Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அவிநாசியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 26 Aug 2016 01:27 PM PDT

அத்திக்கடவு -அவிநாசி விவசாய சங்க ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம்

Posted: 26 Aug 2016 01:26 PM PDT

வெள்ளக்கோவில் பகுதியில் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்: திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 26 Aug 2016 01:25 PM PDT

மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தாராபுரத்தில் ஆகஸ்ட் 27 மின்தடை

Posted: 26 Aug 2016 01:25 PM PDT

தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9  முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் க.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

குளோபல் மெட்ரிக் பள்ளியில் சதுரங்கப் போட்டி

Posted: 26 Aug 2016 01:23 PM PDT

காங்கயம் குளோபல் மெட்ரிக் பள்ளியில் குறுமைய அளவிலான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்

Posted: 26 Aug 2016 01:23 PM PDT

திருப்பூரில் பள்ளி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.

கல்விக் கடன் முகாம் நடத்தக் கோரி வாலிபர் சங்கம் தொடர் உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Posted: 26 Aug 2016 01:22 PM PDT

கல்விக் கடன் முகாம் நடத்த வலியுறுத்தி திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினரால் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட 60 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.

சாலை விபத்தில் முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் சாவு

Posted: 26 Aug 2016 01:22 PM PDT

தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தனியார் பள்ளி வாகனம் விபத்து

Posted: 26 Aug 2016 01:21 PM PDT

அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் தனியார் பள்ளி வாகனத்தின் டயர்கள் கழன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

வெள்ளக்கோவிலில் மிதமான மழை

Posted: 26 Aug 2016 01:19 PM PDT

வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.

வெள்ளக்கோவிலில் அம்மா திட்ட முகாம்

Posted: 26 Aug 2016 01:19 PM PDT

வெள்ளக்கோவிலில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியால் மின்சார விநியோகம் பாதிப்பு

Posted: 26 Aug 2016 01:19 PM PDT

மாநகருக்குள் அதிக பாரம் ஏற்றி வந்த விறகு லாரி மின் ஒயரில் சிக்கி குடியிருப்பு பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்.

விநாயகர் சிலைகள் வைப்பதில் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும்: திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை

Posted: 26 Aug 2016 01:18 PM PDT

விநாயகர் சிலைகள் வைப்பதில் நீதிமன்ற உத்தரவை சரியாக பின்பற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பொங்கலூர் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 26 Aug 2016 01:18 PM PDT

பொங்கலூர் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தில் 307 பேருக்கு சிகிச்சை

Posted: 26 Aug 2016 01:17 PM PDT

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், பல்லடம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் 307 பேர் பயனடைந்துள்ளனர்.

தாராபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிப்பு

Posted: 26 Aug 2016 01:17 PM PDT

தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்

Posted: 26 Aug 2016 01:16 PM PDT

தமிழக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மின்சாரம் பாய்ந்து வெல்டிங் பொறியாளர் சாவு

Posted: 26 Aug 2016 01:16 PM PDT

குன்னூர் அருகே மின்சாரம் பாய்ந்து வெல்டிங் பொறியாளர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

வெங்கம்பூர் பேரூராட்சிக் கூட்டம்

Posted: 26 Aug 2016 01:16 PM PDT

கொடுமுடி வட்டம், வெங்கம்பூர் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அன்னை தெரசா பிறந்த நாள் விழா

Posted: 26 Aug 2016 01:15 PM PDT

உதகை மறைமாவட்டம் மற்றும் ரெக்ஸ் பள்ளி ஆகியவற்றின் சார்பில் அன்னை தெரசாவின் 106-ஆவது பிறந்த தினம் உதகையில் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

போதைப் பொருள் விற்பனை: 4 பேர் கைது; 2 கிலோ பறிமுதல்

Posted: 26 Aug 2016 01:15 PM PDT

திருச்சி அரியமங்கலத்தில் போதைப்பொருள் விற்ற 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்த 2 கிலோ போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

மாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் தேங்காய் உடைத்து வழிபாடு

Posted: 26 Aug 2016 01:14 PM PDT

பவானியை அடுத்த தொட்டிபாளையம் மாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் 108 தேங்காய் உடைத்து வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நீலகிரியில் ஆதிவாசி மக்கள் காத்திருப்புப் போராட்டம்

Posted: 26 Aug 2016 01:13 PM PDT

நீலகிரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தங்களது நிலங்களை மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

குன்னூரில் 2-ஆவது கட்ட சீசனுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படமாட்டாது: நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் தினேஷ் திரிவேதி

Posted: 26 Aug 2016 01:13 PM PDT

நீலகிரியில் நடைபெறும் 2-ஆவது கட்ட சீசனுக்கு இந்த ஆண்டு சிறப்பு மலை ரயில் இயக்கப்படமாட்டாது என நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் தினேஷ் திரிவேதி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

குறுமைய விளையாட்டுப் போட்டி: அந்தியூர் அரசுப் பள்ளி சாம்பியன்

Posted: 26 Aug 2016 01:12 PM PDT

பவானி வட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டியில் மிக மூத்தோர் மகளிர் பிரிவில் அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.

ஆசனூர் வனத்தில் பலத்த மழை

Posted: 26 Aug 2016 01:12 PM PDT

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் வனத்தில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நடுஹட்டி கிராமத்தில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 26 Aug 2016 01:11 PM PDT

கோத்தகிரி அருகே நடுஹட்டி கிராமத்தில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 

விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

Posted: 26 Aug 2016 01:10 PM PDT

விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.

பேருந்து நிறுத்தம் கோரி மாணவர்கள் சாலை மறியல்

Posted: 26 Aug 2016 01:09 PM PDT

புன்செய் புளியம்பட்டி ஜெ.ஜெ.நகரில் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தடகளப் போட்டி: சாரு மெட்ரிக் பள்ளி சாம்பியன்

Posted: 26 Aug 2016 01:09 PM PDT

சத்தியமங்கலம் வட்ட அளவிலான குறுமைய தடகளப் போட்டியில், சாரு மெட்ரிக் பள்ளி 7-ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது.

ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை கரைக்க வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 26 Aug 2016 01:08 PM PDT

ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழிலக தையல் பயிற்சி பெற்ற 350 பெண்களுக்குச் சான்றிதழ்

Posted: 26 Aug 2016 01:08 PM PDT

தொழிலக தையல் பயிற்சி பெற்ற 350 பெண்களுக்கு சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இளங்கோவன் மீது புகார் கொடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவரை நீக்க கோரிக்கை

Posted: 26 Aug 2016 01:07 PM PDT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது புகார் கொடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னிமலை முருகன் கோயிலின் வேங்கை மரத்தேரை தங்க ரதமாக மாற்றக் கோரிக்கை

Posted: 26 Aug 2016 01:07 PM PDT

சென்னிமலை முருகன் கோயிலில் மலை மீது தற்போது பயன்படுத்தப்படும் வேங்கை மரத்தேரை, தங்க ரதமாக மாற்ற வேண்டும் என பக்தர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிணற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர் சாவு

Posted: 26 Aug 2016 01:06 PM PDT

பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததால் அதிருப்தி: அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் கோஷம்: வேளாண் குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு

Posted: 26 Aug 2016 01:06 PM PDT

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க பரிந்துரைக்காததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், அதிகாரிகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், ஈரோடு மாவட்ட வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: விவசாயத் தொழிலாளர்கள் 800 பேர் கைது

Posted: 26 Aug 2016 01:06 PM PDT

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயத் தொழிலாளர்கள் 800 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்: 2000 பேர் கைது

Posted: 26 Aug 2016 12:45 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை, திருவாரூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த முன்னாள் அமைச்சர்: உரிமம் புதுப்பித்தலில் மெத்தனம் எனப் புகார்

Posted: 26 Aug 2016 12:44 PM PDT

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், தனது துப்பாக்கிக்கான உரிமம் புதுப்பித்தலில் மெத்தனம் காட்டுவதாகப் புகார் தெரிவித்தார்.

கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்க வேண்டும்

Posted: 26 Aug 2016 12:44 PM PDT

கோயில் மனைகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு ஒரு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார்.

துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்

Posted: 26 Aug 2016 12:43 PM PDT

விஷவாயு தாக்கியதில் இறந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் கைது

Posted: 26 Aug 2016 12:43 PM PDT

மோசடி வழக்கில், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு இரங்கல்

Posted: 26 Aug 2016 12:39 PM PDT

சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு, தமிழக அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்குமாரின் காவல் செப். 9 வரை நீட்டிப்பு

Posted: 26 Aug 2016 12:38 PM PDT

சென்னையில் மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்றக் காவல், செப்டம்பர் 9 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்: ஆக.29-இல் வெளியீடு

Posted: 26 Aug 2016 12:38 PM PDT

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் கடந்த மே, ஜூன் மாதங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கு நடத்திய தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஆக.29) வெளியிடப்பட உள்ளன.

ஊராட்சி தலைவரின் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 26 Aug 2016 12:36 PM PDT

காசோலையில் கையெழுத்திடும் ஊராட்சித் தலைவரின் அதிகாரத்தைப் பறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தமிழக விவசாயிகள் சங்க தாற்காலிக மாநிலத் தலைவர் நியமனம்

Posted: 26 Aug 2016 12:36 PM PDT

தமிழக விவசாயிகள் சங்க தாற்காலிக மாநிலத் தலைவராக, அதன் மாநிலப் பொதுச் செயலர் ராமகவுண்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரயிலில் ரூ. 5.75 கோடி பணம் திருட்டு வழக்கு: ஈரோட்டில் ரயில்வே எஸ்.பி. விசாரணை

Posted: 26 Aug 2016 12:36 PM PDT

ரயில் மேற்கூரையை உடைத்து ரூ. 5.75 கோடி பணம் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக ஈரோடு ரயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி 3-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.

நீட் தகுதித் தேர்வு பிரச்னை: புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு

Posted: 26 Aug 2016 12:35 PM PDT

 "நீட்' தகுதித் தேர்வு பிரச்னை தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ்-அதிமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஒரு பயல் ‘டெளரி’ கேட்கக் கூடாது..!

Posted: 26 Aug 2016 12:34 PM PDT

எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்காங்களோ..!

Posted: 26 Aug 2016 12:31 PM PDT

வட்டாட்சியரை தாக்க முயற்சி: வழக்குரைஞரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 26 Aug 2016 12:29 PM PDT

பரமக்குடி வட்டாட்சியரை தாக்க முற்பட்ட வழக்குரைஞரைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வருவாய்த்துறையினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடிப் பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை

Posted: 26 Aug 2016 12:28 PM PDT

காரைக்குடிப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் இடி, மின்னல், காற்றுடன் பலத்தமழை பெய்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மானாமதுரை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம்

Posted: 26 Aug 2016 12:28 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வெள்ளிக்கிழமை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் வாங்க மணிக்கணக்கில் காத்துக்கிடந்த விவசாயிகள் இருப்பு இல்லை என அதிகாரிகள் பதிலளித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பாதுகாப்பில் பலவீனம்!

Posted: 26 Aug 2016 12:27 PM PDT

இந்தியக் கடற்படைக்காக மும்பையில் கட்டமைக்கப்பட்டு வரும் பிரான்ஸ் நிறுவனத்தின் "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேவகோட்டை பகுதிகளில் இடியுடன் கனமழை

Posted: 26 Aug 2016 12:27 PM PDT

தேவகோட்டை மற்றும் கல்லல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடல்

Posted: 26 Aug 2016 12:26 PM PDT

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப்பள்ளியில் ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவர் மு.ராமநாதன், மாணவர்களுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.

தரம் குறைந்த விதை விற்பனை வியாபாரிகளுக்கு அபராதம்

Posted: 26 Aug 2016 12:25 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் முளைப்புத்திறன் குறைந்த விதைகளை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அறிவியலுக்கே அறைகூவல்

Posted: 26 Aug 2016 12:25 PM PDT

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 வகை விமானம் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்திலிருந்து அந்தமான் தலைநகருக்கு ஜூலை 22 காலை 8.30-க்குப் புறப்பட்ட இந்த விமானம் 11.30 மணிக்கு போட் பிளேயருக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.

காசோலை மோசடி செய்தவருக்கு 6 ஆண்டு சிறை: காரைக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 26 Aug 2016 12:25 PM PDT

காரைக்குடியில் ஒரே நபருக்கு வெவ்வேறு காசோலை மோசடி வழக்குகளில் காரைக்குடி விரைவு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

இது நல்லதல்ல...

Posted: 26 Aug 2016 12:23 PM PDT

கற்றலின் எதிரி விருப்பம் இன்மையோ, மறதியோ, அச்சமோ அல்லது வெறுப்போ கிடையாது. இவை அனைத்தையும் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் தண்டனைதான்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க கோரிக்கை

Posted: 26 Aug 2016 12:22 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து கமுதியை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"ஸ்கார்பின்' ஆவணங்கள் கசிவு குறித்து பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை

Posted: 26 Aug 2016 12:19 PM PDT

"ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக பெரிதாகக் கலவைப்பட வேண்டியதில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 29-இல் சசிகலா புஷ்பா ஆஜராக உத்தரவு

Posted: 26 Aug 2016 12:18 PM PDT

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோருடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏர்செல் - மேக்சிஸ் விசாரணையில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு

Posted: 26 Aug 2016 12:17 PM PDT

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளின் சிபிஐ நீதிமன்ற விசாரணையில் தலையிட ஆர்வம் இல்லை என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

தகவல்கள் தடையின்றி மக்களைச் சென்றடைய ஆவன செய்ய வேண்டும்: நவநீதகிருஷ்ணன் எம்.பி.

Posted: 26 Aug 2016 12:16 PM PDT

அனைத்துத்தகவல்களும் தடையில்லாமல் பொதுமக்களைச் சென்றடைய ஆவனசெய்யவேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் எ. நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

"ராம ராஜ்யத்தை' அமல்படுத்த உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

Posted: 26 Aug 2016 12:16 PM PDT

இந்தியாவில் "ராம ராஜ்யத்தை' (நல்லாட்சியை) அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்று அதன் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: இறுதிக் கட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி

Posted: 26 Aug 2016 12:16 PM PDT

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. ஒவ்வொரு வார்டு வாரியாக, வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்குகள் மீது நவம்பரில் இறுதி விசாரணை

Posted: 26 Aug 2016 12:16 PM PDT

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, விலங்குகள் நல வாரியம் உள்பட பல்வேறு தரப்பினர் தொடுத்துள்ள வழக்குகள் மீதான இறுதி விசாரணையை வரும் நவம்பர் 9-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கல்லலில் விவசாய பணிகள் தொடக்கம்

Posted: 26 Aug 2016 12:16 PM PDT

சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கியுள்ளது.

தலாக் முறை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 26 Aug 2016 12:15 PM PDT

முஸ்லிம் மதத்தில் விவாகரத்து அளிக்க பின்பற்றப்படும் தலாக், நிக்கா ஹலாலா ஆகிய முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருக்கோஷ்டியூரில் உறியடி உற்சவம்

Posted: 26 Aug 2016 12:15 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் செளமியநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை உறியடி உற்சவம் நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தேர்தல்: செலவு கணக்கு தாக்கல் செய்யாத 83 பேர்

Posted: 26 Aug 2016 12:15 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 83 பேர் செலவுக் கணக்கு விவரங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை.

மாணவி மர்மச் சாவு: சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தக்கோரி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Aug 2016 12:15 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில்  இறந்தது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ராமேசுவரத்தில் அனைத்துக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் மாவோயிஸ்ட் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்: 2 நாள்கள் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதி

Posted: 26 Aug 2016 12:14 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைவாழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட்டிடம் 2 நாள்கள் விசாரணை நடத்த திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்

Posted: 26 Aug 2016 12:14 PM PDT

திருப்பூரில் பள்ளி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். திருப்பூர், வீரபாண்டி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

காவிரியில் தமிழகத்துக்கு நீர் விட மறுப்பு: கர்நாடகத்துக்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் கண்டனம்

Posted: 26 Aug 2016 12:13 PM PDT

காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு

Posted: 26 Aug 2016 12:13 PM PDT

முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

திருப்புவனத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Aug 2016 12:13 PM PDT

திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து 1 கோடி பேரிடம் கையெழுத்து: அகில பாரத இந்து மகாசபா திட்டம்

Posted: 26 Aug 2016 12:13 PM PDT

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில பாரத இந்து மகாசபா தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை ஆய்வு செய்ய பாந்தர்ஸ் கட்சித் தலைவருக்கு அனுமதி

Posted: 26 Aug 2016 12:12 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி வழக்குத் தொடுத்துள்ள ஜம்மு-காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சித் தலைவர் பீம் சிங்குக்கு, அந்த மாநில கள நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது.

ஆன் லைனில் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு

Posted: 26 Aug 2016 12:12 PM PDT

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) ஆன் லைனில் மாணவர் சேர்க்கைக்கு ஆக. 30- ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிறது காங்கிரஸ்

Posted: 26 Aug 2016 12:11 PM PDT

அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத சர்ச்சைகளை காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருவதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டினார்.

வைகை ஆற்றில் விவசாயி கொலை: உசிலம்பட்டி நீதிமன்றத்தில் இருவர் சரண்

Posted: 26 Aug 2016 12:11 PM PDT

மதுரையில் வைகை ஆற்றில் விவசாயி கொலையுண்ட வழக்கில் தொடர்புடைய இருவர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

போலி குடும்ப அட்டைகளை கண்டறிய எளிய முறை அமல்: உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் தகவல்

Posted: 26 Aug 2016 12:11 PM PDT

நியாயவிலைக் கடைகளில் போலியான குடும்ப அட்டைகள் மற்றும் இரட்டைப் பதிவுகளை எளிதில் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆண்களுக்கும் பேறுகால விடுப்பு: மேனகா சூசகம்

Posted: 26 Aug 2016 12:10 PM PDT

எதிர்காலத்தில் ஆண்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஷீனா போரா வழக்கு: வாதத்தைத் தொடங்க சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 26 Aug 2016 12:10 PM PDT

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தொடர்பான வாதத்தைத் தொடங்குமாறு சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாத்ரி சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரைக் கைது செய்யத் தடை

Posted: 26 Aug 2016 12:09 PM PDT

உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தாக குற்றம்சாட்டி அடித்துக் கொல்லப்பட்ட முகமது இக்லாக்கின் குடும்பத்தினர் 5 பேரைக் கைது செய்ய அலாகாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

விருதுநகரில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தியதில் மோசடி: நகர்மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு

Posted: 26 Aug 2016 12:09 PM PDT

விருதுநகர் நகராட்சிப் பகுதியில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் தூண்டும் பயங்கரவாதம்: இந்திய-அமெரிக்க பேச்சில் விவாதிக்க முடிவு

Posted: 26 Aug 2016 12:09 PM PDT

இந்திய-அமெரிக்க அமைச்சர்கள் தில்லியில் வரும் 30ஆம் தேதி நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Aug 2016 12:09 PM PDT

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டையில் அரசு ஓய்வூதியர்கள் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கர்: கரடி தாக்கி 2 பேர் பலி; 5 பேர் காயம்

Posted: 26 Aug 2016 12:08 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், கோரியா மாவட்டத்தில் உள்ள வைகுந்த்பூர் வனப் பகுதியில், கரடி தாக்கியதில் 2 கிராமவாசிகள் உயிரிழந்தனர்; 3 போலீஸார் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

காரியாபட்டி அருகே இளைஞர் எரித்துக் கொலை

Posted: 26 Aug 2016 12:08 PM PDT

காரியாபட்டி நான்குவழிச் சாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

தாக்குதல் சம்பவங்கள்: தலித் அமைப்புகள் செப்டம்பரில் ஆலோசனை

Posted: 26 Aug 2016 12:08 PM PDT

கலாசார அடக்குமுறை மற்றும் தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கம் அடுத்த மாதம் தில்லியில் நடைபெற உள்ளது.

ஸ்ரீவிலி.யில் முன்விரோதத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

Posted: 26 Aug 2016 12:08 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் வியாழக்கிழமை இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

லஞ்ச வழக்கு: ஹரியாணா முன்னாள் பேரவைத் தலைவருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 26 Aug 2016 12:08 PM PDT

கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இஃப்கோ லஞ்ச வழக்கில், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மூத்த தலைவரும், ஹரியாணா மாநில சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சத்பீர் சிங் காதியானுக்கு வெள்ளிக்கிழமை 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

காஷ்மீர்: பிரிவினைவாதிகளின் பேரணியை முறியடிக்க ஊரடங்கு

Posted: 26 Aug 2016 12:07 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பழைய ஸ்ரீநகரில் உள்ள மசூதியை நோக்கி பிரிவினைவாதிகள் பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளதை முறியடிப்பதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் செல்ல அனுமதி: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted: 26 Aug 2016 12:07 PM PDT

மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் செல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அருப்புக்கோட்டையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு

Posted: 26 Aug 2016 12:07 PM PDT

அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து ரூ. 70 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பந்த் நடத்த அனுமதியில்லை

Posted: 26 Aug 2016 12:06 PM PDT

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கு வங்கத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™