Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின் வாரிய குளறுபடியை தீர்க்க மத்திய அரசு...முடிவு: சி.ஏ.ஜி., அதிகாரியை நியமிக்க மாநில அரசிடம் வலியுறுத்தல்-

Posted: 13 Aug 2016 07:33 AM PDT

நிதி நிலைமையை திறமையாக கையாள, மின் வாரிய நிதி பிரிவு இயக்குனராக, இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையான, சி.ஏ.ஜி., அதிகாரியை நியமிக்குமாறு, மத்திய அரசு, தமிழக அரசிடம் வலியுறுத்த உள்ளது.

தமிழ்நாடு மின் வாரிய கடன், 80 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. மின் வாரிய வரவு, செலவு, பணப் பட்டுவாடா பணிகளை, நிதிப் பிரிவு மேற்கொள்கிறது. நிதிப் பிரிவு தலைமை அதிகாரியாக, 1957 முதல், 2004 வரை, ஐ.ஏ.ஏ.எஸ்., என்ற, இந்திய கணக்கு மற்றும் தணிக்கை பணியை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள், ஐ.ஏ.எஸ்., பதவிக்கு இணையானவர்கள் என்பதால், நிதி நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடுகளுக்கு பணியவில்லை. ...

சமூக வலைதளம் மூலம் பயங்கரவாத பரவலை தடுக்க அரசு...தீவிரம்:கம்ப்யூட்டர் வல்லுனர்களின் உதவியை நாட திட்டம்

Posted: 13 Aug 2016 07:42 AM PDT

பயங்கரவாதிகள், சமூக வலைதளங்களை மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தி வருவ தால், இதை தடுக்க, கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிக ளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

உலகின் பல பகுதிகளில் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் பயங்கரவாதிகள், இளைஞர் களை மூளை சலவை செய்து, தங்கள் அமைப்பு களுக்கு ஆள் சேர்க்கவும், வேகமாக தங்கள் கருத்துக்களை பரப்பவும், சமூக வலைதளங் களை பயன்படுத்தி வருகின்றனர். சவால்:இந்தியாவிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவே, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத ...

10 அமைச்சர்; 18 மா.செ., பதவிகளுக்கு சிக்கல்! : அதிரடிக்கு தயாராகிறது அ.தி.மு.க., தலைமை

Posted: 13 Aug 2016 07:53 AM PDT

நடப்பு சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்களை செய்ய, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதன்படி, 18 மாவட்ட செயலர்கள், 10 அமைச்சர் களின் பதவிகள் பறிக்கப்படும் என, கூறப்படு கிறது.அ.தி.மு.க.,வில், மாநில நிர்வாகி களில் இருந்து, அடிமட்ட அளவில் அடிக்கடி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவது வாடிக்கை. ஆனால், சமீப காலமாக, மாவட்ட செயலர்கள் மாற்றம் நிகழவில்லை. ஏற்கனவே மாவட்ட செயலர்களாக நியமிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக பொறுப்பில் இருப்பவர்கள் குறித்து, கட்சித் தலைமைக்கு தொடர்ச்சியாக ...

சபையில் மூக்கறுபடும் எம்.எல்.ஏ.,க்கள்: கவலையில் கருணாநிதி

Posted: 13 Aug 2016 08:11 AM PDT

'சரியாக தயாராகாமல் சட்டசபையில் பேசி, ஆளுங்கட்சியினரிடம் மூக்கறுபடக் கூடாது' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று, வலுவான எதிர்க் கட்சியாக அமர்ந்துள்ளது. இதனால், சட்டசபை விவாதங்களில், சூடு பறக்கிறது.ஆளுங்கட்சி தரப்பில், கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதில் மும்முரமாக இருந்து செயல்படுகின்றனர். அதேபோல, கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சி மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாட்டில் உள்ள குறைகளை ...

முஸ்லிம்களுக்கு ஒதுக்கீட்டை உயர்த்த தெலுங்கானா அரசு...அதிரடி மக்கள் தொகை அடிப்படையில் சட்டம் இயற்ற திட்டம்

Posted: 13 Aug 2016 09:18 AM PDT

தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள், பழங்குடியின சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு, மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநில மக்கள் தொகை, 3.52 கோடி. இதில், 12.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், 9.8 சதவீதம் பேர் உள்ளனர். தெலுங்கானாவில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தற்போது, முஸ்லிம் களுக்கு, 4 சதவீதமும், பழங்குடியினருக்கு, 6 சதவீதமும் ...

ஜனாதிபதி பிரணாபின் மகளுக்கு 'பேஸ்புக்'கில் பாலியல் தொல்லை

Posted: 13 Aug 2016 09:39 AM PDT

கோல்கட்டா:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்., தலைவருமான,ஷர்மிஸ்தா முகர்ஜி, 50, சமூக வலைதளமான, 'பேஸ்புக்' கில், தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட தாக பரபரப்பு புகார் கூறிஉள்ளார்.

ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியதாவது:பார்த்தா மண்டல் என்பவன், 'பேஸ்புக்'கில் என்னை, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில், ஆபாசமான தகவல்களை அனுப்பினான். அதுபோன்ற தகவல்களை மேலும் அனுப்பாத வகையில், அவனை 'பிளாக்' செய்து, தடுக்க எண்ணினேன். அப்படி செய்வதால், மேலும் பலரை, அவன் பாலியல் ரீதியில் துன்புறுத்தக் கூடும்; எனவே, பார்த்தா மண்டல் பற்றி அனைவரும் தெரிந்து ...

'பியூன்களை கூட நியமனம் செய்ய முடியவில்லையே'

Posted: 13 Aug 2016 10:10 AM PDT

புதுடில்லி:''டில்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங்கின் நடவடிக்கைகளால், முதல்வரும், அமைச்சர்களும் தங்கள் அலுவலகங்களில் பியூன்களை கூட பணி நியமனம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது,'' என, அம்மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான மணீஷ் சிசோடியா கவலை தெரிவித்து உள்ளார்.

நிர்வாகப் பணி : டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நிர்வாக பணிகளை மேற்கொள்வதில், துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங்கிற்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும்
இடையே கடும் மோதல் நிலவுகிறது. இந் நிலை யில், 'டில்லியில், நிர்வாக ...

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடகா... கைவிரிப்பு காவிரியில் போதிய இருப்பு இல்லை என விளக்கம்

Posted: 13 Aug 2016 11:01 AM PDT

பெங்களூரு:'தென் மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதால், கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை; எனவே, வழக்கமாக தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரை திறக்க முடியாது' என, கர்நாடக மாநில அரசு கைவிரித்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது குறித்து, அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணை களின் மொத்த கொள்ளளவு, 115 டி.எம்.சி., இந்த ஆண்டு தென் மேற்கு ...

கிரிக்கெட்:டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

Posted: 13 Aug 2016 11:53 AM PDT

செயின்ட் லுாசியா: வெஸ்ட் இண்டீசுக்கெதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் 3வது டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 353 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்நிலையில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 225 ரன்னுக்குள் ...

'நாங்கள் என்ன பஞ்சாயத்தா நடத்துகிறோம்?' மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

Posted: 13 Aug 2016 12:25 PM PDT

ஒரு வழக்கில் மூன்றாண்டு களாகியும் பதிலளிக்காத, மத்திய அரசை, கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட், 'நாங்கள் என்ன பஞ்சாயத்தா நடத்துகிறோம்' என்ற கேள்வியை எழுப்பியது.

மேலும் மத்திய அரசுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், இரும்பு போன்ற பொருட்களை வாகனங்களுக்கு வெளியே நீட்டிக் கொண்டு செல்லும் வாகனங்களால், அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட் டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி ...

ஒலிம்பிக் டென்னிஸ்: சானியா - போபண்ணா ஜோடி அரையிறுதியில் தோல்வி

Posted: 13 Aug 2016 02:10 PM PDT

ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மற்றும் ரோஹன் போபண்ணா ஆகியோர் கலந்து கொண்டு அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிந்தனர். தற்போது அமெரிக்க வீரர்கள் வில்லியம்ஸ் மற்றும் ராம் ஆகியோருடன் அரையிறுதி போட்டி நடந்தது. போட்டியில் (6-2,2-6,3-10) என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடி( வில்லியம்ஸ் மற்றும் ராம் இரண்டு செட்களை கைபற்றி வெற்றி பெற்றனர். வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சானியா ஜோடி இன்று ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™