Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


PANAMX பயிற்சி நடவடிக்கையில் கனேடிய வீரர்கள்

Posted: 30 Jul 2016 06:45 AM PDT

p

pஅமெரிக்க இராணுவம் பனாமா கால்வாயில் நடாத்தும் பாரிய இராணுவப் பயிற்சியில் கனேடிய இராணுவமும் கலந்துகொண்டுள்ளது.

"PANAMX" எனப்படும் இந்த இராணுவப் பயிற்சி நடவடிக்கை நேற்று 29ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

அமெரிக்க தென்பிராந்திய கட்டளைத் தலைமையகத்தின் அனுசரணையுடன், சிலி, கொலம்பியா, பேரு ஆகிய நாடுகளின் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி நடவடிக்கையில், 20 நாடுகள் பங்குபற்றுவதாக கூறப்படுகிறது.

பிரபல கடல் போக்குவரத்து மார்க்கமான பனாமா கால்வாய் பகுதியை ஆண்டு தோறும் சுமார் 14,000 கப்பல்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில், அந்த பகுதியில் குறித்த பயி்ற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.p

கடல் பாதுகாப்பு மட்டுமின்றி, கடலிலும், தரையிலும், வானிலும், இணையங்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப்படும் அண்மைக்கால நவீன அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த பயிற்சி நடவடிக்கையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கடல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி நடவடிக்கையில் கனடாவும் இணைந்துகொள்வதான தகவலை கனேடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான பயிற்சிகளில் கலந்து கொள்வதன் மூலம், அனைத்து கனேடிய படையினரும் எந்த வேளையிலும் நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைப்பதாக பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post PANAMX பயிற்சி நடவடிக்கையில் கனேடிய வீரர்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை வேண்டும்

Posted: 30 Jul 2016 06:39 AM PDT

j

jஆட்கடத்தல் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒட்டாவாவை தளமாக கொண்டு இயங்கும் ஆட்கடத்தல்கள் தொடர்பிலான செயற்பாட்டு அமைப்பான "Voice Found" இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்ட தகவலில், நாட்டில் இடம்பெறும் ஆட்கடத்தல் சம்பவங்களில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கையான சம்பவங்கள் ஒன்ராறியோவிலும், கிழக்கு ஒன்ராறியோவிலுமேயே இடம்பெறுவதாகவும், குறித்த இந்த பிராந்தியங்களே ஆட்கடத்தலின் மையமாக விளங்குகின்றன எனவும் அது தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில், நீண்டகால, நிலைத்து நிற்கக்கூடிய திட்டங்களை மத்திய அரசாங்கம் வகுக்க வேண்டும் எனவும், அதற்கான நிதி அதிகரிப்பினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

தகவல் சேகரிப்பு, ஆட்கடத்தல்களில் இருந்து மீட்கப்படுவோருக்கான தங்குமிட வசதி என்பவை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளும், சட்ட நுனுக்கங்களும், தொடர்பாடல்களும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.j

அதற்கு முன்னதாக நாட்டில் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் அதிமுக்கிய பிரச்சினையாக உள்ளன என்பதனை நகர நிர்வாகங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை ஆட்கடத்தல் தொடர்பில் குறைந்த அளவிலான அனைத்துலக நியமங்களையே கனடா கொண்டுள்ளதாக அமெரிக்க அரச செயலகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது.

அத்துடன் ஆட்கடத்தலில் தொடர்பில் கனடாவின் நியமங்களில் மேம்பாடு காணப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை வேண்டும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™