டு வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

நாட்டறம்பள்ளி பகுதியில் கோயில்களின் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தில்லி அரசின் அதிகாரிகள் மாற்றத்துக்கு பிரதமரே காரணம்: முதல்வர் கேஜரிவால் சாடல்

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசின் அதிகாரிகள் இடமாற்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சாடியுள்ளார்.

"டெங்கு, சிக்குன்குனியா நோய்க்கு மக்கள் பீதி அடைய வேண்டாம்'

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

தலைநகரில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா நோய்க்கு பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

50 ஆண்டுகளில் எய்ம்ஸில் 16 ஆயிரம் விழி வெண்படலம் மாற்று அறுவைச் சிகிச்சைகள்

Posted: 30 Aug 2016 12:15 PM PDT

கடந்த 50 ஆண்டுகளில் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) 16 ஆயிரம் விழி வெண்படலம் மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கண் வங்கித் தலைவர் ஜீவன் எஸ்.திதியாள் தெரிவித்தார்.

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக புதுச்சேரி அரசும் மனு தாக்கல்

Posted: 30 Aug 2016 12:14 PM PDT

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நிகழ் நீர்ப் பருவ ஆண்டில் 57.052 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.

பிர்லா கோயில் அருகே சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க தடை: என்ஜிடி

Posted: 30 Aug 2016 12:14 PM PDT

மத்திய தில்லியிலுள்ள பிர்லா கோயில் அருகே கட்டப்பட்டுள்ள சட்டவிரோத வழிபாட்டு கட்டுமானங்களை இடிக்க ஒரு வார காலத்துக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™