Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்; நான்கு கோடி சந்தாதாரர்கள் நலன் காக்க மத்திய அரசு புது முயற்சி

Posted: 14 Aug 2016 09:38 AM PDT

புதுடில்லி:தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் அறிமுகம் செய்ய உள்ளது. இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார். அப்போது, 'பி.எப்., ...

5 மாவட்ட செயலர்கள் மாற்றம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தீவிரம்

Posted: 14 Aug 2016 10:25 AM PDT

கட்சியின் ஐந்து மாவட்ட செயலர்களை மாற்றுவது தொடர்பாக, ஸ்டாலின் மற்றும் அன்பழகனிடம், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தீவிர ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், குறிப் பிட்டு சொல்லக் கூடிய சில மாவட்டங் களில் பெரிய அளவுக்கு தி.மு.க., வெற்றி பெற முடியாமல் போனதாலேயே, அக்கட்சியால் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியவில்லை. மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் கட்சி படுதோல் வியை தழுவியது.இதனால், இந்த மாவட்டங்களில் கட்சியை நிமிர்த்த வேண்டும் என்றால் அந்த மாவட்டங் களில் உள்ள மாவட்ட செயலர்களை கட்டாயம் ...

ரயில் கொள்ளை வழக்கில் முன்னேற்றம் தடயம் சிக்கியதால் போலீஸ் நம்பிக்கை

Posted: 14 Aug 2016 10:30 AM PDT

சேலம் - சென்னை விரைவு ரயிலில் நடந்த கொள்ளை தொடர்பாக, முக்கிய தடயம் சிக்கி, விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சேலம் - சென்னை விரைவு ரயில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில், சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவான, எஸ்.ஐ.டி., மற்றும் சேலம் மாநகர போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் மணிவர் மன் தலைமையிலான போலீசார், சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ரயில் நிலைய கழிப்பறை ஒன்றில், துளை போடப் பட்ட ரயிலின் மேற்கூரையில் ...

நிபந்தனையுடன் வந்த நன்கொடை நிராகரித்தது பிரதமர் அலுவலகம்

Posted: 14 Aug 2016 10:30 AM PDT

புதுடில்லி: 'நாட்டு மக்களில், மிக மிக ஏழையாக உள்ளவருக்கு தரப்பட வேண்டும்' என, குறிப் பிட்டு அளிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நன் கொடையை, பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்துாரி டம், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தீப் சந்திர
சர்மா என்பவர் தாக்கல் செய்த மனு விபரம்:
கடந்த, 2015, ஜூன், 10ல், பிரதமர் நிவாரண நிதிக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் காசோலை யை, நன்கொடையாக அளித்திருந் தேன். அத்து டன் இணைக்கப்பட்ட கடிதத்தில், 'அந்த பணத்தை, நாட்டு மக்களில் மிக மிக ஏழையாக உள்ள வருக்கு அளிக்கப்பட வேண்டும்' என, வலியுறுத்தி ...

தேர்தலில் போட்டியிடுவது உறுதி இரோம் ஷர்மிளா திட்டவட்டம்

Posted: 14 Aug 2016 10:31 AM PDT

இம்பால்: ''மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவில் மாற்றம் இல்லை; சுயேச்சையாக போட்டியிட்டு முதல்வராவேன்,'' என, அங்கு, 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா, 44, திட்டவட்டமாக கூறி உள்ளார்.

16 ஆண்டுகள் மணிப்பூர் மாநிலத்தில், முதல்வர் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது; அங்கு, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக, 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம்
ஷர்மிளா, சமீபத்தில் போராட்டத்தை கை விட்டார். அம்மாநில சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக கூறி உள்ளார்.
அவரது முடிவுக்கு, ...

டில்லியை மிரட்டும் வெள்ளம்; உஷார் நடவடிக்கை தீவிரம்

Posted: 14 Aug 2016 10:32 AM PDT

புதுடில்லி: ஹரியானாவில் இருந்து, யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடப் பட்டு ள்ளதால், டில்லியில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அங்கு, கடந்த சில தினங்களாக பலத்த மழை
பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது; ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கிழக்கு டில்லி யில், ...

பசு பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Posted: 14 Aug 2016 10:35 AM PDT

புதுடில்லி: பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி, தலித், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவோர், பசுக்களை கொல்வோருக்கு எதிராக, வட மாநிலங்களில் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. குஜராத்தில், சமீபத்தில் பசுவின் தோலை உரித் ததாகக் கூறி, தலித் இளைஞர்கள், தெருவில் நிறுத்தி, அடித்து, உதைக்கப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும்
பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.
இந்நிலையில், காங்கிரஸ் ...

காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதாக பாக்., தூதர் திமிர் பேச்சு சுதந்திரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடருமாம்

Posted: 14 Aug 2016 10:38 AM PDT

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்,'' என, பாகிஸ்தான் துாதரக அதிகாரி, டில்லியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப் பின் முக்கிய தலைவன்களில் ஒருவனான பர்ஹான் வானி, சமீபத்தில் பாதுகாப்பு படை யினரால் கொல்லப்பட்டான். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் வன் முறை ஏற்பட்டது. பல இடங்களில், இன்னும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக துாண்டி விடும், அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் ...

தங்கம் சவரன் ரூ.34 ஆயிரமாக உயரும் நகை வியாபாரிகள் சம்மேளனம் தகவல்

Posted: 14 Aug 2016 10:42 AM PDT

சேலம்:''சர்வதேச சந்தையில், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதன் எதிரொ லியாக, வரும் டிசம்பருக்குள், 24 காரட் தங்கம், சவரன், 34 ஆயிரம் ரூபாய்; 22 காரட் தங்கம், சவரன், 30 ஆயிரம் ரூபாயை தொடும்,'' என, தமிழ்நாடு நகை வியாபாரிகள் சம்மேளன பொதுக்குழு தலைவர் ரகுநாத் தெரிவித்தார்.

தமிழ்நாடு நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம், தலைவர் ரகுநாத் தலைமையில் சேலத்தில் நடந்தது. பின், ரகுநாத் அளித்த பேட்டி: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, தற்போதுள்ள, 10 சதவீதம் என்பதை ஐந்து சதவீதமாகவும், மதிப்பு கூட்டு வரி ஆறு சதவீதம் என்பதை இரண்டு ...

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்: தீபா கர்மாகர் தோல்வி

Posted: 14 Aug 2016 11:48 AM PDT

ரியோ டி ஜெனிரோ : ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தோல்வியடைந்தார்.

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் இறுதி போட்டியில் இன்று களம் கண்டார். இதில் 15.066 புள்ளிகள் பெற்ற கர்மாகர் 4வது இடம் பிடித்தார். இதன் மூலம் ஜிம்னாஸ்டிக்சில் இந்திய அணியின் பதக்கக்கனவு முடிவுக்கு வந்தது. இப்போட்டில் அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் 15.966 புள்ளிகள் பெற்று தங்கம் ...

புலனாய்வு அதிகாரிகளுக்கு உருது, அரபி மொழி பயிற்சி

Posted: 14 Aug 2016 02:02 PM PDT

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், பயங்கரவாத சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, உருது, அரபி, பாரசீக மொழிகள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் என்ற இடத்தில், 2014ல், வீடு ஒன்றில் குண்டு வெடித்ததில், இரண்டு பேர் உயிரிழந்தனர். இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த, தடை செய்யப்பட்ட ஜமாத் -- உல்- முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், நாடு கடந்த விசாரணை தேவை என்பதால், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிடம், ...

நாடு முழுவதும் 886 'டிவி' சேனல்கள்

Posted: 14 Aug 2016 03:15 PM PDT

புதுடில்லி : நாடு முழுவதும், 886 தனியார், 'டிவி' சேனல்கள் இயங்கி வருவதாக, தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த மாதம் வரை, 1,035 தனியார் சேனல்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு காரணங்களால், அதில், 149 சேனல்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும், 886 தனியார், 'டிவி' சேனல்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில், செய்தி சேனல்களின் எண்ணிக்கை, 399; மீதமுள்ள, 487 சேனல்கள், செய்தி சாராத பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்பானவை. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™