Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரூ.2 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- திமுக ஆட்சியில்தான் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: கருணாநிதி
- பேரவையில் சினிமா பாடல்கள் பாடி அசத்திய கருணாஸ்
- வேல்முருகன், கி.வீரமணி கண்டனம்
- சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்துளை சிகிச்சை பட்ட மேற்படிப்பு
- ஒசூர் தலைமைக் காவலரை கொலை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
- ரயிலில் பணம் கொள்ளை விவகாரம்: விருத்தாசலத்தில் தனிப்படை விசாரணை
- தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைவு
- 2017 முதல் இணைப்புக் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம்
- என்எல்சி நிறுவனத்தின் பெயர் மாற்றம்
- ஈரப்பதம் வடக்கு நோக்கி நகர்வு: தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்
- பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.38 கோடியைத் தாண்டியது
- பஞ்சு அருணாசலத்தின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு: நடிகர் சங்கம் இரங்கல்
- ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
- மந்தாரக்குப்பத்தில் நகைக் கடையின் அருகே குழி தோண்டி 1.5 கிலோ தங்கம், வெள்ளி கொள்ளை
- 6 மாவட்டங்களில் ஆக. 19-இல் கடையடைப்பு, மறியல்
- அண்ணாமலைப் பல்கலை.யில் பி.இ. வகுப்புகள் ஆக.18-இல் தொடக்கம்
- ஆலங்குடி கோயிலில் லட்சார்ச்சனை நிறைவு: பக்தர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு
- கனிமொழி எம்.பி. பெயரைப் பயன்படுத்தி மோசடி: புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- தேச பக்தியை நினைச்சாதான் புல்லரிக்குது..!
- தொடராமல் இருந்தால் சரி!
- எண்ணித் துணிய வேண்டும்!
- தீர்ப்பு தீர்வாகாது
- மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்? முதல்வருக்குப் பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக உறுப்பினர்
- தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு அம்மா சிமென்ட்: அமைச்சர் சம்பத் தகவல்
- வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
- பேரவையில் இன்று...
- அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம்
- 3 மாவட்டங்களில் வீட்டு மூலிகைத் தோட்டம்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
- "சிறைகளில் கூடுதலாக 100 கேமராக்கள்'
- எந்தத் தொழிற்சாலையும் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது: தமிழக அரசு உறுதி
- "கடலூரைக் கண்டால் அச்சம்'
- ரயிலில் பணம் கொள்ளை: தமிழக அரசின் நடவடிக்கை என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி
- கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு படிப்படியாக நிலுவைத் தொகை: திமுக கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
- சிறுதொழில் கடனை எளிமையாக்க சட்டத் திருத்த மசோதா: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி
- தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள்: மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மகாநதி விவகாரத்தில் அற்ப அரசியல்: பிஜேடி அரசு மீது காங்கிரஸ் தாக்கு
- சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை: சாட்சியத்தை விலைக்கு வாங்கியதாக ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு
- ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது: பிரதமரிடம் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை
- மாணவியை அடித்த ஆசிரியர் கைது
- மேலும் 6 ஐஐடி-களை நிறுவ குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு
- விளம்பர பலகைகளை அகற்ற 24 மணி நேர கெடு: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
- எங்களைப் பற்றி பிரதமர் பேசாதது ஏன்? காஷ்மீர் பண்டிட்டுகள் கவலை
- தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.23 லட்சம் கையாடல்: உதவி மேலாளர் கைது
- ஆணவக் கொலை பற்றி அஞ்சும் ஜோடிகள் திருமணப் படிவத்தில் அறிவிக்கலாம்: சிஐசி
- உள்ளாட்சித் தேர்தல்: பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிய ஆட்சியர் அறிவுறுத்தல்
- வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டம்
- கபடிப் போட்டி: பழனியாண்டவர் மகளிர் கல்லூரி வெற்றி
- தூய்மை இந்தியா சிறப்பு முகாம்
- சிலுவத்தூர் மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மனோஜ் குமார்
- தேசிய குடல்புழு நீக்க தினம் அனுசரிப்பு
- மாற்றுத் திறனாளி நலத் திட்ட உதவிக்கு சிறப்பு முகாம்கள்
- மகளிர் வில்வித்தை பம்பேலா, தீபிகா வெளியேற்றம்
- சுகாதார மேம்பாட்டில் பொதுமக்களை ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும்: ஆட்சியர்
- நல்லாசிரியர் விருதுக்கு 22 ஆசிரியர்கள் பரிந்துரை
- குருப்பெயர்ச்சி, ஏகதின லட்சார்ச்சனை
- பழனிக் கோயில் உண்டியல் திறப்பு: 21 நாள் காணிக்கை வரவு ரூ.1.38 கோடியை தாண்டியது
- சாய்னா, சிந்து வெற்றி
- அனல் பறக்கும் தடகளப் போட்டிகள் இன்று தொடக்கம்
- ஆடவர் ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி
- விதி மீறல்: அமைச்சருக்கு எச்சரிக்கை
- டெங்கு: மொஹல்லா கிளினிக்குகளில் செப். 1 முதல் இலவசப் பரிசோதனை
- ஒலிம்பிக்: இந்தியா இன்று...
- ஜல் போர்டு செயற் பொறியாளர் பணியிடை நீக்கம்
- வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்து சாவு
- பள்ளி மாணவி பலாத்காரம்
- மகளிர் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
- மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
- பெண் தொண்டர் தற்கொலை வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன்
- நாமக்கல்லில் யோகா மத்திய ஆராய்ச்சி நிறுவனம் வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
- தமிழக நீதிமன்றத்தில் ஆக. 22-க்கு பிறகு முறையிட சசிகலா புஷ்பா உள்ளிட்ட மூவருக்கு உத்தரவு: தொடரும் புகார்களால் முன்ஜாமீன் கோரிய விவகாரம்
- தியானப் பயிற்சி முடிந்து தில்லி திரும்பினார் கேஜரிவால்
- கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களில் போதிய தொழில்நுட்பம், கட்டமைப்பு வசதிகள்: மத்திய அரசு விளக்கம்
- தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சந்திப்பு: குறைந்தபட்ச ஊதியம் நிர்ணய விவகாரம்
- எங்கே போனது மனித நேயம்: வேன் மோதி பலத்த காயமடைந்த காவலாளி வலியால் துடித்து சாவு
- மாஞ்சா நூலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
- தில்லி அமைச்சரின் புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை: ஆம் ஆத்மி குற்ற்ச்சாட்டு
- கன்னையா குமாரின் ஜாமீனுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
- தொழில்நுட்பத் துறை உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் பிரேம்ஜி, ஷிவ் நாடார்
- இலங்கை - இந்தியா இடையே பாலம் கட்டும் திட்டம் இல்லை
- சிரியாவில் தினமும் 3 மணி நேரம் போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
- மாணவர்களுக்கான நம்பிக்கை செறிவூட்டல் நிகழ்ச்சி
- காலியாக உள்ள செவிலியர் பணியிடம் நிரப்பப்படுமா?: செய்யூர் எம்எல்ஏ கேள்வி
- மறைமலைநகரில் 100 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்
- வெடிகுண்டு, ஆயுதங்களுடன் கார் பறிமுதல்: 5 பேர் கைது
- முதியவரின் கண்கள் தானம்
- சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி பகுதியினர் கவனத்துக்கு...
- நாட்டுக்கோழி வளர்ப்பு: இன்று பயிற்சி முகாம்
- நாப்கின் தயாரிப்பு உற்பத்தி மையம் தொடக்கம்
- அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து கோரி ஆர்ப்பாட்டம்
- மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- வட்டாட்சியரை முற்றுகையிட்ட வேப்பூர் கிராம பொதுமக்கள்
- கூட்டுறவு வங்கி செயலாளரைக் கண்டித்து தீக்குளிக்க முயற்சி: விவசாயியால் பரபரப்பு
- இரு சக்கர வாகனம் மோதியதில் அக்காள், தம்பி சாவு
- "இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகள் நலமுடன் உள்ளனர்'
- பள்ளியைப் பூட்டி பெற்றோர்கள் போராட்டம்
- கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
| ரூ.2 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2016 01:28 PM PDT ரூ. 2,000 கோடி கரும்பு நிலுவைத் தொகையை தனியார், கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்றுத் தரக் கோரி, கரும்பு விவசாயிகள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| திமுக ஆட்சியில்தான் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: கருணாநிதி Posted: 11 Aug 2016 01:28 PM PDT உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டது என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| பேரவையில் சினிமா பாடல்கள் பாடி அசத்திய கருணாஸ் Posted: 11 Aug 2016 01:27 PM PDT "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' என்பது உள்பட இரண்டு திரைப்பட பாடல்களை பேரவையில் பாடினார், நடிகரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கருணாஸ். |
| வேல்முருகன், கி.வீரமணி கண்டனம் Posted: 11 Aug 2016 01:27 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்துளை சிகிச்சை பட்ட மேற்படிப்பு Posted: 11 Aug 2016 01:26 PM PDT சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்துளை அறுவைச் சிகிச்சை சிறப்பு பட்ட மேற்படிப்பில் 4 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறவுள்ளது. |
| ஒசூர் தலைமைக் காவலரை கொலை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு Posted: 11 Aug 2016 01:24 PM PDT ஒசூர் தலைமைக் காவலர் முனுசாமியை கொலை செய்த வழக்கில் கைதான 2 பேரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வியாழக்கிழமை உத்தரவிட்டார். |
| ரயிலில் பணம் கொள்ளை விவகாரம்: விருத்தாசலத்தில் தனிப்படை விசாரணை Posted: 11 Aug 2016 01:23 PM PDT ரயிலில் வங்கிப் பணம் ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீஸார் 60 பேர் விருத்தாசலத்தில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். |
| தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைவு Posted: 11 Aug 2016 01:23 PM PDT சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.23,856-க்கு விற்பனையானது. |
| 2017 முதல் இணைப்புக் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம் Posted: 11 Aug 2016 01:23 PM PDT விருப்பப் பாடத் தேர்வு முறையை வருகிற 2017-18 கல்வியாண்டு முதல் இணைப்புக் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை பல்கலைக்கழக கல்விப் படிப்புகள் திட்ட மையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. |
| என்எல்சி நிறுவனத்தின் பெயர் மாற்றம் Posted: 11 Aug 2016 01:22 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் "என்எல்சி இந்தியா லிமிடெட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு என்எல்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
| ஈரப்பதம் வடக்கு நோக்கி நகர்வு: தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் Posted: 11 Aug 2016 01:21 PM PDT காற்றின் ஈரப்பதம் வடமாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
| பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.38 கோடியைத் தாண்டியது Posted: 11 Aug 2016 01:21 PM PDT பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் கடந்த 21 நாள்களில் நிரம்பியதை அடுத்து, அவை வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரொக்கம் ரூ. 1.38 கோடியைத் தாண்டியது. |
| பஞ்சு அருணாசலத்தின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு: நடிகர் சங்கம் இரங்கல் Posted: 11 Aug 2016 01:21 PM PDT திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. |
| ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் Posted: 11 Aug 2016 01:20 PM PDT சென்னை வந்த ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் 30 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
| மந்தாரக்குப்பத்தில் நகைக் கடையின் அருகே குழி தோண்டி 1.5 கிலோ தங்கம், வெள்ளி கொள்ளை Posted: 11 Aug 2016 01:19 PM PDT கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் நகைக் கடையின் அருகே குழி தோண்டி, கடைக்குள் புகுந்து 1.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது. |
| 6 மாவட்டங்களில் ஆக. 19-இல் கடையடைப்பு, மறியல் Posted: 11 Aug 2016 01:18 PM PDT கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி, தஞ்சாவூர், திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்துவது என இடதுசாரி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| அண்ணாமலைப் பல்கலை.யில் பி.இ. வகுப்புகள் ஆக.18-இல் தொடக்கம் Posted: 11 Aug 2016 01:18 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2016-17-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் கீழ்காணும் தேதிகளில் தொடங்குகிறது என, பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்தார். |
| ஆலங்குடி கோயிலில் லட்சார்ச்சனை நிறைவு: பக்தர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு Posted: 11 Aug 2016 01:17 PM PDT ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை நிறைவு நாளான வியாழக்கிழமை திரளான பக்தர்கள் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. |
| கனிமொழி எம்.பி. பெயரைப் பயன்படுத்தி மோசடி: புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 11 Aug 2016 01:17 PM PDT கனிமொழி எம்.பி பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரை, தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| தேச பக்தியை நினைச்சாதான் புல்லரிக்குது..! Posted: 11 Aug 2016 01:16 PM PDT |
| Posted: 11 Aug 2016 12:29 PM PDT அரசாங்கம் ரயிலில் அனுப்பும் ஐந்து லட்சம் டாலர் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்து மெக்ஸிகன் புரட்சியாளர்களின் போராட்டத்துக்கு அளிப்பதுதான் 1969-ஆம் ஆண்டில் வெளியான "ஃபைவ் மென் ஆர்மி' என்கிற ஆங்கிலத் திரைப்படத்தின் கதை. அதுபோல இருக்கிறது சமீபத்தில் நடத்தப்பட்டிருக்கும் ரயில் கொள்ளை. |
| Posted: 11 Aug 2016 12:27 PM PDT கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த "ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் பொலிவுறு நகர் திட்டம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி செலவில் நாடெங்கிலும் பல நகரங்கள் உலகத் தரம் வாய்ந்த நகரங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 11 Aug 2016 12:26 PM PDT தேசியத் தலைநகராக தில்லி திகழ்வது நாட்டின் பெருமை. ஆனால், அதுவே தில்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. |
| Posted: 11 Aug 2016 12:24 PM PDT மெட்ரோ ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன் என்பது தொடர்பான முதல்வரின் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திணறி நின்றார். |
| தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு அம்மா சிமென்ட்: அமைச்சர் சம்பத் தகவல் Posted: 11 Aug 2016 12:23 PM PDT தமிழகத்தில் 3.18 கோடி அம்மா சிமென்ட் மூட்டைகள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 லட்சம் பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர் என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். |
| வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் Posted: 11 Aug 2016 12:22 PM PDT வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஊரக தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார். |
| Posted: 11 Aug 2016 12:21 PM PDT சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 12) சுற்றுச்சூழல், செய்தி-விளம்பரம், எழுதுபொருள்-அச்சுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம் Posted: 11 Aug 2016 12:21 PM PDT அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருவித செறிவூட்டப்பட்ட அயோடின் உப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார். |
| 3 மாவட்டங்களில் வீட்டு மூலிகைத் தோட்டம்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 11 Aug 2016 12:20 PM PDT தமிழகத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் வீட்டில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| "சிறைகளில் கூடுதலாக 100 கேமராக்கள்' Posted: 11 Aug 2016 12:20 PM PDT தமிழகத்தில் சிறைச் சாலைகளில் கூடுதலாக 100 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| எந்தத் தொழிற்சாலையும் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது: தமிழக அரசு உறுதி Posted: 11 Aug 2016 12:19 PM PDT தமிழகத்தில் இயங்கும் எந்தத் தொழிற்சாலையும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட மாட்டாது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதிபடத் தெரிவித்தார். |
| Posted: 11 Aug 2016 12:19 PM PDT கடலூரில் போராட்டங்கள் நடத்தப்படுவதால், அங்கு தொழில் முதலீட்டாளர்கள் அச்சப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார். |
| ரயிலில் பணம் கொள்ளை: தமிழக அரசின் நடவடிக்கை என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி Posted: 11 Aug 2016 12:19 PM PDT ரிசர்வ் வங்கிப் பணம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார். |
| கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு படிப்படியாக நிலுவைத் தொகை: திமுக கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் Posted: 11 Aug 2016 12:18 PM PDT கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு படிப்படியாக நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். |
| சிறுதொழில் கடனை எளிமையாக்க சட்டத் திருத்த மசோதா: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி Posted: 11 Aug 2016 12:17 PM PDT சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.) வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதை எளிமையாக்கும் வகையில் நிறுவனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள்: மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 11 Aug 2016 12:17 PM PDT தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் குற்றம் இழைப்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் வலியுறுத்தினார். |
| மகாநதி விவகாரத்தில் அற்ப அரசியல்: பிஜேடி அரசு மீது காங்கிரஸ் தாக்கு Posted: 11 Aug 2016 12:15 PM PDT மகாநதி விவகாரத்தில் பிஜு ஜனதாதள அரசு அற்பத்தனமான அரசியலை நடத்துகிறது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. |
| சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை: சாட்சியத்தை விலைக்கு வாங்கியதாக ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு Posted: 11 Aug 2016 12:15 PM PDT வடதில்லி சீக்கியர்களின் குருத்வாராவின் குரு கிராந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர், அவருக்கு எதிரான சாட்சியங்களை விலைக்கு வாங்கியதாக மக்களவையில் அகாலி தளம் கட்சி குற்றம்சாட்டியது. |
| Posted: 11 Aug 2016 12:13 PM PDT சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூலிக்கும் பொறுப்பை தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சரக்கு மற்றும் சேவைக் கட்டமைப்பு (ஜி.எஸ்.டி.என்) நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கூடாது என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| Posted: 11 Aug 2016 12:13 PM PDT உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை அடித்த ஆசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| மேலும் 6 ஐஐடி-களை நிறுவ குடியரசுத் தலைவர் ஒப்புதல் Posted: 11 Aug 2016 12:12 PM PDT ஜம்மு, திருப்பதி உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைத் (ஐஐடி) நிறுவுவதற்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 9-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். |
| காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு Posted: 11 Aug 2016 12:12 PM PDT ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது. |
| விளம்பர பலகைகளை அகற்ற 24 மணி நேர கெடு: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை Posted: 11 Aug 2016 12:12 PM PDT திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற 24 மணி நேர கெடு விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ந.மனோகர் எச்சரித்துள்ளார். |
| எங்களைப் பற்றி பிரதமர் பேசாதது ஏன்? காஷ்மீர் பண்டிட்டுகள் கவலை Posted: 11 Aug 2016 12:12 PM PDT காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, தங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என்று காஷ்மீர் பண்டிட்டுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். |
| தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.23 லட்சம் கையாடல்: உதவி மேலாளர் கைது Posted: 11 Aug 2016 12:11 PM PDT கொடைக்கானலில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் உதவி மேலாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| ஆணவக் கொலை பற்றி அஞ்சும் ஜோடிகள் திருமணப் படிவத்தில் அறிவிக்கலாம்: சிஐசி Posted: 11 Aug 2016 12:11 PM PDT திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள் தாங்கள் குடும்பத்தினரால் ஆணவக் கொலைகள் செய்யப்படலாம் என்று அஞ்சினால் அது தொடர்பாக திருமணப் படிவத்தில் அறிவிக்கலாம் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருமணப் படிவத்தில் ஒரு பகுதியைச் சேர்க்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கும் சிஐசி ஆலோசனை தெரிவித்துள்ளது. |
| உள்ளாட்சித் தேர்தல்: பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிய ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 11 Aug 2016 12:11 PM PDT உள்ளாட்சித் தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் கண்டறிந்து பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவுறுத்தினார். |
| வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டம் Posted: 11 Aug 2016 12:10 PM PDT நிலக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் மதுரை வேளாண் பல்கலைக் கழக நான்காம் ஆண்டு படிக்கும் 8 மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தை புதன்கிழமை தொடங்கினர். அப்போது, நிலக்கோட்டை வேளண்மை துறை உதவி இயக்குநர் கா.முருகன் வேளாண் துறை சார்ந்த விளக்கங்களையும் தொழில் நுட்பங்களையும் அவர்களுக்கு விளக்கினார். |
| கபடிப் போட்டி: பழனியாண்டவர் மகளிர் கல்லூரி வெற்றி Posted: 11 Aug 2016 12:10 PM PDT பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கபடிப் போட்டியில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. |
| Posted: 11 Aug 2016 12:10 PM PDT பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தூய்மை இந்தியா சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சிலுவத்தூர் மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 11 Aug 2016 12:09 PM PDT சிலுவத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமுக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். |
| குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மனோஜ் குமார் Posted: 11 Aug 2016 12:09 PM PDT ரியோ ஒலிம்பிக் ஆடவர் 64 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| தேசிய குடல்புழு நீக்க தினம் அனுசரிப்பு Posted: 11 Aug 2016 12:09 PM PDT தேசிய குடல்புழு நீக்க தினத்தையொட்டி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் நா.வெங்கடாசலம் புதன்கிழமை வழங்கினார். |
| மாற்றுத் திறனாளி நலத் திட்ட உதவிக்கு சிறப்பு முகாம்கள் Posted: 11 Aug 2016 12:08 PM PDT தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆக.16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. |
| மகளிர் வில்வித்தை பம்பேலா, தீபிகா வெளியேற்றம் Posted: 11 Aug 2016 12:08 PM PDT ரியோ ஒலிம்பிக் மகளிர் தனிநபர் ரீகர்வ் வில்வித்தைப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பம்பேலா தேவி, தீபிகா குமாரி ஆகியோர் தோல்வி கண்டனர். |
| சுகாதார மேம்பாட்டில் பொதுமக்களை ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் Posted: 11 Aug 2016 12:08 PM PDT கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த பொதுமக்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார். |
| நல்லாசிரியர் விருதுக்கு 22 ஆசிரியர்கள் பரிந்துரை Posted: 11 Aug 2016 12:07 PM PDT திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலிருந்து மாநில நல்லாசிரியர் விருதுக்கு 22 ஆசிரியர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். |
| குருப்பெயர்ச்சி, ஏகதின லட்சார்ச்சனை Posted: 11 Aug 2016 12:07 PM PDT பழனியில் கடந்த சில தினங்களுக்கு முன் வாக்கிய முறைப்படி நடைபெற்ற குருப்பெயர்ச்சியையொட்டி அருள்மிகு தட்சிணாமூர்த்திக்கு பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. |
| பழனிக் கோயில் உண்டியல் திறப்பு: 21 நாள் காணிக்கை வரவு ரூ.1.38 கோடியை தாண்டியது Posted: 11 Aug 2016 12:06 PM PDT பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் கடந்த 21 நாள்களில் நிரம்பியதையடுத்து, அவை வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரொக்கம் ரூ.1.38 கோடியை தாண்டியது. |
| Posted: 11 Aug 2016 12:05 PM PDT ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா, சிந்து ஆகியோர் வெற்றியோடு தொடங்கியுள்ளனர். |
| அனல் பறக்கும் தடகளப் போட்டிகள் இன்று தொடக்கம் Posted: 11 Aug 2016 12:04 PM PDT வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு மற்றும் புதிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லாத ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. |
| ஆடவர் ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி Posted: 11 Aug 2016 12:02 PM PDT ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டது. |
| விதி மீறல்: அமைச்சருக்கு எச்சரிக்கை Posted: 11 Aug 2016 12:02 PM PDT ஒலிம்பிக் போட்டியைக் காண ரியோ சென்றுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், அங்கீகார அட்டை இல்லாதவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. |
| டெங்கு: மொஹல்லா கிளினிக்குகளில் செப். 1 முதல் இலவசப் பரிசோதனை Posted: 11 Aug 2016 12:02 PM PDT தில்லியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மொஹல்லா கிளினிக்குகளில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இலவச மருத்துவப் பரிசோதனை வசதி அளிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. |
| Posted: 11 Aug 2016 12:02 PM PDT ஒலிம்பிக்: இந்தியா இன்று... |
| ஜல் போர்டு செயற் பொறியாளர் பணியிடை நீக்கம் Posted: 11 Aug 2016 12:02 PM PDT தில்லி ஜல் போர்டு செயற் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். துவாரகா பகுதியில் கழிவுநீர் மற்றும் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணியில் அவரும், சில அதிகாரிகளும் கவனக் குறைவாக செயல்பட்டடதாகக் கூறி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்து சாவு Posted: 11 Aug 2016 12:02 PM PDT காஜியாபாத் புலந்த்ஷாஹர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். |
| Posted: 11 Aug 2016 12:01 PM PDT குர்கானைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியை பலாத்காரம் செய்ததாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக பாத்ஷாபூர் காவல் நிலையத்தின் தலைமைச் காவல் அதிகாரி பிரவீன் மாலிக் கூறியதாவது: |
| மகளிர் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா Posted: 11 Aug 2016 12:01 PM PDT செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்வியல் கல்லூரியின் வகுப்புகள் முதலாம் ஆண்டு தொடக்க விழா கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் கன்காரியா, இயக்குநர் பி.ஜி.ஆச்சார்யா ஆகியோர் வரவேற்றனர். என்எஸ்என் குழுமங்களின் தாளாளர் சித்ரா பிரசாத் விழாவை தொடக்கி வைத்தார். |
| மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் Posted: 11 Aug 2016 12:01 PM PDT மாமல்லபுரம் கடல் அலைகள் அரிமா சங்கம் சார்பில் ஆதிதிராவிட நலப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. |
| பெண் தொண்டர் தற்கொலை வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் Posted: 11 Aug 2016 12:01 PM PDT ஆம் ஆத்மி பெண் தொண்டர் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அக்கட்சி எம்எல்ஏ சரத் சௌகானுக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது. |
| நாமக்கல்லில் யோகா மத்திய ஆராய்ச்சி நிறுவனம் வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல் Posted: 11 Aug 2016 12:01 PM PDT நாமக்கல்லில் யோகா மத்திய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது. |
| Posted: 11 Aug 2016 12:01 PM PDT தொடரும் அடுக்கடுக்கான புகார்கள் விவகாரத்தில் வரும் 22-ஆம் தேதிக்கு பிறகு தமிழக நீதிமன்றத்தில் முறையிட்டு ஜாமீன் கோரும்படி அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோருக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| தியானப் பயிற்சி முடிந்து தில்லி திரும்பினார் கேஜரிவால் Posted: 11 Aug 2016 12:01 PM PDT ஹிமாசல பிரதேசத்தில் உள்ள தரம்கோட்டில் 10 நாள் "விபாசனா' தியானப் பயிற்சியில் கலந்து கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை இரவு தில்லி திரும்பினார். |
| Posted: 11 Aug 2016 12:01 PM PDT கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் போதுமான தொழில்நுட்பம், கட்டமைப்பு வசதிகள் செயல்பாட்டில் உள்ளன என்று பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். |
| தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சந்திப்பு: குறைந்தபட்ச ஊதியம் நிர்ணய விவகாரம் Posted: 11 Aug 2016 12:01 PM PDT குறைந்தபட்ச ஊதியம் நிர்ணய விவகாரம் தொடர்பாக தில்லி தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கோபால் ராய் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| எங்கே போனது மனித நேயம்: வேன் மோதி பலத்த காயமடைந்த காவலாளி வலியால் துடித்து சாவு Posted: 11 Aug 2016 12:01 PM PDT மேற்கு தில்லியில் சுபாஷ் நகர் பகுதியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து வலியால் சுமார் ஒரு மணி நேரம் துடித்துக் கொண்டு உயிருக்குப் போராடிய காவலாளியைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. இதனால், அவர் உயிரிழந்தார். மனித நேயமற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. |
| மாஞ்சா நூலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 11 Aug 2016 12:01 PM PDT கண்ணாடி துகள்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் மாஞ்சா நூலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தில்லி அரசு, மாநகராட்சிகள், தில்லி போலீஸ் ஆகிவற்றுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| தில்லி அமைச்சரின் புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை: ஆம் ஆத்மி குற்ற்ச்சாட்டு Posted: 11 Aug 2016 12:01 PM PDT தில்லி சமூக நலத் துறை அமைச்சர் சந்தீப் குமார் அளித்த புகார் மீது தில்லி போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| கன்னையா குமாரின் ஜாமீனுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி Posted: 11 Aug 2016 12:01 PM PDT ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| தொழில்நுட்பத் துறை உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் பிரேம்ஜி, ஷிவ் நாடார் Posted: 11 Aug 2016 12:00 PM PDT உலக அளவில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பணக்காரர்கள் 100 பேர் அடங்கிய பட்டியலில் இந்தியாவின் விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி, எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் ஆகியோர் இடம்பெற்று அசத்தியுள்ளனர். |
| இலங்கை - இந்தியா இடையே பாலம் கட்டும் திட்டம் இல்லை Posted: 11 Aug 2016 11:58 AM PDT இலங்கை - இந்தியா இடையே பாலம் கட்டும் திட்டம் இல்லை என்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா கூறினார். |
| சிரியாவில் தினமும் 3 மணி நேரம் போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு Posted: 11 Aug 2016 11:57 AM PDT சிரியாவின் அலெப்போ நகரில் மக்களுக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு உதவியாக தினசரி 3 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாக ரஷியா அறிவித்தது. |
| மாணவர்களுக்கான நம்பிக்கை செறிவூட்டல் நிகழ்ச்சி Posted: 11 Aug 2016 11:57 AM PDT மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான நம்பிக்கை செறிவூட்டல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| காலியாக உள்ள செவிலியர் பணியிடம் நிரப்பப்படுமா?: செய்யூர் எம்எல்ஏ கேள்வி Posted: 11 Aug 2016 11:57 AM PDT செய்யூர் தொகுதிக்கு உள்பட்ட சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள செவிலியர், இரவு நேர மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படுமா என தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.அரசு (திமுக) சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார். |
| மறைமலைநகரில் 100 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் Posted: 11 Aug 2016 11:57 AM PDT மறைமலைநகரில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக நகர்மன்றத் தலைவர் எம்.ஜி.கே.கோபிகண்ணன் தெரிவித்தார். மறைமலைநகர் நகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: |
| வெடிகுண்டு, ஆயுதங்களுடன் கார் பறிமுதல்: 5 பேர் கைது Posted: 11 Aug 2016 11:57 AM PDT கேளம்பாக்கம் கடற்கரைப் பகுதியில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 11 Aug 2016 11:57 AM PDT அச்சிறுப்பாக்கம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. |
| சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி பகுதியினர் கவனத்துக்கு... Posted: 11 Aug 2016 11:57 AM PDT தமிழகம் முழுவதும் மின் நுகர்வோர் சேவைகள் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்தப் பகுதி மின்சார அலுவலகங்களில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும். |
| நாட்டுக்கோழி வளர்ப்பு: இன்று பயிற்சி முகாம் Posted: 11 Aug 2016 11:57 AM PDT நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 12) காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள உழவர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அந்த மையத்தின் தலைவர் பி.வீரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| நாப்கின் தயாரிப்பு உற்பத்தி மையம் தொடக்கம் Posted: 11 Aug 2016 11:57 AM PDT குன்றத்தூர் அருகே புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் செயல்படும் சேனிடரி நாப்கின் தயாரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி புதன்கிழமை தொடக்கி வைத்தார். |
| அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2016 11:57 AM PDT 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து கோரி ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2016 11:57 AM PDT கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கோரி கிறிஸ்தவ சிறுபான்மை உரிமை இயக்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2016 11:56 AM PDT காவேரிப்பாக்கத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வட்டாட்சியரை முற்றுகையிட்ட வேப்பூர் கிராம பொதுமக்கள் Posted: 11 Aug 2016 11:56 AM PDT ஆற்காட்டை அடுத்த வேப்பூர் பகுதி கிராம மக்கள் வாலாஜாபேட்டை வட்டாட்சியரை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். |
| கூட்டுறவு வங்கி செயலாளரைக் கண்டித்து தீக்குளிக்க முயற்சி: விவசாயியால் பரபரப்பு Posted: 11 Aug 2016 11:56 AM PDT வாணியம்பாடி அருகே கூட்டுப் பட்டாவில் உள்ள நிலத்துக்கு கடன் வழங்கி மோசடி நடந்ததாகக் கூறி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரைக் கண்டித்து விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். |
| இரு சக்கர வாகனம் மோதியதில் அக்காள், தம்பி சாவு Posted: 11 Aug 2016 11:56 AM PDT ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற அக்காள், தம்பி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். |
| "இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகள் நலமுடன் உள்ளனர்' Posted: 11 Aug 2016 11:56 AM PDT முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட 25 குழந்தைகள் நலமுடன் உள்ளதாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவம் தெரிவித்தார். |
| பள்ளியைப் பூட்டி பெற்றோர்கள் போராட்டம் Posted: 11 Aug 2016 11:56 AM PDT ஆம்பூர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டுப்போட்டு பெற்றோர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2016 11:56 AM PDT மடிக்கணினி, இலவச இணையதளச் சேவை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலூரில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |