Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆகஸ்ட் 24 மின்தடை

Posted: 23 Aug 2016 02:37 PM PDT

குந்தா துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகளின் காரணமாக இத்துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில்  புதன்கிழமை (ஆஹகஸ்ட் 24) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தேசிய கராத்தே போட்டியில் கோத்தகிரி ஆதிவாசி  மாணவர்கள் சாதனை

Posted: 23 Aug 2016 02:37 PM PDT

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 9 துணை வாக்குச் சாவடிகள்: முதன்மை வாக்குச் சாவடிகளாக மாற்றம்: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

Posted: 23 Aug 2016 02:35 PM PDT

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது இருபாலருக்குமாக உருவாக்கப்பட்ட 18 துணை வாக்குச் சாவடிகள் இணைக்கப்பட்டு தற்போது 9 முதன்மை வாக்குச் சாவடி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

குன்னூர் மேரீஸ் பள்ளியில் வண்ணங்களின் திருவிழா

Posted: 23 Aug 2016 02:35 PM PDT

குன்னூர் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வண்ணங்களின் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பட்லூர் சிற்றூராட்சியில் நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி தொடக்கம்

Posted: 23 Aug 2016 02:34 PM PDT

பவானியை அடுத்த பட்லூர் சிற்றூராட்சியில் ரூ. 8.60 லட்சத்தில் இரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

குன்னூரில் பரவலாக மழை

Posted: 23 Aug 2016 02:33 PM PDT

குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

Posted: 23 Aug 2016 02:32 PM PDT

கூடலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சுற்றித் திரியும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கத்தில் குடிநீர் குறைந்து வருவதால் மழை வேண்டி கிடா வெட்டு

Posted: 23 Aug 2016 02:32 PM PDT

உதகை நகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீர்த்தேக்கமான பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கத்தில் தொடர்ந்து தண்ணீர் குறைந்து வருவதோடு, தென்மேற்குப் பருவமழையும் போதிய அளவில் பெய்யாததால், மழை வேண்டி கிடா வெட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அனைத்து வங்கிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுரை

Posted: 23 Aug 2016 02:31 PM PDT

உதகை நகரிலுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நகைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என காவல் துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதரவற்றோர் இல்லப் பெண்களுக்கான பயிற்சிப் பட்டறை

Posted: 23 Aug 2016 02:31 PM PDT

கோத்தகிரி டான்பாஸ்கோ வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில், ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் பருவமடைந்த இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

கூட்டுறவுத் தணிக்கை அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 23 Aug 2016 02:30 PM PDT

கூட்டுறவுத் தணிக்கை அலுவலர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோட்டில் 27-இல் மாவட்ட மாதாந்திர விளையாட்டுப் போட்டி

Posted: 23 Aug 2016 02:26 PM PDT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில், மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொழில்முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை

Posted: 23 Aug 2016 02:26 PM PDT

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர்களுக்கான பயிற்சிப் பட்டறை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழ்பவானி பாசன நீர் ஒதுக்கீட்டில் பாதகம் செய்தால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: நல்லசாமி பேட்டி

Posted: 23 Aug 2016 02:25 PM PDT

கீழ்பவானி பாசன நீர் ஒதுக்கீட்டில் பாதகமாக செயல்பட்டால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Aug 2016 02:24 PM PDT

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்: 897 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Posted: 23 Aug 2016 02:23 PM PDT

பள்ளி கல்வித் துறை சார்பில் ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி உதவியுடன் ஈரோடு மேற்கு குறுமைய மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி  நீர் நிர்வாகம் செய்யக் கோரி கீழ்பவானி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Aug 2016 02:23 PM PDT

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் செய்யக் கோரி கீழ்பவானி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

செஸ் போட்டி: சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 23 Aug 2016 02:22 PM PDT

தென் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், தூத்துக்குடி சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

கோவில்பட்டி பள்ளியில் நாணயக் கண்காட்சி

Posted: 23 Aug 2016 02:22 PM PDT

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் நாணயக் கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

Posted: 23 Aug 2016 02:21 PM PDT

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில்,  தூத்துக்குடியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

உடன்குடி வட்டார உலமாக்கள் கூட்டம்

Posted: 23 Aug 2016 02:21 PM PDT

உடன்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 23 Aug 2016 02:21 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆராதனை

Posted: 23 Aug 2016 02:20 PM PDT

கோவில்பட்டியில் மந்த்ராலய மஹான் ஸற்குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா இரு நாள்கள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டி: செயின்ட் தாமஸ், ஹோலி கிராஸ் பள்ளிகள் முதலிடம்

Posted: 23 Aug 2016 02:20 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் செயின்ட் தாமஸ் பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணியும் முதலிடத்தைப் பிடித்தன.

ரயில்வே மேம்பாலங்களில் இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

Posted: 23 Aug 2016 02:19 PM PDT

தூத்துக்குடியில் உள்ள ரயில்வே மேம்பாலங்களில் இணைப்புச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கல் குவாரி உரிமங்களை கால தாமதமின்றி புதுப்பித்து வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 23 Aug 2016 02:19 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல் குவாரி உரிமங்களை காலதாமதமின்றி புதுப்பித்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தூத்துக்குடி மாவட்ட கல், சரள் குவாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உரம் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Posted: 23 Aug 2016 02:18 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 45 உரம் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழுவினர் அண்மையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கால்பந்துப் போட்டி: நாகர்கோவில் அணி வெற்றி

Posted: 23 Aug 2016 02:17 PM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையை கைப்பற்றியது.

ரெட்டார்குளம் கோயிலில் 504 திருவிளக்கு பூஜை

Posted: 23 Aug 2016 02:16 PM PDT

பேய்க்குளம் அருகே ரெட்டார்குளம் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு, 504 திருவிளக்கு பூஜை வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தலைவன்வடலியில்  குடிசை தீக்கிரை

Posted: 23 Aug 2016 02:16 PM PDT

ஆறுமுகனேரி அருகே தலைவன்வடலி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது.

சிறுவனிடம் தகாத முறையில் நடக்க முயன்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை

Posted: 23 Aug 2016 02:15 PM PDT

விளாத்திகுளம் அருகே சிறுவனிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதல்: 4 பேர் கைது

Posted: 23 Aug 2016 02:15 PM PDT

சாத்தான்குளம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் கபடி அணி வீரர்களுக்கான தேர்வு: ஆக. 27 இல் நடக்கிறது

Posted: 23 Aug 2016 02:15 PM PDT

மாநில அளவிலான கபடி போட்டியில் பங்குபெறும், தூத்துக்குடி மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் கபடி வீரர்களுக்கான தேர்வு ஆக. 27ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை

Posted: 23 Aug 2016 02:14 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் கார்கள் மோதல்: இருவர் காயம்

Posted: 23 Aug 2016 02:13 PM PDT

கோவில்பட்டி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை கார்கள் மோதியதில் கார் ஓட்டுநர்கள் இருவர் காயமடைந்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆலோசனை

Posted: 23 Aug 2016 02:13 PM PDT

குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வல முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

கலந்தாய்வில் காலியிடங்கள் மறைப்பு: ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 23 Aug 2016 02:12 PM PDT

நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில், காலியிடங்கள் மறைக்கப்படுவதாக புகார் தெரிவித்து ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவனந்தபுரம்- வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் இயக்க வலியுறுத்தல்

Posted: 23 Aug 2016 02:12 PM PDT

திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு நிரந்தரமாக தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 23 Aug 2016 02:11 PM PDT

பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனைக் கூட்டம்

Posted: 23 Aug 2016 02:11 PM PDT

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், குமரி மாவட்டம்,  இறச்சகுளத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

வலம்புரிவிளை உயிரி எரிவாயு கூடத்தில் எம்.பி. ஆய்வு

Posted: 23 Aug 2016 02:10 PM PDT

நாகர்கோவில் நகராட்சிக்குள்பட்ட வலம்புரிவிளையில், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி நிதியின்கீழ், ரூ. 90 லட்சம் மதிப்பில் உயிரி எரிவாயுக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அ.விஜயகுமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கிராமப்புற வளர்ச்சித் திட்ட விளக்க கூட்டம்

Posted: 23 Aug 2016 02:09 PM PDT

கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (சான்ஸத் ஆதர்ஷ் கிராம யோஜனா) குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான விளக்கக் கூட்டம் நாகர்கோவிலில் நைடைபெற்றது.

களியக்காவிளை பேரூராட்சிக் கூட்டம்

Posted: 23 Aug 2016 02:09 PM PDT

களியக்காவிளை பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குமரியில் 8 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு

Posted: 23 Aug 2016 02:08 PM PDT

குமரி அறிவியல் பேரவை சார்பில் 8 ஆசிரியர்கள் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 23 Aug 2016 02:08 PM PDT

கொல்லங்கோடு அருகே சாலையோரம் திங்கள்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

"மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி தேவை'

Posted: 23 Aug 2016 02:07 PM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில கௌரவத் தலைவர் பால கிருஷ்ணன், கோரிக்கை மனு அனுப்பி யுள்ளார்.

களியக்காவிளை அருகே ஊராட்சி உறுப்பினர் மீது தாக்குதல்: இளைஞர் கைது

Posted: 23 Aug 2016 02:07 PM PDT

களியக்காவிளை அருகே ஊராட்சி உறுப்பினரை தாக்கியதாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரப் பேரணி

Posted: 23 Aug 2016 02:06 PM PDT

கருங்கல் அருகே உள்ள கோடிமுனை மீனவ கிராமத்தில் டெங்கு மற்றும் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

"மக்களுக்கு நேரில் சட்ட உதவிகள் வழங்குவது நீதிபதிகளின் கடமை'

Posted: 23 Aug 2016 02:06 PM PDT

தீர்ப்புகள் கூறுவது மட்டுல்ல, மக்களிடம் நேரில் சென்று அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதும் நீதிபதிகளின் கடமை என மாவட்ட கூடுதல் நீதிபதியும், மாவட்ட  மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) நிரந்தர தலைவருமான ஜான் ஆர்.டி. சந்தோஷம் தெரிவித்தார்.

ஞாலம் ஊராட்சியில் இன்று மனுநீதி முகாம்

Posted: 23 Aug 2016 02:05 PM PDT

ஞாலம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் புதன்கிழமை (ஆக.24) நடைபெறுகிறது.

இடைநீக்க விவகாரம்: தேவைப்பட்டால் ஆளுநரைச் சந்திப்போம்

Posted: 23 Aug 2016 01:30 PM PDT

திமுக உறுப்பினர்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து முறையிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கருணாநிதிக்கு விடுக்கும் சவால் அர்த்தமற்றது

Posted: 23 Aug 2016 01:29 PM PDT

சட்டப்பேரவைக்கு வந்து அமரும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்குப் போதுமான இருக்கை வசதி செய்து கொடுக்காமல், முதல்வர் ஜெயலலிதா சவால் விடுவதில் அர்த்தமில்லை என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.

நத்தம் அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு

Posted: 23 Aug 2016 01:28 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரி கவிழ்ந்ததில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

திரைப்பட புகைப்படக் கலைஞர் "மோனாலிசா' ரமாமணி மறைவு

Posted: 23 Aug 2016 01:27 PM PDT

பிரபல திரைப்பட புகைப்படக் கலைஞர் "மோனாலிசா' ரமாமணி என்றழைக்கப்படும் ரமாமணி (81) சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 56 உயர்வு

Posted: 23 Aug 2016 01:26 PM PDT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.23,872-க்கு விற்பனையானது.

துணை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வில் 1,259 இடங்கள் நிரம்பின

Posted: 23 Aug 2016 01:25 PM PDT

துணை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் கலந்தாய்வின் முடிவில், 709 இடங்கள் நிரம்பின. இதுவரை 1,259 இடங்கள் நிரம்பியுள்ளன.

திமுக எம்எல்ஏக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 23 Aug 2016 01:25 PM PDT

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினர் ஜனநாயகக் கடைமையை ஆற்றும் வகையில், திமுக எம்எல்ஏக்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

"பசுமை தமிழகம்' திட்டத்தை தொடங்கினார் விஜயகாந்த்

Posted: 23 Aug 2016 01:24 PM PDT

தனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பசுமை தமிழகம் எனும் திட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடக்கி வைத்தார். இதையடுத்து, அவர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்.

தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை நிர்வாகமே நிரப்ப அனுமதி: ராமதாஸ் கண்டனம்

Posted: 23 Aug 2016 01:23 PM PDT

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அந்தந்த கல்லூரி நிர்வாகமே நிரப்ப அனுமதி அளித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கைது

Posted: 23 Aug 2016 01:22 PM PDT

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டியில் ஓடும் காரில் திடீர் தீ: குடும்பத்துடன் நடிகர் உயிர் தப்பினார்

Posted: 23 Aug 2016 01:21 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை ஓடும் காரில் திடீரென தீப் பற்றியது. காரில் இருந்த நடிகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக வெளியேறியதால் அவர்கள் உயிர் தப்பினர்.

ஏற்கெனவே சொன்னேனே சார்..!

Posted: 23 Aug 2016 01:20 PM PDT

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: 3 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி

Posted: 23 Aug 2016 12:54 PM PDT

மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில், வட மாநில இளைஞர்கள் 3 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்ஜாமீன் மனுவில் போலி கையெழுத்து புகார்: சசிகலா புஷ்பா குடும்பத்தினர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Aug 2016 12:53 PM PDT

வெளிநாட்டில் இருந்ததாகக் கூறப்படும் தேதியில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

எஸ்.ஆர்.நாதன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

Posted: 23 Aug 2016 12:53 PM PDT

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணை: டி.எஸ்.பி.யைத் தாக்கிய இளைஞர் கைது

Posted: 23 Aug 2016 12:52 PM PDT

கொல்லிமலையில் சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தியபோது டி.எஸ்.பி.யைத் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

இளைஞர் காங்கிரஸார் திடீர் போர்க்கொடி: சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

Posted: 23 Aug 2016 12:51 PM PDT

காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸார் தனி அறை கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமூர்த்தி பவன் செவ்வாய்க்கிழமை பரபரப்புடன் காணப்பட்டது.

இளைஞர் காங்கிரஸார் திடீர் போர்க்கொடி: சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

Posted: 23 Aug 2016 12:51 PM PDT

காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸார் தனி அறை கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமூர்த்தி பவன் செவ்வாய்க்கிழமை பரபரப்புடன் காணப்பட்டது.

அமைச்சரின் வெற்றியை எதிர்த்து வழக்கு

Posted: 23 Aug 2016 12:50 PM PDT

அமைச்சர் சரோஜா வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறவர் சமூக குடும்பத்தினர் சித்ரவதை: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

Posted: 23 Aug 2016 12:50 PM PDT

"குறவர்' சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினரை திருட்டு வழக்கில் கைது செய்து தடுப்புக் காவலில் சித்ரவதைக்கு உள்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் மனு: விசாரணை ஒத்திவைப்பு

Posted: 23 Aug 2016 12:49 PM PDT

தன் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நேர்மையான தேர்வு!

Posted: 23 Aug 2016 12:48 PM PDT

இத்தனை ஆண்டுகளாகியும் நமது நிர்வாக அமைப்பு சரியாக இயங்குவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்த சர்ச்சை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜன், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாற்றப்பட்டிருந்து

நீதித்துறையில் மாற்றம் தேவை!

Posted: 23 Aug 2016 12:46 PM PDT

வழக்குரைஞர் தொழிலை "நோபல் புரொபஷன்' என்று ஆங்கிலத்தில் சொல்வதோடு, வழக்குரைஞர்களை "லேனர்ட் ஃபிரெண்ட்' என்றும் அழைப்பதுண்டு. இப்படியான கீர்த்தி வாய்ந்த தொழிலுக்கு இன்றைக்கு சிக்கல். துலாக்கோல் நிலையில் இயங்க வேண்டிய நீதிமன்ற வளாகத்தில் வேலை நிறுத்தங்கள். மக்களுக்கு நீதி வழங்கும் நீதிமன்றங்களே இயங்கவில்லை என்றால், ஜனநாயகத்தில்தான் கோளாறு.

பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

Posted: 23 Aug 2016 12:43 PM PDT

தேனி அருகே வடபுதுப்பட்டியில், குடும்பப் பிரச்னையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், செவ்வாய்க்கிழமை பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஆனந்தி விசாரணை நடத்தினார்.

இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து: விவசாயி சாவு

Posted: 23 Aug 2016 12:43 PM PDT

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி, மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இறந்தார்.

நத்தம் அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு

Posted: 23 Aug 2016 12:42 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரி கவிழ்ந்ததில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

பருவமழை முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

Posted: 23 Aug 2016 12:42 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளிலுள்ள  குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை

Posted: 23 Aug 2016 12:41 PM PDT

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக் குடியிருப்புப் பகுதிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 23 Aug 2016 12:41 PM PDT

கொடைக்கானலில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.230 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 23 Aug 2016 12:40 PM PDT

பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.230 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஆக.26 இல் தொடக்கம்

Posted: 23 Aug 2016 12:40 PM PDT

திண்டுக்கல் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள், ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்குகின்றன.

தேசிய கார் தயாரிப்பு போட்டி: இறுதிப் போட்டிக்கு திண்டுக்கல் மாணவர்கள் தேர்வு

Posted: 23 Aug 2016 12:40 PM PDT

தேசிய அளவிலான கார் தயாரிப்பு போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு, திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

சட்டப் பேரவை புறக்கணிப்பு விவகாரம்: காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே குழப்பம்

Posted: 23 Aug 2016 12:40 PM PDT

சட்டப் பேரவை கூட்டத்தைப் புறக்கணிப்பது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை குழப்பம் ஏற்பட்டது.

பணி மாறுதலில் தேனி ஆசிரியர் செல்ல எதிர்ப்பு: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

Posted: 23 Aug 2016 12:39 PM PDT

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கத்தை அடுத்த பரமனந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பணி மாறுதலில் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சக்கர நாற்காலிகள்

Posted: 23 Aug 2016 12:39 PM PDT

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் சென்று வர வசதியாக சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.

கடமலைக்குண்டு பழங்குடியின பெண்கள் பாலியல் விவகாரம்: தலைமைச் செயலருக்கு சம்மன்

Posted: 23 Aug 2016 12:38 PM PDT

கம்பம் அருகே பழங்குடியின பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக, ஆகஸ்ட் 31 இல் விசாரணைக்கு ஆஜராக அரசு தலைமைச் செயலர், வனத்துறை முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கு தேசிய பழங்குடியினர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

மலிவான அரசியல் வேண்டாம்: எம்எல்ஏவுக்கு பேரவைத் தலைவர் கண்டனம்

Posted: 23 Aug 2016 12:38 PM PDT

மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமாருக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் கண்டனம் தெரிவித்தார்.

இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது

Posted: 23 Aug 2016 12:38 PM PDT

திண்டுக்கல் என்ஜிஓ காலனி ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமாரி. இவரது மகன் கார்த்திக்குமார் (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார்.

பெரியகுளம் அருகே வீடு புகுந்து நகை, பணத்துடன் பீரோ திருட்டு

Posted: 23 Aug 2016 12:37 PM PDT

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காட்ரோடு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசிப்பவர் பொன்னையாத் தேவர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள், திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் வைத்திருந்த சிறிய பீரோ ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

பேரவையில் இன்று...

Posted: 23 Aug 2016 12:37 PM PDT

சட்டப் பேரவை புதன்கிழமை (ஆக. 24) கூடியதும், கேள்வி நேரம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, சுற்றுலா, கதர், கிராமத் தொழில்கள்-கைவினைப் பொருள்கள் ஆகிய துறைகள் தொடர்பாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது.

ஆவடி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும்

Posted: 23 Aug 2016 12:37 PM PDT

ஆவடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கடமலைக்குண்டு அருகே குடிநீர் கோரி இரு வேறு இடங்களில் சாலை மறியல்

Posted: 23 Aug 2016 12:37 PM PDT

தேனிமாவட்டம், ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அருகே செவ்வாய்க்கிழமை இரு வேறு இடங்களில் குடிநீர் கோரி சாலை மறியல் நடைபெற்றது.

கல்குவாரியில் வெடி வைப்பதால் குடியிருப்புகள் பாதிப்பதாக பொதுமக்கள் புகார்

Posted: 23 Aug 2016 12:36 PM PDT

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைப்பதால், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

"நீட்' தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரும் மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

Posted: 23 Aug 2016 12:36 PM PDT

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 23 Aug 2016 12:36 PM PDT

பழனி அடிவாரம் கிரிவீதியில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

காஷ்மீர், பலூசிஸ்தான் விவகாரம்: அமெரிக்கா கருத்து

Posted: 23 Aug 2016 12:35 PM PDT

ஜம்மு - காஷ்மீர், பலூசிஸ்தான் விவகாரங்களுக்குத் தீர்வு காண்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கைகளில்தான் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

Posted: 23 Aug 2016 12:35 PM PDT

பழனி அரசு அருங்காட்சியகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பழங்கால நாணயங்கள் பற்றிய கண்காட்சியை, பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர்  கண்டு ரசித்தனர்.

ஆண்டு தோறும் குறையும் பத்திரப் பதிவுகள்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

Posted: 23 Aug 2016 12:35 PM PDT

தமிழகத்தில் சொத்து தொடர்பான ஆவணப் பதிவு உள்பட பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன.

திறந்தவெளி கழிப்பறையற்ற ஊராட்சிகள்: பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியம்- ஆட்சியர்

Posted: 23 Aug 2016 12:34 PM PDT

திறந்தவெளி கழிப்பறையற்ற ஊராட்சிகளை உருவாக்கும் திட்டமானது, பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியமாகும் என, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

10 திமுக எம்எல்ஏக்கள் 29-ஆம் தேதி வரை பேரவையை புறக்கணிக்க முடிவு

Posted: 23 Aug 2016 12:34 PM PDT

திமுகவின் இடைநீக்கம் செய்யப்படாத 10 எம்எல்ஏக்கள் பேரவைக் கூட்டத்தை ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™