Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Posted: 30 Aug 2016 12:14 PM PDT

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?             ஊரார்கண் படட்டும் படட்டும்             உற்றார்கண் படட்டும் படட்டும்             ஆடவர்கண் படட்டும் படட்டும்   ...

அஜந்தா ஓவியங்கள்

Posted: 30 Aug 2016 09:20 AM PDT

- பழங்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் பாறைகளைக் குடைந்து கோயில்களை அமைத்திருக்கிறார்கள். இவற்றுக்குக் குகைக் கோயில்கள் என்று பெயர். சில குகைக் கோயில்களில் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உளியையும் சுத்தியலையும் மட்டுமே கொண்டு அவை செதுக்கப்பட்டுள்ளன. உட்புறம் உள்ள சுவர்களில் கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. அந்த ஓவியங்கள் பல நூற்றாண்டுகள் ஆகியும்கூட இன்னும் அழியாமல் இருக்கின்றன. மகாராஷ்டிரத்தில் ஒüரங்காபாத்துக்கு 65 மைல் தொலைவில் அஜந்தா என்னும் ஓர் ஊர் இருக்கிறது. ...

அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜீன் வைல்டர் காலமானார்

Posted: 30 Aug 2016 09:15 AM PDT

- அமெரிக்காவின் நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பட இயக்குநரான ஜீன் வைல்டர் (83) நேற்று காலமானார். வில்லி ஆம்ஸ்ட்ராங் சர்க்கிள் தியேட்டர் என்ற டிவி தொடரின் மூலம் அறிமுகமான இவர், மெல் புரூக்ஸின் படத்திற்குப் பிறகு தி புரோடீயூசர்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஸ்டாண்ட் அப் காமெடியனான ரிச்சர்டு ப்ரியருடன் இணைந்து சில்வர் ஸ்ட்ரீக், ஸ்டிர் கிரேஸி, சீ நோ ஈவில், ஹியர் நோ ஈவில் மற்றும் ...

ஐ.நா. நல்லெண்ண தூதரானார் ஐஸ்வர்யா தனுஷ்

Posted: 30 Aug 2016 09:10 AM PDT

-- திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலக நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ், இதன் மூலம் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவார். ஆண், பெண் இருபாலருக்கும் சமமான உலகை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதுதான் இதன் நோக்கமாகும். இதற்கு "பிளானட் 50-50' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ...

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம்

Posted: 30 Aug 2016 09:08 AM PDT

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் 1 ஆம் தேதி விண்ணப்பங்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப். 1) முதல் வைக்கப்படுகிறது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயது ...

பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு

Posted: 30 Aug 2016 08:53 AM PDT

--- பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார் - உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி - தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார் - முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம் - .தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

* எல்லோருக்கும் படி அளப்பவர்

Posted: 30 Aug 2016 06:14 AM PDT

-- தஞ்சை மாவட்டத்தில், பாடல்பெற்ற ஒரு கோயிலுக்கு, பண்டிதமணி கதிரேசன் செட்டியாரும் பேரறிஞர் வேங்கடசாமி நாட்டாரும் சென்று கொண்டிருந்தனர். அந்தக் கோயிலின் வாசற் படிகள் சில உடைந்து காணப்பட்டன. அதைச் குறித்து, "படி இல்லை, படிஇல்லை (அதாவது படிக்கட்டு இல்லை; பார்த்து நடக்க வேண்டும் என்ற கருத்தில்) கூறினார் நாட்டார் அவர்கள். "எல்லோருக்கும் படி அளந்து கொண்டிருக்கும் இறைவனின் கோயிலில் படி இல்லை என்று சொல் கிறீர்கள்!' என்று சொன்னார் பண்டிதமணி. (வாயிற்படி என்றும், உண்பதற்கு படி அளிப்ப தும் ...

என்னத்த சமைச்சிருக்கே!

Posted: 30 Aug 2016 05:04 AM PDT

- – விபத்தில் அடிபட்டவன் குடிக்க தண்ணீர் கேட்டான் மோதிவிட்டு சென்றிருந்தது தண்ணீர் லாரி! – —————————- – ஆவல் – முதல் நாள் முதல் காட்சி தொடங்குவதற்குள் அந்தப் படத்தின் டவுன்லோடு முடிந்திட வேண்டும் என லேப் டாப்பை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான் முருகன் – விகடபாரதி – ————————————– – உள்ளே…வெளியே – என்னத்த சமைச்சிருக்கே! என மனைவியிடம் நொந்து கொண்டான்! முதலாளியிடம் சற்று முன்னர் திட்டு வாங்கி வீடு திரும்பிய ஹோட்டல் மாஸ்டர் – பாஸகர்.எம் – —————————————– – திருட்டு – பள்ளியில் ...

கெஞ்சியது ஒரு குழந்தை!

Posted: 30 Aug 2016 05:03 AM PDT

பலூன் – அம்மா…அப்பா… ஒரே ஒரு பலூன் வாங்கித்தாம்மா அழுத்து குழந்தை அம்மா…அம்மா… ஒரேஒரு பலூன் வாங்கிக்கம்மா கெஞ்சியது ஒரு குழந்தை! – கே.வி.வித்யா – —————————– – இரக்கமின்றி – பட்டணத்து தொழிற்பேட்டைக்கு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது வறண்ட வயல்களின் வழியாக! – ————————— – கோலம் – வீட்டுக்குள் கோலம் கலர் கோலத்தை மிதித்து விட்டு வந்திருந்த குழந்தைகளின் பாதங்கள்! – த.பிரபுகுமாரன் – ————————– – ஆசையாய் – தொட்டுப் பார்த்தே பழுத்து விட்டடது வீட்டுத் தோட்டத்து தக்காளி! – இரா.கமலக்கண்ணன் – ————————————-

பெயர்ச் சொல்லி அழைக்கலாமா?

Posted: 30 Aug 2016 04:45 AM PDT

" ஏன் உங்களை எல்லோரும் பெயர்ச்சொல்லி அழைக்கிறார்கள்? " நான் தான் அப்படி அழைக்கும்படி சொன்னேன். அழைப்பதற்காகத்தானே பெயர் இருக்கிறது. ஒரு சிறுமி என்னை பெயர்ச் சொல்லி அழைக்கும்போது, அந்தச் சிறுமியின் வயதுடையவளாகவே நான் ஆகிவிடுகிறேன். அந்த ஆனந்தம் எனக்குத் தேவையாக இருக்கிறது. அது கொடுக்கும் புத்துணர்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அம்மா, அப்பா, கணவன் ஆகியோர் மட்டுமே வழக்கமாகப் பெயர்ச் சொல்லி அழைப்பார்கள். என் வாழ்வில் இவர்கள் அனைவரையும் நான் வரிசையாக இழந்துவிட்டேன். என் பெயரையும் நான் இழக்கக் ...

மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Posted: 30 Aug 2016 04:25 AM PDT

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் மாநில சட்டசபைத்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி நேற்று தாக்கல் செய்தார். மேற்கு வங்காளத்தின் பெயர் வங்காள மொழியில் 'பங்களா' என்றும், ஆங்கிலத்தில் 'பெங்கால்' என்றும், இந்தியில் 'பங்கால்' என்றும் மாற்றப்படுவதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. குரல் ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு 189 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், 31 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால், தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் ...

வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும் – கிருபானந்த வாரியார்

Posted: 30 Aug 2016 04:13 AM PDT

வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும். அது உள்ளன்போடு செய்வதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மையிருப்பவர்கள் தோற்க மாட்டார்கள். வழிபாட்டில் பலன் கிட்டவில்லையாயின் வழிபாட்டை உண்மையுடன் செய்யவில்லை என்று உணர வேண்டும். • நலம் என்றால் என்ன பொருள்? உண்பதுவா? உறங்குவதுவா? மனைவி மக்களுடன் வாழ்வதுவா? இல்லை. தெய்வ உணர்ச்சி ஒன்றுதான் நலம். ஒன்றைப் பெற்றால் நலம் என்பது உலகியல்; எல்லாவற்றையும் இழப்பது நலம் என்பது அருளியல். • எந்தத் தருமத்தையும் செய்ய முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தாக விடாய் கொண்டவனுக்குத் ...

பங்குசந்தை-30/8/2016

Posted: 30 Aug 2016 03:54 AM PDT

30/8/2016 நேற்றைய நிப்டி 37 புள்ளிகள்    உயர்வுடன் 8607 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள்  உயர்வுடன்  நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள்  உயர்வுடன்    வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8637 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது. முக்கிய பங்குச் சந்தையான என்எஸ்இ, பிரமிட் சாய்மீரா உள்ளிட்ட 20 பங்குகளை வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் வர்த்தகத்தில் இருந்து நீக்குகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது தொழில்களை மூடும் திட்டத்தில் ...

பசுவை ஓட்டிச்செல்

Posted: 30 Aug 2016 03:27 AM PDT

கோவிந்தன் என்னும் அரசு அலுவலர் ஒருவர் வசித்து வந்தார். அவருடைய வீட்டிற்கு அடுத்த வீட்டில் புலவர் ஒருவர் இருந்தார். இருவருக்கும் சிறுபகை. பேசுவதில்லை. ஒருநாள், அலுவலர் கோவிந்தனுடைய பசு புலவருடைய தோட்டத்தில் புகுந்து மேய்ந்தது. புலவர் அதைப் பிடித்துக் கட்டி வைத்தார். கோவிந்தனுடைய வேலையாள் பசுவை ஒட்டிவரச் சென்ற போது,புலவர் அதைவிட மறுத்து விட்டார். சிறிது நேரத்திற்குப்பின், பசுவை அவிழ்த்துக் கொண்டு கோவிந்தன் வீட்டு வாசலுக்குச் சென்று, கோவிந்தா, கோவிந்தா' என்று கூப்பிட்டாள் புலவர். எதிர் ...

நலம் 360 - சித்த மருத்துவர் கு.சிவராமன்

Posted: 30 Aug 2016 12:41 AM PDT


நூல் பெயர் - நலம் 360

எழுத்தாளர் - சித்தமருத்துவர் கு.சிவராமன்
பதிவிறக்க
[noguest]நலம் 360-கு.சிவராமன்[/noguest]

இயக்குனர் விக்ரம் குமாருக்கு செப்டம்பர்-4 திருமணம்: காதலியை மணக்கிறார்

Posted: 30 Aug 2016 12:37 AM PDT

- தமிழில் யாவரும் நலம், 24 படங்களை இயக்கிய விக்ரம் குமாருக்கு வரும் செப்டம்பர் 4 திருமணம் நடக்கிறது. தனது காதலி ஸ்ரீநிதியை அவர் திருமணம் செய்கிறார். ஸ்ரீநிதி ரஹ்மானிடம் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிகிறவர். 24 படத்துக்கு ரஹ்மான்தான் இசை. அப்போது ரஹ்மான் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்த விக்ரம் குமாருக்கு ஸ்ரீநிதியுடன் நட்பு ஏற்பட்டது. படம் வெளியான போது அது காதலாக மலர்ந்து, இப்போது திருமணத்தில் முடிய உள்ளது. இருவீட்டார் சம்மதத்துடன் செப்டம்பர் 4 -ஆம் தேதி சென்னையிலுள்ள நட்சத்திர ...

ஸ்டிக்கர் பொட்டு வேண்டாமே…!

Posted: 29 Aug 2016 10:25 PM PDT

எது நாகரீகம்...?

Posted: 29 Aug 2016 08:51 PM PDT

* நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ???? – * எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கினாங்க ??? – * அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய வளத்தாங்களா??? – * எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ??? …. – எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ...

குறள் 918

Posted: 29 Aug 2016 07:05 PM PDT

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... http://www.panguvarthagaulagam.blogspot.in/ குறள் 918 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. உரை: வஞ்சக எண்ணங்கொண்ட பொதுமகள் ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்று கூறுவார்கள். Translation: As demoness who lures to ruin woman's treacherous love To men devoid of wisdom's searching power will prove. Explanation: The ...

செப்டம்பர் வந்தா பதினாறு முடிஞ்சி பதினைஞ்சு தொடங்குது...!

Posted: 29 Aug 2016 04:48 PM PDT

- உங்க வயசு என்ன? - நடிகை: செப்டம்பர் வந்தா பதினாறு முடிஞ்சி பதினைஞ்சு தொடங்குது...! - சாயம் வெ.ராஜாராமன் - --------------------------------------- - சொந்த வீடு கட்ட சோதிடம் பார்க்கப் போனியே என்ன ஆச்சு? - என்னோட ஜாதகத்திலே குருவுக்கே சொந்த வீடு இல்லாமல் ராகு வீட்டில் இருக்கிறாராம்! - சத்தியமூர்த்தி - ------------------------------------- - அதிசயமா இருக்கே! திருட்டு போன மறு நிமிடமே விசாரிக்க போலீஸ் வந்துருச்சே! - யோவ் திருட்டுப் போனதே அவர் வீட்டில்தானய்யா..! - க.சங்கர் - -------------------------------------------

சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி அறிமுகம்

Posted: 29 Aug 2016 04:42 PM PDT

- டிரைவர் இல்லாத காரை சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னமும் அமெரிக்காவில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்ப டுத்தப்பட்டுவிட்டது. உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான். கூகுள் நு டோனோமி (Nu Tonomy) என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் இந்நிறுவன செயலியை (App) ...

மெக்ஸிகன் பிரபல பாடகர் காலமானார்

Posted: 29 Aug 2016 04:29 PM PDT

- மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகன் புகழ்பெற்ற பாடகர் ஜூவான் கேபிரியல் நேற்று நள்ளிரவில் (28 ம்தேதி ) காலமானார். கலிபோர்னியாவில் இயற்கை மரணம் எய்த அவருக்கு வயது 66. லத்தீன் நாட்டு மொழி பாடலாசிரியர்களில் இவரும் பலரது மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் ஆவார். இவரது இசைக்கச்சேரி ஆடல் பார்க்க ரசிக்க மக்கள் பெரும் கூட்டமாக கூடுவர். இவரது பாடலின்போது மக்களும் இவருக்கு பின் பாடி மகிழ்வர். மெக்ஸிகன் நாட்டு அதிபர் என்ரிக் பெனா , கேப்ரியல் மறைவு குறித்துதனது டுவிட்டரில்; நமது நாட்டின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™