Tamil News | Online Tamil News |
- உள்ளாட்சி தேர்தல்: தே.மு.தி.க., புறக்கணிப்பு?
- மீண்டும் 'நமக்கு நாமே:' ஸ்டாலின் திட்டம்
- 'நான் ரெடி... நீங்க ரெடியா' : திரைத்துறைக்கு லாலு அழைப்பு
- சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் இமாச்சல் முதல்வருக்கு... நெருக்கடி!:ரூ.5 கோடி டிபாசிட் செய்ய உதவிய எல்.ஐ.சி., ஏஜன்ட் கைது
- உள்நாட்டு கறுப்பு பணத்தை தடுக்க வரித்துறை... வியூகம்!:அரசுக்கு உதவ நிதி ஆலோசகர்களுக்கு அழைப்பு
- ஏவுகணைப் பரிசோதனைகளை கைவிட ஈரானுக்கு பான் கி-மூன் வலியுறுத்தல்
- தென் ஆப்ரிக்க பயணம் ஒரு புனித யாத்திரை:பிரதமர் மோடி புகழாரம்
- அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு... சிக்கல்!: : 'எச் - 1பி' விசாவை கட்டுப்படுத்த மசோதா தாக்கல்
- டில்லியில் தமிழக கூத்து
- 1,000 மெகாவாட் மின்சாரம் விற்பனைக்கு தயார்! * மோடி உதவக்கோரி ஜெ., கடிதம்
- சமஜ்வாதியும், பகுஜன் சமாஜூம் ராகு-கேது கிரகங்கள் : அமித் ஷா
| உள்ளாட்சி தேர்தல்: தே.மு.தி.க., புறக்கணிப்பு? Posted: 09 Jul 2016 07:54 AM PDT சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி மற்றும் -த.மா.கா.,வுடன் இணைந்து, தேர்தலை சந்தித்த தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்குள், தே.மு.தி.க., கூடாரத்தை காலி செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள், ஆள் இழுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது, தே.மு.தி.க., தலைமைக்கு கடும் நெருக்க டியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தலிலும், தே.மு.தி.க., கூட்டணி தொடர வேண்டும் என, ம.ந.கூ., தலைவர்கள் ... |
| மீண்டும் 'நமக்கு நாமே:' ஸ்டாலின் திட்டம் Posted: 09 Jul 2016 07:59 AM PDT சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகம் முழுவதும் வலம் வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தார். இதற்காக, 2015 செப்டம்பர் 20-ல், கன்னியாகுமரியில் இருந்து, 'நமக்கு நாமே' பயணத்தை ஸ்டாலின் துவங்கினார்; 2016 பிப்ரவரி, 12ம் தேதி, சென்னையில் நிறைவு செய்தார். கருணாநிதி பாராட்டு : 'ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில், நமக்கு நாமே பயணம் ஒரு மைல் கல்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பாராட்டினார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நமக்கு நாமே பயணத்தில், பொதுமக்கள் அளித்த கோரிக்கைகள் இடம்பெற்றன.சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் நேரடியாக ... |
| 'நான் ரெடி... நீங்க ரெடியா' : திரைத்துறைக்கு லாலு அழைப்பு Posted: 09 Jul 2016 09:40 AM PDT ''என் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம் எடுத்தால், அதில் நானே ஹீரோவாக நடிக்க விரும்புகிறேன்,'' என, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீஹார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். மதாரி என்ற இந்தி படத்தின், 'புரோமோஷன்' பணிக்காக, நடிகர் இர்பான், பீஹார் மாநிலம் பாட்னாவிற்கு சென்றார். அப்போது, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தை சந்தித்துபேசினார்.அப்போது இர்பானிடம், ''நான், எந்த சினிமா நடிகருக்கும் குறைந்தவன் இல்லை. என் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஏதாவது படம் எடுத்தால், அதில் நானே, 'ஹீரோ'வாக நடிக்க ... |
| Posted: 09 Jul 2016 11:04 AM PDT புதுடில்லி:இமாச்சல பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான வீர்பத்ர சிங் மீதான,சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், ஐந்து கோடி ரூபாயை, எல்.ஐ.சி.,யில் முதலீடு செய்ய உதவிய, எல்.ஐ.சி., ஏஜன்ட் ஆனந்த் சவுகானை, அமலாக்கத் துறை கைது செய்துள்ளது; இது வீர்பத்ர சிங்குக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச முதல்வராக உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் வீர்பத்ர சிங், 2009 - 11ல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில், உருக்கு துறை அமைச்சராக இருந்தார்.அப்போது வருமானத் துக்கு அதிகமாக, 6.1 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, அவர் மீது குற்றம் ... |
| உள்நாட்டு கறுப்பு பணத்தை தடுக்க வரித்துறை... வியூகம்!:அரசுக்கு உதவ நிதி ஆலோசகர்களுக்கு அழைப்பு Posted: 09 Jul 2016 12:01 PM PDT புதுல்லி:உள்நாட்டு கறுப்பு பண பதுக்கலை தடுக்கவும், இதுவரை கணக்கில் காட்டப்படாத சொத்து விபரங்களை வெளிக்கொணரவும், பல அதிரடி வியூகங்களை செயல்படுத்த, வருமான வரித்துறைதிட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக, அதிக பணப் பரிவர்த்தனை, பெரும் மதிப்பிலான பத்திரப் பதிவில் ஈடுபடும் நபர்களின் பட்டியலை, வருமான வரித்துறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இதற்காக சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சி அமைந்ததும், வெளிநாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள ... |
| ஏவுகணைப் பரிசோதனைகளை கைவிட ஈரானுக்கு பான் கி-மூன் வலியுறுத்தல் Posted: 09 Jul 2016 12:12 PM PDT
நியூயார்க்:ஏவுகணைப் பரிசோதனைகளை ஈரான் நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.ஈரானும், 6 வல்லரசு நாடுகளும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தை அனுமதிக்கும் ஐ.நா. தீர்மானம் குறித்த அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் பான் கி-மூன் நேற்று முன் தினம் (8-7-16)அளித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:அணு ஆயுதம் சுமந்து செல்லக்கூடிய ஏவுகணைகளைப் பரிசோதிப்பதை ஈரான் கைவிட வேண்டும். இதுபோன்ற பரிசோதனைகள், வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை ... |
| தென் ஆப்ரிக்க பயணம் ஒரு புனித யாத்திரை:பிரதமர் மோடி புகழாரம் Posted: 09 Jul 2016 12:44 PM PDT பீட்டர்மாரிட்ஸ்பர்க், :''மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியார் வாழ்ந்த தென் ஆப்ரிக்கா வுக்கு வந்ததை, ஒரு புனித பயணமாக கருதுகிறேன்,'' என, பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்ரிக்கா வில் இரண்டாவது நாளாக நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மகாத்மா காந்தி யின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய, 1893ம் ஆண்டு ரயில் பயணத்தை நினைவுகூரும் வகையில், ரயிலில் பயணம் செய்தார் மோடி. 'சத்தியாகிரகத்தின் பிறப்பிடம்' என்ற கண்காட்சி யையும் துவக்கி வைத்த மோடி, காந்தியுடன் தொடர்புடைய, ... |
| Posted: 09 Jul 2016 12:58 PM PDT வாஷிங்டன்:வெளிநாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு பணியாற்ற வருபவர்களுக்கு அளிக்கப்படும், 'எச் - 1பி' விசா மற்றும் 'எல் - 1' விசாக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இது நிறைவேறினால், அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கும், அங்கு பணியாற்ற விரும்பும் இந்தியர்களுக்கும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களில் பணியாற்ற, இந்தியா வில் இருந்து பலர், அமெரிக்காவுக்கு செல்கின்ற னர். இவ்வாறு வேலைக்காக ... |
| Posted: 09 Jul 2016 01:17 PM PDT தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற, வழக்கம் போல டில்லியில் தெருக்கூத்து நடைபெற்று வருகிறது. தமிழக காங்., எந்த நிலையில் இருந்தாலும், இவர்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. தலைவர் பதவி கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர்.டில்லியிலுள்ள காங்., தலைமை அலுவலகத்தில், இப்போது எங்கு பார்த்தாலும், தமிழக காங்., தலைவர்களை தான் பார்க்க முடிகிறது. திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், விஜய தாரணி, வசந்த குமார்,செல்லக்குமார், கராத்தே தியாகராஜன் என, ஒரு கூட்டமே, தலைவர் பதவிக்காக அலைமோதிக் கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம், ராகுலை பார்த்து, தங்களை ... |
| 1,000 மெகாவாட் மின்சாரம் விற்பனைக்கு தயார்! * மோடி உதவக்கோரி ஜெ., கடிதம் Posted: 09 Jul 2016 01:34 PM PDT சென்னை:'மாநிலங்களுக்கு இடையே, மரபு சாரா எரிசக்தி மின்சாரத்தை கொண்டு செல்ல உதவும், பசுமை மின் வழித்தட திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். அதற்கு முன், தமிழகத்தில் இருந்து, 1,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை மற்ற மாநிலங் களுக்கு கொண்டு செல்ல, தற்காலிக ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று எழுதியுள்ள கடிதம்:பசுமை அல்லது மரபு சாரா எரிசக்தி உற்பத்தியில், நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் மொத்த காற்றாலை மின் நிறுவு திறன் அளவில், தமிழ கத்தின் ... |
| சமஜ்வாதியும், பகுஜன் சமாஜூம் ராகு-கேது கிரகங்கள் : அமித் ஷா Posted: 09 Jul 2016 02:34 PM PDT
மவ்:சமஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் உ.பி.,யை ராகு, கேது கிரகங்களைப் போல் பீடித்திருக்கின்றன எனவும், இக் கட்சிகளின் ஆட்சிகளில் மாநிலம் வளர்ச்சி அடையாது எனவும் உத்தரப் பிரதேச மாநிலம், மவ் மாவட்டத்தில், நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்தார். அவர் பேசியதாவது:சமஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ராகு, கேது கிரகங்கள் ஆகும். அவற்றின் ஆட்சிகளில் மாநிலம் வளர்ச்சி அடைவது சாத்தியமில்லை. பாஜக-வின் ஆட்சியில்தான் மாநிலம் வளர்ச்சியடைய முடியும்.மக்கள் தங்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 10,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |