Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மேகமலை வனப் பகுதியில் மின்சாரம் பாய்ந்து பெண் யானை சாவு

Posted: 20 Aug 2016 01:28 PM PDT

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதியில் பெண் யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைப்பு: கு.பாலசுப்பிரமணியன் தகவல்

Posted: 20 Aug 2016 01:28 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைய உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தெரிவித்தார்.

கள்ளிமேடு கோயில் விவகாரம்:அமைதிப் பேச்சு மீண்டும் தோல்வி

Posted: 20 Aug 2016 01:26 PM PDT

கள்ளிமேடு கோயில் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுபடி வட்டாட்சியர் தலைமையில் சனிக்கிழமை மீண்டும் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

ஆகஸ்ட் 25-இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

Posted: 20 Aug 2016 01:25 PM PDT

சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 25-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

சுங்கச் சாவடிகளில் வரி செலுத்த மாட்டோம்

Posted: 20 Aug 2016 01:24 PM PDT

நான்கு வழிச்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வரி செலுத்த மாட்டார்கள் என, அந்தக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கூறினார்.

காவிரிப் பிரச்னை: 6 மாவட்டங்களில் செப். 23-இல் சாலை மறியல்

Posted: 20 Aug 2016 01:23 PM PDT

கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் ஆயிரம் இடங்களில் செப்டம்பர் 23-ஆம் தேதி சாலை மறியல் நடத்துவது என, காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் திடீர் தீப்பொறி, புகை

Posted: 20 Aug 2016 01:22 PM PDT

குருவாயூரிலிருந்து மதுரை, திருச்சி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பொறி ஏற்பட்டு புகை வந்தது. இதையடுத்து திருச்சியில் ரயில் நிறுத்தப்பட்டு மாற்று என்ஜின் பொருத்தப்பட்ட பிறகு தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

இலங்கை அகதிகளின் குழந்தைகள் 55 பேர் பள்ளியில் இருந்து நீக்கம்

Posted: 20 Aug 2016 01:19 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அரசின் குடியுரிமை இல்லாமல், படித்துவந்த இலங்கை அகதிகளின் 55 குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டனர். இதுதொடர்பாக கியூ பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இணையத்தில் மது விற்பனை: திட்டத்தை கைவிட்டது கேரளம்

Posted: 20 Aug 2016 01:09 PM PDT

ஓணம் பண்டிகை நாளில் மதுபான விற்பனையை இணையதளம் மூலம் தொடங்கும் உத்தேசத் திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.

ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை

Posted: 20 Aug 2016 01:08 PM PDT

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு தில்லி வந்திருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த ஆடை (கோட்-சூட்), "அதிக தொகைக்கு ஏலத்துக்கு எடுக்கப்பட்ட ஆடை' என்ற தலைப்பில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசு விளக்கம்

Posted: 20 Aug 2016 01:06 PM PDT

உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பு (நீதிபதிகள் குழு) பரிந்துரைத்த பட்டியலில் இருப்போரின் முழுப் பின்னணியையும் ஆய்வு செய்வதே, நீதிபதிகள் நியமனத்தில் நிலவும் தாமதத்துக்கு காரணம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிகார்: 550 லிட்டர் பதுக்கல் கள்ளச்சாராயம் பறிமுதல்

Posted: 20 Aug 2016 01:01 PM PDT

பிகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அண்மையில் கள்ளச் சாராயம் அருந்தி 16 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் போலீஸார் நடத்திய சோதனையில், பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தியின் 72-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள் நினைவஞ்சலி

Posted: 20 Aug 2016 01:00 PM PDT

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72ஆவது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஜீவின் மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சனிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்.

ராணுவத் தலைமை தளபதி குற்றச்சாட்டு: வி.கே. சிங்குக்கு சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு

Posted: 20 Aug 2016 12:57 PM PDT

ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் விவகாரத்தில், மத்திய அமைச்சரும், முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே. சிங்குக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

"நீட்' வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 20 Aug 2016 12:56 PM PDT

கடந்த மாதம் நடைபெற்ற "நீட்' தேர்வு வினாத் தாள் முன்கூட்டியே கசிய விடப்பட்ட விவகாரம் குறித்து சிபிஎஸ்இ தேர்வுத் துறைக்கும், நைனிடால் காவல் துறைக்கும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குற்றவாளிகளின் மரபணு சேகரிக்கும் திட்டம்: ஆந்திரத்தில் தொடக்கம்

Posted: 20 Aug 2016 12:51 PM PDT

குற்றவாளிகளிடம் இருந்து மரபணு மாதிரிகளை சேகரித்து ஒரு தகவல் தொகுப்பை உருவாக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.

ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார் திருக்கல்யாணம்

Posted: 20 Aug 2016 12:51 PM PDT

காவேரிபாக்கம் அருகே உள்ள துரைபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபந்தார் விரலி நாச்சியார் சமேத நாட்டழகிய சிங்கர் சன்னிதி சார்பில் ஸ்ரீ அழகியான் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் ஆற்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராகவேந்திர சுவாமிகளின் 345-ஆவது ஆராதனை

Posted: 20 Aug 2016 12:50 PM PDT

ராகவேந்திர சுவாமிகளின் 345-ஆவது ஆராதனை விழா ஆற்காடு ராகவேந்திரர் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

படைவீடு கோயிலில் ஆடி 5-ஆம் வெள்ளி விழா

Posted: 20 Aug 2016 12:50 PM PDT

போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி 5-ஆவது வெள்ளிவிழா நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.56 கோடிக்கு சமரச தீர்வு

Posted: 20 Aug 2016 12:50 PM PDT

வேலூர் மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 940 வழக்குகளில் ரூ. 4.56 கோடி மதிப்புக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தடுப்பணையில் மூழ்கி இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி: அமைச்சர் வழங்கினார்

Posted: 20 Aug 2016 12:49 PM PDT

வாணியம்பாடி அருகே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உயர்த்திக் கட்டிய தடுப்பணையில் மூழ்கி இறந்த விவசாயி சீனிவாசனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நாராயணி பீடத்தில் இன்று மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பு

Posted: 20 Aug 2016 12:49 PM PDT

வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறவுள்ள விழாவில் 1,000 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அமைச்சர்கள் வழங்குகின்றனர்.

முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் விருதுகள் வழங்கும் விழா

Posted: 20 Aug 2016 12:49 PM PDT

குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் சார்பில், இளைஞர் அரங்கம் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குடிசை எரிந்து சேதம்: பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

Posted: 20 Aug 2016 12:48 PM PDT

சோளிங்கர் அருகே மின் கசிவால் குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

Posted: 20 Aug 2016 12:47 PM PDT

ஆம்பூர் நகரம், மாதனூர், பேர்ணாம்பட்டு ஒன்றியங்கள் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

விடுதலை செய்யக் கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் நளினி மனு: வழக்குரைஞர் தகவல்

Posted: 20 Aug 2016 12:47 PM PDT

தன்னை விடுதலை செய்யக் கோரி தேசிய மகளிர் ஆணையத்துக்கு நளினி மனு அனுப்பியிருப்பதாக அவரது வழக்குரைஞர் புகழேந்தி கூறினார்.

ஆம்பூர் பெத்லகேம் ரயில்வே மேம்பால திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

Posted: 20 Aug 2016 12:47 PM PDT

ஆம்பூர் ரயில்வே மேம்பால திட்டத்தை தொடக்கி செயல்படுத்த வேண்டுமென ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி வெள்ளிக்கிழமை நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.

பள்ளியில் மயங்கி விழுந்த தலைமை ஆசிரியை சாவு

Posted: 20 Aug 2016 12:46 PM PDT

வேலூரில் பள்ளியில் மயங்கி விழுந்த தனியார் பள்ளி தலைமையாசிரியை சனிக்கிழமை உயிரிழந்தார். வேலூரை அடுத்த விருபாட்சிபுரம் பாரதி நகரைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் மனைவி கவிதா (40).

ஆம்பூரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி மையம் தொடக்கம்

Posted: 20 Aug 2016 12:45 PM PDT

ஆம்பூர் என்ரிச் சொசைட்டி சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி மையம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை சிப்காட் அருகே தீ விபத்து: 3 குடிசைகள் சேதம்

Posted: 20 Aug 2016 12:45 PM PDT

 ராணிப்பேட்டை சிப்காட் அருகே நிகழ்ந்த தீ விபத்தில் 3 குடிசைகள் சேதமடைந்தன.

பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Posted: 20 Aug 2016 12:44 PM PDT

சோளிங்கர் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆரணியிலிருந்து சென்னை தி.நகருக்கு புதிய அரசுப் பேருந்து: அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted: 20 Aug 2016 12:44 PM PDT

ஆரணியிலிருந்து சென்னை தி.நகருக்கு புதிய அரசுப் பேருந்தை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

Posted: 20 Aug 2016 12:44 PM PDT

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கு "பிரிக்ஸ்' நாடுகள் இணைந்து பாடுபட வேண்டும்

Posted: 20 Aug 2016 12:43 PM PDT

ஐ.நா. உருவாக்கியுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கு "பிரிக்ஸ்' நாடுகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு பெண் எம்.பி.க்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும்: சுமித்ரா மகாஜன்

Posted: 20 Aug 2016 12:43 PM PDT

நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு பெண் எம்.பி.க்கள் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவுறுத்தினார்.

பாஜக எம்.பி. தொடுத்த அவதூறு வழக்கில் கேஜரிவால் ஆஜராகாமல் இருக்க விலக்கு

Posted: 20 Aug 2016 12:42 PM PDT

தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதூரி தொடுத்த அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) ஆஜராகாமல் இருக்க தில்லி நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவிட்டது.

பகவந்த் மான் எம்.பி. மீதான விசாரணை குழுவுக்கு அவகாசத்தை நீட்டித்ததில் அரசியல் உள்நோக்கம்: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

Posted: 20 Aug 2016 12:42 PM PDT

மக்களவை உறுப்பினர் பகவந்த் மான் எம்.பி. மீதான விசாரணைக் குழு, அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு பாஜகவின் அரசியல் உள்நோக்கமே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

விபாசனா: கேஜரிவாலை பின்பற்றும் ஆதரவாளர்கள்

Posted: 20 Aug 2016 12:41 PM PDT

விபாசனா' எனும் தியானப் பயிற்சியை மேற்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை பின்பற்றி, அவரது ஆதரவாளர்களும் அந்த தியானப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடர்களை விரட்டிச் சென்ற காவலர் சுட்டுக் கொலை

Posted: 20 Aug 2016 12:41 PM PDT

தில்லி ஷாபாத் பகுதியில் பெண்ணிடம் பையை பறித்துச் சென்ற வழிப்பறித் திருடர்களை விரட்டிச் சென்ற காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹிந்து மக்களின் மத நம்பிக்கைகளில் நீதித் துறை எல்லை மீற வேண்டாம்

Posted: 20 Aug 2016 12:41 PM PDT

ஹிந்து மக்களின் மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நீதித்துறை எல்லை மீற வேண்டாம் என்று சிவசேனைக் கட்சி எச்சரித்துள்ளது.

போக்குவரத்து விதி மீறல்: 690 ஆட்டோக்கள் பறிமுதல்

Posted: 20 Aug 2016 12:41 PM PDT

தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள குர்கானில் போக்குவரத்து விதிகளை மீறியதாக வெள்ளிக்கிழமை 690 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாக்ஷி மாலிக்கிற்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை; தந்தைக்கும் பதவி உயர்வு: தில்லி அரசு

Posted: 20 Aug 2016 12:40 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான 58 கிலோ ஃப்ரீஸ் டைல் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. மேலும், டிடிசி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவரது தந்தைக்கு பதவி உயர்வு

கூட்டாட்சி முறையை தகர்க்கிறது மோடி அரசு: மம்தா கடும் தாக்கு

Posted: 20 Aug 2016 12:40 PM PDT

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நாட்டின் கூட்டாட்சி முறையைத் தகர்த்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

பலாத்காரம் செய்ய முயன்றவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்

Posted: 20 Aug 2016 12:40 PM PDT

தென்கிழக்கு தில்லியின் கிர்கி விரிவாக்கப் பகுதியில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை பிடித்து, போலீஸில் ஒப்படைத்தார் ஒரு இளம்பெண்.

வீரபத்ரசிங்குக்கு எதிரான வழக்கு: ஆயுள் காப்பீட்டு முகவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 20 Aug 2016 12:39 PM PDT

ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு எதிரான கருப்புப் பண தடுப்புச் சட்ட வழக்கில், ஜாமீன் கோரி ஆயுள் காப்பீட்டு முகவர் சௌஹான் தாக்கல் செய்த மனுவை தில்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

Posted: 20 Aug 2016 12:39 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72-ஆவது பிறந்த தினம் தில்லி காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கார் மோதியதில் ரிக்ஷா தொழிலாளி சாவு

Posted: 20 Aug 2016 12:39 PM PDT

வடகிழக்கு தில்லியில் உயர் ரக கார் மோதியதில் ரிக்ஷா தொழிலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக அந்த காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சேத்தன் பகத்தின் புதிய நாவல்: அமேஸான் வலைதளத்தில் சாதனை

Posted: 20 Aug 2016 12:39 PM PDT

பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் புதிய நாவல், "அமேஸான்' வலைதள விற்பனை முன்பதிவில் புதிய சாதனையை படைத்துள்ளது.

100 வழக்குகளில் தேடப்பட்டவர் கைது

Posted: 20 Aug 2016 12:38 PM PDT

 கொள்ளை, வழிப்பறி உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.

மெட்ரோ ஸ்மார்ட் கார்டு மூலம் டிடிசி பேருந்துகளில் பயணம்: அக்டோபர் முதல் அமல்

Posted: 20 Aug 2016 12:38 PM PDT

தில்லிவாசிகள் மெட்ரோ ஸ்மார்ட் கார்டு மூலம் தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்துகளில் பயணம் செய்யும் வசதி அக்டோபர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பணம் திருடிய வீட்டு பணிப் பெண் கைது: சிசிடிவியில் சிக்கினார்

Posted: 20 Aug 2016 12:38 PM PDT

தெற்கு தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள குடியிருப்பில் பணம் திருடிய வீட்டுப் பணிப் பெண் சிசிடிவியில் பதிவான காணொளியால் சிக்கினார்.

இந்தியா வருமாறு நேபாளப் பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

Posted: 20 Aug 2016 12:38 PM PDT

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருமாறு நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள பிரசண்டாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சுவர் இடிந்ததில் தொழிலாளி சாவு

Posted: 20 Aug 2016 12:37 PM PDT

தில்லி கஞ்சாவாலா பகுதியில் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் பலத்த காயமடைந்தனர்.

கடைக்குச் சென்ற சிறுவன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது

Posted: 20 Aug 2016 12:37 PM PDT

கிழக்கு தில்லியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் 10 வயது சிறுவன் காயமடைந்தான். இது குறித்து போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது:

கன்னையா உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்க போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 20 Aug 2016 12:37 PM PDT

தேச விரோத வழக்கில் தங்களது ஜாமீனை நீட்டிக்கக் கோரி, ஜவாஹர்லால் நேரு பல்கலை. (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீது பதிலளிக்கும்படி போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்டில் ஊதிய உயர்வு: அறிவிக்கை வெளியிட்டது தில்லி அரசு

Posted: 20 Aug 2016 12:36 PM PDT

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை தில்லி அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

என்டிஎம்சியில் டெங்கு விழிப்புணர்வு பயிலரங்கம்

Posted: 20 Aug 2016 12:36 PM PDT

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சார்பில் டெங்கு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை அகதிகளின் குழந்தைகள் 55 பேர் பள்ளியில் இருந்து நீக்கம்

Posted: 20 Aug 2016 12:35 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அரசின் குடியுரிமை இல்லாமல், படித்துவந்த இலங்கை அகதிகளின் 55 குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டனர். இதுதொடர்பாக கியூ பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விமான இருக்கைக்கு அடியிலிருந்து அரை கிலோ தங்கம் பறிமுதல்

Posted: 20 Aug 2016 12:34 PM PDT

திருச்சி விமான நிலையத்தில் விமான இருக்கைக்கு அடியிலிருந்து அரை கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மர்மக் காய்ச்சலுக்கு மேலும் 2 சிறுவர்கள் சாவு: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Posted: 20 Aug 2016 12:34 PM PDT

மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Aug 2016 12:33 PM PDT

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆய்வு

Posted: 20 Aug 2016 12:33 PM PDT

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பிரசாத் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

கொலை செய்யப்பட்டவர் ரௌடியா? போலீஸார் தீவிர விசாரணை

Posted: 20 Aug 2016 12:33 PM PDT

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர், ரௌடியா என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் கடையில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதுபான பாட்டில்கள் சேதம்

Posted: 20 Aug 2016 12:32 PM PDT

பொன்னேரி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் தீயில் எரிந்து சேதமாகின.

தேனீ வளர்ப்புப் பயிற்சி

Posted: 20 Aug 2016 12:32 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டையில் 24 பயனாளிகளுக்கு தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

"அம்மா' திட்ட முகாம்

Posted: 20 Aug 2016 12:32 PM PDT

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் வட்டத்துக்கு உள்பட்ட போரூரில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கபடிப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

Posted: 20 Aug 2016 12:31 PM PDT

திருத்தணி குறுவட்ட அளவிலான கபடிப் போட்டி, திருத்தணி ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மன்னார்குடியில் மின்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Aug 2016 12:30 PM PDT

பழுதான மின் கம்பங்களை உடனடியாக மாற்றி விபத்துகளைத் தவிர்த்து, மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளிமேடு கோயில் விவகாரம்: அமைதிப் பேச்சு மீண்டும் தோல்வி

Posted: 20 Aug 2016 12:30 PM PDT

கள்ளிமேடு கோயில் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி வட்டாட்சியர் தலைமையில் சனிக்கிழமை மீண்டும் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இரு வீடுகளில் நகை, பணம் கொள்ளை

Posted: 20 Aug 2016 12:30 PM PDT

சீர்காழி அருகே கோயில் விழா கலைநிகழ்ச்சியைக் காணச் சென்ற இருவரது வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனர்.

நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதியம் வழங்குவதில் காலதாமதம் கூடாது

Posted: 20 Aug 2016 12:29 PM PDT

நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு காலதாமதம் செய்யாமல் ஊதியத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஐ.வி.நாகராஜன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 20 Aug 2016 12:29 PM PDT

 திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கொத்தங்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இறால் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

Posted: 20 Aug 2016 12:28 PM PDT

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் நாகை அருகே சின்னத்தம்பூரில் இறால் வளர்ப்பு மற்றும் பண்ணை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை-திருத்துறைப்பூண்டி ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

Posted: 20 Aug 2016 12:28 PM PDT

நாகையிலிருந்து திருக்குவளை வழியாகத் திருத்துறைப்பூண்டி வரையிலான ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என இந்தியத் தொழிற்சங்க மையம் வலியுறுத்தியுள்ளது.

வலங்கைமான் வட்டத்தில் தூர்வாரும் பணி:அமைச்சர் ஆய்வு

Posted: 20 Aug 2016 12:28 PM PDT

வலங்கைமான் அடுத்த அரித்துவாரமங்கலத்தில் வாய்க்கால் தூர்வாரப்படுவதை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 20 Aug 2016 12:28 PM PDT

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மன்னார்குடியில் ராஜீவ்காந்தி பிறந்த நாள்

Posted: 20 Aug 2016 12:27 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராகவேந்திரா சுவாமிகள் ஆராதனை விழா

Posted: 20 Aug 2016 12:27 PM PDT

சீர்காழியை அடுத்த அனுமந்தபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் 345-ஆவது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இவ்விழா மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

4-ஆவது டெஸ்ட்: தொடர்கிறது மழை

Posted: 20 Aug 2016 12:27 PM PDT

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.

ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை விளையாட்டுத் துறை அமைச்சராக்க வேண்டும்

Posted: 20 Aug 2016 12:26 PM PDT

தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறையின் இணையமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை, விளையாட்டுத் துறை அமைச்சராக்க வேண்டும் என்று தடகள ஜாம்பவான் மில்கா சிங் பரிந்துரைத்துள்ளார்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ்ரயில் என்ஜினில் திடீர் தீப்பொறி, புகை: 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது

Posted: 20 Aug 2016 12:23 PM PDT

குருவாயூரிலிருந்து மதுரை, திருச்சி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16128)என்ஜினில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பொறி ஏற்பட்டு புகை வந்தது. இதையடுத்து, திரு

இலக்கிய மன்ற ஆண்டு விழா

Posted: 20 Aug 2016 12:23 PM PDT

முத்துப்பேட்டை தமிழ் இலக்கிய மன்றத்தின் 30-வது ஆண்டு விழா கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி தாளாளர் எஸ். வெங்கட்ராஜிலு தலைமை வகித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் 3-ஆம் சுற்று அம்மா திட்ட முகாம்

Posted: 20 Aug 2016 12:22 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை முதல் 3-ஆம் சுற்று அம்மா திட்ட முகாம் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

குவாஹாட்டியில் நடக்கிறது ஐஎஸ்எல் தொடக்க விழா

Posted: 20 Aug 2016 12:22 PM PDT

மூன்றாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் தொடக்க விழா அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

செப்.2 வேலை நிறுத்தம்: அரசு ஊழியர் சங்கம் ஆதரவு

Posted: 20 Aug 2016 12:22 PM PDT

செப்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

பள்ளி வாகனம் கவிழ்ந்து குழந்தைகள் காயம்

Posted: 20 Aug 2016 12:22 PM PDT

திருவாரூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து 4 குழந்தைகள் காயமடைந்தனர்.

ரஷிய தடகள வீரர்களுக்கு காலவரையற்ற தடை: ஐஏஏஎஃப்

Posted: 20 Aug 2016 12:22 PM PDT

ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷியாவுக்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச தடகள சம்மேளனம் (ஐஏஏஎஃப்) தெரிவித்துள்ளது.

மகப்பேறு உதவியாளர் பணியிடை நீக்கம்

Posted: 20 Aug 2016 12:20 PM PDT

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பெண் ஊழியர் ஒருவர் லஞ்சம் பெற்றதாக தாற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தீபா கர்மாகருக்கு உற்சாக வரவேற்பு

Posted: 20 Aug 2016 12:20 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய தீபா கர்மாகருக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெண்கள் ஏற்றம் பெற உள்ளாட்சித் தேர்தலில் 50 % இட ஒதுக்கீடு வழங்கியவர் ஜெயலலிதா

Posted: 20 Aug 2016 12:19 PM PDT

பெண்கள் ஏற்றம் பெற உள்ளாட்சித் தேர்தலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் ஜெயலலிதா என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.7.29 கோடியில் நிவாரணம்

Posted: 20 Aug 2016 12:19 PM PDT

கரூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் குளித்தலை சார்பு நீதிமன்றம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத்தில் (தேசிய மக்கள் நீதிமன்றம்) 673 வழக்குகளில் ரூ.7.29 கோடிக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவியுங்கள்: ஆசிய தடகள வீரர் பேச்சு

Posted: 20 Aug 2016 12:18 PM PDT

விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவியுங்கள் என்றார் ஆசிய தடகள வீரர் மணிகண்ட ஆறுமுகம்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

Posted: 20 Aug 2016 12:17 PM PDT

கரூரில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே காமராஜர் சிலை முன் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தலைவர்

1,199 மாணவர்கள் கடனுதவி கோரி விண்ணப்பம்

Posted: 20 Aug 2016 12:17 PM PDT

பெரம்பலூர் ஆட்சியரகத்தில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட கல்விக் கடனுதவி முகாம்களில், 1,199 மாணவ, மாணவிகள் ரூ. 40.75 கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

கருணைக் கிழங்கில் வேரழுகல் நோய் மேலாண்மை

Posted: 20 Aug 2016 12:17 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள கருணைக் கிழங்கில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை தெரிவித்துள்ளார் வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) ஜெ. கதிவரன்.

பசும்பலூரில் விவசாயிகளின் பட்டறிவு பகிர்தல் நிகழ்ச்சி

Posted: 20 Aug 2016 12:17 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் பேருந்து நிலையத்தில் மண்ணின் மக்களுக்காக, தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் வட்டார உழவர்களின் பட்டறிவுப் பகிர்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் ஆக. 23-ம் தேதி மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

Posted: 20 Aug 2016 12:16 PM PDT

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

மானியத்தில் விதைநெல்:விவசாயிகளுக்கு அழைப்பு

Posted: 20 Aug 2016 12:16 PM PDT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வேளாண் அலுவலகத்தில் மானியத்தில் விதை நெல் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிமடம் வேளாண் உதவி இயக்குநர் (பொ) சுகந்தி அண்மையில்

சாய்னாவுக்கு அறுவை சிகிச்சை: மும்பையில் நடந்தது

Posted: 20 Aug 2016 12:16 PM PDT

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் முழங்கால் காயத்துக்கு சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தடை உத்தரவால் சுயநினைவை இழந்து மீண்ட நர்சிங் யாதவ்

Posted: 20 Aug 2016 12:16 PM PDT

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் சர்வதேச நடுவர் மன்றம் 4 ஆண்டு தடை விதித்ததை அடுத்து, நர்சிங் யாதவ் சுயநினைவை இழந்து மீண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™