Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பதட்டத்துடன் காத்திருக்கும் ஷாம்லி!

Posted:

தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமா வரை குழந்தை நட்சத்திரமா நடித்தவர் பேபி ஷாம்லி. அதையடுத்து அவர் கதாநாயகியானபோது சரியான ஓப்பனிங் கிடைக்கவில்லை. அதனால் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பிய அவர், மீண்டும் கதாநாயகியாக தனது ரீ-என்ட்ரியை தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் தனுஷின் கொடி படத்தில்தான் முதலில் ...

செவாலியே விருது.... கமலுக்கு விழா எடுக்க நடிகர் சங்கம் முடிவு

Posted:

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதை பெறும் இரண்டாவது நடிகர் கமல் ஆவார். கமலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். நடிகர் சங்கமும், கமலுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, அவருக்கு ...

நன்றியுடன் பணிவுற்று 'செவாலியே' விருதை ஏற்கிறேன் - கமல்!

Posted:

சினிமா துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு செவாலியே விருதை அறிவித்துள்ளது. செவாலியே விருது கிடைத்தற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் ‛வாட்ஸ் அப் ஆடியோ வெளியிட்டுள்ளார். ஆடியோவில் அவர் பேசியது:

பிரெஞ்சு அரசு கலை, இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனம் ...

நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது

Posted:

பாரீஸ்: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியே விருது ...

இலியானா ஒன்றும் பெரிய நடிகையல்ல

Posted:

நடிகை இலியானா, படத்தின் தயாரிப்பாளர் தனது பெயரை பயன்படுத்தி படத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுவதாக குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக தயாரிப்பாளர் கவுரங் தோஷி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறி இருந்தார். தற்போது இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து, நிலைமையை மோசமாக்கி உள்ளது. இந்த ...

37 நாளில் இறுதிகட்டத்தை நெருங்கினார் மாவீரன் கிட்டு

Posted:

சுசீந்திரன் இயக்கி வரும் படம் மாவீரன் கிட்டு. விஷ்ணு, திவ்யா, பார்த்திபன், சூரி நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூலை மாதம் 15ந் தேதி மதுரையில் தொடங்கியது. 37நாட்களில் 95 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் அடுத்தவாரம் நடைபெற உள்ளது.

இயக்குநர் சுசீந்திரனின் ...

ஷாருக்கானுடன் மோதலா? : ரோஹித் ஷெட்டி விளக்கம்

Posted:

தில்வாலே படத்தின் தோல்விக்கு பிறகு ரோஹித் ஷெட்டிக்கும், ஷாருக்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்தது. மற்றொரு புறம், இந்த மோதல் காரணமாக 3வதாக இருவரின் கூட்டணியில் உருவாக இருந்த படம் கிடப்பில் போடப்படதாகவும், இருவரும் பிரிந்து தங்களின் வேலைகளில் இறங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் நிகழ்ச்சி ...

தொகுப்பாளினி ஆனது ஏன்? ரோஜா விளக்கம்

Posted:

தமிழ், தெலுங்கு மொழியில் 100 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தவர் ரோஜா. மாநிற அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். தனக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததும் அப்படியே சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார். லக்கா திக்கா, ஜீன்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது தெலுங்கு சேனலில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற பஞ்சாயத்து ...

பிளாஷ் ஃபேக்: ரஜினி படத்தை திரையிடாமல் தடுத்த ரஜினி ரசிகர்கள்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வருகிறதென்றால் அதனை அவரது ரசிகர்கள் தீபாவளியாக கொண்டாடுவார்கள். படம் எப்படி இருந்தாலும் விசிலடித்து கைதட்டி வரவேற்பார்கள். ஆனால் அவர்களே ரஜினி நடித்த ஒரு படத்தை திரையிட வேண்டாம் என்று முற்றுகை போராட்டம் நடத்திய படம் ஒன்று உண்டு. அதுவும் மகேந்திரன் இயக்கிய படமான கை கொடுக்கும் கை.
ரஜினி தனது ஆரம்ப ...

தெலுங்கில் உருவாகிறது இறுதிச்சுற்று

Posted:

தமிழில் மாதவன், ரித்திகா சிங் நடித்த படம் இறுதிச்சுற்று. சுதா கோங்கரா இயக்கியிருந்தார். அடித்தட்டு சமூகத்திலிருந்து ஒரு பெண் குத்துச்சண்டையில் உயர்ந்த இடத்துக்கு வருகிற கதை அம்சம் கொண்ட படம். ரித்திகா சிங் என்ற நிஜ குத்துச்சண்டை வீராங்கணை நடித்திருந்தார். மாதவன் பயிற்சியாளராக நடித்திருந்தார். தமிழில் பெரிய வெற்றியை பெற்றது ...

பேஸ்புக் தலைப்பு மாற்றம்: ஒரு முகத்திரை ஆனது

Posted:

செந்தில்நாதன் இயக்கும் புதிய படம் பேஸ்புக். இதில் ரகுமானுடன் ஆர்.சுரேஷ், அதிதி ஆச்சார்யா, ஸ்ருதி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தேவிகா, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரேம்குமார் சிவபெருமான் இசை அமைக்கிறார். ஷர்வானந்த பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். ...

படப்பிடிப்பில் தவறி விழுந்ததால் பெயரை மாற்றிய நடிகை

Posted:

பூனையை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் மியாவ், வின்செண்ட் அடைக்கலராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரபல விளம்பர பட இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி இயக்குகிறார். இதில் பெர்சியன்கேட் எனப்படும் உயர்ரக பூனைதான் கதையின் நாயகன். தன்னை கொடுமைப்படுத்தியவர்களை பழிவாங்கும் பூனையின் கதை. இதில் பூனை தவிர சஞ்சய் மிக்கி என்பவர் ஹீரோவாக ...

சர்கார் 3 ல் அபிசேக்-ஐஸ்வர்யா இல்லை

Posted:

டைரக்டர் ராம்கோபால் வர்மா, சர்கார் படத்தின் 3ம் பாகத்தை எடுக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் இந்த 3ம் பாகத்தில் அபிசேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் நடிக்கவில்லையாம். சர்கார் 3 படத்தின் பர்ஸ்ட்லுக்கை ஆகஸ்ட் 26ம்தேதி ராம்கோபால் வர்மா வெளியிட உள்ளாராம். அன்றைய தினமே இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய ...

தமிழுக்கு வருகிறார் கன்னட அஸ்வினி

Posted:

கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அஸ்வினி. மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். பிரேமா பல்லகி என்ற படத்தில் அறிமுகமாகி கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மெர்லின் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தை இயக்கிய கீரா இயக்கும் இந்தப் படத்தில் ...

"என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் ":ஸ்ரீகாந்த் உருக்கம்

Posted:

ஸ்ரீகாந்த் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள நம்பியார் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. சந்தானம், சுனைனா, ஜெயபிரகாஷ், சுப்பு பஞ்சு, நடித்திருந்தனர். கணேஷா இயக்கி இருந்தார். விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார்.

தன் கையில் படங்கள் இல்லாத நேரத்தில் துணிச்சலுடன் இந்தப் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார் ஸ்ரீகாந்த், ஆனால் இடையில் ...

ஷாருக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார் கங்கனா

Posted:

டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி என்ற படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தற்போது, பத்மாவதி படம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாம். இதனால் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது வேறு கதையை எழுதி வருகிறாராம். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ஷாருக்கானை இதுவரை ...

றெக்க படப்பிடிப்பு முடிந்தது: ஆயுத பூஜையன்று ரிலீஸ்

Posted:

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிக்கும் றெக்க படத்தை காமன்மேன் பிரசன்ட்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கிறார். ரத்தன் சிவா இயக்கி உள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. இதுபற்றி இயக்குனர் ரத்தன் சிவா கூறியதாவது:

சென்னையில் தொடங்கிய ...

நயன்தாராவின் செல்வி: தெலுங்கில் வெற்றி, தமிழில் தோல்வி

Posted:

நயன்தாரா வெங்கடேஷ் நடித்த பாபு பங்காரம் தெலுங்கிலும், செல்வி என்ற பெயரில் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளிவந்தது. இதில் தெலுங்கு பாபு பங்காரம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 4 நாள் வசூலிலேயே படத்தின் பட்ஜெட்டான 25 கோடி வசூலாகிவிட்டது. இனி வசூலாகும் பணம் அத்தனையும் லாபம்தான். ஆனால் செல்வி தமிழ்நாட்டில் வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. ...

மீண்டும் பவன் கல்யாணுடன் இணையும் வெங்கடேஷ்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் பிரபல நடிகர் வெங்கடேஷ் இணைந்து நடித்த கோபாலா கோபாலா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பின்னர் மீண்டும் பவன் கல்யாண் படத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். சர்தார் கபார் சிங் படத்திற்கு பவன் கல்யாண் நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ ...

புதிய சாதனை படைத்த ஜூனியர் என்.டி.ஆரின் ஜனதா கேரேஜ்

Posted:

மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகும் ஜனதா கேரேஜ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்கின்றனர். சமந்தா மற்றும் நித்யா மேனன் என இரு நாயகிகள் நடிக்கும் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™