Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வெள்ளத்தில் வாரணாசி: கட்டடங்களில் உடல்கள் தகனம்

Posted: 23 Aug 2016 09:33 AM PDT

வாரணாசி:உ.பி.,யில், புனித நகரங்களில் ஒன்றான, வாரணாசியில் உள்ள கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்,அதன் கரையில் பிணங்களை தகனம் செய்ய முடியாமல், அருகில் உள்ள கட்டடங்களில் தகனம் நடக்கிறது.

வட மாநிலங்களில், பருவ மழை தீவிர மடைந்து உள்ளதால், பல நகரங்கள் வெள்ளத் தில் மிதக்கின்றன. சமாஜ்வாதியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆட்சி நடக்கும் உ.பி.,யில், வாரணாசி நகரில் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹிந்துக்களின் புனித நகரான இங்கு இறந்தோர் உடல்கள், கங்கை நதிக் கரையோரம் தகனம் செய்யப்படுவது வழக்கம். வெள்ளம் கரை புரண்டு ...

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு சிறையா? சமூக ஆர்வலர்கள் கடும் கொந்தளிப்பு

Posted: 23 Aug 2016 09:53 AM PDT

புதுடில்லி:'லஞ்சம் கொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் மத்திய அரசின் திட்டம், ஊழல்வாதிகளை காப்பாற்றும் முயற்சியாக உள்ளது; லஞ்சம் தர மறுப்பவர்களுக்கு எதிராக இது தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது' என, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களையும் கொண்டு வருவது உட்பட, பல்வேறு திருத்தங்களுக்கான மசோதா, ராஜ்யசபா தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.8 ஆண்டு சிறை: அந்தக் குழு சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையில், 'லஞ்சம் கொடுப்பவருக்கும், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை ...

உள்ளாட்சி அமைப்பு வினியோகிக்கும் குடிநீருக்கும் தரக் கட்டுப்பாடு! :உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மும்முரம்

Posted: 23 Aug 2016 09:58 AM PDT

புதுடில்லி:நாடு முழுவதும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வாரியங்கள் மூலமாக, குழாய் மூலமாகவும், மற்ற வகை களிலும் வினியோகிக்கப்படும் குடி நீருக்கும், தரக் கட்டுப் பாட்டு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது; எப்.எஸ். எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாது காப்பு மற்றும் தர ஆணையம், இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக நகரப் பகுதிகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகிக்கப் படுகிறது; இதுதவிர, லாரிகள் மூலமாகவும், மேல்நிலை தொட்டிகள் உட்பட பல்வேறு வகைகளில் தண்ணீர் வினியோகிக்கப் படுகிறது.இவ்வாறு ...

'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு வந்து விட்டது 'செக்!':பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு

Posted: 23 Aug 2016 10:20 AM PDT

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி செய்யாமல், 'ஓபி' அடிப்பதை தடுக்கவும், வகுப்புகளுக்கு மட்டம் போடும் மாணவர்களை திருத்தவும், பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது; இதற்கான அறிவிப்பை, சட்டசபை யில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள், மாநில, 'ரேங்க்' பெற வில்லை. ஆசிரியர்களின் கவனக்குறைவு; முறையாக பாடம் நடத்தாமை; 'டியூஷன்' நடத்துதல்; அதிகாரிகள் பெயரைச் சொல்லி பள்ளிக்கு வராமல், 'ஓபி' அடித்தல்; வருகைப் பதிவேட்டில் ...

கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வளர்ச்சி முழுமையாகாது: மோடி

Posted: 23 Aug 2016 10:26 AM PDT

புதுடில்லி:'உள்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சி இல்லாமல், நாட்டின் வளர்ச்சி முழுமையடையாது; வளர்ச்சியில் புதிய வரலாறு படைக்கும் வகையில், மிகவும் வேகமான, பரவலான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்குடன், அரசு பயணித்து வருகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:அடிப்படை உள்கட்டமைப்பு ...

செப்., 25க்குள் வந்தால் இலவச விமான பயணம்; சவுதி தொழிலாளர்களுக்கு மத்திய அரசு சலுகை

Posted: 23 Aug 2016 10:29 AM PDT

புதுடில்லி:''சவுதி அரேபியாவில், வேலை யின்றி தவிக்கும் இந்தியர்கள், செப்டம்பர், 25க்குள் நாடு திரும்பினால், இலவசமாக, விமானத்தில் அழைத்து வரப்படுவர்,'' என, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், எண்ணெய் வளமிக்க நாடான சவுதி அரேபியாவில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கன நடவடிக்கைகளை, அந்த நாட்டு அரசு முடுக்கி விட்டு உள்ளது. நிலைமை மோசம்:
இத்தகைய அதிரடி மாற்றங்க ளால், ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்து ...

கருணாநிதிக்கு தனி இருக்கை வசதியை யாரும் கேட்கவில்லை:அதிகாரி அதிரடி

Posted: 23 Aug 2016 10:37 AM PDT

'தமிழக சட்டசபையில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, சிறப்பு இருக்கை ஒதுக்கும்படி அக்கட்சி தரப்பில் யாரும் கேட்கவே இல்லை' என, சட்டசபை சார்பு செயலர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், சக்கர நாற்காலியில் வந்து அமரும் வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு தனி இருக்கை ஏற்படுத்தி தர வேண்டும் என, தி.மு.க., தரப்பில் கேட்கப்பட்ட தாகவும், அதற்கு, அ.தி.மு.க., அரசு மறுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், 'அப்படி யாரும் கேட்கவில்லை' என, சட்டசபை சார்பு செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் மகாலிங்கம் என்பவர், தகவல் அறியும் உரிமை ...

'கோர்ட்டுக்கு வாங்க:' பெண் எம்.பி.,க்கு உத்தரவு

Posted: 23 Aug 2016 10:45 AM PDT

மதுரை:பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத் தில் பதிவான வழக்கில், போலியாக முன் ஜாமின் மனு தாக்கல் செய்ததாக, அரசு தரப்பு சந்தேகம் எழுப்பியதால், 'சசிகலா புஷ்பாஎம்.பி., மற்றும் அவரது கணவர், மகன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராஜ்யசபா தி.மு.க., - -எம்.பி., சிவாவுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, சசிகலா புஷ்பா, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார். இதன்பின், துாத்துக்குடியை சேர்ந்த பானுமதி என்பவர், 'சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்தேன். அவரது கணவர், மகன் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். சசிகலா புஷ்பாவிடம் கூறியபோது, ...

வாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு

Posted: 23 Aug 2016 10:49 AM PDT

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.* மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்கள், அரசு பள்ளி கட்டடங்கள், அரசு உதவிபெறும் மற்றும் பிற பள்ளி கட்ட டங்கள், அரசு கட்டடங்களில், வாக்குச் சாவடி களை அமைக்க வேண்டும். சட்டசபை தேர்த ...

ஆபத்தான தெரு நாய்களை கொல்ல கேரள அரசு திட்டம்

Posted: 23 Aug 2016 10:59 AM PDT

திருவனந்தபுரம்: கேரளாவில், தெருவில் நடந்து செல்வோரை நாய்கள் கடித்துக் குதறி காயப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, ஆபத்தான நாய்களை கொல்ல, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநில தலைநகர் திருவனந்தபுரம் அருகே, சமீபத்தில், 65 வயது மூதாட்டியை, தெரு நாய்கள் கடித்துக் குதறி கொன்றன. மாநிலத்தின் பல பகுதிகளில், தெரு நாய்கள் அதிகமாக திரிவதால், பொதுமக்கள், சாலையில் நடக்க அஞ்சும் நிலை உள்ளது. இந்நிலையில், ஆபத்தான தெரு நாய்களை பிடித்து, ...

'தலாக்'கை எதிர்க்கும் வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது

Posted: 23 Aug 2016 12:51 PM PDT

புதுடில்லி : மூன்று முறை, 'தலாக்' என கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்துள்ள வழக்கை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.
மூன்று முறை, 'தலாக்' எனக் கூறி, விவாகரத்து பெற்றுக் கொள்ளும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஷ்ரத் ...

25 வது பிறந்த நாள் கொண்டாடிய இன்டர்நெட்

Posted: 23 Aug 2016 01:04 PM PDT

புதுடில்லி : இன்டர்நெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து நேற்றுடன்(ஆக., 23) 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே நம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் உலகில் உள்ள அனைத்து நாட்டினரும் இன்டர்நெட் வழியாக இணைக்கப்பட்டுவிட்டார்கள். சமீபத்திய புள்ளி விவரம் ஒன்றின்படி, உலகில் உள்ள சுமார் 300 கோடி மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் என சொல்லப்படுகிறது.
ஆண்டிப்பட்டியில் அமர்ந்து கொண்டு அமெரிக்காவில் இருக்கும் நபருடன் ஸ்கைப்பில் முகம் பார்த்து ...

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இந்தியா-பாக்., கையில்: அமெரிக்கா

Posted: 23 Aug 2016 02:07 PM PDT

புதுடில்லி : காஷ்மீர் பிரச்னை மற்றும் பலூசிஸ்தான் விவகாரங்களுக்குத் தீர்வு காண்பது இந்தியா மற்றும் பாக்., கைகளில்தான் உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா, அளித்த பேட்டி ஒன்றில் காஷ்மீர் மற்றும் பலூசிஸ்தான் விவகாரங்கள் தொடர்பாக தெரிவித்திருப்பதாவது: இந்தியாவைப் போலவே அமெரிக்காவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. உலகின் எங்கு பயங்கரவாத சம்பவங்கள் நடந்தாலும் அதனை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ...

வடகொரியா மீண்டும் அட்டூழியம்: நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணை சோதனை நடத்தியது

Posted: 23 Aug 2016 03:45 PM PDT

சீயோல்: கடலுக்கு அடியில் நீர்மூழ்கிகப்பல் மூலம் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை மற்றும் அணு சோதனையை நடத்தி வருகிறது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தும் பொருளாதார தடை விதித்தும் வருகிறது.இந்நிலையில் தென்கொரிய எல்லையில் சின்போ என்ற வடக்கு கடற்கரை பகுதியில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியதாக வடகொரியா ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. அப்போது போர்க்கப்பலில் இருந்த படி அந்நாட்டு அதிபர் கிம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™