Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பிரதமர் மோடியுடன் பிரிட்டன் அமைச்சர் சந்திப்பு

Posted: 13 Aug 2016 01:22 PM PDT

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டன் சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரீத்தி படேல் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

ஓடும் ரயிலில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள்: உ.பி.யில் பரபரப்பு

Posted: 13 Aug 2016 01:17 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரான்பூர் மாவட்டத்தில் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. எனினும், கொள்ளையர்களின் திட்டத்தை ரயில்வே போலீஸார் முறியடித்தனர்.

சிறிய உணவு பதப்படுத்துதல் தொழில் பிரிவுகளுக்கு மானியம்: மத்திய அமைச்சர் தகவல்

Posted: 13 Aug 2016 01:17 PM PDT

நாட்டில் உள்ள சிறிய உணவு பதப்படுத்துதல் தொழில் பிரிவுகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.

குஜராத்: ஆன்மிகத் தலைவர் பிரமுக் சுவாமி மஹராஜ் மறைவு

Posted: 13 Aug 2016 01:16 PM PDT

சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பின் தலைவரும், ஆன்மிக குருவுமான பிரமுக் சுவாமி மஹராஜ் (95) வயது மூப்பின் காரணமாக குஜராத் மாநிலம், போடாத் மாவட்டத்தில் உள்ள சாரங்பூரில் சனிக்கிழமை காலமானார்.

பிரணாப் முகர்ஜியின் மகளுக்கு முகநூலில் மர்ம நபர் தொந்தரவு

Posted: 13 Aug 2016 01:12 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் தில்லி மாநில செய்தித் தொடர்பாளருமான சர்மிஷ்டா முகர்ஜிக்கு, முகநூலில் (ஃபேஸ்புக்) மர்ம நபர் ஒருவர் ஆபாசத் தகவல்களை அனுப்பி தொந்தரவு அளித்துள்ளார்.

"சுதந்திர தின உரையில் அளித்த வாக்குறுதிகளை மோடி இன்னமும் நிறைவேற்றவில்லை'

Posted: 13 Aug 2016 01:08 PM PDT

""சுதந்திர தின உரையில் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்னமும் நிறைவேற்றவில்லை; நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தில்லி செங்கோட்டையில் இருந்தபடி அவர் ஏன் வெளியிட வேண்டும்'' என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

பாகிஸ்தானின் திட்டங்கள் நிறைவேறாது: ராஜ்நாத் சிங்

Posted: 13 Aug 2016 01:08 PM PDT

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுத் திட்டங்கள் வெற்றியடைய இந்தியா அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மல்லையா மீது சிபிஐ மேலும் ஒரு மோசடி வழக்கு

Posted: 13 Aug 2016 01:05 PM PDT

பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து பெற்ற ரூ.1,600 கோடி கடன் நிலுவைத் தொகையை முறையாக திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது சிபிஐ மேலும் ஒரு மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது.

"தூய்மை கங்கை' திட்டம் 10 நகரங்களில் அறிமுகம்

Posted: 13 Aug 2016 01:04 PM PDT

கங்கை நதியின் புனிதத்தைக் காக்கும் வகையில், "தூய்மை கங்கை' (ஸ்மார்ட் கங்கை) என்ற திட்டத்தை 10 நகரங்களில் மத்திய அரசு சனிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே புதிய கல்விக் கொள்கை: பிரகாஷ் ஜாவடேகர்

Posted: 13 Aug 2016 01:02 PM PDT

மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே புதிய கல்விக் கொள்கையை அரசு தயாரித்துள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

"காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து பாக். ராணுவம் வெளியேற வேண்டும்'

Posted: 13 Aug 2016 01:02 PM PDT

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட வேண்டுமெனில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கில்ஜித்- பால்டிஸ்தான் பகுதியை விட்டு அந்த நாட்டு ராணுவம் வெளியேற வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

ஹிந்துக்களை பிரதமர் அவமதித்துவிட்டார்: விஎச்பி மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா தாக்கு

Posted: 13 Aug 2016 01:00 PM PDT

பசுப் பாதுகாவலர்களை "சமூக விரோதிகள்' என்று விமர்சித்ததன் மூலம் ஹிந்துக்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார் என்று விசுவ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார்.

ரக்ஷாபந்தன்: மும்பை அஞ்சல் அலுவலகம் இன்று இயங்கும்

Posted: 13 Aug 2016 12:58 PM PDT

சகோதர- சகோதரிகள் இடையிலான அன்பை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு, ராக்கி கயிறுகளை தங்கள் சகோதரர்களுக்கு அனுப்ப ஏதுவாக மும்பை அஞ்சல் துறை ஞாயிற்றுக்கிழமையும் இயங்கவுள்ளது.

அமர்நாத் யாத்திரையில் இணைந்தது புனித தண்டாயுதம்

Posted: 13 Aug 2016 12:56 PM PDT

கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கி 48 நாள்கள் நடைபெறும் புனித அமர்நாத் யாத்திரையின் இறுதிக் கட்டமாக, சிவபெருமானின் புனித தண்டாயுதத்தை அமர்நாத் பனிலிங்க கோயிலுக்கு எடுத்துச் செல்லும் புனித யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது.

வடச்சேரி துர்கையம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா

Posted: 13 Aug 2016 12:54 PM PDT

ஆம்பூர் அருகே வடச்சேரி துர்கையம்மன், பெரிய நாச்சியம்மன் கோயிலில் 40-ஆம் ஆண்டு ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.

பாலாற்றில் அனுமதியின்றி அள்ளிய 100 யூனிட் மணல் பறிமுதல்

Posted: 13 Aug 2016 12:54 PM PDT

ராணிப்பேட்டை பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி, கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த நூறு யூனிட்டுக்கும் மேற்பட்ட மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாவட்டத்தில் ரூ. 344.81 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி

Posted: 13 Aug 2016 12:54 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 185 கூட்டுறவு வங்கிகளில் 70,972 விவசாயிகள் பெற்ற ரூ. 344.81 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கைதி தப்பியோட்டம்: சிறை அலுவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்

Posted: 13 Aug 2016 12:53 PM PDT

வேலூர் அருகே கிளைச் சிறையிலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, உதவி சிறை அலுவலர் உள்பட இருவர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தூய்மைப் பணி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்

Posted: 13 Aug 2016 12:53 PM PDT

 வேலூர் நீதிமன்ற வளாக தூய்மைப் பணியில் ஈடுபட்ட முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சோளிங்கர் கோயில் அருகே கல்குவாரியை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 13 Aug 2016 12:52 PM PDT

சோளிங்கர் கோயில்கள் அருகே செயல்படும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 13 Aug 2016 12:52 PM PDT

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

ஆசிரியர்கள் கலந்தாய்வில் 83 பேருக்கு பணி நிரவல் ஆணை

Posted: 13 Aug 2016 12:52 PM PDT

வேலூரில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பணி நிரவல், பொதுமாறுதல் கலந்தாய்வில் 83 பேருக்கு பணி ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

"நியாயவிலைக் கடைகளில் விரைவில் ஸ்மார்ட் கார்டு திட்டம்'

Posted: 13 Aug 2016 12:51 PM PDT

வேலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.

விடுதியில் இருந்து 3 மாணவர்கள் மாயம்

Posted: 13 Aug 2016 12:51 PM PDT

திருப்பத்தூர் அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆடவர் ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

Posted: 13 Aug 2016 12:51 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா-பெல்ஜியம் இடையிலான காலிறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அரக்கோணத்தில் நாளை தமிழ்நாடு கட்டடக்கலை மரபு தொடர்பான கண்காட்சி

Posted: 13 Aug 2016 12:50 PM PDT

தமிழ்நாடு கட்டடக்கலை மரபு தொடர்பான கண்காட்சி அரக்கோணத்தில் திங்கள்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Posted: 13 Aug 2016 12:50 PM PDT

ஆம்பூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

Posted: 13 Aug 2016 12:50 PM PDT

ராணிப்பேட்டை அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆக்கிரமித்துள்ள அரசு, கோயில் நிலங்களை மீட்டு, பாதை அமைத்துத் தரக்கோரி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன், ரொக்கம் திருட்டு

Posted: 13 Aug 2016 12:49 PM PDT

ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டில் தங்க நகை, ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தடகளம்: டூட்டி, அனாஸ், அங்கித் ஏமாற்றம்

Posted: 13 Aug 2016 12:49 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த், தகுதிச்சுற்றோடு வெளியேறினார்.

இளைஞர் தற்கொலை: 3 பேர் கைது

Posted: 13 Aug 2016 12:49 PM PDT

ஆற்காடு அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரை கைதுசெய்தனர்.

கோயிலில் சிலை திருட்டு

Posted: 13 Aug 2016 12:49 PM PDT

ஆம்பூரில் கோயில் சிலை திருடு போனது குறித்து நகர போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

ஆடவர் இரட்டையர் டென்னிஸ்: நடால்-லோபஸ் ஜோடிக்கு தங்கம்

Posted: 13 Aug 2016 12:48 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-மார்க் லோபஸ் ஜோடி தங்கம் வென்றது.

டெங்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏவின் உறவினர் பலி

Posted: 13 Aug 2016 12:47 PM PDT

தில்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உறவினர் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். நகரில் டெங்கு காய்ச்சலால் நிகழ்ந்துள்ள இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.

சுதந்திர தின ஒத்திகையால் போக்குவரத்து நெரிசல்

Posted: 13 Aug 2016 12:47 PM PDT

பழைய தில்லியில் உள்ள செங்கோட்டை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின முழு ஒத்திகை நிகழ்வால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிஎஸ்எஃப் சார்பில் "உலக உறுப்பு தானம் நாள்

Posted: 13 Aug 2016 12:47 PM PDT

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சார்பில் "உலக உறுப்பு தானம் நாள்' தில்லியில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தில்லிகை இலக்கியச் சந்திப்பு

Posted: 13 Aug 2016 12:46 PM PDT

தில்லிகை இலக்கிய வட்டத்தின் ஆகஸ்ட் மாத நிகழ்வு தில்லி தமிழ்ச் சங்கத்தின் பாரதி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

முழு மாநில அந்தஸ்து: தில்லிவாசிகளுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

Posted: 13 Aug 2016 12:46 PM PDT

"தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற ஆம் ஆத்மியின் கோரிக்கையை தில்லிவாசிகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைநகரில் பறைசாற்றும் தமிழகக் கலைகள்!

Posted: 13 Aug 2016 12:46 PM PDT

நாட்டின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில், மத்திய அரசு சார்பில் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "பாரத் பர்வ்'-இல் (பாரத திருவிழா) இடம் பெற்றுள்ள தமிழகத்தின் கண்காட்சி அரங்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

ஒலிம்பிக் நீச்சல்: தங்கம் வென்ற மூத்த வீரர்

Posted: 13 Aug 2016 12:45 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 50 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது வீரரான அந்தோணி இர்வின் (படம்) 21.40 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

அமைச்சர்களுடன் கேஜரிவால் ஆலோசனை

Posted: 13 Aug 2016 12:45 PM PDT

ஹிமாசல பிரதேச மாநிலம், தரம்கோட்டில் 10 நாள்கள் தியானப் பயிற்சி (விபஸ்ஸனா) மேற்கொண்டுவிட்டு தில்லி திரும்பிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது இல்லத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சுதந்திர தினத்தையொட்டி நாளை காலையில் தில்லி சந்திப்பு - ஷாதரா இடையே ரயில் சேவை நிறுத்தம்

Posted: 13 Aug 2016 12:44 PM PDT

சுதந்திர தினத்தையொட்டி தில்லி சந்திப்பு முதல் தில்லி ஷாதரா வரையில் ரயில்களின் சேவை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) காலை 6.45 முதல் 8.30 மணி வரை தாற்காலிகமாக நிறுத்தப்படும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பல்கலை. கல்விக் கட்டணம் உயர்வு: ஆம் ஆத்மி அரசு மீது காங்கிரஸ் கடும் சாடல்

Posted: 13 Aug 2016 12:44 PM PDT

தில்லியிலுள்ள குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள விவகாரத்தில், ஆம் ஆத்மி அரசை காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

பள்ளி மாணவி பலாத்காரம்: பரிசோதனைக்கூட ஊழியர் கைது

Posted: 13 Aug 2016 12:44 PM PDT

வட-கிழக்கு தில்லி, நந்த் நகரில் அரசு மகளிர் பள்ளியில் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிசோதனைக்கூட உதவியாளர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பிரான்ஸ் முடநீக்கியல் நிபுணர் மரணம்

Posted: 13 Aug 2016 12:44 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள பிரான்ஸ் டென்னிஸ் அணியுடன் வந்திருந்த முடநீக்கியல் நிபுணர் பேட்ரிக் பார்டியர் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

கணவர் அடித்துக் கொலை: மனைவி, மைத்துனர் கைது

Posted: 13 Aug 2016 12:44 PM PDT

மேற்கு தில்லியில் உள்ள மாயாபுரி பகுதியில் கணவரை அடித்துக் கொன்றதாக அவரது மனைவி, மைத்துனர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

குர்கான் நீச்சல் போட்டியில் 3 இளம் வீரர்கள் பலத்த காயம்: போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு

Posted: 13 Aug 2016 12:43 PM PDT

குர்கானில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியின் போது, 3 இளம் வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பயணம்!

Posted: 13 Aug 2016 12:43 PM PDT

புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையம் வரை இயக்கப்படும் 23 கி.மீ. தொலைவு கொண்ட ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித் தடத்தில் (ஆரஞ்சு லைன்) வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தில்லி தமிழ்ச் சங்கத்தில் நகைச்சுவை பட்டிமன்றம்

Posted: 13 Aug 2016 12:43 PM PDT

சுதந்திர தினத்தையொட்டி, தில்லி தமிழ்ச் சங்கத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் "சமூக முன்னேற்றத்தைப் பெரிதும் தீர்மானிப்பவர்கள் ஆற்றல் மிக்க இளைஞர்களா?

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பெற்றோர்களுடன் "டிடிஇஏ' ஆலோசனை

Posted: 13 Aug 2016 12:42 PM PDT

பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் பெற்றோர்கள், தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) நிர்வாகத்தினர் சந்திப்புக் கூட்டம்  லக்ஷ்மிபாய் நகர் டிடிஇஏ பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கழிவு கலந்த நீரை குடித்ததால் வாந்தி, வயிற்றுப்போக்கு இருவர் சாவு; 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 13 Aug 2016 12:41 PM PDT

 திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் இருவர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Aug 2016 12:41 PM PDT

தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு ஆதரவாக காவல் துறையினர் செயல்படுவதாக குற்றம்சாட்டி, ஆரணியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தடம் மாறிய பேருந்து;  தாமதமான நீச்சல் போட்டி

Posted: 13 Aug 2016 12:41 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நீச்சல் வீராங்கனைகள் 3 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநர், நீச்சல் மைதானத்துக்குப் பதிலாக தடகள மைதானத்துக்கு பேருந்தை செலுத்தியதால், மகளிர் 50 மீ. ஃப்ரீஸ்டைல் அரையிறுதிப் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஆனது.

பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 13 Aug 2016 12:41 PM PDT

சமூகப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் கல்வி பயிலும், பயின்ற மாணவ, மாணவிகளின் பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பாக். 542 ரன்கள் குவிப்பு

Posted: 13 Aug 2016 12:40 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 146 ஓவர்களில் 542 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யூனிஸ்கான் 218 ரன்கள் குவித்தார்.

இளைஞரை அடித்துக் கொன்று சடலம் எரிப்பு

Posted: 13 Aug 2016 12:40 PM PDT

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக சரணடைந்த 6 பேர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

Posted: 13 Aug 2016 12:40 PM PDT

திருவள்ளூரில் கோயிலுக்குச் சென்று திரும்பிய பெண்ணின் கழுத்தில் இருந்து 7 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடரை வென்றது இந்தியா

Posted: 13 Aug 2016 12:40 PM PDT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

கனிமங்களை கடத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 13 Aug 2016 12:40 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கனிமங்களை வாகனங்களில் கடத்திச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சல்: சிறுவன் சாவு

Posted: 13 Aug 2016 12:40 PM PDT

திருவாலங்காடு அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் சனிக்கிழமை இறந்தார்.

"25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்'

Posted: 13 Aug 2016 12:39 PM PDT

அரசுப் பள்ளிகளில் 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடவாசலில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

Posted: 13 Aug 2016 12:37 PM PDT

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் சனிக்கிழமை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார்.

டி சில்வா சதம்; இலங்கை-214/5

Posted: 13 Aug 2016 12:37 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முகவாய் சீரமைப்பு சிகிச்சை

Posted: 13 Aug 2016 12:37 PM PDT

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முகவாய் சீரமைப்பு முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்.

முதல்வருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை

Posted: 13 Aug 2016 12:36 PM PDT

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை 1:30 என்ற அளவில் பணிநிரவல் செய்வதை கைவிட வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஆக.19-இல் விவசாயிகள் தினக் கொண்டாட்டம்: தமாகா முடிவு

Posted: 13 Aug 2016 12:36 PM PDT

திருவாரூரில் ஆக.19-ஆம் தேதி ஜி.கே. மூப்பனார் பிறந்த நாளையொ ட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் தினம் கொண்டாட முடிவெடுக்க ப்பட்டுள்ளது.

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 13 Aug 2016 12:36 PM PDT

 திருவாரூர் அருகே புலிவலத்தில் ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா தகராறில் வீட்டை கொளுத்திய 4 பேர் கைது

Posted: 13 Aug 2016 12:35 PM PDT

திருவாரூர் அருகே காட்டூரில் நடைபெற்ற திருவிழா தகராறில் வீட்டை தீ வைத்து கொளுத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு சிபிஎம் ஆதரவு

Posted: 13 Aug 2016 12:34 PM PDT

ஆக.19-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

மன்னார்குடியில் ஆளில்லா சிறிய ரக விமான சாகச நிகழ்ச்சி

Posted: 13 Aug 2016 12:34 PM PDT

மன்னார்குடி வ.உ.சி. சாலையில் உள்ள தேசிய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆளில்லா சிறிய ரக விமான சாகச நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புத்தக வாசிப்பு இயக்கம்

Posted: 13 Aug 2016 12:33 PM PDT

தேசிய நூலக தினத்தை முன்னிட்டு மன்னார்குடி கிளை நூலகத்தில் புத்தக வாசிப்பு இயக்கம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Posted: 13 Aug 2016 12:33 PM PDT

மன்னார்குடி அருகேயுள்ள புள்ளவராயன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் சென்னை உலாஸ் அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அண்மையில் நடைபெற்றது.

புதிய ரயில்களை இயக்காமல் முடக்கி வைத்திருப்பதால் இழப்பு: தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் குற்றச்சாட்டு

Posted: 13 Aug 2016 12:33 PM PDT

புதிய ரயில்களை இயக்காமல் முடக்கி வைத்திருப்பதால் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் குற்றம் சாட்டியுள்ளது.

நாகையில் கவனத்தை திசைதிருப்பி ரூ.4.50 லட்சம் திருட்டு: கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

Posted: 13 Aug 2016 12:33 PM PDT

நாகை கடைத்தெருவில் கவனத்தை திசை திருப்பி ரூ.4.50 லட்சத்தை மர்ம நபர்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனர்.

பெண்கள் சமுதாயம் உயர அயராது பாடுபடுபவர் முதல்வர்

Posted: 13 Aug 2016 12:32 PM PDT

முதல்வர் ஜெயலலிதா பெண் சமுதாயம் உயர்நிலையை அடைய அயராது பாடுபடுவர் என்றார் கரூர் எம்பியும்,மக்களவை துணை தலைவருமான மு.தம்பிதுரை.

அடுத்தடுத்த 4 வீடுகளில் நகை, பணம் திருட்டு

Posted: 13 Aug 2016 12:31 PM PDT

கரூரில் எல்ஐசி அலுவலர் வீடு உள்பட அடுத்தடுத்து 4 வீடுகளில் புகுந்து நகை,பணம் திருடிச்சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இலங்கை விமானம் பழுது: மாற்று விமானத்தில் சென்ற பயணிகள்

Posted: 13 Aug 2016 12:31 PM PDT

இலங்கை விமானம் திருச்சியிலிருந்து சனிக்கிழமை புறப்படும் நேரத்தில், அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததால், பயணம் ரத்துசெய்யப்பட்டு பயணிகள் மாற்று விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 13 Aug 2016 12:31 PM PDT

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், குளித்தலை அருகேயுள்ள ஆர்.டி.மலை பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் வடிவேல் (32) வெள்ளிக்கிழமை பணியாற்றினார். அப்போது, லிப்டில் சென்ற வடிவேல் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தார்.

சாலைப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து விவசாயி சாவு

Posted: 13 Aug 2016 12:30 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள மணவாத்துப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேகர் (40). விவசாயி. இவர் வீரடிப்பட்டிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். ஆதனக்கோட்டை அருகேயுள்ள

கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயிலில் உதய கருட சேவை

Posted: 13 Aug 2016 12:30 PM PDT

கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சுவாமி கோயிலில் பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உதய கருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் விமானக் கண்காட்சி

Posted: 13 Aug 2016 12:30 PM PDT

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் விமானக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்

Posted: 13 Aug 2016 12:29 PM PDT

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார் எக்ஸ்னோரா அமைப்பின் மாநிலத் தலைவர் த. செந்தில்குமார்.

மாமியாருக்கு விஷம் கொடுத்து கொன்ற மருமகள் கைது

Posted: 13 Aug 2016 12:29 PM PDT

தஞ்சாவூரில் மாமியாருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மருமகளை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பயன்தரும் நிதிநிலை அறிக்கை தந்தவர் முதல்வர்

Posted: 13 Aug 2016 12:29 PM PDT

அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெரும் விதமான நிதி அறிக்கையை தாக்கல் செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றார் அரசு தலைமைக் கொறடா தாமரை. எஸ். ராஜேந்திரன்.

சுற்றுச்சூழல் இயற்கை பேரிடர் இயக்க தொடக்க விழா

Posted: 13 Aug 2016 12:28 PM PDT

ஜயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை மக்கள் மன்றத்தில் கும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணி மையம் சார்பில், சுற்றுச்சூழல் இயற்கை பேரிடர் இயக்கம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 13 Aug 2016 12:28 PM PDT

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்ற வழிகாட்டுதல்படி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்கலாம்: எஸ்.பி. தகவல்

Posted: 13 Aug 2016 12:28 PM PDT

விபத்தில் சிக்கியவர்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மருத்துவமனைகளில் தயக்கமின்றி சேர்த்து உதவலாம் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

சாலைப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து விவசாயி சாவு: உறவினர்கள் மறியல்

Posted: 13 Aug 2016 12:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள மணவாத்துப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேகர் (40). விவசாயி. இவர் வீரடிப்பட்டிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். ஆதனக்கோட்டை

கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோயில் தேரோட்டம்

Posted: 13 Aug 2016 12:27 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வரலாறு படைத்தார் லலிதா பாபர்

Posted: 13 Aug 2016 12:26 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் லலிதா பாபர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பொற்பனை முனீஸ்வரர் கோயிலில் இன்று ஆடித்திருவிழா

Posted: 13 Aug 2016 12:26 PM PDT

புதுக்கோட்டை அருகேயுள்ள அருள்மிகு பொற்பனை முனீஸ்வரர் கோயிலில் 50-ஆம் ஆண்டு ஆடித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது.

தமிழ்ப்பல்கலை. தொலைநிலைக் கல்வி தமிழ்ப் புலவர் படிப்புக்கு ஆக.31 வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 13 Aug 2016 12:26 PM PDT

தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் தமிழ்ப்புலவர் பயிற்சி, சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கரம்பயம் கிராமத்தில் துப்புரவு முகாம்

Posted: 13 Aug 2016 12:26 PM PDT

பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு துப்புரவு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் மனிதஉரிமை மீறலுக்கான எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Aug 2016 12:26 PM PDT

சாலியமங்கலத்தில் தலித் பழங்குடியின பெண் கலைச்செல்வி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மனித உரிமை மீறலுக்கான எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் சாவு கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் முற்றுகை

Posted: 13 Aug 2016 12:25 PM PDT

கும்பகோணத்தில் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் தஞ்சாவூர் மருத்துவமனையில் உயிரிழந்ததை கண்டித்து, மனித உரிமை மீறலுக்கான எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு முதல்வரின் நல்ஆளுமை விருது

Posted: 13 Aug 2016 12:25 PM PDT

மகாமகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியதற்காக, தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியர் என்.சுப்பையனுக்கு, சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.

கரூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.81 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 13 Aug 2016 12:25 PM PDT

கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.81 கோடி மதிப்பில் காவிரிக்குடிநீர் திட்டப்பணிகளை கரூர் எம்.பி.,யும், மக்களவை துணை தலைவருமான மு. தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சனிக்கிழமை தொடக்கி வைத்தனர்.

தங்கத்தை தவறவிட்டார் பெல்ப்ஸ்

Posted: 13 Aug 2016 12:25 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் அமெரிக்க நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கத்தை தவறவிட்டார்.

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கண்காட்சி

Posted: 13 Aug 2016 12:24 PM PDT

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு கல்லூரியின் தலைவர் எம்.குமாரசாமி தலைமை வகித்தார். இதில்,சிறப்பு விருந்தினராக டாடா கன்சல்டசன்சியின் வித்துகுமார் சட்குரி பங்கேற்றார்.

மாநில திறனறிதல் போட்டி: பரணி பார்க் பள்ளி முதலிடம்

Posted: 13 Aug 2016 12:24 PM PDT

கரூர் புகழூர் காகித ஆலை சார்பில் அண்மையில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில திறனறிதல் போட்டியில் கரூர் பரணி பார்க் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™