Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


போட்டோகிராப்பர்களை மிரட்டிய கத்ரீனா

Posted:

திரை நட்சத்திரங்கள் பலர் போட்டோகிராப்பர்களை எச்சரிப்பதும், மிரட்டுவதும் பலமுறை நடந்துள்ளது. சமீபத்தில் கூட, நடிகை கத்ரீனா கைப் போட்டோகிராப்பர்களை எச்சரித்தும், மிரட்டியும் உள்ளார். தனது சர்வதேச டூர் நிகழ்ச்சிக்காக நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யாவின் ஸ்டூடியோவில் கத்ரீனா கைப் பயிற்சி செய்வதில் பிஸியாக இருந்து வருகிறார். ...

நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் அர்பாஸ் கான்

Posted:

நடிகர் அர்பாஸ் கானும், சன்னி லியோனும் இணைந்து தேரா இன்திஜார் என்ற படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில், தேரா இன்திஜார் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் இப்படத்தில் தனது கேரக்டர் குறித்து அர்பாஸ் கான் கூறுகையில், எனது முதல் படமான தரார் படமும் ரொமான்டிக் திரில்லர் படம். அந்த படத்தில் என் ...

துல்கர் படத்தில் இணைந்த 'கபாலி' விசுவாசி..!

Posted:

இத்தனை நாட்கள் தமிழில் பல படங்களில் பலவிதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், 'கபாலி' படத்தில் ரஜினியின் விசுவாசியாக படம் முழுதும் பயணம் செய்யும் கேரக்டரில் நடித்து ரஜினியின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்துள்ளார் நடிகர் ஜான் விஜய். படம் முழுதும் ரஜினியுடன் பயணிக்கும் கேரக்டர் என்றால் சாதரணமான ஒன்றா..? ...

கவர்ச்சி நடனம் ஆடினால் ஐட்டம் நடிகையா?

Posted:

நடிகை அதிதீ ராவ் ஹைதாரி தனது அடுத்த படமான தி லிஜண்ட் ஆப் மைக்கேல் மிஸ்ரா படத்தின் புரோமோஷன் வேலைகளில் இருந்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஐட்டம் நம்பர் கேரக்டரில் நடித்துள்ளார். இது பற்றி அதிதீயிடம் கேட்ட போது, ஐட்டம் நம்பர் என சொல்வதை நான் விரும்பவில்லை. 2016ம் ஆண்டில் இருந்து கொண்டு ...

ஹிருத்திக்குடன் முத்தக்காட்சியில் நடிக்க பயமில்லை: பூஜா

Posted:

நடிகை பூஜா ஹெக்டே, மொகஞ்சோ தரோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாகிறது. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பூஜாவிடம், மொகஞ்சோ தரோ படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, முத்தமிடுவது ...

ஆகஸ்ட் 5-ல் 6 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸ்

Posted:

'கபாலி' படத்தின் வெளியீட்டிற்காகப் பல படங்கள் கடந்த ஒரு மாதமாகவே காத்திருந்தன. 'கபாலி' படம் ஜுலை 22ம் தேதி வெளியானது. இருந்தாலும் சில சிறிய படங்கள் அதற்கு முன்னதாக ஜுலை 15ம் தேதி வெளியிடப்பட்டன. ஜுலை 7ம் தேதி 'அட்ரா மச்சான் விசிலு' படமும், ஜுலை 1ம் தேதி 'அப்பா, ஜாக்சன் துரை', ஒரு மெல்லிய கோடு, பைசா' ஆகிய படங்களும் வெளிவந்தன. ...

சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்கும் சுனில்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவி இயக்குனர் விவி விநாயக் இயக்கும் கத்திலான்டோடு படத்தில் நடித்து வருகின்றார். கத்திலான்டோடு சிரஞ்சீவியின் 150வது திரைப்படம் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். ஏ.ஆர் முருகதாஸ் தமிழில் இயக்கிய கத்தி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் கத்திலான்டோடு படத்தின் திரைக்கதையை ...

2018ல் தான் முன்னாபாய்-3 ரிலீஸ் : சஞ்சய் தத்

Posted:

நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது முன்னாபாய் 3 படம் பற்றி சஞ்சய் தத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சஞ்சய் தத், முன்னாபாய் 3 படம் 2018ம் ஆண்டு தான் ரிலீசாகும் என்றார். இவ்வளவு தாமதவாதற்கு என்ன காரணம் என கேட்டதற்கு, அதை நீங்கள் ராஜூ ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ராவிடம் தான் கேட்க ...

மீண்டும் சிக்ஸ்பேக்கில் அசத்தவரும் அல்லு அர்ஜூன்

Posted:

ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பரில் துவங்கவுள்ளன. மேலும் இப்படத்தில் அல்லு அர்ஜூன் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் தோன்றவுள்ளதாகவும் அதற்கான உடற்பயிற்சிகளிலும் அல்லு அர்ஜூன் ...

ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர் தனது ரசிகரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருமான நாகார்ஜூனாவைச் சந்தித்து பேசி அவரது ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த நாகார்ஜூனா ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகராம், பெங்களூரில் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வரும் ...

இயக்குனருக்கு ஆதரவு அளித்த நயன்தாரா

Posted:

தலைப்பைப் பார்த்ததும் கிசுகிசு செய்தி என நினைத்தால் நயன்தாரா பற்றிய கிசுகிசுக்களை அதிகம் விரும்பிப் படிப்பவர் நாம் என நீங்களாகவே புரிந்து கொள்ளலாம். மீஞ்சுர் கோபி, இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரத்தில் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என நீண்ட ...

'தேவி'யின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ஜாக்கிசான்

Posted:

ஏ.எல் விஜய் தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் இயக்கும் படம் 'தேவி'. பிரபுதேவா தயாரித்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னான நடிக்கிறார். இவர்களுடன் சோனுசூட் வில்லனாக நடிக்கிறார். மூன்று மொழிக்கும் தனித்தனி இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். தமிழுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு ...

இருமுகன் சயின்ஸ்பிக்சன் கதை

Posted:

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ளது 'இருமுகன்'. 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்த வருகிறது. செப்டம்பரில் படம் வெளியாகலாம் என்று தெரிகிறது. இது ஒரு சயின்ஸ்பிக்ஷன் படம் என்கிறார் ஆனந்த் ஷங்கர் அவர் மேலும் ...

தமிழில் வருகிறது 'ஜேசன் போர்ன்'

Posted:

போர்ன் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி மவுசு உண்டு. இந்த வரிசை படங்களில் எல்லாமே கதை ஒன்றுதான். ஹீரோ வில்லன்கள் கூட்டத்தில் ஒருவராக இருந்து கொண்டே வில்லன்களை காலி செய்வார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் வகை. வெவ்வேறு வில்லன்கள் வெவ்வேறு பாணியிலான அழித்தொழிப்புகள் இருக்கும். ஜேம்ஸ் பாண்ட் கதைகள் மாதிரிதான்.
இந்த வரிசையில் அடுத்து ...

தமிழில் மீண்டும் ஒரு குத்துச்சண்டை படம்

Posted:

குத்துச்சண்டையை மையமாக வைத்து தமிழில் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளது. 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'மான் கராத்தே', 'பூலோகம்', 'இறுதிசுற்று' உள்பட பல படங்கள் குத்துச் சண்டையை மையமாக கொண்டது. இந்த நிலையில் இன்னுமொரு குத்துச் சண்டை படம் தயாராக இருக்கிறது. படத்தின் பெயரும் 'குத்துச்சண்டை' என்பதுதான்.
ஆங்கிலேயர்கள் ...

ஆகஸ்ட் 5ல் 'மீண்டும் ஒரு காதல் கதை'

Posted:

மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தட்டயன் மறையத்து' படத்தை தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். வால்ட்டர் பிலிப்ஸ் என்ற புதுமுகம் நடித்துள்ளார். 'தட்டயன் மறயத்து' படத்தில் நடித்த இஷா தல்வாரே இதிலும் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு மிர்சி சிவாவுடன் 'தில்லு முல்லு' படத்தின் ...

மாவட்ட கலெக்டர் ஆகிறார் நயன்தாரா

Posted:

நயன்தாராவிற்கு ஒரு கதை பிடித்திருந்தால் அந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்கினாலும் தயங்காமல் நடிக்கிறார். 'மாயா', 'டோரா' படங்கள் புதுமுகங்களின் படங்கள். தற்போதும் அவர் ஒரு புதுமுக இயக்குனரின் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. கோபி நாயனார் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

இது ...

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன? டிஷ்கவரி சேனல் ஆய்வு

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பேய் மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. மழை ஒரு பக்கம் இருந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுவதில் அதிகாரிகள் காட்டிய அலட்சியம்தான் பெரு வெள்ளத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிவியல் ரீதியாக டிஷ்கவரி சேனல் ஆய்வு ...

பிளாஷ் பேக்:கமல் படத்தில் இந்தி கிளைமாக்ஸ்

Posted:

கமல், ராதா, சுலக்ஷனா, யமுனா நடித்த படம் 'தூங்காதே தம்பி தூங்காதே' எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரமாண்டமாக எடுக்க எஸ்.பி.முத்துராமன் திட்டமிட்டிருந்தார். அப்போது 'இதயம் பேசுகிறது' ஆசிரியர் மணியன் எஸ்.பி.முத்துராமனையும், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனையும் ...

மலாய் மொழியிலும் வரவேற்பு பெற்ற 'கபாலி'

Posted:

'கபாலி' திரைப்படம் கடந்த 22ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 320 கோடி ரூபாய்க்கும் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டதால் அங்குள்ள மலேசிய மக்களும் படத்தை அவர்களது தாய் மொழியான மலாய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™