Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இப்படியும் நடக்கிறதா சினிமா திரையரங்குகளில்?

Posted: 13 Aug 2016 12:43 PM PDT

அண்மையில் ஒரு நாள் மாலை போடிநாயக்கனூரில் ஒரு சினிமா தியேட்டர். ஒரு வாரிசு நடிகர் நடித்து வெளியான படம். படம் ஆரம்பித்து சுமார் 20 நிமிடங்கள் இருக்கும் என்பதால் இருட்டிலேயே சீட் தேடிக் கண்டுபிடித்து அமர்ந்தோம். ஹீரோ வரும் ஸீன்களுக்கு எல்லாம் செம கைதட்டல்கள், விசில் சத்தம். அட..இந்த ஊரில் அதுவும் படம் ரிலீஸாகி சுமார் 10 நாட்கள் கழித்தும் இத்தனை ரெஸ்பான்ஸா…? என்று வியந்து போனேன். இடைவேளை விட்டார்கள். முன்னும் பின்னும் பார்த்தால் மொத்தமே 20 பேர் கூட இல்லை. பிறகெப்படி இவ்வளவு சத்தம்? வியப்போடு, ...

நாந்தானுங்க கிறுக்கினேன்

Posted: 13 Aug 2016 11:22 AM PDT

நம்ம நாட்டுலதான்யா எல்லாமே இலவசம், மாசமாய் இருக்கும்போது மருத்துவம் இலவசம், கொழந்த பொறந்தா பணமும், பால் பவுடரும் இலவசம், வளரும்போது படிப்பு இலவசம், படிச்சிட்டு வேல இல்லையா மாசா மாசம் பணமும் தந்து ஆக்கித் திங்க அரிசி, பருப்பு இலவசம்!! இம்புட்டும் தந்து - நீ பத்தலன்னு சொன்னா வீடும், கரண்டும் இலவசம், கண்ணாலத்துக்கு தாலிக்கு தங்கம் இலவசம், படிப்ப பொறுத்து அது கொஞ்சம் கூட கொறைய கெடைக்கும்!! அப்புறம் எப்படிப்பா நாங்க வேலைக்குப் போறது கஷ்டப்படுறது!! இத்தன செய்யறதுக்குப் பதிலா வீடு ...

கணினி செய்திகள் + you Tube வசதிகள்

Posted: 13 Aug 2016 10:49 AM PDT

**IPhone – இல் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்,எவ்வளவு நேரமாக அந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற விபரங்களைக் கான …......... Settings > Privacy > Location Services > System Services > Frequent Locations **சீன அரசு ஒரு வருடத்திற்கு 488 மில்லியன் கருத்துகளை/செய்திகளை சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறது . இதற்காக பிரச்சார தொழிலாளர்களுக்கு, ஒரு கருத்துக்கு 50 சீன சென்ட்ஸ் (Cents)  வீதம், அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு வழங்கப்படுகிறது. **உங்களுக்குப் பிடித்த YouTube காணொளிகள் பலவற்றை ஒன்றாக  சேர்த்து ...

பல்லுறுப்பு தானம்

Posted: 13 Aug 2016 09:23 AM PDT

பல்லுறுப்பு தானம்   தானத்தில் சிறந்தது யாதெனில் அன்னதானம் என்பர் சிலர் கல்விதானம்  என்பர் சிலர் நிதானம் என்பர் சிலர் .. தவறினால் சமாதானம் என்பர் பலர்  .. அன்னதானம்  அபரிமிதம்  கோவில்களிலே   கல்வி  தானம்  கற்குமிடங்களிலே . கண் தானம் கண்கூடாக காணும் தானம் ஓருயிர் விழிகள் ஈருயிர் காணும் ஒப்பற்ற தானம் தான் . உறுப்புகள் தானம் உயர்ந்த தானம் உலகினிலே . உணர்வற்ற  ஒரு உயிர் செய்யும் தானம் பல உயிர் காக்குமெனில் உறுப்புகள் தானமே உயர்ந்த தானமென்று உறுதியாய் கூறுவேன் ரமணியன்

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு: சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.

Posted: 13 Aug 2016 09:04 AM PDT

மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நூற்றாண்டையொட்டி, அடுத்த வாரம் நடைபெற உள்ள இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா.சபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம், வரும் 15-ஆம் தேதி ஐ.நா. சபையில் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, ஐ.நா. சபையின் தூதர்கள், சர்வதேசத் தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் ...

கோடம்பாக்கம் குல்கந்த் –

Posted: 13 Aug 2016 07:27 AM PDT

- - ஜிப்ரான் – உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் கமல் படங்கள்னு தெரியும். ஆனால் மூன்றுக்கும் இசையமைத்தவர் யார் என்ற தகவல் உங்களில் எத்தனை பேருக்குத்தெரியும்? இப்போ தெரிஞ்சுக்கோங்க. அவர்தான் ஜிப்ரான். அடுத்ததும் கமல் படம்தானா? அதுதான் இல்லைங்க. பின்ன? தேசிய விருது பெற்ற குற்றம் கடிதம் பட இயக்குநர் பிரம்மாவின் படத்துக்குத்தான் மெட்டுப்போட்டு ஹிட்டாக்கப் போகிறார். யாரிப்பு? சூர்யா! அப்ப ஜோதிகா மேம் நிச்சயம் இருப்பாங்கில்ல? – —————————————–

ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்

Posted: 13 Aug 2016 07:07 AM PDT

1) நான் ஏறாத மரத்தில் என் தம்பி ஏறுவான் - அவன் யார்? - 2) ஐந்து வீட்டுக்குப் பொதுவான ஒரு முற்றம் - அது என்ன? - 3) தண்ணீரில் உதயம், தண்ணீரிலேயே அழியும்- அது என்ன? - 4) இருட்டு வீட்டிலே குருட்டு எருமை மேயுது- அது என்ன? - 5) ஆடும் வீட்டுக்குள் அச்சமின்றி பிள்ளைகள் - அது என்ன? - 6) அத்தை ஆறடி போவதற்குள் ஊரே விடிந்தது- அது யார்? - 7) வெள்ளைக்கல், கடித்தால் இனிக்கும் கல் - அது என்ன? - 8) காய்ந்த தோலுக்கு கல்யாண வீட்டிலும் மவுசு - அது என்ன? - 9) ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, உன்னால் ...

புத்தகம் தேவை

Posted: 13 Aug 2016 06:52 AM PDT

ஒரு பளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
புத்தகம் தேவை தளத்தில் இருக்கும் தமிழ்நேசன் இணைப்பு வேலை செய்யவில்லை... நன்றி

காளைகளே...

Posted: 13 Aug 2016 06:47 AM PDT

- -தமிழர்களே… அலங்காநல்லூர் தமிழர்களே முட்டி மோதி ஓடி… விழுந்து அடிபட்டு உடல் ஊனமாகி உயிரும் போகிறதே…! – துண்டுக்கும் மாலைக்கும் பொண்ணுக்கும் பொருளுக்கும் சோரம் போவது சோகமில்லையா? – அலங்காரப் பந்தலில் அமர்ந்து மீசை முறுக்கும் பண்ணையார்கள் அடக்கியதுண்டா மாட்டை? – கொம்பு சீவி…சரக்கேற்றி வெறியூட்டி வளர்ப்பவர்கள் பிடிப்பதுண்டா காளைகளை? – தமிழர்களே… அலங்காநல்லூர் தமிழர்களே சிந்தியுங்கள் – காளைகளை பிடித்தது போதும் இனியாவது எலிகளைப் பிடியுங்கள்… நாளை உலகம் கம்ப்யூட்டர் ...

கம்பி விளம்பரம் வந்தா மாத்திடுவாரு...!!

Posted: 13 Aug 2016 06:16 AM PDT

- என்ன, தலைவருக்கு ஜெயில் பயம் போகவேயில்லையா? - பின்ன...டி.வி.யில கம்பி விளம்பரம் வந்தாலே மாத்திடுறாரே சேனலை...!! - எல்.சேவுகபாண்டியன் - ----------------------------------------- - தலைவரே...தேர்தல் பிரசாரத்துக்கு மாடல் ரெடி... ஆனா... - என்ன ஆனா? - உங்க பேர் வர்ற இடத்தை எல்லாம் 'பீப்' போட்டு மறைச்சுட்டாங்க...! - தஞ்சை தாமு - --------------------------------------- ஆசிரியை: சமீபத்தில் இபெய்த மழையால் என்ன கற்றுக் கொண்டீர்கள்? - ஒண்ணும் கத்துக்கலை....அப்பத்தான் ஸ்கூல் ...

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

Posted: 13 Aug 2016 06:05 AM PDT

தரைவழி தொலைபேசி தொடர்பை ஊக்குவிக்கும் வகையில் வரும் 21-ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொலைபேசி ("லேண்ட்லைன்') மூலம் செய்யும் அழைப்புகளுக்குக் கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அ றிவித்துள்ளது. இந்தக் கட்டணமில்லா சலுகை முறை சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வருகிறது. தரைவழி தொலைபேசி, செல்லிடப்பேசி என எந்த வகையான தொலைத்தொடர்பு இணைப்புக்கு ஞாயிற்றுக்கிழமை பேசினால் இனி கட்டணம் கிடையாது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை தரைவழி தொலைபேசி மூலம் செய்யப்படும் எந்த அழைப்புக்கும் ...

தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா

Posted: 13 Aug 2016 03:20 AM PDT

தமிழ் சமூகம் சீரழிவுக்குள்ளாக மூழ்க இந்தியா முழுவதும் இருந்துகோடம்பாக்கத்தில் வந்து குவியும் சினிமாக்காரர்கள் ஒருகாரணம் . இவர்களுக்கு ஏதாவது சேனல்கள் ஏதாவது ஒரு போட்டி வைத்து காசு கொடுத்து கொண்டே இருக்கின்றன அன்றாடம் நல்ல காசு கலாச்சார சீர்கேடான வாழ்க்கை . ஸ்டன்ட் நடிகர்கள் அப்படியே ரவுடித்தனமும் செய்யத்தொடங்கி விடுகிறார்கள் இவர்களின் பாவத்தை துடைக்கவே சென்னையில் பெருவெள்ளம் உண்டாகி அப்பாவிகள் துயரப்பட்டது இவர்களால் சென்னை சீரழிகிறது வெள்ளமும் வருகிறது எங்காவது தனியே சினிமா சிட்டி ஒன்றை ...

மரியாதை நிமித்தமான சந்திப்பாம்...!!

Posted: 13 Aug 2016 03:08 AM PDT

- வீட்டை இங்கே கட்டிட்டு, கிச்சனை ஏன் பக்கத்து தெருவில கட்டியிருக்கீங்க? - நான்தான் சொன்னேனே....என் மனைவிக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம்னு...! - ---------------------------------------- நேத்து உங்க வீட்டுக்கு திருடன் வந்தது மரியாதை நிமித்தமான சந்திப்பா? - ஆமாம்...'மரியாதையா நகைகள் கழட்டிக்குடு'னு என் மனைவிகிட்டே கேட்டானே...!! - பர்வின்யூனூஸ் - -------------------------------------- - ஜெயியில் தலைவர் காதலர் தினம் கொண்டாடினாரா எப்படி? - 'களி' யாட்டம் போட்டுத்தான்! - இசக்கி - ------------------------------------------ - தவறுகளை ...

தீபாவளி திரைக்களத்தில் ‘சிங்கம் 3’, ‘காஷ்மோரா’, ‘கத்தி சண்டை

Posted: 13 Aug 2016 02:37 AM PDT

- தீபாவளி விடுமுறைக்கு சூர்யாவின் 'சிங்கம் 3', கார்த்தியின் 'காஷ்மோரா' மற்றும் விஷாலின் 'கத்தி சண்டை' ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. – கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காஷ்மோரா'. – நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. – எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. – ஹரி ...

முதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்

Posted: 13 Aug 2016 02:36 AM PDT

- 'ஹரிதாஸ்' படத்துக்குப் பிறகு ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கியுள்ள ஆக்‌ஷன் ரொமான்ஸ் படம் 'வாகா'. விக்ரம் பிரபு ஆஹா என சொல்ல வைத்தாரா? கதை: அப்பாவின் மளிகைக் கடை தொழிலில் இருந்து தப்பிக்க, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆகிறார் விக்ரம் பிரபு. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறார். ஏன்? எப்படி சிக்குகிறார்? அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா? சிறையில் இருக்கும் மற்ற இந்தியர்கள் என்ன ஆகிறார்கள்? விக்ரம் பிரபுவின் நோக்கம் நிறைவேறியதா? என்பது மீதிக் கதை. ராணுவ வீரர்கள் என்று ...

எவ்வித இசை பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் நாதஸ்வரம் தயாரித்து அசத்தும் போக்குவரத்து காவலர்

Posted: 13 Aug 2016 02:29 AM PDT

- நாதஸ்வரம் தயாரிப்பில் காளிராஜ். உள்படம்: போலீஸ் உடையில் காளிராஜ். ------------------------------- - எந்த இசைப் பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் நாதஸ்வரம் தயாரிக் கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் விருதுநகரில் போக்குவரத்து காவலராக பணி யாற்றும் காளிராஜ். தற்போது பல கலைஞர்கள் இவரிடம் நாதஸ்வரம் வாங்கிச் செல்கின்றனர். - நாதஸ்வரத்தில் இரண்டு கட்டை, இரண்டரைக் கட்டை, மூன்று கட்டை, ஐந்து கட்டை என பல வகை உண்டு. ஆனால், தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுவது இரண்டரைக் கட்டை நாதஸ்வரமே. இது ...

தளபதி வர்றாரு....!

Posted: 12 Aug 2016 10:10 PM PDT


-
தளபதி வருவாரு?

விஜய் தற்போது இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம்
'விஜய் 60'. அதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்துடன்
முடிவடைய இருக்கிறது. பொங்கலுக்கு ரீலீசாகிறது.
அப்போ அது தளபதி பொங்கல்!

———————————————

ரக்ஷா பந்தன்: ராஜஸ்தானில் பெண்களுக்கு பேருந்தில் இலவசம்

Posted: 12 Aug 2016 09:53 PM PDT

ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி (ஆக.18), அன்று
மட்டும அரசுப் பேருந்துகளில் பெண்கள்
இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று
ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில்,
"ரக்ஷா பந்தன் தினத்தன்று ராஜஸ்தான் மாநில அரசுப்
பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் இலவசமாக
பயணம் மேற்கொள்ளலாம்' என்று தெரிவித்தனர்.

—————————-

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: வசிஷ்டா ஜோரி

Posted: 12 Aug 2016 09:50 PM PDT

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: 2016-2017-ஆம் ஆண்டுக்கான புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட உள்ளது. அதில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சில முக்கிய விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. சென்னை பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்.) நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்புகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ...

சிங்கம் – 3 -இயக்குநர் சிரிக்கிறாரு

Posted: 12 Aug 2016 08:16 PM PDT


-
ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்தவரும் 'சிங்கம் 3'
படப்பிடிப்பு அதிரி புதிரியாக நடைபெற்று வருகிறது.
விரைவில் அந்தப் படக் குழு மலேசியா செல்கிறார்கள்.
இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை 41 கோடி ரூபாய்க்கு
விற்பனையாகியிருக்கிறதாம்.

இது சூர்யா கேரியரில் இதுவரை இல்லாத தொகையாம்.
ஹரியின் முகத்தில் புன்னகை!

சிங்கம்ல!

தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன் காலமானார்

Posted: 12 Aug 2016 08:12 PM PDT

- தி.மு.க., முன்னாள் சமூக நலத்துறை அமைச்சரும், தி.மு.க., துணைப்பொதுச்செயலாளருமான திருமதி சற்குண பாண்டியன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று(ஆக. 13) காலமானார். சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக பூத உடல் வைக்கப்படுகிறது. இவர் சென்னை டாக்டர் ராதாகிருஷ்னன் நகர் தொகுதியிலிருந்து இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். - ------------------------ தினமணி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™