Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


Riverdale பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 21 Aug 2016 06:56 AM PDT

v

vRiverdale பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Danforth avenue மற்றும் Jones avenue பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆண் ஒருவர் சுடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஒருவர் காணப்பட்ட நிலையில் அவரை உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர் மற்றும் கைது செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எவையும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post Riverdale பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா போஸ்ட் ஊழியர்களளுக்கு ஆதரவாக போராட்டம்

Posted: 21 Aug 2016 06:52 AM PDT

f

fகனடா போஸ்ட் ஊழியர்களளுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனடா போஸ்ட் ஊழியர்களின் விவகாரத்திற்கு இன்னமும் உரிய முறையிலான தீர்வு எட்டப்படாத நிலையில் வின்னிபெக் மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் காரின் ஆலுவலகத்திற்கு முன்பாக நேற்றைய நாள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய இந்த போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கனேடிய பொதுத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்:

கொடுப்பனவுகளில் சமத்துவத்தினை பேணுமாறும், உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை வழங்குமாறும் வலியுறுத்தியே கனடா போஸ்ட் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் சங்கத்தினர் இந்தப் போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.f

முன்னைய பழமைவாதக் கட்சி அரசாங்கமும் தபால்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது, அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்தினையே ஏற்படுத்தி வந்தனர்.

தற்போதய லிபரல் மத்திய அரசாங்கமும் அவ்வாறான நிலையினையே பின்பற்றி வருகிறது.

இவ்வாறான வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது, கனேடியர்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்கே கனடா போஸ்ட் ஊழியர்கள் விருப்பம் கொண்டுள்ளனர் என்பதே உண்மையான நிலவரம்.

ஆனால் வேலை நிறுத்தத்தினை தவிர வேறு தெரிவுகளை அரசாங்கத் தரப்பு முன்வைக்கத் தவறி வருகிறது. - என்று தெரிவித்துள்ளார்.

The post கனடா போஸ்ட் ஊழியர்களளுக்கு ஆதரவாக போராட்டம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download NowPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™