Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Stoney Creek பகுதியில் தீ சம்பவம்

Posted: 20 Jul 2016 08:12 AM PDT

po

poஹமில்ட்டன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு 9.30 அளவில் தீ பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

Stoney Creekற்கு தெற்கே, Mud Street பகுதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப் பரவலுக்கு உள்ளான வீட்டிலிருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சுமார் 22 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு முயற்சியின் போது, இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post Stoney Creek பகுதியில் தீ சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

துருக்கியில் இருந்து சிரிய அகதிகளை அழைத்து வருவதில் தாமதம்

Posted: 20 Jul 2016 08:09 AM PDT

lk

lkதுருக்கியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை காரணமாக சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்துவரும் நடவடிக்கை பாதிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கியில் இராணுவத்தினரின் ஒரு தரப்பினர் அங்கு இராணுவப் புரட்சியை ஏற்படுத்த கடந்த வாரம் எடுத்திருந்த முயற்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து, அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளது.

இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கப் பணியாளர்கள் பலர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண நிலைமை காரணமாக அங்குள்ள சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.lk

ஏறக்குறைய துருக்கியில் உள்ள 549 சிரிய அகதிகள் கனடாவிற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் போக்குவரத்தை சரிசெய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் 3,815 விண்ணப்பங்கள் அந்த நாட்டில் இன்னமும் பரிசீலணையி்ல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையிலும் தாம் இது தொடாபில் துருக்கிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post துருக்கியில் இருந்து சிரிய அகதிகளை அழைத்து வருவதில் தாமதம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவுக்கான ஆதரவு தொடரும் – பிரித்தானியாவின் புதிய பிரதமர்

Posted: 20 Jul 2016 07:40 AM PDT

o

oகனடாவுக்கான ஆதரவு தொடரும் என தெரிவித்துள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர், ஐரோப்பிய ஒன்யத்திற்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தக இணக்கப்பாடு உரியமுறையில் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள தெரேசா மேயை தொலைபேசியில் அழைத்திருந்த கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, அவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலின் போதே, பிரித்தானியாவின் குறித்த இந்த விருப்பத்தை புதிய பிரதமர் வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான கருத்துக் கணிப்பு நடாத்தப்பட முன்னரேயே கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அந்த வர்த்த உடன்பாடு இன்னமும் நடைமுறைக்கு வராத நிலையிலேயே, இந்த இணக்கப்பாடு உரியமுறையில் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற விருப்பத்தை பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்டுள்ளார்.o

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுகின்ற போதிலும், கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்யத்திற்கும் இடையேயான இந்த உடன்பாட்டுக்கு தமது முழுமையான ஆதரவு இருக்கும் என்றும் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

இதேவேளை கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவும், பிரித்தானியாவுக்கு கனடாவின் பலத்த ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற உத்தரவாதத்தினை பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேசா மேயிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்தர்ப்பத்தில் இரு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னரைப் போலவே வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளிலும் இணைந்து பணியாற்றுவது தொடர்பிலும் அவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

The post கனடாவுக்கான ஆதரவு தொடரும் – பிரித்தானியாவின் புதிய பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழுப்பை குறைக்கும் ”சோளம்”

Posted: 20 Jul 2016 07:31 AM PDT

images

imagesநீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவான சோளத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

சோளத்தில் உள்ள சத்துக்கள்

ஆற்றல் - 349 கி.கலோரி
புரதம் -10.4 கிராம்
கொழுப்பு - 1.9 கி
மாவுச்சத்து - 72.6 கி
கால்சியம் - 25 மி.லி
இரும்புசத்து 4.1 மி.கி
பீட்டா கரோட்டின் – 47 மி.கி
தயமின் - 0.37 மி.கி
ரிபோப்ளோவின் 0.13 மி.லி

மருத்துவ பயன்கள்

சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது.

குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது.

சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.

நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

சோள ரொட்டி

சோள மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அத்துடன் நெய், உப்பு, மல்லித்தழை சேர்த்து சற்று இளம் சூடான தண்ணீர் கொண்டு நன்கு பிசைந்து சிறிது நேரம் வைத்தபின் கனமான ரொட்டிகளாக திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள்.

பயன்கள்

சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவு உணவாக சோள ரொட்டியை எடுத்து வருவதன் மூலம், அவர்களது சர்க்கரை வியாதி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கொழுப்பை குறைக்க சோள ரொட்டி மிகவும் உதவும்.

சோள இட்லி

உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து போதுமான நீரில் ஊற விடவும். பொதுவாய் உளுந்து 1 மணி நேரம் ஊறினால் போதுமானது.

அரிசியையும் சோளத்தையும் தனித்தனியாக போதுமான நீரில் ஊற வைக்கவும், இரண்டுமே 6 மணி நேரம் ஊற வேண்டும்.

இட்லிக்கு அரைப்பது போல முதலில் உளுந்தை பூக்க பூக்க அரைத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு அரிசி, சோளம் இரண்டையும் நன்கு அரைக்கவும்.

பின் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும், பின்னர் சுடச்சுட இட்லிகளை வேக வைத்து எடுக்கவும். மிருதுவான, ருசியான சோள இட்லி தயார்.

பயன்கள்

சோள இட்லியில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம்.

ரத்தசோகையைத் தடுத்து நல்ல ஆரோக்கியத்தை தரும்.

The post கொழுப்பை குறைக்கும் "சோளம்" appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™