Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இது அரசியல், ஜாதியல்ல!

Posted: 03 Aug 2016 01:30 PM PDT

தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் ஒவ்வொரு ஆடி மாத வெள்ளிக்கிழமையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழக்கம். அண்மைக்காலமாக இந்த விழாக்களில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்படுவதும் வழக்கமான சம்பவமாக மாறிக்கொண்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கையும் சர்ச்சைகளும்

Posted: 03 Aug 2016 01:29 PM PDT

மத்திய பா.ஜ.க. அரசால் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிட அமைக்கப்பட்டுள்ள குழு ஒருவருட கால அவகாசத்தில் மொத்தம் 72,000 பேரிடம் ஆலோசனை பெற்று புதிய கல்விக் கொள்கைகளுக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

நாம் ஏன் கடைப்பிடிப்பதில்லை?

Posted: 03 Aug 2016 01:28 PM PDT

இலத்தீன் மொழியில் "சட்டம் பெருகின் குற்றம் பெருகும்' என்று ஒரு சொலவடை உண்டு. இந்தியச் சூழலில் அதிலும் குறிப்பாகத் தமிழகச் சூழலில் இம்மொழி பெரிதும் பொருந்துமோ என்று கருதவேண்டி உள்ளது.

தமிழகம் மின்மிகை மாநிலமா? திமுக- அதிமுக காரசார விவாதம்

Posted: 03 Aug 2016 01:24 PM PDT

தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறதா என்பது தொடர்பாக, திமுக எம்எல்ஏ ப.ரங்கநாதனும், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணியும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உறுதி

Posted: 03 Aug 2016 01:24 PM PDT

அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறினார்.

திமுக ஆட்சியில் மின்துறை குட்டிச்சுவராகிவிட்டது: முதல்வர் ஜெயலலிதா

Posted: 03 Aug 2016 01:23 PM PDT

திமுக ஆட்சியில் மின் துறையையே குட்டிச்சுவராக்கிவிட்டனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

பேரவை நிகழ்ச்சிகளை கவனிக்க டி.வி. வசதிக்கு எதிர்ப்பு: திமுக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி - வெளிநடப்பு

Posted: 03 Aug 2016 01:23 PM PDT

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைக் கவனிக்க அதிகாரிகளுக்கு தொலைக்காட்சி வசதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் இன்று...

Posted: 03 Aug 2016 01:22 PM PDT

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை (ஆக. 4) நெடுஞ்சாலைகள்-சிறு துறைமுகங்கள், பொதுப்பணி (கட்டடம்-பாசனம்) ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

முதல் முறையாக நிகழ்வுகளை முடிக்காமல் பேரவை முடித்துவைப்பு

Posted: 03 Aug 2016 01:21 PM PDT

சட்டப் பேரவை வரலாற்றில் ஒரு நாளின் நிகழ்ச்சிகளை முடிக்காமல் அவை முடித்து வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

4.1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு எப்போது? அமைச்சர் பதில்

Posted: 03 Aug 2016 01:21 PM PDT

4.1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு எப்போது வழங்கப்படும் என்ற திமுகவின் கேள்விக்கு "இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது' என அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

5 ஆண்டில் 8,432 மெகாவாட் மின்சாரம்

Posted: 03 Aug 2016 01:20 PM PDT

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8,432 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாகப் பெற்று வருகிறோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

பதில் அளிக்க முடியாமல் திமுகவினர் வெளிநடப்பு

Posted: 03 Aug 2016 01:20 PM PDT

பதில் அளிக்க முடியாமல் திமுகவினர் வெளிநடப்பு செய்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 03 Aug 2016 01:01 PM PDT

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில், ஒன்றிய அதிமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொலை மிரட்டல்: கிரானைட் கடை ஊழியர் கைது

Posted: 03 Aug 2016 01:00 PM PDT

போடி அருகே வேலை கேட்டு சென்றவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கிரானைட் கடை ஊழியரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பத்திர எழுத்தர் கடைகளில் தீ விபத்து

Posted: 03 Aug 2016 12:59 PM PDT

வடமதுரையில் உள்ள 4 பத்திர எழுத்தர் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

தென் மாவட்ட திரைப்பட, சின்னத்திரை வர்த்தக சங்க விழா

Posted: 03 Aug 2016 12:59 PM PDT

ஆண்டிப்பட்டியில், தென்மாவட்ட திரைப்படம் மற்றும் சின்னத்திரை வர்த்தக சங்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இளம் விஞ்ஞானிகள் விருது: ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

Posted: 03 Aug 2016 12:58 PM PDT

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கம்பம் நகராட்சி குடிநீர்த் திட்ட சீரமைப்பு பணி விரைவில் முழுமையடையுமா?

Posted: 03 Aug 2016 12:58 PM PDT

கம்பம் நகராட்சி- லோயர்கேம்ப் குடிநீர்த் திட்ட சீரமைப்பு மற்றும் புதிய பிரதான குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

Posted: 03 Aug 2016 12:57 PM PDT

ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரள வாழ் தமிழர் குழந்தைகள் மேல் படிப்பை தொடர்வதில் சிக்கல்

Posted: 03 Aug 2016 12:57 PM PDT

போடியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் கேரள வாழ் தமிழர் குழந்தைகள், பிளஸ் 1 வகுப்பில் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 15 பேருக்கு ஆணை

Posted: 03 Aug 2016 12:56 PM PDT

திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் பெற்ற 14 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மழைநீர் சேமிப்பு அமைப்புகளை புனரமைக்க அரசு உத்தரவு

Posted: 03 Aug 2016 12:56 PM PDT

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் நிறுவப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஆய்வு செய்து புனரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டியில் ஆகஸ்ட் 5 மின் தடை

Posted: 03 Aug 2016 12:55 PM PDT

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.5) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம்

Posted: 03 Aug 2016 12:55 PM PDT

தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்டத்தின் கீழ் 5 இடங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

ஆராய்ச்சிப் பணிகளுக்கு தமிழக மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Posted: 03 Aug 2016 12:54 PM PDT

ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகளுக்கு தமிழக மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் தெரிவித்தார்.

திண்டுக்கல் இளைஞர் கொன்று புதைக்கப்பட்டதாக சந்தேகம்: மரபணு சோதனைக்காக நெல்லையில் சடலம் தோண்டி எடுப்பு

Posted: 03 Aug 2016 12:54 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கொன்று புதைக்கப்பட்டதாக எழுந்த சந்தேகத்தையடுத்து, திருநெல்வேலியில் புதைக்கப்பட்டிருந்த ஓர் இளைஞரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்காக செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

கொடைக்கானலில் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 03 Aug 2016 12:53 PM PDT

கொடைக்கானலில் பலாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தடையை மீறி நெகிழிப் பைகள் விற்பனை

Posted: 03 Aug 2016 12:53 PM PDT

திருவள்ளூர் நகரில் உள்ள கடைகளில் தடையை மீறி, நெகிழி  (பிளாஸ்டிக்) பைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஓய்வூதியதாரர்கள் கூட்டம்: ரூ. 39.28 லட்சம் நிதியுதவி   

Posted: 03 Aug 2016 12:52 PM PDT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 39.28 லட்சம் நிதியுதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 03 Aug 2016 12:52 PM PDT

காஞ்சி மேற்கு மாவட்டம், உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

Posted: 03 Aug 2016 12:51 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வாயலூர் பகுதியினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையைப் பராமரிக்க மகளிர் சுயஉதவிக் குழுக்கள்: நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

Posted: 03 Aug 2016 12:50 PM PDT

காஞ்சிபுரத்தில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க மகளிர் சுய உதவிக் குழுவினரைப் பயன்படுத்தலாம் என்று காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கம்பன் கழக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா

Posted: 03 Aug 2016 12:50 PM PDT

மதுராந்தகம் கம்பன் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா  இந்து மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பெ.லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதில் ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு விழாவையொட்டி "ராமாயணமும், ராமானுஜரும்' என்ற நூலை ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். நல்லாசிரியர் விருது பெற்ற நா.சுப்பிரமணியன், ராஜகோபாலசாரியார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மண்ணுளிப் பாம்பு கடத்தல்: 3 பேர் கைது

Posted: 03 Aug 2016 12:49 PM PDT

ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு மண்ணுளிப் பாம்பை கடத்திய 3 பேரை கனகம்மாசத்திரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

வீட்டு மனைப் பட்டா கோரி இருளர் சமுதாய மக்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 03 Aug 2016 12:49 PM PDT

திருவள்ளூர் அருகே உள்ள ஐவேலி அகரம் கிராமத்தில் வசித்து வரும் இருளர் சமுதாய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: போராட்டத்தால் ஒத்திவைப்பு

Posted: 03 Aug 2016 12:48 PM PDT

ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பொதுமக்கள், வியாபாரிகளின் போராட்டத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

தொழிலாளர் நல அலுவலரை நியமிக்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

Posted: 03 Aug 2016 12:48 PM PDT

தொழிலாளர் நல வாரிய பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் முடங்கியுள்ளதால் மாவட்டத் தொழிலாளர் நல அலுவலரை நியமிக்க வேண்டும் என சிஐடியு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே: கோயில் திருவிழாவில் மோதல்: போலீஸார் குவிப்பு

Posted: 03 Aug 2016 12:36 PM PDT

கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்டோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அபாய நிலையிலான வெப்பத்தில் இந்தியப் பெருங்கடல்: தேசிய கடல் தகவல் மைய இயக்குநர் தகவல்

Posted: 03 Aug 2016 12:35 PM PDT

இந்தியப் பெருங்கடல் மிக அதிகமாக வெப்பமடைந்து வருகிறது. இது வெப்பத்தை தன்னுள் வைத்துகொள்ளாமல் வெளிப்படுத்தினால், ஆசிய நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும் என தேசிய கடல் தகவல் சேவை மைய இயக்குநர் எஸ்.சதீஷ் சந்திர ஷெனாய் கூறினார்.

அமலாபாலை பிரிந்தது ஏன்? கணவர் ஏ.எல்.விஜய் விளக்கம்

Posted: 03 Aug 2016 12:34 PM PDT

நம்பிக்கை, நேர்மை ஆகிய இரு குணங்களும் உடைந்த பிறகு திருமண வாழ்வைத் தொடர்ந்தால் அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது என்று இயக்குநரும் நடிகை அமலாபாலின் கணவருமான ஏ.எல்.விஜய் கூறினார்.

துணை மருத்துவப் படிப்பு: விண்ணப்பம் பெற இன்று கடைசி

Posted: 03 Aug 2016 12:34 PM PDT

துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை கடைசியாகும்.

சட்டவிரோதமாக கிரானைட் விற்பனை: 3 நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: அரசுக்கு ரூ.120 கோடி இழப்பு என தகவல்

Posted: 03 Aug 2016 12:33 PM PDT

மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி விற்கப்பட்ட வழக்கில், பி.ஆர்.பி.கிரானைட் உள்ளிட்ட 3 நிறுவனங்களால் அரசுக்கு ரூ. 120.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை 1,629 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: பொன்முடிக்கு நீதிபதி கண்டிப்பு

Posted: 03 Aug 2016 12:32 PM PDT

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு, நீதிபதி கண்டிப்பு தெரிவித்தார். அடுத்த விசாரணைக்கு அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நெடுஞ்சாலைகள் வழியாக கெயில் திட்டம்: மக்களவையில் அதிமுக கோரிக்கை

Posted: 03 Aug 2016 12:31 PM PDT

தமிழகத்தில் கெயில் எரிவாயுத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக புதன்கிழமை வலியுறுத்தியது.

சட்டவிரோத தொலைபேசி உரையாடல் பதிவு: விதிகளைக் கடுமையாக்கியுள்ளதாக அமைச்சர் தகவல்

Posted: 03 Aug 2016 12:29 PM PDT

சட்டவிரோதமாக தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வது, ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசிய எண்களின் விவரத்தைப் பெறுவது போன்றவற்றைத் தடுக்க விதிகளைக் கடுமையாக்கியுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

பிரிட்டனில் நுழைவு இசைவு விதிகளில் திருத்தம்: இந்தியாவின் கவலை பகிரப்பட்டதாக அமைச்சர் தகவல்

Posted: 03 Aug 2016 12:29 PM PDT

பிரிட்டன் அரசு நுழைவு இசைவு (விசா) விதிகளில் திருத்தம் செய்திருப்பது குறித்து இந்தியா தனது கவலையை அந்நாட்டிடம் உரிய முறையில் தெரிவித்ததாக மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

அருணாசலப் பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்: 10 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு

Posted: 03 Aug 2016 12:28 PM PDT

அருணாசலப் பிரதேச மாநில அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 10 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கோவா முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவைத் தலைவர் ஏற்பு

Posted: 03 Aug 2016 12:28 PM PDT

கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை, பேரவைத் தலைவர் ஆனந்த் ஷேத் புதன்கிழமை ஏற்றுக் கொண்டார்.

வேலையின்றி சிக்கித் தவிப்பு: இந்தியர்களுக்கு உதவி செய்ய சவூதி அரேபிய அரசு சம்மதம்

Posted: 03 Aug 2016 12:27 PM PDT

சவூதி அரேபியாவில் வேலையின்றி சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு உதவி செய்ய அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

திரிசூலத்தில் நீண்ட தூர ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

Posted: 03 Aug 2016 12:27 PM PDT

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்தில் நீண்ட தூர விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

நாடாளுமன்ற வளாகத்தை விடியோ எடுத்த விவகாரம்: விசாரணைக் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Posted: 03 Aug 2016 12:27 PM PDT

நாடாளுமன்ற வளாகத்தை ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. பகவந்த் மான் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய விவகாரம் தொடர்பாக, மக்களவை விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை மேலும் 2 வார காலம் நீட்டித்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்: மாநிலங்களவையில் தகவல்

Posted: 03 Aug 2016 12:26 PM PDT

இந்தியாவில் வரும் ஆண்டுகளில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரி

நேபாள நிலச்சரிவில் சிக்கித் தவித்த 10 தமிழர்கள் இன்று தில்லி வருகை

Posted: 03 Aug 2016 12:26 PM PDT

ஆன்மிகச் சுற்றுலாவுக்காக நேபாளம் சென்று அங்கு நிலச்சரிவில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 19 பேரும் வியாழக்கிழமை தில்லி திரும்புகின்றனர். அவர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வர மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனந்தி பென் படேல் ராஜிநாமா ஏற்பு: குஜராத் புதிய முதல்வர் குறித்து அமித் ஷா இன்று ஆலோசனை

Posted: 03 Aug 2016 12:25 PM PDT

குஜராத் முதல்வர் பதவியை ஆனந்தி பென் படேல் புதன்கிழமை முறைப்படி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வரைத் தேர்வு செய்துவது குறித்து அந்த மாநில எம்எல்ஏக்களுடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வியாழக்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஜாகிர் நாயக் அறக்கட்டளைக்கு பங்கு: சிவசேனை எம்.பி. குற்றச்சாட்டு

Posted: 03 Aug 2016 12:24 PM PDT

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் மதப்போதகர் ஜாகிர் நாயக் நடத்தி வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று சிவசேனைக் கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டினார்.

சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம்

Posted: 03 Aug 2016 12:24 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, தில்லி ராணுவ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சுட்டுரையில் இணைந்தது ஊழல் கண்காணிப்பு ஆணையம்

Posted: 03 Aug 2016 12:21 PM PDT

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் இணைந்துள்ளது. சிவிசி-யின் சுட்டுரைப் பக்கத்தைப் பின்தொடர விரும்புபவர்கள், ஃஇயஇஐய்க்ண்ஹ என்ற பெயரில் உள்ள பக்கத்தைப் பின்தொடரலாம்.

"மானியங்களுக்காக ஆதார் அட்டை பயன்பாடு: முதல்வர்களின் யோசனை'

Posted: 03 Aug 2016 12:20 PM PDT

மானியங்களை வழங்குவதற்காகவும், அரசின் சேவைகளை அளிப்பதற்காகவும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று, தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தில், மாநில முதல்வர்கள் யோசனை தெரிவித்ததாக, மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

தாய்-மகள் பலாத்கார விவகாரம்: மாநிலங்களவையில் காங்கிரஸ்-சமாஜவாதி எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம்

Posted: 03 Aug 2016 12:20 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சஹாரில் அண்மையில் தாயும், மகளும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரிட்டனின் அறிவார்ந்த குழந்தை விருது

Posted: 03 Aug 2016 12:17 PM PDT

பிரிட்டனில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளிச் சிறுமிக்கு "பிரிட்டனின் அறிவார்ந்த குழந்தை' விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கட்சித் தாவல் தடை சட்டம் குறித்த தீர்ப்பு: மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 03 Aug 2016 12:15 PM PDT

கட்சித் தாவல் தடை சட்டம் குறித்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

ரயில் பயணக் கட்டண வருவாய் 10 சதவீதம் குறைந்தது: மக்களவையில் தகவல்

Posted: 03 Aug 2016 12:15 PM PDT

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், ரயில் பயணியர் கட்டணங்களின் மூலம் ஈட்டப்படும் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதை விட 9.97 சதவீதம் குறைந்துள்ளதாக, மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர் போராட்டம்

Posted: 03 Aug 2016 12:14 PM PDT

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 3-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டது.

ரியோ ஒலிம்பிக் 2016 ஒலிம்பிக் அட்டவணை

Posted: 03 Aug 2016 12:12 PM PDT

ரியோ ஒலிம்பிக் 2016 ஒலிம்பிக் அட்டவணை

பல்பீர் சிங்கின் கடைசி ஆசை

Posted: 03 Aug 2016 12:11 PM PDT

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வெல்வதைப் பார்க்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் (91) தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தீபம் ஏற்ற பீலேவுக்கு அழைப்பு

Posted: 03 Aug 2016 12:10 PM PDT

மரக்காணா மைதானத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற வருமாறு கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அழைப்பு விடுத்துள்ளது போட்டி ஏற்பாட்டுக் குழு.

தரம்வீர் சிங் கனவை கலைத்தது ஊக்கமருந்து?

Posted: 03 Aug 2016 12:10 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றிருந்த இந்தியாவின் தரம்வீர் சிங் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நர்சிங் யாதவுக்கு அனுமதி

Posted: 03 Aug 2016 12:09 PM PDT

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு அனுமதியளித்துள்ளது சர்வதேச மல்யுத்த சம்மேளனம்.

ஆட்டோ ஓட்டும் முன்னாள் ஒலிம்பியன்

Posted: 03 Aug 2016 12:08 PM PDT

ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக சைக்கிளிங் பிரிவில் பங்கேற்ற முன்னாள் ஒலிம்பியன் ஒருவர், தற்போது லாகூரில் ஆட்டோ ஓட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

3 பிரிவுகளில் களமிறங்கும் நடால்

Posted: 03 Aug 2016 12:00 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளில் களமிறங்குகிறார் ஸ்பெயினின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால்.

10-ஆவது இடத்தில் விஜேந்தர் சிங்

Posted: 03 Aug 2016 11:58 AM PDT

இந்தியாவின் தொழில்முறை குத்துச் சண்டை வீரரான விஜேந்தர் சிங், சர்வதேச தரவரிசையில் 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிப்ரவரியில் இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் போட்டி

Posted: 03 Aug 2016 11:58 AM PDT

இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறுகிறது.

வெற்றியை நோக்கி இந்தியா

Posted: 03 Aug 2016 11:58 AM PDT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை நெருங்கியிருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து-244/7

Posted: 03 Aug 2016 11:57 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்தது.

மகாராஷ்டிரம்: பாலம் இடிந்து விழுந்து 2 பேர் பலி: 20 பேரை காணவில்லை

Posted: 03 Aug 2016 11:55 AM PDT

மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தின் மஹாட் பகுதி அருகே மும்பை-கோவா நெடுஞ்சாலையில் ஆங்கிலேயர் காலத்துப் பாலம் இடிந்து விழுந்ததில் சாவித்ரி ஆற்றுக்குள் 2 பேருந்துகள் கவிழ்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில், 2 பேர் உயிரிழந்தனர்; 20 பேரை காணவில்லை.

காஷ்மீரில் சுதந்திரப் போராட்ட அலை உருவாகியுள்ளது

Posted: 03 Aug 2016 11:54 AM PDT

காஷ்மீரில் சுதந்திரப் போராட்டத்துக்கான புதிய அலை உருவாகியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து சென்ற விமானம் துபையில் அவசரத் தரையிறக்கம்: 226 இந்தியர்கள் உள்பட 300 பேர் உயிர் தப்பினர்

Posted: 03 Aug 2016 11:54 AM PDT

இந்தியாவிலிருந்து சென்ற, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் துபையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஜப்பான் கடல் பகுதியில் வட கொரியா ஏவுகணை வீச்சு

Posted: 03 Aug 2016 11:53 AM PDT

ஜப்பான் கடல் பகுதியில் வட கொரியா ஏவுகணை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்கள் புகுந்து செல்லக்கூடிய பேருந்து! சீனாவில் சோதனை ஓட்டம்

Posted: 03 Aug 2016 11:52 AM PDT

கார்களுக்கு அடிப் பகுதி வழியாக வழி விடும் அளவுக்கு உயரமான பேருந்தின் சோதனை ஓட்டம் சீனாவில் நடத்தப்பட்டது.

நேபாளம்: பிரசண்டா மீண்டும் பிரதமராகத் தேர்வு

Posted: 03 Aug 2016 11:52 AM PDT

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சித் தலைவர் பிரசண்டா புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பர்ஹான் வானியை புகழ்ந்திருப்பது பாகிஸ்தானின் பயங்கரவாதப் பற்றையே காட்டுகிறது: மத்திய அரசு

Posted: 03 Aug 2016 11:51 AM PDT

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்ஹான் வானிக்கு புகழாரம் சூட்டியிருப்பதன் மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாதப் பற்று வெளிப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

பாகிஸ்தான்: பாடத்திட்டத்தில் "ஜிஹாத்': மத அமைப்பு வலியுறுத்தல்

Posted: 03 Aug 2016 11:50 AM PDT

பாகிஸ்தானின் பள்ளிப் பாடத்திட்டத்தில் மதப் போரின் அவசியத்தை வலியுறுத்தும் வசனங்களை சேர்க்க வலியுறுத்தி, அந்த நாட்டின் "இஸ்லாமிய சிந்தாந்தக் கவுன்சில்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

லிபியா: தற்கொலை கார் குண்டு தாக்குதலில் 23 பேர் பலி

Posted: 03 Aug 2016 11:50 AM PDT

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரான பெங்காஸியில், செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: 40 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்: ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்பு

Posted: 03 Aug 2016 11:49 AM PDT

சென்னை மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் 8-ஆவது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் மாணவர்களுக்கு புதன்கிழமை (ஆக.3) பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 03 Aug 2016 11:49 AM PDT

பாரத பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏழை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பப் பயிற்சி: விஐடி - தனியார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 03 Aug 2016 11:48 AM PDT

பொருளாதாரத்தில் பின்தங்கிய பட்டதாரி மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி, வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புரிதல் ஒப்பந்தம் விஐடி பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.

தனியார் நிறுவனத்தில் திருட்டு: இருவரிடம் போலீஸார் விசாரணை

Posted: 03 Aug 2016 11:48 AM PDT

மேல் விஷாரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்ட வழக்கில், போலீஸார் இரு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாதனூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 03 Aug 2016 11:48 AM PDT

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த மாணவி சாவு

Posted: 03 Aug 2016 11:47 AM PDT

ராணிப்பேட்டை சிப்காட் அருகே அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் புதன்கிழமை தவறி விழுந்து மாணவி உயிரிழந்தார்.

இளைஞருக்கு கத்தி வெட்டு: டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

Posted: 03 Aug 2016 11:47 AM PDT

ராணிப்பேட்டையில் இளைஞரை கத்தியால் வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Aug 2016 11:46 AM PDT

வேலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம்

Posted: 03 Aug 2016 11:46 AM PDT

காவேரிப்பாக்கத்தை அடுத்த வேகாமங்கலம் கிராமத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அம்மன் கோயிலில் நகை, உண்டியல் திருட்டு

Posted: 03 Aug 2016 11:45 AM PDT

வாணியம்பாடி அருகே அம்மன் கோயிலில் நகை, உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஆகஸ்ட் 4 மின் தடை

Posted: 03 Aug 2016 11:45 AM PDT

இந்தியாவில் புற்று நோய்  பாதிப்பு அதிகரிக்கும்: மாநிலங்களவையில் தகவல்

Posted: 03 Aug 2016 11:43 AM PDT

இந்தியாவில் வரும் ஆண்டுகளில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

மானேசர் என்எஸ்ஜி முகாமுக்குள் மர்ம நபர்கள் இரு முறை ஊடுருவல்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

Posted: 03 Aug 2016 11:43 AM PDT

ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள தேசியப் பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) முகாமில் கடந்த ஆண்டு ஒரு முறையும், நிகழாண்டில் ஒரு முறையும் மர்ம நபர்கள் ஊடுருவியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாபநாசத்தில் 2 விரைவு ரயில்கள் நாளை முதல் நிற்க நடவடிக்கை: அதிமுக எம்பிக்கு ரயில்வே அமைச்சர் கடிதம்

Posted: 03 Aug 2016 11:43 AM PDT

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் இரு விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) முதல் ஆறு மாதங்களுக்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் வழியாக கெயில் திட்டம்: மக்களவையில் அதிமுக கோரிக்கை

Posted: 03 Aug 2016 11:43 AM PDT

தமிழகத்தில் கெயில் எரிவாயுத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக  செயல்படுத்த  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக புதன்கிழமை வலியுறுத்தியது.

திரிசூலத்தில் நீண்ட தூர ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

Posted: 03 Aug 2016 11:43 AM PDT

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்தில் நீண்ட தூர விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

தில்லி முதல்வரின் இல்லத்தைச் சுற்றி  144 தடை உத்தரவு

Posted: 03 Aug 2016 11:43 AM PDT

தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாதம் இறுதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™