Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


திரிகடுகம் நல்லாதனார்

Posted: 09 Jul 2016 01:31 PM PDT

வருவாய் அடைபட்டு வாழ்ந்த காலத்தும் துணையாந் தன்மையுடையார் துணைவரேயாவர்; தம் கருத்தோடு பொருந்தி நடந்த காலத்தும் பகையாந் தன்மையுடையார் பகைவரேயாவர்; துன்பத்தைச் செய்யும் கீழ்மக்கள் பிளக்கப்பட்ட கல்லையே ஒப்பாவார் ஆகிய இந்த மூவரையும் ஆராயுமிடத்து, அவரிடத்துள்ள மெய்ம்மை காணப்படும்.

பிரக்யா தாக்குர் - ராஜ்நாத் சந்திப்பு: புகைப்படத்தை வெளியிட்டார் திக்விஜய் சிங்

Posted: 09 Jul 2016 01:26 PM PDT

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் துறவி பிரக்யா தாக்குருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் ஆகியோர் காணப்படும் புகைப்படத்தை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சுட்டுரையில் வெளியிட்டார்.

கரூரில்ஜூலை 21-ல் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2016 01:26 PM PDT

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மின் ஊழியர் மத்தியமைப்பின் மாவட்ட பேரவை கூட்டத்தில் வரும் ஜூலை 21-ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கள்ளப்பள்ளி ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Posted: 09 Jul 2016 01:26 PM PDT

அடிப்படை வசதி செய்துதரக் கோரி கள்ளப்பள்ளி ஊராட்சி உறுப்பினர்கள் சனிக்கிழமை காலை ஊராட்சி அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கூரை பெயர்ந்து ஆபத்தான நிலையில் கள்ளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம்

Posted: 09 Jul 2016 01:25 PM PDT

மேற்கூரையின் சிமென்ட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள கள்ளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தினை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறார்களுக்கும் தலைக்கவசம் விரைவில் கட்டாயமாகிறது!

Posted: 09 Jul 2016 01:25 PM PDT

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நகரை வந்தடைந்தது அமராவதி ஆற்று நீர்

Posted: 09 Jul 2016 01:25 PM PDT

கோரிக்கையின் பேரில் அமராவதி அணையில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் திறக்குமாறு கடந்த 5 ஆம் தேதி தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

ஐ.நா. வீர தீர விருதைப் பெறும் முதல் இந்திய கடற்படை பெண் கேப்டன்

Posted: 09 Jul 2016 01:25 PM PDT

கடலில் வீர தீரச் செயல் புரிவதற்காக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு அளிக்கும் விருதை முதல் தடவையாக இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண்ணான கேப்டன் ராதிகா மேனன் பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜெ.பேரவை ஆலோசனைக் கூட்டம்

Posted: 09 Jul 2016 01:25 PM PDT

கரூர் மாவட்ட ஜெ.பேரவை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பேருந்து நிலைய ரவுண்டனா அருகில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) நடைபெறுவதை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Jul 2016 01:24 PM PDT

ஆதி திராவிடர் நல விடுதிகளில் நடப்பு 2016-17 ஆம் ஆண்டில் சேர தகுதியுடைய மாணவ,மாணவியர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் காகர்லாஉஷா தெரிவித்துள்ளார்.

மாணவர் சங்க மண்டல பயிற்சி முகாம்

Posted: 09 Jul 2016 01:24 PM PDT

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் மண்டல பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்று வருகிறது.

கல்வியின் தரத்தை உயர்த்துவதில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்: பிரகாஷ் ஜாவடேகர்

Posted: 09 Jul 2016 01:24 PM PDT

"கல்வியின் தரத்தை உயர்த்துவதில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம்; இதில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை மோடி தலைமையிலான தேசிய ஜனநாயககக் கூட்டணி அரசு பங்கேற்கச் செய்யும்' என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் நகை, ரொக்கம் திருட்டு

Posted: 09 Jul 2016 01:24 PM PDT

தஞ்சாவூரில் கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் கதவை உடைத்து நகை, ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் நடமாடும் நூலகம் தொடக்கம்

Posted: 09 Jul 2016 01:24 PM PDT

 தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் நடமாடும் நூலகத்தை மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான (பொறுப்பு) என். சுப்பையன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

பாபநாசம் அருகே மளிகைக் கடை உள்பட அடுத்தடுத்த 3 கடைகளில் திருட்டு

Posted: 09 Jul 2016 01:23 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மதகடி பஜாரில் கார்த்திகேயன் ஐஸ்கிரீம் கடையும், இவரது கடைக்கு அருகே சங்கர் என்பவர் அரிசிக் கடையும், தனஞ்ஜெயன் மளிகைக் கடையும், மோகன் எலெக்ட்ரிக்கல் கடையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இர

விவசாயியைத் தாக்கிய தந்தை, மகன் கைது

Posted: 09 Jul 2016 01:23 PM PDT

பாபநாசம் அருகே கல்லக்குடி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (56). விவசாயி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (57). இவரது மனைவி தமிழரசி. மகாலிங்கம் வெள்ளிக்கிழமை மது அருந்தி வந்த மகாலிங்கம் தனது மனைவி தமிழரசியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்தாராம்

சுற்றுச்சுவர் இல்லாத திருமானூர் கால்நடை மருத்துவமனை!கூரை இல்லாத பாதுகாப்பு கொட்டகையை சீரமைக்கவும் வலியுறுத்தல்

Posted: 09 Jul 2016 01:22 PM PDT

அரியலூர் மாவட்டம், திருமானூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் மற்றும் கொட்டகை அமைத்து தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

தா.பழூரில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

Posted: 09 Jul 2016 01:22 PM PDT

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் பொது இடங்களில் புகைப்பிடித்த மற்றும் பள்ளி அருகே புகையிலை பொருள்களை விற்றவர்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் அபராதம் விதித்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் 2 பெண்களுக்கு பிரசவம்

Posted: 09 Jul 2016 01:22 PM PDT

அரியலூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் 2 பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது.

பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க கோரிக்கை

Posted: 09 Jul 2016 01:21 PM PDT

அரியலூர் மாவட்டத்திலுள்ள பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டு, உரிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

"தொழிற்பயிற்சி நிலையங்களில் 50% இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்'

Posted: 09 Jul 2016 01:21 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 50% இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது என்றார் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ப. மஞ்சுளாதேவி.

ஆங்கில மொழியறிவு அவசியம்

Posted: 09 Jul 2016 01:20 PM PDT

மாணவர்கள் ஆங்கில மொழியறிவின் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார் திருச்சி தூய வளனார் கல்லூரி துணை முதல்வரும், ஆங்கிலத் துறை தலைவருமான பேராசிரியர் ஜி. பாலகிருஷ்ணன்.

ஐ.எஸ்.ஸில் 17 கேரள இளைஞர்கள்? விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

Posted: 09 Jul 2016 01:20 PM PDT

கேரளத்திலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்ற மூன்று பெண்கள் உள்பட 17 இளைஞர்கள், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த அந்த மாநில அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

"ஆரம்பக் கல்வியை சிறப்பாக அளிக்க வேண்டும்'

Posted: 09 Jul 2016 01:20 PM PDT

முதன்மை மாவட்டமாக பெரம்பலூர் விளங்க, மாணவ, மாணவிகளுக்கு ஆரம்பக்கல்வி சிறப்பாக அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

"காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

Posted: 09 Jul 2016 01:20 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 617 கோடியில் மேற்கொள்ளப்படும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டப் பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.

விஜய் மல்லையா நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கான விதிவிலக்கு ரத்து

Posted: 09 Jul 2016 01:19 PM PDT

அன்னியச் செலாவணி நெறிமுறை சட்ட விதிகளை மீறியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், கிங் ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக அளிக்கப்பட்ட விதிவிலக்கை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது.

திருமயம் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

Posted: 09 Jul 2016 01:19 PM PDT

புதுக்கோட்டை அருகேயுள்ள திருமயம் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

200 பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்

Posted: 09 Jul 2016 01:19 PM PDT

தமிழகத்தில் 200 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காவலர் பயிற்சிப் பள்ளியில் ஐ.ஜி. ஆய்வு

Posted: 09 Jul 2016 01:19 PM PDT

புதுக்கோட்டை காவலர் பயிற்சிப் பள்ளியில், தமிழக காவலர் பயிற்சிப்பள்ளி ஐ.ஜி. பெரியய்யா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

வரதட்சிணைக் கொடுமை: 8 பேர் மீது வழக்கு

Posted: 09 Jul 2016 01:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள காட்டுநாவலைச் சேர்ந்தவர் எஸ். சந்திரசேகரன் (39), இவரது மனைவி தமிழ்ப்பூங்குயில்மொழி (30). இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், சந்திரசேகரன், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியிட

செந்தூரான் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு

Posted: 09 Jul 2016 01:18 PM PDT

புதுக்கோட்டை அருகே லெணாவிலக்கு செந்தூரான் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே இளைஞர் மர்ம சாவு

Posted: 09 Jul 2016 01:18 PM PDT

பொன்னமராவதி அருகே இளைஞர் மர்மமான முறையில் புஞ்சைகாட்டில் இறந்து கிடந்தார்.

அறந்தாங்கி அருகே உண்டியலில் திருடியவர் கைது

Posted: 09 Jul 2016 01:18 PM PDT

அறந்தாங்கி அருகே சனிக்கிழமை அதிகாலை உண்டியலில் பணம் திருடியவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.

அரசு போக்குவரத்துப் பணிமனைகளில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும்

Posted: 09 Jul 2016 01:18 PM PDT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென சிஐடியு தொழிற் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: கருணாநிதி கோரிக்கை

Posted: 09 Jul 2016 01:18 PM PDT

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றிய இடம் தென்னாப்பிரிக்கா: பிரதமர் மோடி

Posted: 09 Jul 2016 01:17 PM PDT

""மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்தான்'' என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

எம்எல்ஏ குறைகேட்பு

Posted: 09 Jul 2016 01:17 PM PDT

பொன்னமராவதியில் திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி சனிக்கிழமை பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

குழந்தைநேயப் பள்ளி திட்டத்துக்கு 200 பள்ளிகள் தேர்வு

Posted: 09 Jul 2016 01:17 PM PDT

தமிழகத்தில் குழந்தைநேயப் பள்ளி திட்டத்துக்காக 200 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சமூகக் கல்வி நிறுவன இயக்குநர் ஜெ. ஷியாம் சுந்தர்.

தஞ்சாவூரில் ஜூலை 12 முதல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

Posted: 09 Jul 2016 01:16 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த இரு நாள் பயிற்சி

பாபநாசம் அருகே பேருந்து மீது கல்வீச்சு

Posted: 09 Jul 2016 01:16 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்கி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் நகை, ரொக்கம் திருட்டு

Posted: 09 Jul 2016 01:16 PM PDT

தஞ்சாவூரில் கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் கதவை உடைத்து நகை, ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாஜகவின் சவாலை ஏற்கத் தயார்: ஹரீஷ் ராவத் அறிவிப்பு

Posted: 09 Jul 2016 01:16 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக தம் மீது தெரிவிக்கப்படும் புகார் குறித்து விவாதம் நடத்த தயாரா என்று பாஜக விடுத்துள்ள சவாலை ஏற்பதாக முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.78.69 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல்

Posted: 09 Jul 2016 01:15 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 78 லட்சத்து 69 ஆயிரத்து 612 மதிப்பிலான பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு பின்னர் நாதன்கோவில் வானமாமலை மடத்தில் ஜீயர் சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம்

Posted: 09 Jul 2016 01:15 PM PDT

உலக நன்மைக்காக 200 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோவில் வானமாமலை மடத்தில் மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்க உள்ளார்.

பாபநாசம் அருகே மளிகைக் கடை உள்பட அடுத்தடுத்த 3 கடைகளில் திருட்டு

Posted: 09 Jul 2016 01:15 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மதகடி பஜாரில் கார்த்திகேயன் ஐஸ்கிரீம் கடையும், இவரது கடைக்கு அருகே சங்கர் என்பவர் அரிசிக் கடையும், தனஞ்ஜெயன் மளிகைக் கடையும், மோகன் எலெக்ட்ரிக்கல் கடையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.

தொட்டியம் அருகேவீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் சாவு; 7 பேர் காயம்

Posted: 09 Jul 2016 01:14 PM PDT

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சனிக்கிழமை வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

லால்குடி அருகே மரம் விழுந்து பெண் சாவு

Posted: 09 Jul 2016 01:14 PM PDT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட 3 மணி நேரப் போராட்டம்

Posted: 09 Jul 2016 01:12 PM PDT

கிராமத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

மாணிக்கவாசகர் குரு பூஜை

Posted: 09 Jul 2016 01:12 PM PDT

ஆற்காடு தோப்புக்கானா கங்காதர ஈஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பூட்டியேக் கிடக்கும் மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள்:பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Posted: 09 Jul 2016 01:12 PM PDT

தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

Posted: 09 Jul 2016 01:12 PM PDT

வேலூர் அருகே ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரிகளை கிராம மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்தி எதிரொலி:ரூ. 1.44 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட முடிவு

Posted: 09 Jul 2016 01:11 PM PDT

அரக்கோணத்தில் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 1.44 கோடி மதிப்புள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வது குறித்து தினமணியில் வெளிவந்த செய்தியை அடுத்து, அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட கோயில் திருப்பணிக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அறிவாற்றலுடன் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்:நீதிபதி டி.முருகேசன்

Posted: 09 Jul 2016 01:11 PM PDT

அறிவாற்றலுடன் கூடிய திறமையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என புதுதில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினருமான டி.முருகேசன் பேசினார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2016 01:11 PM PDT

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாதனூர் கிளை சார்பாக மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: ஜூலை 12-இல் மூன்றாம் கட்டத் தேர்வு

Posted: 09 Jul 2016 01:11 PM PDT

விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்கள் தரமான பயிற்சி, உணவு, தங்குமிட வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான மூன்றாம் கட்ட மாநில

"அம்மா' திட்ட முகாம்

Posted: 09 Jul 2016 01:10 PM PDT

அரக்கோணத்தை அடுத்த ஆணைப்பாக்கத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெல் நிறுவனம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா:திருமாவளவன் பங்கேற்பு

Posted: 09 Jul 2016 01:10 PM PDT

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் மற்றும் எஸ்சி, எஸ்டி தொழிலாளர் மேம்பாட்டு ஒன்றியம் ஆகியவற்றின் சார்பில் அம்பேத்கரின் 126-ஆவது பிறந்த நாள் விழா, பெல் மனமகிழ் மன்றத்தில் வெ

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Jul 2016 01:10 PM PDT

வேலூர் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வசிப்போர் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்.

அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 09 Jul 2016 01:09 PM PDT

குடியாத்தம் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலர் நீக்கம்

Posted: 09 Jul 2016 01:09 PM PDT

வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலர் க.தேவராஜி, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல்

Posted: 09 Jul 2016 01:09 PM PDT

ரயில்களில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தில் திசைசெயலியை தயாரிக்க திட்டம்

Posted: 09 Jul 2016 12:30 PM PDT

மேம்படுத்தப்பட்ட, புதிய தொழில்நுட்பத்தில் அமைந்த திசைசெயலியை (ரூட்டர்ஸ்) தயாரிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

கர்நாடக டிஎஸ்பி கணபதி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை: சித்தராமையா

Posted: 09 Jul 2016 12:26 PM PDT

கர்நாடக காவல்துறை டிஎஸ்பி எம்.கே.கணபதி தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைப்பது அவசியமற்றது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை நான் ஊக்குவிப்பதாக வங்கதேசம் கருதவில்லை

Posted: 09 Jul 2016 12:24 PM PDT

பயங்கரவாதிகளுக்கு நான் ஊக்கமளித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை வங்கதேச அரசு அதிகாரிகள் நம்பவில்லை என்று வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக சர்ச்சையில் சிக்கிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்தார்.

ம.பி.யில் தொடர் மழைக்கு 13 பேர் பலி

Posted: 09 Jul 2016 12:24 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மதுரா - பல்வல் இடையே சோதனை ஓட்டம்: 120 கி.மீ. வேகத்தில் பயணித்த "டால்கோ' ரயில்

Posted: 09 Jul 2016 12:23 PM PDT

ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான "டால்கோ' அதிவேக ரயிலின் இரண்டாவது கட்ட சோதனை ஓட்டம், மதுரா - பல்வல் இடையிலான வழித்தடத்தில் சனிக்கிழமை தொடங்கியது. மணிக்கு சுமார் 120 கிமீ வேகத்தில், சோதனை குழுவினருடன் அந்த ரயில் இயக்கிப் பார்க்கப்பட்டது.

தில்லிகை இலக்கியச் சந்திப்புக் கூட்டம்

Posted: 09 Jul 2016 12:23 PM PDT

தில்லிகை இலக்கியச் சந்திப்புக் கூட்டம் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பாரதி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்:ராஜேந்திர குமார் குரல் பதிவு ஆய்வில் தொடக்கநிலை ஆதாரங்கள்: சிபிஐ தகவல்

Posted: 09 Jul 2016 12:23 PM PDT

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமாரின் குரல் பதிவுகளில் நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனையில், ரூ.50 கோடி மதிப்பிலான அரசுப் பணிகள் தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

கேஜரிவால் பங்கேற்கவிருந்த சூரத் நிகழ்ச்சி ரத்து:குஜராத் அரசு மீது குற்றச்சாட்டு

Posted: 09 Jul 2016 12:22 PM PDT

குஜராத் மாநிலம், சூரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

6 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தில்லி அரசு

Posted: 09 Jul 2016 12:22 PM PDT

தில்லி அரசு 6 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜவாதியும், பகுஜன் சமாஜூம் ராகு-கேது போன்றவை: அமித் ஷா

Posted: 09 Jul 2016 12:21 PM PDT

சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தை ராகு, கேது கிரகங்களைப் போல் பீடித்துள்ளன என்றும், இந்தக் கட்சிகளின் ஆட்சிகளில் மாநிலம் வளர்ச்சி அடையாது என்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்

Posted: 09 Jul 2016 12:15 PM PDT

தனிப்பட்ட அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பயங்கரவாதத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

வஸந்த் குஞ்சில் இருந்து குர்கானுக்கு 12 நிமிடத்தில் "பறந்த' இதயம்!

Posted: 09 Jul 2016 12:14 PM PDT

தில்லியின் வஸந்த் குஞ்சில் இருந்து குர்கான் மருத்துவமனையிலிருக்கும் ஒரு நோயாளிக்கு பொருத்துவதற்காக 12 நிமிடத்தில் இதயம் எடுத்துச் செல்லப்பட்டது.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடலில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை: ‘தேரி’ அமைப்பு பரிந்துரை

Posted: 09 Jul 2016 12:13 PM PDT

பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமிடல்களில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை என்று ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸஸ் - தேரி) பரிந்துரைத்துள்ளது.

திரையரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 09 Jul 2016 12:13 PM PDT

தில்லியின் கனாட் பிளேஸ் பகுதியிலுள்ள பிரபல திரையரங்குக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீர் லாரி ஒப்பந்த முறைகேடு விவகாரம்:ஷீலா தீட்சித் மீது கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு

Posted: 09 Jul 2016 12:13 PM PDT

தண்ணீர் லாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், தில்லி அரசின் "உண்மை கண்டறியும் குழு'வின் விசாரணையை கேள்விக்குள்ளாக்குவது துரதிருஷ்டவசமானது என்று தில்லி நீர்வளத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு கபில் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.

"மாஞ்சா' நூல் கழுத்தை அறுத்ததில் இளைஞர் சாவு

Posted: 09 Jul 2016 12:13 PM PDT

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் "மாஞ்சா' நூல் கழுத்தை அறுத்ததில், தில்லியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

விரைவில் அமெரிக்கா செல்கிறார் ராஜ்நாத் சிங்

Posted: 09 Jul 2016 12:12 PM PDT

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் 17-ஆம் தேதி அந்நாட்டுக்குப் புறப்படுகிறார். அவர் அங்கு 5 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

வளர்ப்பு மகனை கொன்ற தாய் கைது

Posted: 09 Jul 2016 12:12 PM PDT

தில்லி புறநகர்ப் பகுதியில் உள்ள வசந்த் விஹாரில் வளர்ப்பு மகனை கொன்றதாக தாய் கைது செய்யப்பட்டார்.

தாய் - மகள் கொலையில் பெண் உள்பட மூவர் கைது

Posted: 09 Jul 2016 12:12 PM PDT

தில்லியின் அலிப்பூர் பகுதியில் தாய் - மகள் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிதியாண்டு மாற்றத்தை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு "அசோசெம்' வலியுறுத்தல்

Posted: 09 Jul 2016 12:12 PM PDT

நம் நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் "ஏப்ரல் - மார்ச்' என்ற நிதியாண்டு காலத்தை மாற்றும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசெம்) வலியுறுத்தியுள்ளது.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும்: வங்கதேசம் உறுதி

Posted: 09 Jul 2016 12:12 PM PDT

வங்கதேசத்துக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணி: டிடிசிக்கு விருது

Posted: 09 Jul 2016 12:11 PM PDT

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் போக்குவரத்து பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் பணிக்காக தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு (டிடிசி) "இந்திய பேருந்து விருது-2016' (இந்தியா பஸ் அவார்டு-2016) வழங்கப்பட்டு உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்

Posted: 09 Jul 2016 12:11 PM PDT

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ரவீந்திரநாத் திரிபாடி அக்கட்சியிலிருந்து சனிக்கிழமை விலகினார்.

மக்கள் தேமுதிகவினர் மீது தாக்குதல் நடத்த விஜயகாந்த் உத்தரவு”வி.சி.சந்திரகுமார் குற்றச்சாட்டு

Posted: 09 Jul 2016 12:11 PM PDT

மக்கள் தேமுதிகவினர் மீது தாக்குதல் நடத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளதாக என்று மதேமுதிக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் குற்றம்சாட்டினார்.

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.19 லட்சம் நல உதவிகள்:ஆட்சியர் வழங்கினார்

Posted: 09 Jul 2016 12:10 PM PDT

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 76 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி சனிக்கிழமை வழங்கினார்.

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு:நாளை தொடக்கம்

Posted: 09 Jul 2016 12:10 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 11) தொடங்குகிறது.

வீடு புகுந்து 11 பவுன் நகை திருட்டு

Posted: 09 Jul 2016 12:10 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய நத்தம் பகுதியில் வீடு புகுந்து 11 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் பண்ணை வீட்டில் திருட்டு

Posted: 09 Jul 2016 12:09 PM PDT

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் பண்ணை வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவை திருட்டுபோயின.

காவல் ஆய்வாளரைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2016 12:09 PM PDT

கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒடிஸா: துப்பாக்கிச் சண்டையில் 6 அப்பாவிகள் பலி

Posted: 09 Jul 2016 12:09 PM PDT

ஒடிஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சிக்கி, 2 பெண்கள் உள்பட 6 கிராமத்தினர் உயிரிழந்தனர்.

ஆந்திர தொழிற்சாலையைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2016 12:09 PM PDT

தமிழக எல்லையில் உள்ள ஏரிகளை மாசுபடுத்தி வருவதாக ஆந்திர மாநில தொழிற்சாலையை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

Posted: 09 Jul 2016 12:09 PM PDT

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், திருவள்ளூர் எம்எல்ஏ., விஜி.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.

வீரபத்ர சிங் மீதான கருப்புப் பண வழக்கு: எல்ஐசி முகவர் கைது

Posted: 09 Jul 2016 12:09 PM PDT

ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக, ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) முகவர் ஆனந்த் செüஹான் என்பவரை அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

உ.பி.: சட்டவிரோத கட்டடம் இடிக்கப்பட்டபோது 4 பேர் பலி

Posted: 09 Jul 2016 12:08 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பல்லடுக்கு கட்டடத்தை இடிக்கும் பணியின்போது இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

பொதுத் தேர்வில் 100% தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

Posted: 09 Jul 2016 12:08 PM PDT

குழித்துறை கல்வி மாவட்டத்துக்குள்பட்ட பள்ளிகளில் 2015 - 2016ஆம் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவிலில் நகைத்தொழிலாளர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 09 Jul 2016 12:08 PM PDT

 நாகர்கோவிலில் நகைத்தொழிலாளர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நீர், சுகாதாரம் குறித்த தேசிய பயிற்சி முகாம்

Posted: 09 Jul 2016 12:07 PM PDT

தேசிய அளவிலான நீர், சுகாதாரம் குறித்து ஆந்திர, தெலங்கானா, கேரள, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெற்றது.

சாலைகளைச் சீரமைக்க ஆட்சியரிடம் நகர்மன்றத் தலைவி வலியுறுத்தல்

Posted: 09 Jul 2016 12:07 PM PDT

நாகர்கோவில் நகரப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகளைச் சீரமைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வயிற்றுப் போக்கு, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஆலோசனைக் கூட்டம்

Posted: 09 Jul 2016 12:07 PM PDT

குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™