Tamil News | Online Tamil News |
- ஜி.எஸ்.டி.,யால் புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கான வரி...உயரும்?: கட்டி முடித்த வீடுகளை வாங்குவோருக்கு பாதிப்பில்லை
- ஜி.எஸ்.டி., மசோதா விவகாரம் அ.தி.மு.க.,வை தனிமைப்படுத்திய பா.ஜ.,
- சட்டசபையில் ஸ்டாலின் செயல்பாடு எப்படி?:'பாஸ் மார்க்' போட கருணாநிதி மறுப்பு
- 'தி.மு.க., கூட்டணியே வேண்டாம்'கட்சியினரிடம் விஜயகாந்த் ஆவேசம்
- பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை நடப்பதாக பிரதமர்...ஆவேசம்!:வித்தியாசமான 'டவுன்ஹால்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேச்சு
- காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு கோர்ட்...சம்மன்! ஆர்.எஸ்.எஸ்., பற்றி அவதூறாக பேசிய வழக்கு
- ஓடி ஒளியும் எம்.பி.,க்கள்!
- விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமினில் வரமுடியாத 'வாரன்ட்'
- ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்துவதால் ஆந்திராவுக்கு ரூ.4,700 கோடி இழப்பு
| Posted: 06 Aug 2016 08:15 AM PDT புதுடில்லி:நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால், கட்டப்பட்டு வரும் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வரி உயரும் என, தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அந்த குடியிருப்புகளின் விலை உயரக்கூடும் என தெரிகிறது. நாடு முழுவதும், தற்போது, பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலங் களிலும் தனித் தனி வரி விதிப்பு முறைகள் உள்ளன. இதனால், ஒரு பொருளுக்கு பல்வேறு கட்டங்களில், வரிகள் விதிக்கப்படும் நிலை உள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை உள்ளது.இதை மாற்றி, நாடு ... |
| ஜி.எஸ்.டி., மசோதா விவகாரம் அ.தி.மு.க.,வை தனிமைப்படுத்திய பா.ஜ., Posted: 06 Aug 2016 08:27 AM PDT சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில், அ.தி.மு.க., ஆதரவை எதிர்பார்த்திருந்த பிரதமர் மோடி, கடைசி நேரத்தில், அ.தி.மு.க.,வை தனிமைப்படுத்தி, மசோதாவுக்கு ராஜ்யசபாவில் ஒப்புதல் பெற்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை, பார்லிமென்டின் இரு சபைகளிலும், எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பப்பட்டார். அதற்காக, இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகளிடம் பேசி, மசோதாவின் அவசியம் மற்றும் பலன்களை எடுத்துச் சொல்லச் சொன்னார். அதன்படி, அ.தி.மு.க., உள்ளிட்ட பல ... |
| சட்டசபையில் ஸ்டாலின் செயல்பாடு எப்படி?:'பாஸ் மார்க்' போட கருணாநிதி மறுப்பு Posted: 06 Aug 2016 08:29 AM PDT எதிர்க்கட்சி தலைவராக இருந்து, சட்டசபை நிகழ்வுகளை, சரியாக எதிர்கொள்ள முடியவில்லை என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மீது, அக்கட்சி தலைவர் கருணாநிதி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க., 89 எம்.எல்.ஏ.,க்களை பெற்று, பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இச் சூழலில், எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விரும்பி னார். அதற்கு, ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த தால், தன் விருப்பத்தை மாற்றிக் கொண்டார்.இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டசபை செயல்பாடுகளை, பொது மக்கள், ஆளுங்கட்சியினரை தாண்டி, கருணாநிதி ... |
| 'தி.மு.க., கூட்டணியே வேண்டாம்'கட்சியினரிடம் விஜயகாந்த் ஆவேசம் Posted: 06 Aug 2016 08:31 AM PDT 'ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத போதும், நம்மை அழிக்க பாடுபட்ட தி.மு.க.,வோடு, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என, கட்சிக் காரர்களிடம் சீறி உள்ளார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த். கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. இதனால், அக்கட்சியில் இருந்து விலகி, பலரும் தி.மு.க., - அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுடன் இணைந்து போட்டியிடலாம் என, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், விஜயகாந்தை வலியுறுத்தி உள்ளனர். அப்போது, கடும் கோபமடைந்த ... |
| Posted: 06 Aug 2016 10:49 AM PDT புதுடில்லி:அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும், 'டவுன்ஹால்' என்ற நிகழ்ச்சியைப் போல், முதல்முறையாக பிரதமர் மோடியும், டில்லியில் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அசத்தினார். அப்போது, பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், ''பசு பாதுகாப்பு என்ற பெயரில், பலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்றவர்களை, மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஆவேசப்பட்டார்.மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, மக்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், 'எனது அரசு' என்ற பொருளில், 'மைகவ்.இன்' (mygov.in) என்ற இணையதளம், இரண்டு ... |
| காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு கோர்ட்...சம்மன்! ஆர்.எஸ்.எஸ்., பற்றி அவதூறாக பேசிய வழக்கு Posted: 06 Aug 2016 11:02 AM PDT புதுடில்லி:மகாத்மா காந்தி கொல்லப்பட்டது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பற்றி, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த, காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு எதிரான கிரிமினல் அவதுாறு வழக்கில், அவருக்கு, அசாம் கோர்ட், 'சம்மன்' அனுப்பியுள்ளது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தொடர்பு படுத்தி, காங்., துணைத் தலைவர் ராகுல்,கடந்தாண்டு, சர்ச்சைக்குரிய கருத்து கூறினார். இதற்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், ராகுலை கண்டித்து, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித் திருந்தது. 'மகாத்மா ... |
| Posted: 06 Aug 2016 11:05 AM PDT பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஒன்றாக அமர்ந்து, டிபன் சாப்பிடுவது வழக்கம். இவர்கள், பத்திரிகையாளர்களுடன் ஜாலியாக பேசுவர். முதல்வர், ஜெ., மீது, எம்.பி., சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் வெளிப்படையாக புகார் கூறியதை அடுத்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் நிலையே மாறி விட்டது. இப்போது, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் யாரையும், அதிகமாக சென்ட்ரல் ஹாலில் காண்பதில்லை. இந்த விவகாரத்திற்குப் பின், சில வட மாநில பத்திரிகையாளர்கள்அ.தி.மு.க., - எம்.பி.,க்களை இந்த ஹாலில் சந்திக்கச் சென்றனர். இவர்கள் வருவதை பார்த்ததுமே, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ... |
| விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமினில் வரமுடியாத 'வாரன்ட்' Posted: 06 Aug 2016 11:09 AM PDT புதுடில்லி:பிரிட்டனில் தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, வங்கியில் பணமின்றி காசோலை திரும்பி வந்த வழக்கில் டில்லி கோர்ட், ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது. 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' விமான சேவை நிறுவனம் துவங்க, வங்கிகளிடமிருந்து, 9,000 கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பியோடினார். இதுதொடர்பான பல்வேறு வழக்குகள்,கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், தலைநகர் டில்லியில், விமான நிலையத்தில் செயல்பட்டு வரும், 'டயல்' நிறுவனத்துக்கு, ... |
| ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்துவதால் ஆந்திராவுக்கு ரூ.4,700 கோடி இழப்பு Posted: 06 Aug 2016 12:47 PM PDT ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டால், ஆந்திர மாநிலத் துக்கு, ஆண்டுக்கு, 4,700 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால தாமதத்துக்கு பின், ராஜ்யசபாவில், ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கு, ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சி, பார்லிமென்டில் ஆதரவு தெரிவித்தது. 'ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தால், ஆந்திர மாநிலத் துக்குஆண்டுதோறும், 4,700 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என, தகவல்கள் கூறுகின்றன. இந்த இழப்பை, மத்திய அரசு ஈடுகட்ட வேண்டு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 07,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |