Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கவிஞர் நா.முத்துக்குமார் – நவீன தமிழ்க்கவிஞன்

Posted: 14 Aug 2016 10:36 AM PDT

அண்மைக்காலமாக பாடல் துறையிலும் கவிதைத் துறையிலும் தனன்கென முத்திரை பதிக்கும் ஒரு அழகான கவிஞனைப்பற்றி நான் படித்தவைகளை இங்கு பகிர்கிறேன்.. தீயோடு தோன்றுக! – 1975 ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ...

பூண்டி ஏரி !

Posted: 14 Aug 2016 09:51 AM PDT

பூண்டி ஏரி ! தீரர் சத்திய மூர்த்தியின் முயற்சியால் (அப்போது அவர் சென்னை மேயர்) , கொற்றலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு,  1944இலிருந்து செயற்பாட்டுக்கு  வந்தது ! இதன் தற்போதைய (14-8-2016) காட்சிகள் ! -

புழல் ஏரி !

Posted: 14 Aug 2016 09:44 AM PDT

புழல் ஏரி ! புழல் ஏரி , செங்குன்றம் ஏரி (Red Hills  Lake) என்றும் அறியப்படும் ! இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது . சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகளில் இது குறிப்பிடத்தக்கது ! இதன் இன்றைய (14-08-2016) பதிவுகள் ! -

கண்வ மகரிஷி முத்தி அடைந்த இடம் !

Posted: 14 Aug 2016 09:01 AM PDT

கண்வ மகரிஷி  முத்தி அடைந்த இடம் !

விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்த சகுந்தலையை வளர்த்தவர் கண்வ மகரிஷி !

இவர் முத்தி அடைந்த தலம் என்று ஞாயிறு (திருவள்ளூர் மா.) என்ற  சூரியன் தலத்தைக்  கூறுகிறார்கள் ! -




முக்கி முக்கி மூவாயிரம் !

Posted: 14 Aug 2016 08:12 AM PDT


ஈன்றாள் பெறுகின்ற இன்பத்தை யான்பெற்றேன்
மூன்றா யிரம்பதிவால் இன்றிங்கு - சான்றோரே !
கற்கண்டு செந்தமிழில் கன்னல் தமிழ்மொழியில்
சொற்கொண்டு வாழ்த்திடுவீர் நன்று .



ஃபேஸ்புக் பதிவு எதிரொலி: துணை கலெக்டர் - விஜய் சந்திப்பு

Posted: 14 Aug 2016 07:27 AM PDT

- பாலக்காடு துணை கலெக்டரான உமேஷ் கேசவன் உடன் விஜய் துணை கலெக்டரின் ஃபேஸ்புக் பதிவால் நெகிழ்ச்சி அடைந்து அவரை அழைத்து கிராமத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார் விஜய். சில தினங்களுக்கு முன்பு கேரளா பாலக்காட்டில் துணை கலெக்டரான உமேஷ் கேசவன் தனது ஃபேஸ்புக் பதிவில் "பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. உங்கள் இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா எனக் கேட்டால் ... இந்த மலையைச் சுற்றியுள்ள ...

எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விற்க முடிவு: தர்ம காரியங்களுக்கு நிதி திரட்ட நடவடிக்கை

Posted: 14 Aug 2016 06:25 AM PDT

-- மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி | கோப்புப் படம் - எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அறக்கட்டளையின் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித் துள்ளார். இறப்பதற்கு முன்பே, தனக்குப் பிறகு தனது சொத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட தனது சுவீகார புதல்வர் முத்தையாவுக்கு செல்லக் கூடாது என உயில் எழுதி வைத் தார் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார். தனக்குப் பிறகு தனது ...

சுதந்திர தின கொண்டாட்ட வீடியோவில் குளறுபடி: தேசியக் கொடியுடன் பறந்தது பாக். விமானம் - ட்விட்டரில் இருந்து நீக்கியது மத்திய அரசு

Posted: 14 Aug 2016 06:15 AM PDT

- மூவர்ண கொடியுடன் பாகிஸ்தானின் ஜேஎப்-17 ரக போர் விமானம். -------------------------------------- வரும் 15-ம் தேதி இந்தியா 70-வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு நிமிட அனிமேஷன் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது. அதன் தொடக்கத்தில், போர் விமானங்கள் பறப்பது போன்றும் சில வினாடிகளில் மூவர்ண கொடி விரிந்து அழகாக பறப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றன. ஆனால், வீடியோவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள போர் விமானங்கள் ...

மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை

Posted: 14 Aug 2016 06:12 AM PDT

- - திருச்செங்கோடு அருகே புதுப் பாளையம் கிராமத்தில் ராஜாஜி யால் தொடங்கப்பட்ட காந்தி ஆசிரமத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.கே.காளியண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு அருகே உள்ள புதுப் பாளையம் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி ராஜாஜியால் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது. கிராம சுயராஜ் யத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட காந்தி ஆசிர மத்தை பெரியார் திறந்து வைத் ...

அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு

Posted: 14 Aug 2016 06:06 AM PDT

அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனிமேல் தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1924-ம் ஆண்டில் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு ...

தரையெல்லாம் நட்சத்திரங்கள்…!

Posted: 14 Aug 2016 04:15 AM PDT

- – காற்று பறித்து போட்டது தரையெல்லாம் நட்சத்திரங்கள் வேப்பம் பூக்கள்! – ———————————- பரட்டைத் தலையுடன் இலந்தை மரம் முடி வெட்டுகின்றன ஆடுகள்! – ——————————– பிரபலமானவர்களின் வீடு வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள் எதுவும் ஓடவில்லை! – ——————————– – காலியான தைல புட்டி நிரம்பியிருக்கிறது வாசனையால்! – ——————————- – யாரும் கவனிக்காததை உணர்ந்த சிறுவன் அழுகையை நிறுத்துகிறான்! – ——————————— – இறந்த பாட்டியின் மருந்து புட்டியில் மண்ணெண்ணெய் விளக்கு ஞாபகங்கள் எரிகின்றன! – ——————————– குழந்தைகள் ...

வறண்டு போனது நதி!

Posted: 14 Aug 2016 04:14 AM PDT

- பறவைகள் முகம் பார்க்க கண்ணாடியின்று திரும்பின வறண்டு போனது நதி! – —————————– – ஆயிரத்து சொச்ச அசைவுகளுக்குப் பிறகு அடகுக் கடையில் முடங்கி விட்டது பாட்டியின் பாம்படம். – ———————————- – உழுது முடித்த வயல். அங்கங்கே துடித்துக் கொண்டிருக்கின்றன உடல் அறுந்த மண்புழுக்கள்! – ———————————- – கடலுக்குள் தொடங்கி குடலுக்குள் முடித்தது வாழ்க்கையை மீன்! – ——————————

4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது

Posted: 14 Aug 2016 04:08 AM PDT

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையின்போது இறப்பதற்கு முன்னர், பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஹவில்தார் ஹங்பன் தாதா என்பவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஷம்சாபாரி பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி ஹவில்தார் ஹங்பன் தாதா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது அவருக்கு ...

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Posted: 14 Aug 2016 03:05 AM PDT

– - Pandit Shiv Kumar Sharma playing on the சண்டூர் ------------------------------------------------------------------ - பண்டிட் சிவக்குமார் சர்மா சந்தூர் வாத்தியக் கலைஞர் – கிராம்பு என்பது அந்தச் செடியின் விரியாத மொட்டுப்பகுதி – அமெரிக்காவின் தேசிய விளையாட்டு பேஸ் பால் – இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியபட்டா – கர்ணனின் பெற்றோர் குந்தி தேவி, சூரிய பகவான் – ——————————————- தொகுத்தவர்: பிரபாவதி கிருஷ்ணமூர்த்தி

கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்!

Posted: 14 Aug 2016 02:46 AM PDT

- - கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை ஷாக்லா, ஹைதராபாத் பல்கலையில் 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' படித்தவர். - இவருக்கும் ஆனீஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. ஷாக்லா, தனது வருங்கால கணவரிடம், மகராக தங்க நகையோ பணமோ கேட்கவில்லை. - மாறாக 50 புத்தகங்களை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். 'இஸ்லாமிய பெண்ணிய இலக்கியம், இலக்கிய புத்தகங்கள், அறிவியல் மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்கள் தேவை' என அனீஷிடம், லிஸ்டையும் எழுதியும் கொடுத்து விட்டார். - மனைவியாகப்போகிறவரின் ...

சினிமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்

Posted: 14 Aug 2016 02:39 AM PDT


-
பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர்
நா.முத்துக்குமார் (41) இன்று சென்னையில் காலமானார்.
மஞ்சள் காமாலை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக
அறிமுகமான முத்துக்குமார்,

இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
-

ஆறறிவு இல்லாதவன்…!! – கடி ஜோக்

Posted: 14 Aug 2016 02:13 AM PDT

- "அம்பது வாழைப்பழம் 100 ரூபாயா? கொஞ்சம் குறைச்சு கொடுப்பா." "டேய்! சாருக்கு 40 வாழைப்பழம் கொடுடா." – ஜி.பத்மினி, – —————————————- – "மாடு கயிற்றுடன் காட்டுக்குள் ஓடுகிறது…, இந்த வாக்கியத்திற்கு இறந்த காலம் என்ன?" – "மாடு கயிற்றால் கட்டப்பட்டிருந்தது" – க.சங்கர், – ————————————— – "வாத்தியார் எதுக்கு உன்னை ஆறறிவு இல்லாதவன்னு திட்டுறார்…?" – "தமிழக ஆறுகளைப் பத்தி கேட்டார்… எனக்கு பதில் தெரியல…!" – க.நாகமுத்து, – ———————————– –

இது ஒரு குத்தமாய்யா?

Posted: 14 Aug 2016 01:29 AM PDT

- 'எல்லா பெண்களும் நச்சரிப்பதாக சொல்வதை ஏற்க முடியாது… சில திருமணமாகாத பெண்களும் இருக்கிறார்கள்!' என்று நான் விளையாட்டாக நண்பர்களிடம் சொல்வதுண்டு. - பெண்களிடம் உங்களுக்கு பிடித்த, பிடிக்காத குணங்கள் என்னென்ன என்று ஆண்களை கேட்டுப் பார்த்தால், பிடித்த குணங்களில் 'பொறுமை'யும், பிடிக்காதவற்றில் 'நச்சரிப்பு'ம் கட்டாயம் இருக்கும். அம்மா மேல் பாசமாக இருக்கும் பிள்ளைகள் கூட 'எங்க அம்மான்னா எனக்கு ரொம்ப இஷ்டம். என்ன, சில விஷயங்கள்ல ஓவரா நச்சரிப்பாங்க. அதான் பிடிக்காது' என்பார்கள். - உண்மையில், ...

கடவுளும் கை விடுவார்

Posted: 13 Aug 2016 10:04 PM PDT

காரணம் பல சொல்லி
தடைபடுகிறதே - மகளின்
கல்யாணம்!

வேண்டாத தெய்வமில்லை
இறுதியில்
கடவுளும் எதிரியானார்
அந்த
முதிர் கன்னிக்கு - ஆம்
அவளுக்கு ஏழரை சனியாம்!!

# கடவுளும் கை விடுவார்

பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்: இந்திய வீராங்கனை லலிதா பாபர் இறுதி சுற்றுக்கு தகுதி

Posted: 13 Aug 2016 09:37 PM PDT

ரியோ டி ஜெனீரோ, பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இறுதி சுற்றில் லலிதா பாபர் 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நடந்து வருகிறது. இதில் 8–வது நாளான நேற்றும் பெரும்பாலான போட்டிகளில் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியது. தடகள போட்டியில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் தகுதி சுற்று பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் லலிதா பாபர், சுதாசிங் உள்பட 52 பேர் கலந்து கொண்டனர். ஸ்டீபிள்சேஸ் ...

பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருகிறதா? உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பலத்த பாதுகாப்பு

Posted: 13 Aug 2016 09:35 PM PDT

மும்பை பாகிஸ்தானில் இருந்து வெடிப்பொருட்களுடன் கப்பல் வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மும்பை கடலோர பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கை இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட பாகிஸ்தானில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் வணிக கப்பல் ஒன்று வர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கப்பல் மராட்டியம் அல்லது குஜராத் கடல் எல்லை வழியாகத்தான் இந்தியாவிற்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சுதந்திர தினம் நாளை (திங்கட்கிழமை) ...

நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு

Posted: 13 Aug 2016 09:33 PM PDT

முழு நேர பாடகியாகும் ரம்யா நம்பீசன்! - - – பீட்சா படத்தின் வெற்றிக்கு பின், விஜயசேதுபதி முன்னணி நடிகராகி விட்டபோதும், அப்பட நாயகி ரம்யா நம்பீசனுக்கு சரியானபடி படங்கள் இல்லை. மீண்டும் விஜயசேதுபதியுடன் நடித்த, சேதுபதி படத்தின் ஹிட்டுக்கு பின், தாய்மொழியான மலையாள படங்களில் நடித்து வந்தவர், பாண்டிய நாடு படத்தில், 'பை… பை… பை… கலாச்சி பை…' என்ற பாடலை பாடினார். இப்பாடல் ஹிட் ஆனதால் தொடர்ந்து, டமால் டுமீல் உட்பட சில படங்களில் பாடியவர், சமீபத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், செம போத ஆகாத ...

விடுதலை நாள் விழா

Posted: 13 Aug 2016 09:06 PM PDT

- முந்நூறு ஆண்டுக்கு மேலாக முப்பது கோடி மக்களையும் அந்நியர் இங்கே அடிமைசெய்து அடக்கு முறையால் ஆட்சி செய்தார்! - எதிர்த்த மன்னர் பலபேரை இரக்கம் இன்றிக் கொன்றார்கள்! உதித்தார் கதிர்போல் காந்திமகான் உரிமைக் குரலும் ஓங்கியதாம்! - மக்கள் அனைவரும் திரண்டார்கள் மதியால் விதியை வெல்வதற்கு திக்குகள் எட்டும் போராட்டம் திகைத்தார் அந்நியர் இம்மண்ணில்! - அறவழி நடந்த போராட்டம் அனைத்தும் வெற்றி கண்டனவாம்! இறுதியில் வெள்ளையர் வெளியேற எண்ணி நாளைக் குறித்தார்கள்! - பெருமை ...

பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 13 Aug 2016 08:54 PM PDT

சமூகப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் கல்வி பயிலும், பயின்ற மாணவ, மாணவிகளின் பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூகப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் கல்வி பயின்ற, பயிலும் மாணவ மாணவிகளை கொண்டு காலியாக உள்ள, "சி' (எழுதபடிக்கத் தெரிந்த பதிவுரு எழுத்தர்), "டி' (அலுவலக உதவியாளர்) பிரிவு பணியிடங்களை விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்காக பரிசீலனை செய்ய ...

பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை

Posted: 13 Aug 2016 08:52 PM PDT

பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை தாய் விற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. - இந்த நிலையில் குழந்தையை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. - திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் வசிப்பவர் ஜெயராமன் (30). இவரது மனைவி நித்யா(26). தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுக்கு கடந்த 2010 ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜெயசூர்யா(5) என்ற ஆண்குழந்தை உள்ளது. கட்டட தொழிலாளியான ஜெயராமன் பல்வேறு ...

(கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ புத்தகத்தி லிருந்து ஒரு சிறு பகுதி…

Posted: 13 Aug 2016 08:43 PM PDT

குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை. உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல. உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர். அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல. ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன. அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல. ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர்களது ...

கலீல் ஜிப்ரான்

Posted: 13 Aug 2016 08:41 PM PDT

- கலீல் ஜிப்ரானின் கவிதைகள் உலகம் முழுதும் பிரபலம். ஆங்கிலத்திலும் அரபி மொழியிலும் பல கவிதைகள் மற்றும் உரைநடைகளை எழுதியவர் இவர். சிறந்த ஓவியரும்கூட. லெபனானின் மிகச் சிறந்த கவிஞராக இன்றும் அறியப்படுபவர். லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். அப்போது, ஓட்டமான் பேரரசில் லெபனான் இருந்தது. அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். கையாடல் புகாரின்பேரில் 1891-ல் அவர் கைது செய்யப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™