Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானதேசிகன் 'சஸ்பெண்ட்' ஏன்?

Posted: 30 Aug 2016 09:33 AM PDT

மின் வாரிய தலைவராக, இரு முறை பதவி வகித்த ஞானதேசிகன், திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது, மின் வாரிய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைவராக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஞானதேசிகன் இரு முறை பதவி வகித்தார். அவர், இரண்டாவது முறை மின் வாரிய தலைவராக இருந்தபோது தான், தமிழக அரசு, அவரை தலைமை செயலராக நியமித்தது.
கடந்த ஜூன் மாதம், ஞானதேசிகன், 'டிட்கோ' என்ற தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக, இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு, அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். ...

காவிரி தண்ணீர் கேட்டு போராடிய பல ஆயிரம் விவசாயிகள் கைது! அரசியல் கட்சிகள் ஆதரவுடன் பல இடங்களில் ரயில், சாலை மறியல்

Posted: 30 Aug 2016 09:53 AM PDT

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அரசியல் கட்சிகள் ஆதரவுடன், பல இடங்களில், தமிழக விவசாயிகள் நடத்திய சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களால், பல ஆயிரம் பேர், நேற்று கைதாகினர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்த, கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் நேற்று, ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன.
தள்ளு முள்ளு
தஞ்சை, ...

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் நெருக்கம் ! புதிய ராணுவ உறவு ஒப்பந்தம் கையெழுத்து

Posted: 30 Aug 2016 09:59 AM PDT

வாஷிங்டன், : இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடையும் வகையில், புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, இரு நாடுகளும் மற்ற நாட்டில் உள்ள ராணுவ வசதிகள் உட்பட, பல்வேறு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. குறிப்பாக மோடிக்கும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவை, உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.
கடந்த, இரண்டரை ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் ...

வேகமெடுக்கிறது ஜி.எஸ்.டி.,க்கான களம்; டில்லியில் அமைச்சர்கள் ஆலோசனை

Posted: 30 Aug 2016 10:09 AM PDT

சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவது குறித்து, மாநில நிதியமைச்சர்களின் உயரதிகார குழு, இறுதிகட்ட ஆலோசனைகளில் இறங்கியுள்ளது.

தற்போதுள்ள பல்வேறு மறைமுக வரிவிதிப்புகள் நீக்கப்பட்டு, நாடு முழுவதும் ஒரே சீரான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது. வரும், 2017 ஏப்., 1ம் தேதியை இலக்காக வைத்து, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை அமல்படுத்துவதில், மத்திய அரசு முனைப்பாக உள்ளது.
மிகப்பெரிய முயற்சிகளுக்கு பின், பார்லிமென்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது; அடுத்தகட்ட பணிகள் தாமதமாக வாய்ப்பே ஏற்படாத வகையில், ...

அதிகாரிகளை மாற்றினார் கவர்னர்; கெஜ்ரிவாலுக்கு எகிறியது கோபம்

Posted: 30 Aug 2016 10:14 AM PDT

புதுடில்லி : டில்லி மாநில அரசில் பணியாற்றும், சில உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங், நேற்று உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி உத்தரவின்படியே, இந்த மாற்றம் நடந்துள்ளதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால், கடுமையாக குற்றஞ்சாட்டினார்.மோதல் போக்குடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி உள்ளது. முதல்வர் கெஜ்ரிவால், டில்லி துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங் இடையே, துவக்கம் முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது.
'டில்லியில்யாருக்கு அதிகாரம் உள்ளது' என்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 'டில்லியின் ...

அரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு

Posted: 30 Aug 2016 10:18 AM PDT

புதுடில்லி,: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது.

மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,
செப்., 2ல், நாடு தழுவிய வேலைநிறுத்தபோராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு,குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையடுத்து, வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை, ...

பிரேமலதா சாபத்திற்கு ஜெ., பரிகாரம்; பாண்டியராஜன் அமைச்சரான பின்னணி

Posted: 30 Aug 2016 10:31 AM PDT

திருச்சி: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவால், 'அரசியல் எதிர்காலம் இருக்காது' என, சபிக்கப்பட்ட பாண்டியராஜனை, முதல்வர் ஜெயலலிதா, கல்வித் துறை அமைச்சராக்கி உள்ளார்.

'மாபா' என்ற தனியார் நிறுவனங்களுக்கான, ஆட்தேர்வு ஆலோசனை நிறுவனம் மூலம் அறிமுகமான பாண்டியராஜன், 2011ல் தே.மு.தி.க., சார்பில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டவர்களில், பாண்டியராஜனும் ஒருவர். அப்போது, தனிப்பட்ட முறையில், அரசிடம் எந்தவித சலுகையும் எதிர்பாராமல் இருந்ததால், நடந்து முடிந்த சட்டசபை ...

போதை நடிகர் அருண் விஜய் கைது: விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதி

Posted: 30 Aug 2016 10:34 AM PDT

சென்னை,: போதையில் கார் ஓட்டி, போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டார்.

ஆக., 26ல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பிரபல நட்சத்திர ஓட்டலில், நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், நடிகர், நடிகையருக்கு மது விருந்து அளிக்கப்பட்டது; அதில், நடிகர் அருண் விஜய் கலந்து கொண்டார்.
செம போதை
விடிய விடிய நடந்த மது விருந்தை முடித்து, அதிகாலை, 3:00 மணியளவில், அருண் விஜய், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தன் வீட்டுக்கு காரில் கிளம்பினார். செம போதையில் கார் ஓட்டிய அவருடன், மனைவி ஆர்த்தியும் பயணித்தார்.
தாறுமாறான ...

நடைபாதை கடைகளை தடுக்க முடியாதா? போலீசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

Posted: 30 Aug 2016 10:46 AM PDT

சென்னை,:'வியாபாரிகள், நடைபாதைகளுக்கு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது, சட்டம் - ஒழுங்கு இயந்திரம் செயல்படவில்லை என்பதையே காட்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த ரகு தாக்கல் செய்த மனு:பாரிமுனை, தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இயங்கும் ஓட்டல்களுக்கு வருபவர்கள், நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்; இதனால் பாதசாரி கள், சாலையில் இறங்கி நடக்கின்றனர்.வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதியை, ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்படுத்தவில்லை; இவ்வாறு, 'பார்க்கிங்' வசதி

எவரெஸ்டில் ஏறியதாக பொய் கூறிய இந்திய தம்பதிக்கு நேபாள அரசு தடை

Posted: 30 Aug 2016 12:53 PM PDT

காத்மாண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக காட்டும் வகையில், போலி புகைப்படங்களை வெளியிட்டு ஏமாற்றிய, இந்திய தம்பதிக்கு, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, அந்த நாட்டு அரசு, 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி ரதோட் ஆகிய இருவரும், போலீசாராக பணியாற்றி வருகின்றனர். தம்பதியரான இவர்கள், மே 23ல், அண்டை நாடான நேபாளத்தில், உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்ததாக கூறி, அதை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டனர்.
ஆனால், 'அவை, கம்ப்யூட்டர் ...

முதல் முறையாக எல்லை பாதுகாப்பில் பெண்கள்!

Posted: 30 Aug 2016 03:22 PM PDT

புதுடில்லி: முதல் முறையாக, எல்லை பாதுகாப்புப் பணியில், பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை.
இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பகுதியில், துணை ராணுவப் படையான, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த, 6,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்; இதில், 190 கி.மீ., எல்லைப் பகுதி உள்ள இமாச்சலப் பிரதேசத்தில், பாதுகாப்புப் பணியில், முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக, 12க்கும் மேற்பட்ட பெண்கள், எல்லைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மொத்தப் படையில், 15 சதவீதம் வரை பெண்களை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™