Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அந்தமான் - இறுதிச்சுற்று..!

Posted: 23 Aug 2016 11:21 AM PDTஅந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?

Posted: 23 Aug 2016 10:09 AM PDT

வீடு வாங்குவது ஒரு நபர் தன் வாழ்நாளில் எடுக்கும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று.  வீடு வாங்கும்போதே அத்தனை சாதக, பாதகங்களையும் பார்த்து வாங்க வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில் ஒருவர் தனி வீடு வாங்குவது சிறந்ததா,  அடுக்குமாடிக் குடியிருப்பில் (ஃப்ளாட்) வாங்குவது சிறந்ததா என்று ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டு அனுபவமுள்ள ஃப்ளாட் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ராமதுரையிடம் கேட்டோம். விரிவாகச் சொன்னார் அவர்.   "வீட்டை பொறுத்தவரை, நகரின் மையப் பகுதி, புறநகர்ப் பகுதி என்பதைப் பொறுத்துதான் ...

என்னையும் தெரிந்துக்கொள்ளுங்களேன்

Posted: 23 Aug 2016 10:04 AM PDT

பெயர்:ஸ்ரீதர் ராம்
சொந்த ஊர்:தருமபுரி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்:  எதையோ தேடினேன்....ஈகரை புதையல் கிடைத்தது
பொழுதுபோக்கு: புத்தகப்புழு
தொழில்: ஆசிரியர்
மேலும் என்னைப் பற்றி: புத்தகப்புழு....ஆன்மீக நாட்டம்....பிரயாணத்தில் இன்பம்,மேலும் பல

கரன்ட் கபாலி

Posted: 23 Aug 2016 10:03 AM PDT

சாணக்கியன் சொல்!

Posted: 23 Aug 2016 10:02 AM PDT

- மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆயுள் இருக்காது. - ஒரு மனிதன் மிகவும் நேர்மையானவனாக இருக்கக்கூடாது. நேராக வளரும் மரம்தான் முதலில் வெட்டுப் படும். நேர்மையான மனிதர்கள்தான் முதலில் வீழ்த்தப் படுகிறார்கள். -- -- - விஷமில்லாத பாம்பானாலும் விஷமுள்ளதைப் போல நடிக்க வேண்டும். - எல்லாவிதமான நட்புக்களின் பின்னாலும் ஒருவரது சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்பது இல்லை. இது ஒரு ...

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம்

Posted: 23 Aug 2016 09:57 AM PDT

வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி. மரக்கன்றுகளைப் பரிசாகத் தருவது பரவலாகிவரும் சூழ்நிலையில், தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பயன்மிக்க மூலிகைச் செடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி. சுற்றுச்சூழல், சுகாதாரச் சீர்கேடுகள், உணவுப் பழக்கம் போன்றவற்றால் சளி, இருமல், காய்ச்சல், பூச்சிக்கடி, அஜீரணம் என நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு ...

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

Posted: 23 Aug 2016 09:56 AM PDT

*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!* இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் ...

ஊரில் இல்லாத நாளில்...

Posted: 23 Aug 2016 09:50 AM PDT

நாள்தோறும் பூ வாங்கும் கடையில் தானாகவே நிற்கிறது எனது வாகனம் - நினைவுகளில் நீ இருப்பதால் நீ ஊரில் இல்லை என்ற ஞாபகம் எனக்குத்தான் இல்லை என் வாகனத்திற்குமா? - கொட்டிக் கிடக்கும் கோடிப் பூக்களை ரசிக்கவில்லை மனது - எத்தனை மலர்கள்... எத்தனை நிறங்கள்... அத்தனை பூக்களும் அழுவது போலவே இருக்கிறது - பூக்கள் மீண்டும் சிரிக்க வேண்டும் உடனே ஊர்திருப்பி வா - ---------------- கோவி லெனின் வேப்பங்காற்று - கவிதை தொகுப்பிலிருந்து _________________

பெத்த மனசு

Posted: 23 Aug 2016 09:49 AM PDT

- தான் பெத்த நாலு பையன்களுக்கும் சர்க்கார் உத்தியோகம் - யார் கேட்டாலும் பெருமையாகச் சொல்லும் செல்லம்மாளுக்கு ஒரு பையனும் ஊத்தவில்லை ஒரு வேளை கஞ்சி - பசியோடு வந்தவளைப் பார்த்து ஒரு வாய் சாப்புட்டு போம்மா என்கிறாள்'' பப்பாளி விதைக்கும் கள்ளிப்பாலுக்கும் தப்பிய அவளது பெண் பிள்ளளை - -------------------------- கோவி லெனின் வேப்பங்காற்று - கவிதை தொகுப்பிலிருந்து - _________________

அறிமுகம் - தமிழ் ஐயப்பன்

Posted: 23 Aug 2016 09:37 AM PDT

பெயர்:வே.தமிழ்ஐயப்பன்
சொந்த ஊர்:பைம்பொழில்(பண்பொழி) கிராமம்,திருநெல்வேலி..
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:முன்னாடியே தெரியும்
பொழுதுபோக்கு:கவிதையும் காதலும்
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

ரோஜாவும் நீயும்....

Posted: 23 Aug 2016 09:17 AM PDT

- அந்த ரோஜாத் தொட்டியை வாங்கிய விநாடியில் அதிலிருந்த பூவை விடவும் அழகாய் மலர்ந்திருந்தது உன் முகம் - சட்டைப் பையிலிருந்து பணம் எடுக்க கைவிட்டபோது முள் குத்தியது போலிருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும் - நீ பூவாய் மலரும்போது எத்தனை முட்களையும் தாங்கிக்கொள்ள எனக்கு சம்மதம்தான் - ஒரு மாலை நேரத்தில் தண்ணீர் உற்றும் வேளையில் தொட்டி ரோஜா வாடி வதங்கியிருந்தது நீ இல்லாத நேரத்தில் நான் இருக்கும் நிலையென - நீர் குடிக்கும் ரோஜா வேர்கள் போல் நினைவுகளைக் குடித்து என் தாகம் ...

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Posted: 23 Aug 2016 09:16 AM PDT

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி! மூலிகை ...

நவபாஷாணம் பற்றிய அறிய தகவல்கள்

Posted: 23 Aug 2016 09:14 AM PDT

நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா? நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்.., 1.சாதிலிங்கம். 2.மனோசிலை 3.காந்தம் 4.காரம் 5.கந்தகம் 6.பூரம் 7.வெள்ளை ...

நாம் ஒதுக்கிய வெல்லத்தின் அற்புத மருத்துவம்

Posted: 23 Aug 2016 09:13 AM PDT

ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும். எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் ...

முதலிரவில்

Posted: 23 Aug 2016 09:11 AM PDT

அலங்கரித்த அறை அதை விட அலங்காரமாக நீ அலங்கரிக்காவிட்டாலும் நீ அழகுதான் - இப்படி உண்மைகள் அறிந்திருந்தும் உன்னிடம் கேட்கிறேன் 'எ'ன்னைப் பிடித்திருக்கிறதா?'' என்று - முதன்முறையாய் என்னை ஏறிட்டுப் பார்க்கும் உன் பார்வையிலேயே பதில் தெரிகிறது - ''பெண் பார்த்த நாளிலும் நிச்சயிக்கப்பட்ட பொழுதிலும் தாலி ஏறிய நேரத்திலும் கேட்காத கேள்வி இப்போது ஏன்?'' பதிலாக ஒரு கேள்வியை உன் பார்வைகள் கேட்கின்றன - கண்கள் பேசும் உண்மையை உதடுகள் மறைக்கின்றன ''"ஃ...பிடித்திருக்கிறது'' என்ற வார்த்தையால்! - ----------------------- கோவி ...

களவு

Posted: 23 Aug 2016 09:11 AM PDT

இரண்டு நாள் விடுமுறையில், சரவணன் மீனாட்சி தம்பதியினர் திருப்பதிக்கு சென்றனர், ஏழுமலையானைக் கண்குளிர, மனம்குளிர தரிசனம் செய்தனர். திருப்பதியிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தம்பதியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுத் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. " அய்யய்யோ! எல்லாம் போச்சே! என்று அலறி அடித்துக்கொண்டு மீனாட்சி வீட்டிற்குள்ளே ஓடினாள். அங்கே பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில், வைத்தபடி இருந்தன. பீரோவைத் ...

தென்னிந்திய புரட்சி-நெல்லை ஜெனா

Posted: 23 Aug 2016 08:56 AM PDT

          விடுதலை போரின் வீர சரித்திரம் தென்னிந்திய புரட்சி எழுத்து : நெல்லை ஜெனா பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

நடிகை கையால ஜூஸ் குடிக்கணும்…!!

Posted: 23 Aug 2016 05:21 AM PDT

சந்திர குப்த மௌரியரின் அவைப்புலவர் - பொது அறிவு தகவல்

Posted: 23 Aug 2016 05:12 AM PDT

- - 1. தாராநாத்——————என்ற நூலை எழுதினார். திவ்ய வதனம் - 2. மெகஸ்தனிஸ் பாடலிபுத்திரத்தில் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை தங்கியிருந்தார். கி.மு.302 முதல் கி.மு. 298 வரை - 3. இந்தியாவில் மௌரியப்பேரரசை நிறுவியவர் யார்? சந்திர குப்த - 4. சந்திர குப்த மௌரியர் எந்த வம்சத்தைத்தோற்கடித்து மௌரிய வம்சத்தை நிறுவினார்? நந்த வம்சம் - 5. சந்திர குப்த மௌரியர் தோற்கடித்த நந்த வம்சத்து அ ரசர் யார்? தனநந்தர் - 6. சந்திர குப்த மௌரியர்————ஆண்டு முதல்——— ஆண்டு வரை ஆட்சி செய்தார். கி.மு.322 ...

இந்திய வரலாறு - பொது அறிவு தகவல்கள்

Posted: 23 Aug 2016 05:08 AM PDT

இந்திய வரலாறு 1. அர்த்த சாஸ்திரம் எத்தனை அத்தியாயங்களை கொண்டுள்ளது?. 180 அத்தியாயங்களை - 2. சந்தர்ப்பவாத அரசியலை அறிமுகம் செய்தவர் யார்? கௌடில்யர் - 3. முடிவுதான் முக்கியம், வழி முக்கியமல்ல என்று கூறியவர் யார்? கௌடில்யர் - 4. அர்த்த சாஸ்திரம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது? வடமொழி - 5. முத்ராராட்சசம் என்ற நூலை எழுதியவர் யார்? விசாகதத்தர் - 6. இன்டிகா என்ற நூலை எழுதியவர் யார்? மெகஸ்தனிஸ் - 7. மெகஸ்தனிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? கிரேக்கம் - 8. பாடலிபுத்திர ...

புகுந்த வீடு

Posted: 23 Aug 2016 04:23 AM PDT

- பொங்கலுக்கும் தீபாவளிக்கும் பிறந்த வீட்டுக்குப் புறப்படுவதை நினைத்தாலே ஊற்றெடுக்கும் உற்சாகம் - நல்லி எலும்பு சூப்பு நாட்டுக்கோழி வறுவல் விரால் மீன் குழம்பு - அம்மா வீட்டில்தான் எல்லாமே கிடைக்கும் அளவின்றியும் அமுதமாகவும் - துவைக்கவோ பெருக்கவோ அவசியமில்லை அம்மா வீட்டில் - புகுந்த வீட்டில் மாதக் கடைசிக்கு பயந்து செலவை இறுக்கிப் பிடிப்பது போல் பிறந்த வீட்டில் இருந்ததில்லை ஒருபோதும் - பை துழாவி பணம் தருவார் அப்பா அண்ணன்களும் கொடுப்பார்கள் கைச்செலவுக்கு - அம்மாவீட்டு ...

அப்படீங்களா!

Posted: 23 Aug 2016 04:00 AM PDT

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, சாவியைத் தொலைத்துவிட்டால்? கதவைத் திறக்க படாதபாடு பட வேண்டியிருக்கும். சாவியே தேவைப்படாத பூட்டு ஒன்று தயாரிக்கப் பட்டிருக்கிறது. அதன் பெயர் ஆகஸ்ட் லாக். இந்தப் பூட்டை, பத்து நிமிடங்களில் கதவில் பொருத்தி விடலாம். இந்தப் பூட்டைத் திறக்க உங்களுடைய கையில் உள்ள செல்போனே போதும். செல்போனில் உரிய கட்டளைகளைக் கொடுத்ததும் பூட்டு தானாகவே திறந்து கொள்ளும். உங்கள் போனில் புளூ டூத் இருக்க வேண்டும். இந்த பூட்டுக்குத் தேவையான மென்பொருளை செல்போனில் பதிவிறக்கம் ...

எமிலியின் புரியாத ஏக்கம் .

Posted: 23 Aug 2016 01:09 AM PDT

உலகை உலுக்கிய வியட்னாம் யுத்தம், சமீபத்தைய ஈழப் போர் இப்படி பலவற்றில் தங்களை அழித்துக் கொள்ளும் போராட்டக்காரர்கள் அனுதாபிகள் பலர். ஈழத் தமிழர்களுக்காக தன்னை அழித்துக் கொண்ட முத்துக்குமாரைப் போல், வியட்னாம் போரின் கொடுமையை எதிர்த்து தன் மீது மண்எண்ணெய்யை ஊற்றி உயிர் துறந்தவர் நோர்மன். கொள்கை சார்ந்த தன்னழிப்பு என்பதை பண்பாட்டு ரீதியாக அறிந்திராத  அமெரிக்க மனங்களிடையே "Thich Quang Duc"-ன் செயல் மிகப் பெரிய சலனத்தை உண்டு பண்ணியிருந்தது. தன்னையழித்துக் கொள்வது புத்த மதத்தில் மரபான ஒன்று! அரசியல் ...

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்!

Posted: 23 Aug 2016 12:37 AM PDT

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் சில முக்கிய திருத்தங்களை இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அண்மையில்  செய்துள்ளது. இதில்   ஐந்து  முக்கியமான விஷயங்கள் உள்ளன. அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன...?   1. கடனுக்கும் இனி கவரேஜ்! ஒருவர் வாங்கிய கடனுக்கும் கவரேஜ் கிடைக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் அதிக பிரபலமாக வாய்ப்புள்ளது. இந்த பாலிசி குரூப் இன்ஷூரன்ஸ் அடிப்படையில் வழங்கப்படும்.   புதிய விதிமுறையின்படி, ஒரு ஆண்டாக இருந்த பாலிசி காலம் அதிகபட்சமாக ஐந்து ...

வெற்றி ‘முடியும்’ என்பதிலிருந்து வருகிறது…!

Posted: 22 Aug 2016 11:13 PM PDT


-

-

நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்

Posted: 22 Aug 2016 11:07 PM PDT

- அமெரிக்க தேர்தலில் 3 இந்திய வம்சாவளி பெண்கள் சாதனை படைக்க காத்திருக்கின்றனர். அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்க நாடாளு மன்றத்தின் இரு சபைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப் ...

எனது விவசாயி…

Posted: 22 Aug 2016 10:21 PM PDT

விவசாயி… இன்று சுயவிளம்பரத்திற்கு அதிகம் பயன்படுத்தபடும் வார்த்தை…   நாம் உண்ணும் உணவு நாம் தட்டிற்க்கு வருகிறது என்ற திமிரில் இருக்கிறோம்… கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்.. ஒரு அரிசி உருவாக என்ன வேண்டும் என்று… நாற்று நட்டால் மழை கூடாது, பொதி வந்தால் காற்று ஆகாது, பால் கட்டினால் வெயில் கூடாது கதிர் அறுக்கயில் பனியோ மழையோ கூடாது…. ஒவ்வொரு பருவமும் ஒரு போராட்டம்….   போரடினாலும் தளரவில்லை… பருவம் அறிந்தான்… மண் பிரித்தான்... பயிர் விதைத்தான்… நமக்கு உயிர் வளத்தான்.. நாம் என்ன ...

இன்றைய ஹைக்கூ

Posted: 22 Aug 2016 09:31 PM PDT

தலைப்பு : சுமை

தந்தையின் கைப்பையை சுமந்த போதுதான் தெரிந்தது
அவர் சுமந்தது
பணத்தை மட்டுமல்ல என்று

தலைப்பு : மணமும் மரணமும்

ரோஜா வீசுகிறது மணம்
நாளை அதில் ர இணையும்
என்பது தெரியாமல்

கண்டது, கேட்டது,

Posted: 22 Aug 2016 07:16 PM PDT

கண்டது – • (குற்றாலம் கல்லூரி வாசலில் நின்றிருந்த ஓர் இரு சக்கர வாகனத்தில்) எனக்குத் தெரிந்து அவர் நடித்ததே இல்லை. ஆனால் அவர்தான் என் ஹீரோ. I LOVE MY DAD. – ச.ஜான்ரவி, கோவில்பட்டி. – ——————————- • (மயிலாடுதுறையில் ஒரு சரக்கு வாகனத்தின் பெயர்) – மெளனம் – ரா.ராஜதுரை, சீர்காழி. – ———————————- • (சென்னை காசி தியேட்டர் அருகே உள்ள ஓர் உணவகத்தின் பெயர்) – பசி.காம் – மல்லிகா அன்பழகன், சென்னை-78. – ———————————- – • (நெல்லையில் டிராவல்ஸ் வேன் ஒன்றில்) – _ - வாழ்க்கையில் ...

களம் புதிது: சமஉரிமைக்கு அர்த்தம் கொடுத்த சாக்ஷி

Posted: 22 Aug 2016 07:08 PM PDT

- கேள்வி கேட்பதும், விமர்சனம் செய்வதும் மிக எளிது. அதனால்தான் பலரும் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்தியர்கள் பதக்கம் வெல்லவில்லையே என்று பலரும் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். இவர்கள் எல்லாம் செல்ஃபி எடுக்கத்தான் லாயக்கு என்று விமர்சனச் சேற்றை வாரி இறைத்தார்கள். - ஆனால், மல்யுத்தப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கியிருக்கிறார் சாக்‌ஷி மாலிக். இந்த மகத்தான வெற்றியின் மூலம் 2016 ஒலிம்பிக் ...

சென்னை, நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்

Posted: 22 Aug 2016 06:56 PM PDT

சென்னை: சென்னை, நெல்லையிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை – வேளாங்கண்ணி: சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 5ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 6ம் தேதி இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் ...

iஹைபுன்

Posted: 22 Aug 2016 05:48 PM PDT

நொடியில்..!! * மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது. பூமியின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™