Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Posted: 04 Jul 2016 11:41 AM PDT

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ? மேட்டூர்;மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த காட்டுமிராண்டி கைது செய்யப்பட்டான். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, காவேரிபுரம் தெலுங்கனுாரை சேர்ந்தவர் ராஜா; மீனவர். இவரது மனைவி வள்ளி. இவர்களது இரண்டாவது மகள் தர்ஷிணி, 7, அரசு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்தாள். மனநோய் பாதிப்பு:அதே கிராமத்தை சேர்ந்தவர் ரூபா. கணவரை பிரிந்த ரூபா, பெற்றோர் வீட்டில் வசித்தபடி, ஊர் ஊராக சென்று காய்கறி ...

என்னை பற்றி என்னிடம் இருந்து .......

Posted: 04 Jul 2016 09:46 AM PDT

பெயர்:மு.அருண்குமார்
சொந்த ஊர்:வினோபா நகர், ஒட்டன்சத்திரம் ,திண்டுக்கல் .
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் உலவும் போது கண்டேன்.
பொழுதுபோக்கு: தமிழ் புத்தகங்கள் படிப்பது .
தொழில்: கருவிமயமாக்கல் பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி: ஒரு சிறந்த தமிழனாக வாழ துடிக்கும் சாதாரண மனிதன்........

அறிமுகம்.--பிரஜை

Posted: 04 Jul 2016 09:45 AM PDT

1962ல் பிறந்த ஆண். வசிப்பது சென்னை. தாய்மொழி என்பது தவிர, தமிழில் பெரிய புலமை கிடையாது. படித்தது எம் ஏ ஆங்கிலம். சிறிதளவு ஹிந்தி தெரியும். டைப்பிங்க் தெரியாது. தமிழில் டைப்செய்வது இன்னும் கஷ்டம்.

பழைய தமிழ், ஹிந்தி பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு. விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதால், வேலை எதுவும் கிடையாது.

நிறைய புத்தகங்கள் தரவிறக்கம் / தரவேற்றம் செய்வதால், பாதுகாப்பு கருதி, இணையத்தில் பெயர் மற்றும் விபரங்கள் கொடுப்பதில்லை, மன்னிக்கவும்.

குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி: -

Posted: 04 Jul 2016 09:27 AM PDT

- மழை பொழிந்து கொண்டிருக்கிறது சாரல் மேனியை தொட்டு சிலிர்க்க வைக்கிறது சுகமான தென்றலாக வீசும் காற்றில் மனம் அமைதி கொள்கிறது - மழையில் நனைய ஆசைதான் இருந்தும் குடையை பிடித்தேன் உன் கையை பிடித்தேன் இருவரும் நடந்தோம் - மழைச் சாரலில் மிதந்தபடி வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி என்னுள் கிளர்ந்தது.... - இது குடைக்குள் பெய்யும் மழையல்ல குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி. - ----------------------------------- வி.களத்தூர் எம்.பாரூக் நன்றி- கவிதை மணி படம் - இணையம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்

Posted: 04 Jul 2016 09:27 AM PDT

- புதுடில்லி: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு புதிய சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, புதிய சட்டம் தொடர்பான மசோதா பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலங்குகள் நலவாரியம் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு கடந்த ஆண்டு சட்ட திருத்தம் ...

பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.

Posted: 04 Jul 2016 09:23 AM PDT

- ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார். நாரதரை வணங்கிய அந்தணர், "தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார். - அதற்க்கு, "நிச்சயமாக, நான் என் தலைவன் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!" என பதிலுரைத்தார். "அப்படியா, மிக்க மகிழ்ச்சி!!  எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?" "தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் ...

லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்

Posted: 04 Jul 2016 09:10 AM PDT

லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்! லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றாலே இப்போதெல்லாம் மக்கள் எரிச்சலடைகிறார்கள். இன்ஷுரன்ஸ்  பாலிசி அவர்களுக்கு அவசியமான ஒன்று; தவிர, அவர்களால் ஒரு பாலிசியை எடுக்க முடியும் என்றாலும்கூட அவர்கள் அப்படி எரிச்சல் அடைவதற்கு காரணங்கள் பலப்பல. அதில் முக்கியமான காரணம், க்ளெய்ம். லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்த பலருக்கு தாங்கள் எதிர்பார்த்த க்ளெய்ம் கிடைக்கவில்லை என்பதுதான் புலம்பலாகவே இருக்கிறது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ...

இன்றைய நாளிதழ் ...!

Posted: 04 Jul 2016 09:07 AM PDT

கறந்த பாலை விட
சுத்தமான என்
காதலை உன்னிடம்
சொல்வதற்குள்
பல காரணம் சொல்லிப்
பிரித்தது
இன்றைய நாளிதழ் ...!

வணக்கம்

Posted: 04 Jul 2016 08:49 AM PDT

vanakkam    வணக்கம்

vanakkam வணக்கம்

தினமும் பெய்கிறது மழை…!

Posted: 04 Jul 2016 07:57 AM PDT


–
போன்சாய் மரங்கள் வளர்க்கும்
அப்பார்ட்மெண்ட் வீடுகளின்
நவீன குளியலறைகளில்
தினமும் சிறிது நேரம்
பெய்கிறது மழை…!
–
————————
வலங்கைமான் நூர்தீன்

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Posted: 04 Jul 2016 05:51 AM PDT

சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார். இதையடுத்து ராம்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை புறப்பட்டார். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ...

கீ கொடுத்தால்தான் வேலை செய்யறா...!

Posted: 04 Jul 2016 05:50 AM PDT

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

Posted: 04 Jul 2016 05:31 AM PDT

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

ஞாபகத்தோடு சேர்த்து வயதும் ...!

Posted: 04 Jul 2016 05:02 AM PDT

மறக்க வேண்டும்
என்று
ஒவ்வொரு படியாக
இறங்குகிறேன்
ஏறிக் கொண்டே போகிறது
ஞாபகத்தோடு சேர்த்து
என் வயதும்  ....!

அன்புள்ள அப்பா.

Posted: 04 Jul 2016 05:00 AM PDT

படம்: அன்புள்ள அப்பா பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ---------------------------------------- அன்புள்ள அப்பா! என்னப்பா? உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா? அப்பப்பா! பொல்லாத பெண்ணப்பா!! (2) - ம்ம்.. உங்களோடது காதல் கல்யாணம் தானே? ofcourse... it was a love marriage! நீங்க அம்மாவ பார்த்தது எப்போது? ஞாபகம் உண்டா இப்போது? ம்ம்ம்... முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே! அவளை நான் பார்த்தது... - மலர்கள் வண்டுகளுக்கு பேட்டி கொடுக்கும் ஊட்டியில்! ஒரு மலர்க்காட்சியில்தான் ...

இன்னொரு தாய் ....!

Posted: 04 Jul 2016 04:58 AM PDT

வயதானாலும்
இளமையாய் தோன்றும்
காதலை
சினிமாவில் மட்டுமே
என்பதை மாற்றி
இளமையிலேயே முதுமையின்
காதலை உணர வைப்பவள்
இன்னொரு தாய் ....!

முன்னுதாரணமான மாற்றுத் திறனாளி ரவி

Posted: 04 Jul 2016 02:39 AM PDT

- பிரத்யேகமாக வடிவைக்கப்பட்ட காரில் வலம் வரும் மாற்றுத் திறனாளி தே.ரவி. ——————— மாற்றுத் திறனாளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் முயற்சி காரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண விலக்குக்கான அரசாணை பெறப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள பாலூரைச் சேர்ந்த தேசிகன் மகன் ரவி (45). இரண்டரை வயதில் போலியோ பாதிப்பால் இவரது இருகால்களிலும் ஊனம் ஏற்பட்டது. ஊனத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் எம்பிஏ படித்த இவர், கடந்த 2009-ஆம் ஆண்டுமுதல், ஆயுள் ...

முதல் மரியாதை ...!

Posted: 04 Jul 2016 02:17 AM PDT

எத்தனையோ
கதாபாத்திரங்களை
கடந்து வந்த
எனக்கு
என்னுடைய கதாப்பாத்திரம்
எதுவென்று
உணரவைத்தது
அந்த முதல் மரியாதை ...!

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை

Posted: 04 Jul 2016 02:13 AM PDT

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.   கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. - எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.   அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.. ...

நம் தமிழை முறையாக அறிவோமே !

Posted: 04 Jul 2016 01:57 AM PDT

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ? நாள் + கள் = நாள்கள் கால் + கள் = கால்கள் கோள் + கள் = கோள்கள் வேல் + கள் = வேல்கள் தாள் + கள் = தாள்கள் இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு. இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று. மேல் + கணக்கு கால் + கடுக்க பால் + பசு நாள் + கோள் பால் + பழம் கால் + சட்டை மேல் + படிப்பு கால் + புள்ளி நூல் + பா மேல் + கொண்டு ...

உன் காதல் ...!

Posted: 04 Jul 2016 01:10 AM PDT

திடப்பொருளாக இருந்த
என்
இதயத்தை
திரவப் பொருளாக மாற்றியது
உன் காதல் ...!

மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும் தமிழர்கள் 8 ஆயிரம் பேர் தவிப்பு

Posted: 03 Jul 2016 09:30 PM PDT

மதுரை: போலி முகவர்களின் ஆசை வார்த் தைகள்... கைநிறைய கண்முன் வந்து போகும் கரன்சி கட்டுகள்... இதில் ஈர்க்கப்பட்ட வர்களை 'சிறைபிடித்து' விமானத்தில் பறக்கவிட்டு, கடைசியில் அதலபாதாளத்தில் தள்ளி தவிக்க வைத்து விடுகிறது குடும்பச்சூழல். மலேசியாவில் தற்போது 8 ஆயிரம் தமிழர்கள் பழைய இரும்பு உலோக கடைகளில் அடிமை கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் மலேசியா செல்ல முகவர்களிடம் ரூ.1.50 லட்சம் பணம் கட்டியிருக்கிறார்கள். கடும் வேலைப்பளுவை சமாளிக்க முடியாமல் மீண்டும் இந்தியா செல்ல விரும்பினால், ...

#வெற்றி உன்வசம் #

Posted: 03 Jul 2016 09:24 PM PDT

ஆ போட பழகும் போது
அடிகள் பல வாங்கினேன்
அத்தனையும்
வெற்றிப் படிகளாக மாற
உன்வசம் தான் உள்ளது
என்றாள் அம்மா ....

நடை பழகும் போது
விழுந்து விழுந்து அழுதேன்
இந்த தழும்புகள் எல்லாம்
ஓர் நாள் இரும்பாகும்
என்பதை
உணர்த்தினார் அப்பா

இரண்டையும் இன்று
இணைத்துக் காட்டினேன்
வெற்றிக்கும் தோல்விக்கும்
இடையில் இருப்பது
வெறும்
இயலாமையே என்று ...!

தீவிர அரசியலில் களமிறங்கும் பிரியங்கா!

Posted: 03 Jul 2016 09:22 PM PDT

புதுடில்லி : காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி., சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற் கொள்வதன் மூலம் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளார். - காங்., இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்றாற் போல் கட்சியின் நடவடிக்கைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள காங்., துணைதலைவர் ராகுலின் செயல்பாட்டினால், கட்சிக்கு பெரும் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. - பிரதமர் மோடியின் அளவுக்கு வலுவான தலைவராகவும் உருவாகவில்லை. - இந்நிலையில் ...

ஆக.,11ல் தமிழக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Jul 2016 09:20 PM PDT

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு முடிவுகள் எடுக்கப்பட்டன. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். - மாநில நிர்வாகத் ...

அமெரிக்க சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து

Posted: 03 Jul 2016 09:16 PM PDT

3-7-16 --------------- நாளை அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி கூறியுள்ளதாவது: - "நாட்டு மக்கள் சார்பாகவும் என் சார்பாகவும் அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய-அமெரிக்க நட்புறவு என்பது ...

பள்ளிகளில் மனநல ஆலோசகர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்

Posted: 03 Jul 2016 08:48 PM PDT

பள்ளி, கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கான மன நல ஆலோசகர் பணியிடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குரைஞர் இ.ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் மிரட்டப்படுவதால், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்வதற்குக்கூட அவர்களால் முடியவில்லை. ஆகையால், குற்றவாளிகள் தப்பிவிடுவதுடன் குற்றங்களின் எண்ணிக்கையும் ...

இராக் குண்டு வெடிப்புகளில் 119 பேர் பலி

Posted: 03 Jul 2016 08:42 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்புகளில் 119 பேர் உயிரிழந்தனர். பாக்தாதில் பிரபல வணிக மையங்கள் அமைந்துள்ள கராடா பகுதியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 114 பேர் பலியாகினர். அந்தத் தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. 160 பேர் காயமடைந்தனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. உயிரிழந்தவர்களில் 15 சிறுவர்கள், 10 பெண்கள், 6 காவலர்கள் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு ஏற்பட்ட சக்தி ...

எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை

Posted: 03 Jul 2016 08:41 PM PDT

இலங்கைக் கடல் பகுதிக்குள் இந்திய மீன்பிடிப் படகுகளை அனுமதிப்பதற்கான உரிமத்தை வழங்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் உரிமம் பெற்ற இந்தியப் படகுகள், இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கலாம் எனத் தெரிகிறது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்கதையாக உள்ளன. இதைத் தவிர தமிழக மீனவர்களின் வலைகளை அவர்கள் சேதப்படுத்துவதும், படகுகளைப் பறிமுதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™