Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாட்டு வண்டிகள் மீது லாரி மோதியதில் 2 பேர் சாவு

Posted: 14 Aug 2016 02:28 PM PDT

கரூர் அருகே மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகள் மீது லாரி மோதிய விபத்தில்,நிகழ்விடத்திலேயே மாட்டு வண்டி ஓட்டி வந்த இருவர் உயிரிழந்தனர்.

முத்துக்குமாரின் பெருமையை அவரின் பாடல்கள் பாடிக் கொண்டே இருக்கும்

Posted: 14 Aug 2016 02:28 PM PDT

பாடலாசிரியர் முத்துக்குமாரின் பெருமையை அவரின் பாடல்கள் பாடிக் கொண்டே இருக்கும் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்தார்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு

Posted: 14 Aug 2016 02:27 PM PDT

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (41) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

தஞ்சாவூரில் அறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு

Posted: 14 Aug 2016 02:27 PM PDT

தஞ்சாவூரில் அறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுவாமிமலையில் ஆக. 17-ல் பெளர்ணமி கிரிவலம்

Posted: 14 Aug 2016 02:26 PM PDT

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் வரும் 17-ம் தேதி மாலை பெளர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.

பட்டுக்கோட்டையில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

Posted: 14 Aug 2016 02:26 PM PDT

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்றிய இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

நதிகளை இணைக்க நடவடிக்கை தேவை

Posted: 14 Aug 2016 02:25 PM PDT

நதிகளை இணைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு யாதவ மகா சபைத் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன்.

புகையிலை மறுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

Posted: 14 Aug 2016 02:25 PM PDT

கும்பகோணம் அருகே தாராசுரம் வை.கோவிந்தசாமி மேல்நிலைப் பள்ளியில், கும்பகோணம் வட்டார பொது சுகாதாரத் துறை, தாராசுரம் பேரூராட்சி நிர்வாகம், குடந்தை கிரீன்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் ஆகியன இணைந்து மாணவர்களிடம் புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதற்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி ஏற்கச்செய்தனர்.

கும்பகோணம் ஸ்ரீகாயத்ரி காளியம்மன் கோயிலில் ஆடித் திருநடனம்

Posted: 14 Aug 2016 02:24 PM PDT

கும்பகோணம் காயத்ரி காளியம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு, திருநடனக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுகையில் புற்றுநோய் கண்டறியும் "ஸ்கிரீனிங் சென்டர்' அமைக்க முயற்சி

Posted: 14 Aug 2016 02:22 PM PDT

புதுக்கோட்டையில் புற்றுநோய் குறித்து அறிவதற்கான நுண்சோதனை மையம் (ஸ்கிரீனிங் சென்டர்) நிறுவும் முயற்சி நடைபெறுவதாக புதுகை திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கண்மாய், ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தல்

Posted: 14 Aug 2016 02:21 PM PDT

விவசாயப் பணிகளுக்காக கண்மாய், ஏரிகளில் கறம்பை மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கம்: கடலில் சிக்கித் தவித்த 15 மீனவர்கள் மீட்பு; 5 பேர் பலி

Posted: 14 Aug 2016 02:21 PM PDT

மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தில் நடுக்கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 15 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினரும், வங்க தேச கடலோரக் காவல் படையினரும் பத்திரமாக மீட்டனர். 5 மீனவர்களின் சடலங்களும் அந்தப் பகுதியில் இருந்து அவர்களால் கண்டெடுக்கப்பட்டன.

விராலிமலை வட்டத்தில் 44 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கமருந்து

Posted: 14 Aug 2016 02:21 PM PDT

விராலிமலை வட்டாரத்தில் 19 வயது வரையிலான கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து அண்மையில் வழங்கப்பட்டது.

ஆடவர் ஹாக்கி: இந்தியா தோல்வி

Posted: 14 Aug 2016 02:21 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.

ஜிம்னாஸ்டிக்ஸ்: தீபா கர்மாகருக்கு 4-ஆவது இடம்

Posted: 14 Aug 2016 02:21 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாகர் 4-ஆவது இடத்தைப் பிடித்தார்.

அறந்தாங்கியில் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

Posted: 14 Aug 2016 02:19 PM PDT

அறந்தாங்கியில் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள், டிராக்டர் மோதல்: ஊராட்சி உதவியாளர் சாவு

Posted: 14 Aug 2016 02:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் ஊராட்சி உதவியாளர் உயிரிழந்தார்.

மாநில மகளிர் கபடிப் போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன்

Posted: 14 Aug 2016 02:18 PM PDT

கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கபடிப் போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.  

வெட்டன் விடுதியில் மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 14 Aug 2016 02:17 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தவுட்டுப்பாளையம் மணல் குவாரிக்கு எதிராக கையெழுத்து பிரசாரம், ஆர்ப்பாட்டம்

Posted: 14 Aug 2016 02:16 PM PDT

கரூர் மாவட்டம்,தவுட்டுப்பாளைத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்துப் பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

யாத்ரி நிவாஸ் பக்தர்களுக்காக ரூ. 14 லட்சத்தில் சிற்றுந்து

Posted: 14 Aug 2016 02:16 PM PDT

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி யாத்ரி நிவாஸ் கொள்ளிடம் பஞ்சக்கரையில் உள்ளது. இங்கிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் பேருந்து வசதியில்லாமல் தவித்து வந்தனர்.

பண்டுதகாரன்புதூரில் 23, 24 ஆம் தேதிகளில் செம்மறியாடு,வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

Posted: 14 Aug 2016 02:16 PM PDT

வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கரூர் அருகே பண்டுதகாரன்புதூரில் செயல்படும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செம்மறியாடு,வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.   

எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு பணிகள் ஆய்வு

Posted: 14 Aug 2016 02:16 PM PDT

கரூர் ரயில் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை

Posted: 14 Aug 2016 02:16 PM PDT

கரூரில் எம்ஜிஆர் மன்றம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெறுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாம்

Posted: 14 Aug 2016 02:16 PM PDT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-ம் தேதி தூயவளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

தாந்தோணிமலைப் பகுதியில் காவிரி குடிநீர்ப் பணிகள் ஆய்வு

Posted: 14 Aug 2016 02:16 PM PDT

தாந்தோணிமலை பகுதியில் ரூ.25.6 கோடி மதிப்பிலான காவிரிக் குடிநீர் திட்டப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

குறுவட்ட கால்பந்து போட்டி: பிஏ.வித்யாபவன் பள்ளி சிறப்பிடம்

Posted: 14 Aug 2016 02:16 PM PDT

குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் கரூர் பிஏ. வித்யாபவன் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.

ஏரியை தூர்வாரி, நிலங்களை வளமாக்கும் இளைஞர்கள்!

Posted: 14 Aug 2016 02:15 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரி தூர்வாரும் பணியின்போது கிடைக்கும் வண்டல் மண்ணை கொண்டு நிலங்களை வளமாக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

"மாதமிருமுறை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்'

Posted: 14 Aug 2016 02:15 PM PDT

குடிநீர் ஆபரேட்டர்கள் நீர்த்தேக்க தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என வட்டார மருத்துவ அதிகாரி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

அரசு கலைக் கல்லூரியில் ஆக. 19-ல் முதுகலை பிரிவுகளுக்கு கலந்தாய்வு

Posted: 14 Aug 2016 02:15 PM PDT

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், எம்.ஏ., வரலாற்று பாடத்துக்கு வழங்கியுள்ள கூடுதல் இடங்களுக்கும், எம்.எஸ்.சி., சுற்றுச்சூழல் அறிவியல் பாடப்பிரிவில் காலியிடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

பெரம்பலூரில் சுதந்திர தின ஜோதி ஓட்டம்

Posted: 14 Aug 2016 02:15 PM PDT

பெரம்பலூரில், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் சுதந்திர தின ஜோதி ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

Posted: 14 Aug 2016 02:15 PM PDT

அரியலூர் மாவட்டம், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு தலைமை மருத்துவமனையில் தனிப்பிரிவு  ஏற்படுத்த வேண்டும்: ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

Posted: 14 Aug 2016 02:15 PM PDT

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஓய்வு பெற்றவர்களுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

"நூல்களை பொறுப்புணர்வோடு மதிப்பீடு செய்ய வேண்டும்'

Posted: 14 Aug 2016 02:15 PM PDT

நூல்களை கடமை உணர்வோடும், பொறுப்புணர்வோடும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார் அரியலூர் அரசுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் க. தமிழ்மாறன்.

கரைவெட்டியில் மக்கள் சேவை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Aug 2016 02:15 PM PDT

கரைவெட்டி ஏரியை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டியில் மக்கள் சேவை இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையோர் செஞ்சிலுவை அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் ஜூனியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தக்கைப்பூண்டு, சணப்பை பசுந்தாளுரப்பயிர் விதைகளுக்கு மானியம்

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

சம்பா நடவிற்கு தக்கைப்பூண்டு, பசுந்தாளுரப் பயிர் விதைகள் வாங்குவதற்கு மானியத்துடன் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ,1,500 வரவு வைக்கப்படுகிறது.

குருவாடி தலைப்பில் தடுப்பணை கட்ட கோரிக்கை

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

அரியலூர் மாவட்டம், குருவாடி தலைப்பில் தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

அணைப்பாடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், அணைப்பாடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடுதல், பொதுக்கிணறு தூர்வாருதல் மற்றும் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் விதிகளை மீறும் ஆட்டோக்களால் அதிகரிக்கும் விபத்துகள்: நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

பெரம்பலூர் நகரில் விதிகளை மீறும் ஆட்டோக்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

"உழைப்பு என்றும் தோற்பதில்லை'

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

உழைப்பு என்றும் தோற்பதில்லை என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், சுதர்சன் கலைக் கல்லூரி முதல்வருமான எஸ். நல்லதம்பி.

பாஜக இளைஞரணி சார்பில் புதுகையில் சுதந்திர தின தீப ஓட்டம்

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞரணி சார்பில் சுதந்திர தின தீப ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"வேளாண் மானியத் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்'

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

பொன்னமராவதி வட்டாரத்தில் நடப்பு (2016-17) ஆண்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டங்களில் பங்கேற்று விவசாயிகள் பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினர்.

கல்லனேந்தல் பாரதிதாசன் பல்கலை., மாதிரிக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

அறந்தாங்கி அருகே கல்லனேந்தலில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கலைக் கல்லூரியின் முதல்வராக முனைவர் எம். வீரப்பன்  சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் இந்து சமய வழிபாட்டு மன்ற ஆண்டு விழா

Posted: 14 Aug 2016 02:14 PM PDT

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் இந்து சமய வார வழிபாட்டு மன்ற 41-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கார் மோதி பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி சாவு

Posted: 14 Aug 2016 01:27 PM PDT

பரமக்குடி அருகே சத்திரக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் மீது வழக்கு

Posted: 14 Aug 2016 01:26 PM PDT

திருவாடானை தாலுகா, திருப்பாலைக்குடி அருகே வடக்கு ஊரணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம் (40). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இஸ்திரி, ராயன், அயர்ன் ஆகியோருக்கும் வீடு கட்டுவதில் நிலப் பிரச்னை இருந்து வந்துள்ளது.

ஏர்வாடி அருகே கூலித் தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு

Posted: 14 Aug 2016 01:26 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே பனையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (45). விறகு வெட்டும் கூலித் தொழிலாளியான இவர், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு, மனைவியுடன் விறகு வெட்டச் சென்றுவிட்டாராம்.

அனுமதியின்றி கபடி போட்டி: 5 பேர் கைது

Posted: 14 Aug 2016 01:25 PM PDT

முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை கபடி போட்டி நடைபெற்றது. இதற்காக, தேரிருவேலி சரக காவல் நிலையத்தில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் போட்டிகளை அக்கிராமத்து இளைஞர்கள் நடத்தியாதாகக் கூறப்படுகிறது.

ராமேசுவரத்தில் கழிப்பறை மேல்நிலை தொட்டிக்குள் பணியாளரின் சடலம்

Posted: 14 Aug 2016 01:25 PM PDT

ராமேசுவரத்தில் "நம்ம டாய்லெட்' திட்டத்தில் பணியாற்றி வந்த பணியாளர் ஞாயிற்றுக்கிழமை மேல்நிலை நீர்த்தொட்டிக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

வண்டி பந்தயத்துக்கு சோதனை ஓட்டம் நடத்திய 13 பேர் கைது

Posted: 14 Aug 2016 01:24 PM PDT

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வண்டி பந்தயத்துக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

முதுகுளத்தூரில் 558 பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

Posted: 14 Aug 2016 01:24 PM PDT

முதுகுளத்தூர் ஸ்ரீவடக்குவாசல் செல்வி அம்மன் மன்றத்தின் சார்பில், ஞாயிற்றுக்கிழமை ஆதிபராசக்தி பக்தர்கள் 558 பேர் கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாகச் சென்றனர்.

திருவாடானை அருகே பழங்கால நந்தி சிலையை ஆய்வு செய்ய கோரிக்கை

Posted: 14 Aug 2016 01:23 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கண்மாயில் உள்ள  பழங்கால நந்தி சிலையை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவகோட்டையில் தமுஎகச கலை இலக்கிய இரவு

Posted: 14 Aug 2016 01:23 PM PDT

தேவகோட்டையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், கலை இலக்கிய இரவு சனிக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமனம்

Posted: 14 Aug 2016 01:23 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலராக முனியாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காரைக்குடியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Aug 2016 01:22 PM PDT

காரைக்குடியில் ஆம் ஆத்மி கட்சியினர் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி

Posted: 14 Aug 2016 01:22 PM PDT

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தவசு திருவிழா: அம்மன் ரதத்தில் பவனி

Posted: 14 Aug 2016 01:21 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை அம்மன் ரதத்திலும், பூப்பல்லக்கிலும் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாயல்குடியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

Posted: 14 Aug 2016 01:20 PM PDT

சாயல்குடியில் பாஜக சார்பில், பூத் கமிட்டியாளர்க்கான பயிற்சி முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

Posted: 14 Aug 2016 01:19 PM PDT

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்களின் சிறப்பு தூய்மை முகாம்

Posted: 14 Aug 2016 01:19 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பேரூராட்சி நிர்வாகமும் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளும் இணைந்து, சனிக்கிழமை சிறப்பு தூய்மை முகாமில் ஈடுபட்டனர்.

குழாயில் உடைப்பு: மானாமதுரையில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

Posted: 14 Aug 2016 01:18 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை குடிநீர்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, நகரில் கடந்த 2 நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் கிளை நூலகத்தில் நூலகத் தந்தை பிறந்தநாள் விழா

Posted: 14 Aug 2016 01:18 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அண்ணா கிளை நூலகத்தில், நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர். ரெங்கநாதனின் 124 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிராமக் கோயில் பூஜாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆக.23-இல் ஆர்ப்பாட்டம்: தமிழக விஹெச்பி நிறுவனர் வேதாந்தம்

Posted: 14 Aug 2016 01:17 PM PDT

கிராமக் கோயில் பூஜாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, தமிழக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்.

மண்ணில் வரும் தெய்வசக்தி திருப்பூர் கிருஷ்ணன்

Posted: 14 Aug 2016 01:17 PM PDT

அலிப்பூர் சிறையில் தவம் நிகழ்த்தினார் ஸ்ரீ அரவிந்தர். ஓராண்டுத் தவம். சிறையிலேயே கிருஷ்ண தரிசனம் பெற்றார்.

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!

Posted: 14 Aug 2016 01:16 PM PDT

இந்திய தேசத்தின் 70-ஆவது சுதந்திர தினம் இன்று. 69 ஆண்டுகளுக்கு முன்னால், முதல் சுதந்திர தினத்தை - 15.08.1947-அன்று கொண்டாடியதும், குதூகலித்து மகிழ்ந்ததும் உலக வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வுகள்.

சுதந்திரக் கனவு!

Posted: 14 Aug 2016 01:14 PM PDT

இந்தியா தனது 70-ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தில்லி செங்கோட்டையில் இந்தியாவின் 14-ஆவது பிரதமரான நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றப் போகிறார்.

சாயல்குடியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

Posted: 14 Aug 2016 01:14 PM PDT

சாயல்குடியில் பாஜக சார்பில், பூத் கமிட்டியாளர்க்கான பயிற்சி முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடிநீர் குழாயில் சட்டவிரோத இணைப்பு கொடுத்தால் நடவடிக்கை

Posted: 14 Aug 2016 01:13 PM PDT

திருவாடானை பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் சட்டவிரோதமான முறையில் இணைப்பு கொடுக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கோஷ்டி மோதல்

Posted: 14 Aug 2016 01:13 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி ஆகிய பகுதிகளில் அதிமுக ஒன்றியச் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூரில் கோஷ்டி மோதல் காரணமாக கூட்டம் பாதியுடன் முடிவடைந்தது.

கார் மோதிய விபத்து: மேலும் ஒருவர் சாவு

Posted: 14 Aug 2016 01:12 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மோதியதில் பலத்த காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சுதந்திர தினத்தையொட்டி ராமேசுவரத்தில் பாஜக பேரணி

Posted: 14 Aug 2016 01:12 PM PDT

ராமேசுவரத்தில் பாஜக இளைஞரணி சார்பில், 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கௌரவப்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

பார்த்தீனிய செடிகளை அழிக்க சிறப்பு முகாம்

Posted: 14 Aug 2016 01:11 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பார்த்தீனிய செடிகள் ஒழிப்பு சிறப்பு முகாம் ஆக. 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என வேளாண் இணை இயக்குநர் செல்வம் தெரிவித்தார்.

ஊராட்சி அலுவலக ஊழியரை அரிவாளால் வெட்டியவர் மீது வழக்கு

Posted: 14 Aug 2016 01:10 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி அலுவலக ஊழியரை அரிவாளால் வெட்டியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தேசியக் கொடி விற்பனை அமோகம்

Posted: 14 Aug 2016 01:10 PM PDT

சுதந்திரதின விழாவையொட்டி ராஜபாளையம் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

நெல் விலைஉயர்வு

Posted: 14 Aug 2016 01:09 PM PDT

விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கோடை அறுவடை காலம் முடிந்துள்ள நிலையில் நெல் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நீதிபதிகள் நியமன விவகாரம்: மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் தரும் பரிந்துரைகளை நிராகரிக்க கொலீஜியம் முடிவு?

Posted: 14 Aug 2016 01:09 PM PDT

நீதிபதிகள் பணியிடத்துக்காக, நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்யும் நபர்களை நிராகரிக்கும் அதிகாரம் உள்பட மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் தரும் பல்வேறு பரிந்துரைகளை "கொலீஜியம்' குழு ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிகிறது.

மல்லாங்கிணறில் மக்கள் சந்திப்பு இயக்கம்

Posted: 14 Aug 2016 01:09 PM PDT

மல்லாங்கிணறில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் ரயில் நிலைய வாகன காப்பகத்தை செயல்படுத்தக் கோரிக்கை

Posted: 14 Aug 2016 01:08 PM PDT

விருதுநகர் ரயில் நிலைய வாகன காப்பகத்தை செயல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்கக் கோரிக்கை

Posted: 14 Aug 2016 01:08 PM PDT

காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தில்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா

Posted: 14 Aug 2016 01:07 PM PDT

தில்லி மருத்துவமனையில் 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சை முடிந்து தனது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினார். அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிமுக மாவட்ட பெண் உறுப்பினர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

Posted: 14 Aug 2016 01:07 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக மாவட்ட பெண் உறுப்பினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஹிந்தித் தேர்வு: 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Posted: 14 Aug 2016 01:06 PM PDT

விருதுநகரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை பட்டப்படிப்புக்கான ஹிந்தித் தேர்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

ராணுவத்தினருக்கு அசோக சக்ரா உள்பட 82 விருதுகள்

Posted: 14 Aug 2016 01:06 PM PDT

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போராடி வீரமரணமடைந்த ராணுவ வீரர் ஹங்பன் தாதாவுக்கு அசோக சக்ரா விருதையும் மற்ற ராணுவத்தினருக்கு 81 வீரதீர விருதுகளையும் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

சாத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடக்கம்

Posted: 14 Aug 2016 01:06 PM PDT

சாத்தூரில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை சனிக்கிழமை பூமி பூஜை செய்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்களை கண்டறிய எதிர்ப்பு: இலங்கை அதிபர் சிறீசேனா விளக்கம்

Posted: 14 Aug 2016 01:06 PM PDT

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது காணாமல்போன 65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை அடுத்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா விளக்கம் அளித்துள்ளார்.

சின்னமனூர் அருகே பேருந்து மோதி கல்லூரி மாணவர் சாவு

Posted: 14 Aug 2016 01:05 PM PDT

சின்னமனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதியதில், கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

வீட்டுப் பணியாளர்களுக்கு விரைவில் இஎஸ்ஐ திட்டம்

Posted: 14 Aug 2016 01:05 PM PDT

அனைத்து மக்களுக்கும் ஆரோக்கிய காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் ஒரு பகுதியாக, தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தை (இஎஸ்ஐ) வீட்டுப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்துவதற்காக, தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் விரைவில் சோதனை முயற்சி அமல்படுத்தப்பட உள்ளது.

அகில பாரத இந்து மகாசபாவினர் கைது

Posted: 14 Aug 2016 01:05 PM PDT

கச்சத்தீவில் சுதந்திர தினம் கொண்டாடப் போவதாக புறப்பட்ட அகில பாரத இந்து மகாசபாவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பைக்குகள் மோதல்: 2 இளைஞர்கள் சாவு

Posted: 14 Aug 2016 01:04 PM PDT

இன்னாசிபுரம் பகுதியில் பைக்குகள் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.

சின்னமனூரில் தடையை மீறி பாஜகவினர் தொடர் ஓட்டம்: 25 பேர் கைது

Posted: 14 Aug 2016 01:04 PM PDT

சின்னமனூரில் தடையை மீறி தொடர் ஓட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 25 பேரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

காவல் துறையினர் 25 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

Posted: 14 Aug 2016 01:04 PM PDT

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 25 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருசநாடு வனப் பகுதியில் தூய்மை பணி

Posted: 14 Aug 2016 01:03 PM PDT

வருசநாடு வனப் பகுதியில், வனத் துறையினர் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு: இடைநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம்

Posted: 14 Aug 2016 01:03 PM PDT

பணி மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வந்த இடைநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் ஞாயிற்றுக்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஊர்க் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Aug 2016 01:03 PM PDT

தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஊர்க்காவலர் மற்றும் துணை வட்டார தளபதி பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆக. 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச் சீர்திருத்தப் பணிக்கு கண்மாயில் கரம்பை மண் அள்ளுவதில் விவசாயிகளுக்குச் சிக்கல்

Posted: 14 Aug 2016 01:02 PM PDT

தேனி மாவட்டத்தில் நிலச் சீர்திருத்தப் பணிக்கு கண்மாயில் கரம்பை மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட் தாக்கல்: மத்திய நிதியமைச்சகம் ஏற்பு

Posted: 14 Aug 2016 01:02 PM PDT

அடுத்த நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்வைத்த திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் ஆலோசனை

Posted: 14 Aug 2016 01:01 PM PDT

வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சனிக்கிழமை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

கோட்டையில் இன்று சுதந்திர தின விழா: தேசிய கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா உரை

Posted: 14 Aug 2016 01:01 PM PDT

சுதந்திரத் தினத்தையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசிய கொடியேற்றி வைத்து, சிறப்புரையாற்றுகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™