ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சந்தோஷ தூறல்!
- அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!
- திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் துபாயில் தரையிறங்கிய போது விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
- வீட்டுக் குறிப்புகள்
- எரித்து கொல்லப்பட்ட மாணவி நவீனா குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
- அவருக்கு எப்பவும் பறந்த மனசு…!
- கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி. உள்பட 3 நிறுவனங்கள் மீது 1158 பக்கங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
- விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்
- அமெரிக்காவில் போக்கிமோன் கோ விளையாட்டு ஆர்வத்தில் குழந்தையை தனியாக தவிக்க விட்டு சென்ற தம்பதி கைது
- தலைவர் ஹைடெக்கா மாறிட்டார்...!!
- இந்த வருஷம் ரெண்டு கிலோ அதிகம் படிச்சிருக்கேன்..!!
- படித்தால்தான் அரங்கேற்ற முடியுமா?படிக்காத இராமர்பிள்ளையின் அரங்கேற்றம்.
- சொல்லாலே தோன்றும் சுகம்!
- சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும் ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்?
- சகுனியின் தாயம் தெளிவான மின்னூல்
- லட்சுமி கடாட்சம்
- சரவணன் – மீனாட்சி அடுத்த ரவுண்ட்!
- இந்த வார திரைச்செய்திகள் - தொடர் பதிவு
- ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர்
- சரித்திரம் படைக்கும் சாமான்யர்கள்!
- காவல் -சிறுகதை
- சனி தோஷம் நீக்கும் சங்கரன்
| Posted: 03 Aug 2016 01:06 PM PDT ஒரு புரையேறல் போதுமே.. உன் எண்ணத்தில் நான் இருக்கிறேன் என்றறிய - உன்னுடைய ஒரு சிரிப்பு போதுமே.. என்னை சந்தோஷ கடலில் திக்குமுக்காட செய்ய உன்னிடமிருந்து சிறு அங்கீகாரம் போதுமே.. உழைப்பிற்கு கிடைத்த பரிசென என் விடாமுயற்சியை தொடர .... ஏனோ இன்று மேகத்தில் மிதக்கும் உணர்வு காற்றாய் லேசான மனது கிள்ளி பார்த்துக் கொள்கிறேன் உண்மையில் இது நிஜமா என்று ! நீ என்னோடு இருக்கையில் என் வாழ்வில் என்றும் சந்தோஷ தூறலே ! |
| அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!! Posted: 03 Aug 2016 09:03 AM PDT அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!! இயந்திரத்தனமான வாழ்வில் இந்த செய்தியை படிக்க நேரம் ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி!!! நாம் உயிர்வாழ உணவளித்த விளைநிலங்கள் இன்று பணமோகத்திற்கு இரையாகி வீடுகளாகவும் முதலீட்டு மனைகளாகவும் உயிரிழந்துகொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே!? இன்று நமக்கு வேண்டிய உணவு தாராளமாக கிடைக்கலாம்.ஆனால் இவ்வாறு விளைநிலங்கள் விலைநிலங்களாவது நீடித்தால் கண்டிப்பாக நமது சந்ததிகள் உணவிற்காக பிற நாடுகளில் கையேந்தும் நிலை ஏற்படுவது உறுதி.இப்போதே தூய காற்று வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. இயற்கையின் ... |
| Posted: 03 Aug 2016 06:30 AM PDT - திருவனந்தபுரத்திலிருந்து துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் துபாயில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது, ஆனல் 282 பயணிகளும், 18 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஈ.கே.521 என்ற எமிரேட்ஸ் விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரம் 12.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது போயிங் 777 பயணிகள் விமானம் திருவனந்தபுரத்திலிருந்து காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. ... |
| Posted: 03 Aug 2016 03:02 AM PDT உளுந்தம் பருப்பு வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், கொஞ்சம் பச்சரிசி மாவைத் தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சி விடும். – எஸ். கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி. பெருங்காயக் கட்டியை சுலபமாக எடுக்க அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு மூடி வைக்கவும். – ப. ராஜலெட்சுமி, சென்னை வெதுவெதுப்பான உப்புநீரில், சிறிதுநேரம் போட்டு வைத்து, பிறகு பயன்படுத்தினால் பனீர் துண்டுகள் மென்மையாக இருக்கும். – க. விசாலாட்சி, ஓசூர். தேங்காய் சாதம் கிளறும்போது, அதில் இரண்டு அப்பளத்தைப் பொரித்து நொறுக்கிப் ... |
| எரித்து கொல்லப்பட்ட மாணவி நவீனா குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை Posted: 03 Aug 2016 01:12 AM PDT பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கயவன் ஒருவனை காதலிக்க மறுத்தற்காக உயிருடன் எரிக்கப்பட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவி நவீனா உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். தனது உயிரையே விலையாகக் கொடுக்கும் அளவுக்கு நவீனா செய்த குற்றம் என்ன? என்பது தான் எனது மனதை குடைந்து கொண்டிருக்கும் வினா ஆகும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அம்மாணவி நன்றாக படிக்கக் கூடியவர். ... |
| அவருக்கு எப்பவும் பறந்த மனசு…! Posted: 03 Aug 2016 12:27 AM PDT அவருக்கு எப்பவும் பறந்த மனசுன்னு சொல்றியே என்ன பண்றாரு..? – பைலட்டா இருக்காரு..! – தீ.அசோகன் – ——————————————————-_ பதுங்கு குழியில் ஒளிந்திருக்கும் மன்னருக்கு என்ன பலகாரம் கொண்டு போறாங்க? – குழிப்பணியாரம்..! – ஏ.நாகராஊஃ – ———————————— – கல்யாணமானதும், உன் மாமியார் பூப்போல தாங்குறாங்கன்னு சொன்னியே, இப்ப எப்படி? – நார் நாரா கிழிக்கிறாங்க…! – எஸ்.ராமச்சந்திரன் – ————————————- – சரக்கு மாஸ்டர்னு கேள்விப்பட்டிருக்கேன், அதென்ன சைட்டிஷ் மாஸ்டர்…? – ஓட்டல்ல அவரு ஊறுகாய் ... |
| கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி. உள்பட 3 நிறுவனங்கள் மீது 1158 பக்கங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் Posted: 03 Aug 2016 12:02 AM PDT - மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.16 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு வழக்கில் 3-வது முறையாக குற்றப்பத்திரிக்கை மதுரை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள மேலூர், கீழவளவு, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ளி கிரானைட் நிறுவனங்களால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறையும் மேலூர் நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 185 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளில் தற்போது காவல்துறை தொடர்ச்சியாக குற்றப்பத்திரிக்கையை ... |
| விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள் Posted: 03 Aug 2016 12:00 AM PDT - கோவை கோவையில் விநாயகர் சதுர்த்திக்காக வண்டிமாடு விநாயகர், பாகுபலி விநாயகர், என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காக ஜனவரி மாதம் முதலே சிலைகளை உருவாக்கும் பணியில் ஈடுபடுவதாக வடிவமைப்பதாக தெரிவித்துள்ளனர். சிலையின் அளவை பொறுத்து ரூ.25,000 வரை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். மக்களின் ரசனைக்கேற்ப சிலைகளை வடிவமைப்பது முக்கியம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ... |
| அமெரிக்காவில் போக்கிமோன் கோ விளையாட்டு ஆர்வத்தில் குழந்தையை தனியாக தவிக்க விட்டு சென்ற தம்பதி கைது Posted: 02 Aug 2016 11:57 PM PDT - அரிசோனா: போக்கிமோன் கோ விளையாட்டினால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. போக்கிமோன் கோ விளையாட்டில் உள்ள மோகத்தால் 2 வயது குழந்தையை வீட்டில் தனியாக தவிக்கவிட்டுச் சென்ற தம்பதியால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகமெங்கும் அனைவரது கவனத்தை ஈர்த்த போக்கிமேன் கோ கேம், பலரை அடிமையாக்கியும் விட்டது. ஏற்கனவே இந்த விளையாட்டு மூலம் பல்வேறு சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ப்ரெண்ட் டாலே (27) ... |
| தலைவர் ஹைடெக்கா மாறிட்டார்...!! Posted: 02 Aug 2016 11:55 PM PDT - நான் விளம்பரத்துல நடித்தால் எப்படியிருக்கும் மந்திரி? - அடி டாஸ், நைக், பூமா கம்பெனிகாரர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன் மன்னா...! - அஜித் - ---------------------------------- - தலைவர் ஹைடெக்கா மாறிட்டார்னு எப்படி சொல்றே? - தப்பு பண்ண கட்சி நிர்வாகிகளை தன்னோட வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்காரே...! - பா.ஜெயக்குமார் - ------------------------------------- - மன்னா, தங்கள் வாட்ஸ் அப்புக்கு என் பாடல்களை அனுப்பியுள்ளேன்! - நான் நெட் பேக் போடவில்லை ... |
| இந்த வருஷம் ரெண்டு கிலோ அதிகம் படிச்சிருக்கேன்..!! Posted: 02 Aug 2016 11:53 PM PDT _ படம் இசை சம்பந்தப்பட்டதா, சரி கதை சொல்லுங்க...! - ஸ்ருதியை டெம்போ வச்சு கடத்தறாங்க! - ரவீந்திரன் - ----------------------------------- - போன வருஷத்தை விட இந்த வருஷம் நீ ரெண்டு கிலோ அதிகம் படிச்சிருக்கியா, என்ன சொல்றே? - இந்த வருஷ நோட்புக்ஸை எல்லாம் எடைக்கு போட்டப்போ ரெண்டு கிலோ கூட இருந்ததே...! - -------------------------------------- - தலைவர் டைமிங்கா பேசி அசத்திட்டாராமே...! - பிப்ரவரி 29 ல் பிறந்த பையனுக்கு தி'லீப்'_னு பேர் வெச்சிட்டாராம்...! - கடி கண்ணன் - ------------------------------------- |
| படித்தால்தான் அரங்கேற்ற முடியுமா?படிக்காத இராமர்பிள்ளையின் அரங்கேற்றம். Posted: 02 Aug 2016 11:51 PM PDT 1996ஆம் ஆண்டு ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சோதனைக்கு ஆளானார் ராமர்பிள்ளை. சரியான கல்வி அறிவு இல்லாத அவரால், இந்த பெட்ரோலை கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் கண்டுபிடித்துள்ள பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் கார்ப்பரேட் கம்பெனிகளும், அரசியல்வாதிகளும் இருந்ததாக அப்போது ... |
| Posted: 02 Aug 2016 11:50 PM PDT - வள்ளுவத்தில் கம்பனில் வண்ணச் சிலம்பதனில் தெள்ளுதமிழ்த் தெய்வச்சீர் தேவாரம் விள்ளுமுயர் நல்ல திருவாசகத்தில் நாளும் திளைத்தவரின் சொல்லாலே தோன்றும் சுகம்! - க-கவிக்கோ ஞானச்செல்வன், சூளைமேடு - ------------------------------------- - தொட்டில் குழந்தை துயில் கொள்ளும் காட்சியிலே கொட்டிக் கிடக்குதம்மா கோடியெழில் - தொட்டவுடன் பொல்லாக் குறும்புடனே பொன்மழலை சிந்துகின்ற சொல்லாலே தோன்றும் சுகம்! - -குமரி அமுதன், சாலிகிராமம் - ------------------------------------- |
| சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும் ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Posted: 02 Aug 2016 11:45 PM PDT தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் ஆதிக்க சாதியினரால் ஆண்டுக்கு 15 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கலைச்செல்வி என்ற இளம்பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலைச்செல்வியின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் ... |
| சகுனியின் தாயம் தெளிவான மின்னூல் Posted: 02 Aug 2016 11:36 PM PDT சகுனியின் தாயம் தெளிவான மின்னூல் http://www.mediafire.com/download/q7zy3xy0hpwqu2d/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf நன்றி |
| Posted: 02 Aug 2016 09:58 PM PDT - லட்சுமி கடாட்சம் வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும். ஆனால் அதற்காக பூஜை செய்வது, விரதம் இருப்பது போன்றவை மட்டுமல்லாமல் சில எளிய வழி முறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்; திருமகள் தேடி வருவாள். அவளது அருளால் உங்கள் வீட்டில் எல்லாச் செல்வமும் சேரும் என்கின்றன புராணங்கள். அந்த எளிய வழி்கள் இதோ உங்களுக்காக…. —– – * அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து எழ வேண்டும். அந்த நேரத்தில் சகல தேவர்களும் பூவுலகிற்கு வருவதாகக் கூறுகிறார்கள். அப்போது விழித்திருந்து மனதால் ... |
| சரவணன் – மீனாட்சி அடுத்த ரவுண்ட்! Posted: 02 Aug 2016 07:21 PM PDT - சினிமாவில் மட்டும்தான் பார்ட – 1, 2, 3 என எடுக்க முடியுமா? சும்மாவே இழுக்கிற சீரியல் ஆட்களால் முடியாதா? 'சரவணன் மீனாட்சி' 2வது பார்ட் முடிந்து 3வது சீசன் ஆரம்பமாகி இருக்கிறது. முதலில் பார்ட் – 1, 2 முடிக்கப்பட்டதன் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீஜாவும், செந்திலும் சேர்ந்து நடித்த பார்ட்-1 தான் மக்கள் மத்தியில் செம ரீச். சீரியலின் தொடக்கத்திலேயே இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த கிசுகிசு உண்மையானது. அவர்களது காதல் வெளியே தெரியவர, இருவருமே இனி ... |
| இந்த வார திரைச்செய்திகள் - தொடர் பதிவு Posted: 02 Aug 2016 07:19 PM PDT இயக்குநர் விஜய்: பெற்றோர் சொல்லைத் தட்டமாட்டேன் - - நடிகை அமலா பாலும் இயக்குநர் விஜய்யும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் தற்பொழுது தமிழ்த் திரையுலகில் பரபரப்பான செய்தியாகும். - இதுபற்றி இயக்குநர் விஜய்யைத் தொடர்பு கொண்டபோது , "இந்தப் பிரச்சினை பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் எப்போதும் பெற்றோர் சொல்லைத்தான் கேட்பேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அதில் உறுதியாகவும் இருப்பேன். அமலா பால் பற்றி எதுவும் கூறத் தயாராக இல்லை," என்று கூறினார். - ------------------------- |
| ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Posted: 02 Aug 2016 07:12 PM PDT - தீபா கர்மாகர். இந்தியாவில் தற்சமயம் ஜெபிக்கப்படும் சுலோகம். ஒலிம்பிக் போட்டிக்கு, தகுதி பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. இவர், சர்வதேச, இந்திய அளவில் 77 பதக்கங்களை வென்றிருப்பவர். அதில் 67 தங்கப் பதக்கங்களும் அடங்கும். ஜப்பானில் 2015-இல் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தீபாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் 5-வது இடத்திற்கு தகுதி பெற்றதால், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பங்கு ... |
| சரித்திரம் படைக்கும் சாமான்யர்கள்! Posted: 02 Aug 2016 07:06 PM PDT செல்வோம் வெல்வோம்! எளிமையான கோஷத்துடன் வலுவான அணியாக பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய அணி புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி இதுதான். சுமார் 121 விளையாட்டு வீரர்கள் கரஙகளில் தேசியக் கொடியையும், இதயத்தில் 130 கோடி இந்திய மக்களின் அன்பையும் கனவுகளையும் சுமந்தபடி சென்றுள்ளனர். அணிவகுப்பில் அபிநவ் பிந்த்ரா தேசியக் கொடியைச் சுமந்து செல்ல பின்தொடரும் ... |
| Posted: 02 Aug 2016 07:04 PM PDT மல்வேட்டி ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணணாடி அணிந்திருந்த அந்தப் பெரியவர் காவல் நிலையத்தில் நுழைந்தார். மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே இன்ஸ்பெக்டர் காட்டிய நாற்காலியில் அமர்ந்து மேல் துண்டினால் விரல்களில் போட்டிருந்த மோதிரங்களை துடைத்து விட்டுக் கொண்டார். 'என்ன விஷயம்?' – வினவினார் இன்ஸ்பெக்டர். 'ஒண்ணுமில்லே சார். என் பேர் கனகலிங்கம். நாங்கள் விவேகானந்தர் காலனியிலே புதுசா வீடு கட்டி குடி போயிருக்கோம். நம்பர் 13, நாலாவது தெரு. வர்ற ஏப்ரல் பத்திலேருந்து பதினைஞ்சுவரை ஹைதராபாத்துலே என்னோட ... |
| Posted: 02 Aug 2016 07:00 PM PDT - இயற்கையால் வகுக்கப்பட்ட நியதிகள் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானவை என்பதை உலகோர்க்கு உணர்த்த ஈசன் நிகழ்த்திய சம்பவங்கள் எத்தனையோ! அவற்றுள் ஒன்று, சனைச்சரனுக்கும் அவருக்கும் நடந்த ஒரு போராட்டம். அதன் இறுதியில் சனிபகவானுக்கு ஈசன் ஒரு வாக்குறுதி அளித்தார். அந்த சம்பவம் நிகழ்ந்த இடம் சேங்காலிபுரம். அங்கேதான் அமைந்துள்ள விஸ்வநாதர் ஆலயம். தன் சுழற்சி நியதியின்படி சனீஸ்வரன் வலம் வரும்போது, சிவபெருமானை அவர் பீடிக்க வேண்டிய ஒரு தருணம் வந்தது. சிவபிரானைப் பீடிப்பதா? அஞ்சினார். சனீஸ்வரன். ஆனாலும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |