Tamil News | Online Tamil News |
- ஸ்டாலின் பேச்சு நீக்கம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- மின்சார துறையை குட்டிச்சுவராக்கிய தி.மு.க.,:சட்டசபையில் ஜெ., கடும் குற்றச்சாட்டு
- சசிகலா புஷ்பாவின் தப்புக்கணக்கு!
- தமிழக காங்., தலைவர் நியமனம்: இழுபறிக்கு பிரியங்கா காரணம்
- குஜராத் புதிய முதல்வர் யார்? நாளை முடிவு செய்கிறார் அமித் ஷா
- 'வயக்காட்டு பொம்மைகள்' என அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,கிண்டல்: தி.மு.க., கடும் அமளி; சபை முடிந்த பின்னரும் தர்ணா
- உள்ளாட்சி தேர்தலில் போட்டி? ஆலோசிக்க விஜயகாந்த் முடிவு
- அச்சுதானந்தனுக்கு கேபினட் அந்தஸ்து
- ராஜ்யசபாவில் அமோக ஆதரவுடன் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறியது!: மாநிலங்கள் உரிமையை பறிப்பதாக அ.தி.மு.க., வெளிநடப்பு
- சுவாதியின் நண்பர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை
- வெள்ளத்தால் அனாதையான காண்டாமிருகங்கள் தத்தெடுப்பு
- வங்கிகளுக்கு 10 நிறுவனங்கள் ரூ.5.73 லட்சம் கோடி பாக்கி
- சுப்ரீம் கோர்ட்டில் அமர்சிங் மனு தள்ளுபடி:கட்சித்தாவல் தடை சட்ட விவகாரம்
- கிருஷ்ணகிரி அருகே ரயில் தடம் புரண்டு விபத்து
| ஸ்டாலின் பேச்சு நீக்கம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted: 03 Aug 2016 10:12 AM PDT சென்னை: ஸ்டாலின் பேச்சை, சபைக் குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், நேற்று வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: மானிய கோரிக்கை விவாதத் தின் போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சட்டசபையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால், ஒரு அதிகாரியும் இல்லை. இது, மிகப்பெரிய அவமானம். சபாநாயகர்: அருகில் உள்ள அறையில் இருக்கின்றனர். துரைமுருகன்: அவர்களை சபைக்கு வர உத்தரவிடுங்கள். (விவாதம் ... |
| மின்சார துறையை குட்டிச்சுவராக்கிய தி.மு.க.,:சட்டசபையில் ஜெ., கடும் குற்றச்சாட்டு Posted: 03 Aug 2016 10:19 AM PDT சென்னை:''தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, மின்சார துறையில் என்னென்ன தவறுகள் செய்ய முடியுமோ, எல்லாவற்றையும் செய்து, அந்தத் துறையையே குட்டிச் சுவராக்கினர்,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது:நான் சபைக்குள் வந்த போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., ரங்கநாதன் பேசிக் கொண்டிருந்தார். அவர், 'தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்றொரு மாயத் தோற்றத்தை, நீங்கள் ஏற்படுத்த பார்க்கிறீர்கள்' என்றார். நாங்கள், அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வில்லை. மத்திய மின்சார குழுமம், தமிழ்நாடு, மின்சார உற்பத்தியில் உபரி மாநிலம் என, ... |
| சசிகலா புஷ்பாவின் தப்புக்கணக்கு! Posted: 03 Aug 2016 10:22 AM PDT 'எதிர்க்கட்சியினரை தாக்கி பேசினாலோ, தாக்கினாலோ அ.தி.மு.க.,வில் முக்கிய பதவி கிடைக்கும் என்ற கடந்த கால நிகழ்வுகளை மனதில் வைத்தே, தி.மு.க., - எம்.பி., சிவாவை, சசிகலா புஷ்பா தாக்கினார். ஆனால், அவரது கணக்கு தப்பாகி விட்டது' என, அ.தி.மு.க., வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர். இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:* கடந்த, 1991 - - 96ல், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை விமர்சனம் செய்தார், அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இதனால், திருச்சி விமான நிலையத்தில், அப்போதைய பால்வள தலைவர் இளவரசன், ப.சிதம்பரத்தை தாக்க முயன்றார்.அதன்பின், இளவரசனுக்கு எம்.பி., ... |
| தமிழக காங்., தலைவர் நியமனம்: இழுபறிக்கு பிரியங்கா காரணம் Posted: 03 Aug 2016 10:25 AM PDT தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனத்தில், நீண்ட இழுபறி நீடிப்பதற்கு, பிரியங்காவின் தலையீடு காரணம் என தெரியவந்துள்ளது. சட்டசபை தேர்தலில், எதிர்பார்த்த அளவுக்கு காங்கிரஸ் வெற்றி பெறாததால், தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து, இளங்கோவன் , விலகினார். புதிய தலைவரை நியமிக்ககட்சியின் அனைத்து கோஷ்டி தலைவர்களையும் அழைத்து பேசியது தலைமை. ஆயினும், இழுபறிநீடிக்கிறது.இந்நிலையில், காங்., தலைவர் சோனியா மகள் பிரியங்கா, இந்த விஷயத்தில் தலையிட துவங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேச தேர்த லுக்கு, தீவிர பிரசாரம் மேற்கொள்ள தயாராகி ... |
| குஜராத் புதிய முதல்வர் யார்? நாளை முடிவு செய்கிறார் அமித் ஷா Posted: 03 Aug 2016 10:33 AM PDT புதுடில்லி:ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குஜராத் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நாளை நடக்கிறது. புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம், கட்சி தலைவர் அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்திபென் படேல், சமீபத்தில் அறிவித்தார்.இது குறித்து, பா.ஜ.,வின் உயர்மட்ட குழுவான, பார்லிமென்ட் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று ... |
| Posted: 03 Aug 2016 10:46 AM PDT சென்னை:சட்டசபையில், நேற்று கடும் அமளி ஏற்பட்டது. சபை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபைக்குள் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமளியால், அமைச்சரின் பதிலுரையை சபாநாயகர் தள்ளிவைத்தார். சட்டசபையில், நேற்று மின் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், பரமக்குடி தொகுதி அ.தி.மு.க., உறுப்பினர் முத்தையா பேசினார். அவர், ''சட்டசபைக்கு, 89 வயக்காட்டு பொம்மைகள் வந்திருக்கின்றன. அவற்றை பார்த்து, குருவிகள் பயப்படலாம்; சீறும் சிங்கம் பயப்படுமா,'' என்ற போது, 89 உறுப்பினர்கள் உடைய தி.மு.க., தரப்பில் கொந்தளிப்பு ... |
| உள்ளாட்சி தேர்தலில் போட்டி? ஆலோசிக்க விஜயகாந்த் முடிவு Posted: 03 Aug 2016 10:50 AM PDT உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார். சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. படுதோல்வி அடைந்ததால், கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேறி வருகின்றனர். இருப்பவர்களும், உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிட விரும்பவில்லை. செலவழிக்க பணம் இல்லாததே, இதற்கு காரணம்.இது குறித்து, விஜயகாந்திடம், மாநில நிர்வாகி களும், மாவட்ட செயலர்களும் நேரடியாக சொல்லி விட்டனர். இருந்தபோதும், 'உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., நிச்சயம் ... |
| அச்சுதானந்தனுக்கு கேபினட் அந்தஸ்து Posted: 03 Aug 2016 10:55 AM PDT
திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன், நிர்வாக சீர்திருத்த கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநில சட்டசபைக்கு, சமீபத்தில் நடந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 'அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், முதல்வராக நியமிக்கப்படுவார்' என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிட முடிவின்படி, பினராயி விஜயன், முதல்வர் பதவியை ஏற்றார். இதையடுத்து, அச்சுதானந்தனுக்கு அளிக்கப்படும் பதவி ... |
| Posted: 03 Aug 2016 11:08 AM PDT புதுடில்லி:மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, காரசாரமான விவாதத்துக்கு பின், அமோக ஆதரவுன் வெற்றிகரமாக நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதா, மாநிலங்களின் உரிமையை பறிப்பதாக எதிர்ப்பு தெரிவித்த, அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தற்போது, நாடு முழுவதும் பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன.ஒவ்வொரு மாநிலங் களிலும் தனித் தனி வரி விதிப்பு முறைகள் உள்ளன. இதனால், ஒரு பொருளுக்கு பல்வேறு கட்டங்களில் பல்வேறு வரிகள் விதிக்கப்படும் நிலை உள்ளது; ஒரு குறிப்பிட்ட ... |
| சுவாதியின் நண்பர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை Posted: 03 Aug 2016 11:41 AM PDT
சென்னை : சென்னை- நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். கைது செய்ய போலீசார் முயன்றபோது அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இக்கொலை வழக்கு தொடர்பாக ... |
| வெள்ளத்தால் அனாதையான காண்டாமிருகங்கள் தத்தெடுப்பு Posted: 03 Aug 2016 12:40 PM PDT கவுஹாத்தி: வட கிழக்கு மாநிலமான அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், அனாதையான காண்டாமிருகங்களின் குட்டிகளை தத்தெடுக்க, பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். உயிரியல் பூங்கா : முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள அசாமில் உள்ளது, கஜிரங்கா தேசிய உயிரியல் பூங்கா. உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், இங்குள்ளன. கடந்த வாரம், அசாமில் பெய்த கனமழையால், இந்த பூங்காவில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் காண்டாமிருகங்கள் பல, உயிரிழந்தன; சில குட்டிகள் தாயைப் பிரிய நேர்ந்தன. இவ்வாறு, அனாதையாக ... |
| வங்கிகளுக்கு 10 நிறுவனங்கள் ரூ.5.73 லட்சம் கோடி பாக்கி Posted: 03 Aug 2016 01:48 PM PDT
புதுடில்லி : 2015-16ம் நிதியாண்டில், பொது துறை வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு 10 கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.5.73 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளது என மத்திய நிதி துறை இணை அமைச்சர் தெரிவித்தார். மத்திய நிதி துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர், ராஜ்யசபாவில் கூறியதாவது:கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த, 2015-16ம் நிதியாண்டில், 10 கார்ப்பரேட் நிறுவனங்கள், பொது துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் கடன் பெற்று, திரும்பத் தராத தொகை, 5.73 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அடிப்படை கட்டமைப்பு, உருக்கு, ஜவுளி உள்ளிட்ட துறைகளில், வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக ... |
| சுப்ரீம் கோர்ட்டில் அமர்சிங் மனு தள்ளுபடி:கட்சித்தாவல் தடை சட்ட விவகாரம் Posted: 03 Aug 2016 01:57 PM PDT புதுடில்லி:கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பாக, பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா, சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் அமர்சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அமர்சிங், லோக்சபா எம்.பி.,யாக இருந்த, பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா, ஆகிய இருவரும், 2010, பிப்ரவரியில், அக்கட்சியி லிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், தங்கள், எம்.பி., பதவி பறிபோகலாம் என்ற அச்சத்தில், இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கடந்த, 1996ல், கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அளித்த ... |
| கிருஷ்ணகிரி அருகே ரயில் தடம் புரண்டு விபத்து Posted: 03 Aug 2016 02:46 PM PDT
கிருஷ்ணகிரி : சென்னையிலிருந்து பழனி செல்லும் ரயில் கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து பழனி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. ரயிலின் 2 பெட்டிகள் மற்றும் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 04,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |