Tamil News | Online Tamil News |
- 'காங்., அரசால் தொல்லை அதிகம்; நெருக்கடி கொடுத்தார் ஜார்ஜ்'
- மஹாராஷ்டிராவில் பா.ஜ., தான் 'கிங்' : அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 'பெப்பே'
- கடன் வாங்கி மோசடி? : ரஜினி மனைவிக்கு 'நோட்டீஸ்'
- பான் மசாலா, குட்கா தயாரிப்பு நிறுவனங்களின் வரி ஏய்ப்பு ரூ.100 கோடி! * இரு மாநிலங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
- அதிரடி! ரூ. 12,500 கோடி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்ப திட்டம்: மோசடி செய்த டெலிகாம் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- ஆயுத தயாரிப்பு துறையில் வாய்ப்பு: மோடி அழைப்பு
- மத்திய அமைச்சர்களில் 72 கோடீஸ்வரர்கள்:ரூ.113 கோடியுடன் அருண் ஜெட்லி முதலிடம்
- மூட நம்பிக்கை தடை சட்டம்: பீதியால் நிறுத்திய முதல்வர்
- ஆதார் கார்டு' கேட்கலாமா?:ஸ்டாலின் கடும் கண்டனம்
- விம்பிள்டன் டென்னிஸ்: பைனலில் ஆன்டி முர்ரே
| 'காங்., அரசால் தொல்லை அதிகம்; நெருக்கடி கொடுத்தார் ஜார்ஜ்' Posted: 08 Jul 2016 09:25 AM PDT மடிகேரி: ''லஞ்சம் வாங்கி கொடுக்கவும், சொந்த வேலையை செய்யவும் உயர் போலீஸ் அதிகாரிகள் பெரும் நெருக்கடி கொடுத்தனர். குமாஸ்தாவை விட கேவலமாக நடத்தினர்,'' என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன், டெபுடி எஸ்.பி., கணபதி கதறினார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், மடிகேரியில் டெபுடி எஸ்.பி., கணபதி, தனியார் ஊடகம் ஒன்றில் கூறியதாவது: கடந்த, 2008ல், மங்களூரு கத்ரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தேன். அப்போது, சர்ச் கலவரம் நடந்தது. கற்களை வீசி தாக்குவது, தடியடி என அனைத்தும் நடந்தது. இதை கட்டுப்படுத்த அதிகளவில் உழைத்தேன். ... |
| மஹாராஷ்டிராவில் பா.ஜ., தான் 'கிங்' : அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 'பெப்பே' Posted: 08 Jul 2016 10:09 AM PDT மும்பை: மஹாராஷ்டிர மாநில அமைச்சரவை, 10 புதிய அமைச்சர்களுடன், நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணி கட்சியான சிவசேனா வுக்கு, இரு இணையமைச்சர் பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டதால், அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார். மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். ஆட்சி அமைத்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த, 10 பேர், நேற்று புதிதாக பதவியேற்றனர். ஏற்கனவே இணையமைச்சராக ... |
| கடன் வாங்கி மோசடி? : ரஜினி மனைவிக்கு 'நோட்டீஸ்' Posted: 08 Jul 2016 10:25 AM PDT ரஜினி நடித்த, கோச்சடையான் படத்திற்கான கடன் தொகைக்கு உத்தரவாத கையெழுத்து போட்ட, அவரது மனைவி லதாவுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. ரஜினி, தீபிகா படுகோனே நடித்து, ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கிய, கோச்சடை யான் படம், 2014ல் வெளியானது. இப்படத்தின் இணை தயாரிப்பாளர், 'மீடியா ஒன் குளோபல்' நிறுவன இயக்குனர் முரளி மனோகர். இவர், 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாரிடம், இப்படத்திற்காக, 14.90 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதற்கு, முரளி மனோகர் தாக்கல் செய்த ஆவணங் களுக்கு, லதா உத்தரவாதம் அளித்து, கையெழுத்து போட்டதாக ... |
| Posted: 08 Jul 2016 10:49 AM PDT தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள பான் மசாலா, குட்கா தயாரிப்பு நிறுவன ஆலைகள், கிடங்குகள் மற்றும் வீடுகள் என, 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரித்து விற்ற இந் நிறுவனங்களும், வியாபாரிகளும், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியுள்ளனர். அதன்மூலம், 100 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் தடை செய்யப் பட்டுள்ளன. அதையும் மீறி, இந்தப் பொருட்கள், மாநிலம் முழுவதும் தங்கு ... |
| Posted: 08 Jul 2016 11:11 AM PDT புதுடில்லி:இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் ஆறு தனியார் நிறுவனங்கள், வருவாயில், 46,000 கோடி ரூபாயை குறைத்து காட்டியுள்ளதாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, 12,500 கோடி ரூபாயை செலுத்தும்படி, இந்த நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.முன்னணி தனியார் நிறுவனங்கள், நாடு முழுவதும் தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள், மத்திய அரசிடமிருந்து உரிமம் பெற்று, மொபைல் போன், இணையதள சேவை போன்றவற்றை வழங்கி வருகின்றன. |
| ஆயுத தயாரிப்பு துறையில் வாய்ப்பு: மோடி அழைப்பு Posted: 08 Jul 2016 11:19 AM PDT பிரிடோரியா: ''ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பில், மிகப்பெரிய வாய்ப்பு கள் இந்தியாவில் உள்ளன; அதை தென்னாப்ரிக்கா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று, தென்னாப்ரிக்காவுக்கு சென்றார். அதிபர் ஜேக்கப் ஜுமாவை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார்.நெருங்கிய தொடர்பு:அதன் பின், பிரதமர் மோடி கூறியதாவது: சர்வ தேச அளவில், ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பில், மிக ... |
| மத்திய அமைச்சர்களில் 72 கோடீஸ்வரர்கள்:ரூ.113 கோடியுடன் அருண் ஜெட்லி முதலிடம் Posted: 08 Jul 2016 11:54 AM PDT புதுடில்லி:சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை, 78 ஆக உயர்ந்தது; இதில், 72 பேர் கோடீஸ்வரர்கள்; 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. டில்லியைச் சேர்ந்த ஜனநாயக மறுமலர்ச்சிக் கான சங்கம் என்ற அமைப்பு, அமைச்சர்கள் குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள்:* புதிய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு, 8.73 கோடி ரூபாய். ஒவ்வொரு அமைச்சரின் சராசரி சொத்து மதிப்பு, 12.94 கோடி ரூபாய் * புதிய அமைச்சர்களில் மிகப் பெரும் பணக்காரரான எம்.ஜே. அக்பருடைய சொத்து மதிப்பு, 44.90 ... |
| மூட நம்பிக்கை தடை சட்டம்: பீதியால் நிறுத்திய முதல்வர் Posted: 08 Jul 2016 12:30 PM PDT பெங்களூரு:'கர்நாடகா பலி மற்றும் இதர அவல நடைமுறைகள், அகோரி நடைமுறைகள் மற்றும் மாயமந்திரத்தை நிர்மூலமாக்கும் சட்டம் - 2016' மசோதாவுக்கு அமைச்சர் களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. இதில், 'கர்நாடக பலி மற்றும் இதர அவல நடைமுறை கள், அகோரி நடைமுறைகள் மற்றும் மாய மந்திரத்தை நிர்மூலமாக்கும் சட்டம் - 2016' தொடர்பாக, விரிவாக விவாதித்து அனுமதி பெற தீர்மானிக்கப்பட்டிருந்தது.இவ்விஷயம், ... |
| ஆதார் கார்டு' கேட்கலாமா?:ஸ்டாலின் கடும் கண்டனம் Posted: 08 Jul 2016 12:59 PM PDT தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை: 'வரும் செப்., மாதத் திற்குள், 'ஆதார் கார்டு' விவரங்களை கொடுக்கா விட்டால், சமையல் காஸ் மானியம் ரத்தாகும்' என்று எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 'அரசின் பயன்களைப் பெறுவதற்கு, ஆதார் கார்டு கட்டாயம் என யாரையும் வற்புறுத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றம்வலியுறுத்திய பிறகும், 'சமையல் காஸ் சிலிண்டர் மானியம் பெறு வதற்கு ஆதார் கார்டு கட்டாயம்' என, எண்ணெய் நிறுவனங்கள் கூறுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது; மானியம் பெறும் ஏழை - எளிய ... |
| விம்பிள்டன் டென்னிஸ்: பைனலில் ஆன்டி முர்ரே Posted: 08 Jul 2016 01:07 PM PDT
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்திய ஆன்டி முர்ரே, பைனலுக்கு முன்னேறினார். பெடரர் அதிர்ச்சி தோல்வி: லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதியில் ரோஜர் பெடரரை வீழ்த்திய ராவோனிக் பைனலுக்கு முன்னேறினார். அசத்தல் ஆன்டி முர்ரே: மற்றொரு அரையிறுதியில், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். நாளை(10-07-16) நடைபெறும்விம்பிள்டன் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 09,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |