Tamil News | Online Tamil News |
- மின்சார பிரச்னைக்கு தீர்வு: ஆகஸ்டில் ஆலோசனை
- இன்று நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு! ... 75 வயதை தாண்டியவர்களை கழற்றி விட மோடி திட்டம்
- திறன் சாராத கூலித் தொழிலாளர்களின் சம்பளம்... உயர்கிறது ! மத்திய தொழிலாளர் துறை விரைவில் அறிவிப்பு
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க முடிவு?
- தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்ட காங்., 'இமேஜை' உயர்த்த களமிறங்கும் பிரியங்கா
- 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு
- சுவாதி கொலை வழக்கு ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை
- ஆந்திர அரசு மீது வழக்கு: பாலாறு பிரச்னையில் முடிவு
- ரூ.570 கோடி விவகாரம்: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு
- மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தனுக்கு 'பார்லர்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் 'குட்டு'
- 'பாரம்பரிய ஆடைகளை தவிருங்க!' ஐக்கிய அரபு எமிரேட் எச்சரிக்கை
- 'தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்'; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஆவேசம்
| மின்சார பிரச்னைக்கு தீர்வு: ஆகஸ்டில் ஆலோசனை Posted: 04 Jul 2016 09:30 AM PDT தென் மாநிலங்களில் நிலவும் மின்சார பிரச்னைக்கு தீர்வு காண, ஐந்து மாநில மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம், சென்னையில், அடுத்த மாதம் நடைபெறுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் இருந்து, மத்திய அரசின், 'பவர் கிரிட்' நிறுவன வழித்தடம் வழியாக, தமிழகத்திற்கு, மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.பிற மாநிலங்களுக்கு... இதேபோல, தமிழகத்தில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம், வல்லுார் அனல் மின் நிலையம், துாத்துக்குடி என்.டி.பி.எல்.,ஆகிய மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், பிற ... |
| Posted: 04 Jul 2016 09:58 AM PDT மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவும் 75 வயதை கடந்தவர்களை, அமைச்சரவையிலிருந்து கழற்றி விடவும், பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததுமே, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது; ஆனால், அப்படி எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்நிலையில் உ.பி., உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ள நிலையில், அமைச்ச ரவை இன்று மாற்றி அமைக்கப் படுகிறது. மத்திய அரசின் ... |
| திறன் சாராத கூலித் தொழிலாளர்களின் சம்பளம்... உயர்கிறது ! மத்திய தொழிலாளர் துறை விரைவில் அறிவிப்பு Posted: 04 Jul 2016 10:04 AM PDT புதுடில்லி,:திறன் சாராத கூலித் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் பயன்பெறுவர். ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதனால், நாடு முழுவதும் ஓய்வூதியர்கள் உட்பட, ஒரு கோடி பேர் பயன்பெறுவர்; அரசுக்கு கூடுதல் செலவாக, ஆண்டுதோறும், 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ... |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க முடிவு? Posted: 04 Jul 2016 10:09 AM PDT புதுடில்லி: ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய வீர விளையாட்டு போட்டி களுக்கு அனுமதி அளிக்கும் வகையில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை கொண்டு வருகிறது மத்திய அரசு. தமிழகத்தில், பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு எனப்படும் வீர விளையாட்டு பாரம்பரியமாக விளையாடப்பட்டு வருகிறது. இதைத் தவிர, ரேக்ளா போட்டிகள், மாட்டு வண்டி போட்டி என, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காளைகளை பயன்படுத்தும் போட்டிகள் நடந்து வந்தன.தடையை நீக்க மறுப்புஜல்லிக்கட்டு உள்ளிட்ட இந்த வீர விளையாட்டு போட்டி களுக்கு, 2014ல், நீதிபதிகள் ... |
| தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்ட காங்., 'இமேஜை' உயர்த்த களமிறங்கும் பிரியங்கா Posted: 04 Jul 2016 10:12 AM PDT புதுடில்லி,:அடுத்தாண்டு நடக்கவுள்ள, உ.பி., மாநில சட்டசபைத் தேர்தலில், காங்., கட்சியின் நட்சத்திர பிரசாரகராக, அக்கட்சித் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்., கட்சி சமீப காலமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. காங்., துணைத் தலைவர் ராகுல், மத்தியில் ஆளுங்கட்சியான, பா.ஜ.,வுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால், சோனியாவின் மகளும், ராபர்ட் வாத்ராவின் மனைவியுமான பிரியங்கா, அடுத்த தேர்தல் பொறுப்பை ஏற்க வேண்டுமென்ற கோரிக்கை, அக்கட்சிக்குள் வலுத்துள்ளது. ... |
| 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு Posted: 04 Jul 2016 10:20 AM PDT புதுடில்லி,:'கடந்த, 1962ல் நடந்த, இந்தியா - சீனா போர் மனநிலையிலேயே இந்தியா தற்போதும் உள்ளது' என, சீனா குற்றம் சாட்டியுள்ளது. என்.எஸ்.ஜி., எனப்படும், 48 நாடுகள் உறுப்பினராக உள்ள அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இணைவதற்கு இந்தியா விண்ணப்பித்திருந்தது; இதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு, இந்தியா தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.தோல்வியில் முடிந்ததால்...இந்நிலையில், இது குறித்து சீன அரசின் பத்திரிகையான, 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:என்.எஸ்.ஜி.,யில் சேருவதற்கான முயற்சி தோல்வியில் ... |
| சுவாதி கொலை வழக்கு ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை Posted: 04 Jul 2016 10:25 AM PDT மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை, ஜூலை, 18ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, சென்னை, எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். அவனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், சுவாதி, 24; மென் பொறியாளர். ஜூன், 24ம் தேதி காலை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார்.இதுதொடர்பாக, தனிப்படை போலீசார், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அடுத்த, டி.மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்த, ராம்குமார், 24, என்பவனை, ஜூலை, 1ம் தேதி கைது ... |
| ஆந்திர அரசு மீது வழக்கு: பாலாறு பிரச்னையில் முடிவு Posted: 04 Jul 2016 10:28 AM PDT ஆந்திர அரசின் மீது வழக்கு தொடர்வது குறித்து, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், நேற்று அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர். பாலாற்றின் குறுக்கே, புல்லுார் என்ற இடத்தில், ஆந்திர அரசு ஏற்கனவே, ஐந்து அடி உயரத்திற்கு தடுப்பணை கட்டியுள்ளது. இதன் உயரத்தை, 12 அடியாக உயர்த்தும் பணி துவங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தில், பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அதற்கு இதுவரை பதில் இல்லை. நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணியை துவங்கிவிட்டதால், ... |
| ரூ.570 கோடி விவகாரம்: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு Posted: 04 Jul 2016 11:00 AM PDT சென்னை,: சட்டசபை தேர்தலின் போது, மூன்று கன்டெய்னர் லாரிகளில், 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனு:சட்டசபை தேர்தலின் போது, கணிசமான பணம் கைப்பற்றப்பட்டது; மே ௧௩ம் தேதி, விஜயகுமார் என்ற அதிகாரி தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக் குழு, மூன்று கன்டெய்னர் லாரிகளை பிடித்தது. அந்த லாரிகளில், ௫௭௦ கோடி ரூபாய் இருந்தது.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா, செங்கபள்ளியில் பிடிபட்ட ... |
| மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தனுக்கு 'பார்லர்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் 'குட்டு' Posted: 04 Jul 2016 12:38 PM PDT
திருவனந்தபுரம்: கேரளாவில், முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி மீது குற்றம் சாட்டப்பட்ட, ஐஸ்கிரீம் பார்லர் வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தன் தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில், பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். 1997ல், இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லரில், நீண்ட காலமாக விபசாரம் நடந்ததும், பிரபல அரசியல்வாதிகள் அதன் பின்னணியில் செயல்பட்டதும் ... |
| 'பாரம்பரிய ஆடைகளை தவிருங்க!' ஐக்கிய அரபு எமிரேட் எச்சரிக்கை Posted: 04 Jul 2016 01:56 PM PDT அபுதாபி : வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டவர், பாரம்பரிய ஆடைகள் உடுத்துவதை தவிர்க்கும்படி, அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்துக்கு கடந்த வாரம், ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த தொழிலதிபர், அஹமது அல் மெனாலி, மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். தன் நாட்டு பாரம்பரிய ஆடை அணிந்திருந்த அஹமது, ஓட்டலில் தங்கிஇருந்தபோது, அரபி மொழியில், தொலைபேசியில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஓட்டல் ஊழியர், அவரை பயங்கரவாதி என நினைத்து போலீசுக்கு தகவல் தந்தார். இதையடுத்து, ... |
| 'தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்'; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஆவேசம் Posted: 04 Jul 2016 03:25 PM PDT சண்டிகர்: குரானை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஆம் ஆத்மி கட்சியின் டில்லி எம்.எல்.ஏ., நரேஷ் யாதவ், பஞ்சாப் போலீஸ் டி.ஜி.பி.,யை சந்தித்தார். அப்போது, ''தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால், என்னை துாக்கில் போடுங்கள்' என, கூறியுள்ளார். அகாலி தளம் கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக உள்ள பஞ்சாப் மாநிலத்தின் மலேர்கோட்லா பகுதியில், முஸ்லிம்களின் புனித நுாலான குரானின் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டது. இது தொடர்பாக, விஜய்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நரேஷ் யாதவ் கூறியபடி தான், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 05,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |