Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


லாரி மீது கார் மோதல் :தம்பதி உள்பட 4 பேர் சாவு

Posted: 04 Jul 2016 01:18 PM PDT

விழுப்புரம் அருகே, திங்கள்கிழமை அதிகாலை சரக்குப் பெட்டக லாரி மீது கார் மோதியதில் தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரம் அதிகரிப்பு:வாணியம்பாடி அருகே திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 04 Jul 2016 01:17 PM PDT

தமிழக, ஆந்திர எல்லையில், வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்திக் கட்டியுள்ள ஆந்திர அரசைக் கண்டித்து திமுகவினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்

Posted: 04 Jul 2016 01:16 PM PDT

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டம் இயற்றும் முயற்சி வேண்டாம்

Posted: 04 Jul 2016 01:16 PM PDT

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயற்சிப்பது என்பது குளவிக் கூட்டில் கை வைப்பதற்கு ஒப்பானது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

எழுத்தாளர் வே.சபாநாயகம் காலமானார்

Posted: 04 Jul 2016 01:15 PM PDT

தமிழக அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் வே.சபாநாயகம் (81) விருத்தாசலத்தில் திங்கள்கிழமை காலமானார்.

திருக்கோஷ்டியூர் அருகே அழுகிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சடலம் மீட்பு

Posted: 04 Jul 2016 01:14 PM PDT

திருக்கோஷ்டியூர் அருகே கருவேலமரக் காட்டு பகுதிக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ ஓட்டுநரின் சடலம் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது.

"ஜூலை 15க்குள் வாழ்வுச் சான்றிதழ் வழங்காதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும்'

Posted: 04 Jul 2016 01:13 PM PDT

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு வாழ்வுச்சான்றிதழ் அளிக்கவில்லையெனில் ஆகஸ்ட் முதல் அவர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பேருந்து வசதி செய்து தரக் கோரிக்கை

Posted: 04 Jul 2016 01:13 PM PDT

ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 04 Jul 2016 01:12 PM PDT

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.6.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கல்லூரி மாணவர்களிடையே மோதல்: 3 பேர் கைது

Posted: 04 Jul 2016 01:12 PM PDT

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 3 பேரைக் கைது செய்தனர்.

சூறாவளி: தென்னை மரங்கள் சாய்ந்தன

Posted: 04 Jul 2016 01:11 PM PDT

ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தன.

கார் மோதி ஒருவர் சாவு

Posted: 04 Jul 2016 01:11 PM PDT

திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் கார் மோதியதில் ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.

மாணவிக்கு மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 04 Jul 2016 01:10 PM PDT

ராஜபாளையம் அருகேயுள்ள வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்த பிளஸ்1 மாணவியை அதே ஊரைச் சேர்ந்த ரவி மகன் ஐ.டி.ஐ. மாணவர் ரமேஷ்(17) ஒருதலையாய் காதலித்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வாழவந்தாள்புரம் ஊருணி அருகே மொபட்டில் மகளுடன் வந்த தந்தையை ரமேஷ் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

தாய்லாந்தில் வேலைக்கு அனுப்புவதாக பண மோசடி: கணவர்,  மனைவி  மீது வழக்கு

Posted: 04 Jul 2016 01:10 PM PDT

ராஜபாளையம் அருகே தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, பணமோசடி செய்த தம்பதி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நிலத்தை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 04 Jul 2016 01:09 PM PDT

வத்திராயிருப்பு அருகே அகத்தாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்களது நிலத்தை மீட்டுத் தரக்கோரி  மாவட்ட ஆட்சியர்(பொ) செ.முத்துக்குமரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

கடைகளில் விற்கப்படும் குடிநீரை தரச்சோதனை செய்ய கோரிக்கை

Posted: 04 Jul 2016 01:09 PM PDT

அருப்புக்கோட்டையில் கடைகளில் விற்கப்படும் குடிநீரை தரச்சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

எரிச்சநத்தம் பகுதியில் ஜூலை 6 மின்தடை

Posted: 04 Jul 2016 01:08 PM PDT

விருதுநகர் மின் பகிர்மான செயற்பொறியாளர் திருப்பதி செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : எரிச்சநத்தம் துணைமின் நிலையத்தில் புதன்கிழமை(ஜூலை6) காலை 9  மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  எனவே எரிச்சநத்தம் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணமநாயக்கன் பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகபட்டி, சிலார்பட்டி, முருகனேரி, கரிசல்குளம், சல்வார்பட்டி, இலந்தைகுளம், கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி,  சுப்புலாபுரம் மற்றும் கொண்டையம்பட்டி  ஆகிய ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

இருக்கன்குடி அணை தரைப் பாலத்தை சீரமைக்க கோரிக்கை

Posted: 04 Jul 2016 01:07 PM PDT

இருக்கன்குடியிலிருந்து காசிவிஸ்வநாதர் கோயில் செல்லும் பாதையிலுள்ள தரைப் பாலத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனை வணிகத்தில் மோசடி: நீதிமன்ற உத்தரவால் வழக்குப்பதிவு

Posted: 04 Jul 2016 01:07 PM PDT

ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் பகுதியில் மனை வணிக அலுவலகம் நடத்தி வருபவர் முத்தையா(55). இவர் சங்கரன்கோவில் சாலை, பெருமாள்பட்டி சாலையில் மனைகளை மாதத் தவணைக்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். மாதம் ரூ.260 வீதம் 50 மாதங்கள் செலுத்தினால் 3 சென்ட் நிலம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

குடியிருப்புப் பகுதியில் பட்டாசு மூலப்பொருள்களை வைத்திருந்தவர் கைது

Posted: 04 Jul 2016 01:06 PM PDT

பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களை குடியிருப்புப் பகுதியில் வைத்திருந்த பட்டாசு ஆலை உரிமையாளரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஆனி ஸ்வாதி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 04 Jul 2016 01:06 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஸ்ரீபெரியாழ்வார் ஆனி ஸ்வாதி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தீ விபத்தால் பாதிப்பு: 50 குடும்பங்கள் திருமணமண்டபத்தில் தங்க வைப்பு

Posted: 04 Jul 2016 12:54 PM PDT

சிவகாசியில் பட்டாசுக் கடையில் தீவிபத்து ஏற்பட்டதால் கடையை சுற்றியுள்ள பகுதியில் வசித்த 50 குடும்பங்கள் அருகில் உள்ள திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி கொலை: இரு இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 04 Jul 2016 12:53 PM PDT

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 04 Jul 2016 12:44 PM PDT

கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்துக்கு முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உத்தமபாளையத்தில்  திங்கள்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவரை விரட்டிப் பிடித்தார் ஒன்றியக் குழு தலைவர்

Posted: 04 Jul 2016 12:43 PM PDT

செம்பட்டி அருகே திங்கள்கிழமை பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபர்களை விரட்டிய வத்தலகுண்டு ஒன்றியக்குழுத் தலைவர், அவர்களில் ஒருவரை போலீஸில் பிடித்து கொடுத்துள்ளார்.

அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 04 Jul 2016 12:43 PM PDT

பழனியில் நெய்க்காரபட்டி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியம் வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் மனு

Posted: 04 Jul 2016 12:42 PM PDT

ஓய்வூதியம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பழனியாண்டவர் கல்லூரிக்கு ஏ கிரேடு அந்தஸ்து

Posted: 04 Jul 2016 12:42 PM PDT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக்குழு ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியது.

சிறப்பு பள்ளிக்கு வாகனம் வழங்கல்

Posted: 04 Jul 2016 12:41 PM PDT

தேனி அருகே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் வாகனம் வழங்கப்பட்டது.

வாகரை பகுதியில் ஜூலை 5 மின்தடை

Posted: 04 Jul 2016 12:40 PM PDT

பழனி அருகே வாகரை துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 5)வாகரை சுற்றுப்புறப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.   வாகரை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூர், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. செயற்பொறியாளர் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.

குடிநீர் பிரச்னை: சாணார்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 04 Jul 2016 12:40 PM PDT

குடிநீர் விநியோகம் செய்யக் கோரி காலி குடங்களுடன், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

தொப்பம்பட்டியில் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 04 Jul 2016 12:39 PM PDT

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ளதாகக்கூறி அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கவுன்சிலர்கள் எதிர்ப்பால் கம்பம் நகர்மன்ற கூட்டத்தில் 2 தீர்மானங்கள் ஒத்திவைப்பு

Posted: 04 Jul 2016 12:39 PM PDT

கம்பம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பால் 2 தீர்மானங்கள் நிறைவேற்றாமல் ஒத்திவைக்கப்பட்டன. 

ரூ.10 கோடி செலவில் திண்டுக்கல் மாநகராட்சி சாலைகள் சீரமைப்பு: அமைச்சர் தகவல்

Posted: 04 Jul 2016 12:38 PM PDT

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 18 கிலோ மீட்டர் சாலைகள் ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி சாலை மறியல்

Posted: 04 Jul 2016 12:38 PM PDT

பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமூகத்தினர் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

போடியில் அழகப்பா பல்கலை. கல்வி மையம் துவக்கம்

Posted: 04 Jul 2016 12:37 PM PDT

போடியில் அழகப்பா பல்கலைக் கழக கல்வி மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 04 Jul 2016 12:37 PM PDT

ஒட்டன்சத்திரத்தில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் விரிசல்

Posted: 04 Jul 2016 12:36 PM PDT

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்து சீரமைத்தனர்.

விபத்தில் பலியான 7 பேர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கல்

Posted: 04 Jul 2016 12:34 PM PDT

விபத்தில் பலியான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.

300 நாள்கள் பணி வழங்க கோரிக்கை: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை தூய்மைக் காவலர்கள் முற்றுகை

Posted: 04 Jul 2016 12:34 PM PDT

வேலைக்கு தேர்வு செய்யும்போது அறிவித்த 300 நாள்கள் பணி உத்தரவை தொடர்ந்து செயல்படுத்த கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தூய்மைக் காவலர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு: மறுகூட்டலில் திருச்செந்தூர் பள்ளி மாணவி மாவட்ட அளவில் 3-ஆம் இடம்

Posted: 04 Jul 2016 12:30 PM PDT

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் 3-ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

ஓய்வூதியம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு

Posted: 04 Jul 2016 12:29 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே போனாரு..!

Posted: 04 Jul 2016 12:29 PM PDT

ரூ. 92 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் அமைக்கும் பணி: ஆட்சியர் தகவல்

Posted: 04 Jul 2016 12:28 PM PDT

கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதியில் செயற்கையாக நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் ரூ. 92 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.

திறனாய்வுத் தேர்வு: கே. தங்கம்மாள்புரம் பள்ளி மாணவி தேர்ச்சி

Posted: 04 Jul 2016 12:28 PM PDT

தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் கே. தங்கம்மாள்புரம் பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்.

விளாத்திகுளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 04 Jul 2016 12:27 PM PDT

விளாத்திகுளத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான சுகாதார வளாகம், பேருந்து நிலைய வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில நுகர்வோர் விருது: பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 04 Jul 2016 12:27 PM PDT

மாநில அளவில் நுகர்வோர் விருது பெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் திங்கள்கிழமை பாராட்டினார்.

மீன் வியாபாரி வீட்டில் தீ விபத்து

Posted: 04 Jul 2016 12:25 PM PDT

சாத்தான்குளம் அருகே மீன் வியாபாரி வீட்டில் எரிவாயு உருளையில் திடீரென தீ பிடித்ததில் வீடு எரிந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

கல்லூரிப் பேருந்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

Posted: 04 Jul 2016 12:25 PM PDT

ஓடிக்கொண்டிருந்த கல்லூரிப் பேருந்தில் இருந்து குதித்து, மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ

Posted: 04 Jul 2016 12:25 PM PDT

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த மூலப்பொருள்கள் கருகி நாசமாயின. 

தூத்துக்குடியில் கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 04 Jul 2016 12:25 PM PDT

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை கோயிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த 4 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 04 Jul 2016 12:24 PM PDT

மத்திய அரசின் தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சங்கரய்யாவின் மனைவி நவமணி காலமானார்

Posted: 04 Jul 2016 12:24 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் துணைவியார் நவமணி (92) திங்கள்கிழமை மாலை சென்னையில் காலமானார்.

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்னா

Posted: 04 Jul 2016 12:23 PM PDT

தூத்துக்குடி மாவட்டம்,  சிவஞானபுரத்தில் உள்ள அரசு மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் தலைவர்கள் மற்றும் பெண்கள் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

எது ஊடக அறம்?

Posted: 04 Jul 2016 12:22 PM PDT

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் எழுந்துள்ள முதன்மையான கேள்வி, ஊடக அறம் என்றால் என்ன என்பதுதான். சுவாதியைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பாக நிறுத்தியபோது, "சுவாதி கொலை வழக்கை நடத்துவது நீதிமன்றமா, ஊடகமா? வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும், படங்களும் எவ்வாறு உடனுக்குடன் வெளியாகின?' என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

மருத்துவத் துறைக்கு சிகிச்சை தேவை!

Posted: 04 Jul 2016 12:21 PM PDT

இரு வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 23 பேரில் 20 பேரின் பார்வை முற்றிலுமாகப் பறிபோயிருக்கிறது.

அளவோடு பேசுவோம்

Posted: 04 Jul 2016 12:20 PM PDT

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வசதியானவர்கள் வீடுகளிலும், வியாபாரத் தொடர்புக்காகவும், அவசரத் தகவல் தருவதற்கும், தரைவழித் தொலைபேசியைப் பயன்படுத்தி வந்தனர். சிலர் அவசரத் தகவல் என்றால் அஞ்சலகங்களில் இருந்த தரைவழித் தொலைபேசியில் உரிய கட்டணம் செலுத்திப் பேசிவிட்டு வந்தனர்.

ராணுவத்தில் மகளிர் படைப்பிரிவு:மனோகர் பாரிக்கர் யோசனை

Posted: 04 Jul 2016 12:18 PM PDT

ராணுவத்தில் முழுவதும் மகளிர் மட்டுமே உள்ள படைப்பிரிவை உருவாக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ். படிக்க மாணவிக்கு நிதியுதவி

Posted: 04 Jul 2016 12:18 PM PDT

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி மேகலாவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான நிதியுதவியை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.

மீனவர்களைக் காக்க நடவடிக்கை தேவை

Posted: 04 Jul 2016 12:17 PM PDT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் வழக்கு: கேஜரிவாலின் முதன்மைச் செயலர் உள்பட 5 பேர் கைது:சிபிஐ அதிரடி நடவடிக்கை

Posted: 04 Jul 2016 12:16 PM PDT

தில்லி அரசின் ரூ.50 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் உள்பட 5 பேரை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

Posted: 04 Jul 2016 12:16 PM PDT

சென்னை மாநகராட்சி ஆணையராக டி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு புதிய வரைவு மசோதா: மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப சட்டத் துறை ஒப்புதல்

Posted: 04 Jul 2016 12:15 PM PDT

ஜல்லிக்கட்டில் காளையை எவ்விதக் கட்டுப்பாடின்றி நிரந்தரமாக ஈடுபடுத்த வகை செய்யும் சட்ட வரைவு மசோதாவை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய சட்டத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மார்த்தாண்டத்தில் பயணியிடம் நகை, பணம் திருட முயற்சி: கைக்குழந்தையுடன் 2 பேர் கைது

Posted: 04 Jul 2016 12:14 PM PDT

மார்த்தாண்டத்தில் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணியிடம் நகை, பணத்தை திருட முயன்றதாக குழந்தையுடன் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

அறிமுகத்துக்கு முன் மசோதாக்கள் பரிசீலனை: அமைச்சரவைச் செயலகம் முடிவு

Posted: 04 Jul 2016 12:14 PM PDT

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய அனைத்து மசோதாக்களையும் மத்திய அமைச்சரவைச் செயலகம் விரிவாகப் பரிசீலனை செய்ய உள்ளது.

தொகுதி வளர்ச்சி ஆலோசனை கூட்டத்துக்கு அதிகாரிகள் சம்மதம்: ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் வாபஸ்

Posted: 04 Jul 2016 12:14 PM PDT

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததையடுத்து, திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆஸ்டின் எம்.எல்.ஏ. கைவிட்டார்.

திருக்குறள் தேசிய நூலாக்கப்படுமா?மத்திய அரசு விளக்கம்

Posted: 04 Jul 2016 12:14 PM PDT

திருக்குறள் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவதால், மத்திய அரசு கடைப்பிடிக்கும் கொள்கையின்படி அதை தேசிய நூலாக கலாசாரத் துறை அறிவிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களில் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள்

Posted: 04 Jul 2016 12:14 PM PDT

"டைம்ஸ்' வெளியிட்டுள்ள ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரம்:அவசரச் சட்டத்துக்கு எதிரான மனு மீது ஜூலை 7-இல் விசாரணை

Posted: 04 Jul 2016 12:13 PM PDT

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் வரும் வியாழக்கிழமை (ஜூலை 7) விசாரணைக்கு வருகிறது.

டாக்கா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தாரிஷி உடல் தகனம்

Posted: 04 Jul 2016 12:12 PM PDT

வங்கதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இந்தியப் பெண் தாரிஷி ஜெயினின் உடல், தில்லியில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

ஆந்திர தலைமைச் செயலகம் அமராவதிக்கு அடுத்த மாதம் மாற்றம்

Posted: 04 Jul 2016 12:11 PM PDT

ஆந்திரப் பிரதேசத்தில், அமராவதி தலைநகர் பிராந்தியத்தில் உள்ள வெலகபூடி பகுதியில் அமைக்கப்படும் வரும் தாற்காலிக தலைமைச் செயலகம் அடுத்த மாதம் இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தண்டவாளங்களில் குப்பைகளை வீசுவோருக்கு ரூ.5,000 அபராதம்:கடுமையாக அமல்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 04 Jul 2016 12:10 PM PDT

ரயில் தண்டவாளங்களில் குப்பைகளை வீசியெறிவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு மத்திய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக சிவசேனையிடம் கலந்தாலோசிக்கவில்லை

Posted: 04 Jul 2016 12:10 PM PDT

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, தங்களிடம் பாஜக மேலிடத் தலைவர்கள் கலந்தாலோசிக்கவில்லை என்று சிவசேனைக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார். அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக, யாருடைய ஆதரவையும் நாடிச் செல்ல மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

ஆண்டு முழுவதும் பணி வழங்க தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

Posted: 04 Jul 2016 12:10 PM PDT

கொல்லஞ்சி ஊராட்சியில் ஆண்டு முழுவதும் பணிபுரிய அனுமதி கோரி  தூய்மை பணியாளர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா சவாணிடம் மனு அளித்தனர்.

மியான்மர் தீவிரவாத அமைப்புடன் அமைதிப் பேச்சு:மிஸோரம் முன்னாள் முதல்வர் பங்கேற்பு

Posted: 04 Jul 2016 12:08 PM PDT

மியான்மரில் உள்ள 16 தீவிரவாத அமைப்பு களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக மிúஸாரம் மாநில முன்னாள் முதல்வர் ஜோராம் தங்கா திங்கள்கிழமை பாங்காக் சென்றார்.

ம.பி.: 118 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய ஆம் ஆத்மி கோரிக்கை

Posted: 04 Jul 2016 12:06 PM PDT

மத்தியப் பிரதேசத்தில், ஆளுநர் ராம் நரேஷ் யாதவை சந்தித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கும் 118 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யுமாறு கோரினர்.

1962-ஆம் ஆண்டு போர் நினைவிலேயே இந்தியா இன்னமும் உள்ளது:சீனா ஊடகம் விமர்சனம்

Posted: 04 Jul 2016 12:06 PM PDT

கடந்த 1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் நினைவில் இந்தியா இன்னமும் சிக்கிக் கொண்டிருப்பதாக சீன ஊடகம் விமர்சித்துள்ளது.

"மேல்முறையீடு செய்வதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும்'

Posted: 04 Jul 2016 12:05 PM PDT

சேவை தொடர்பான வழக்குகளில் மேல்முறையீடு செய்வதில் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிகார்: போலியாக முதலிடம் பிடித்த பிளஸ் 2 மாணவி "சிறுமி' என பாட்னா நீதிமன்றம் ஏற்பு

Posted: 04 Jul 2016 12:05 PM PDT

பிகார் மாநில பிளஸ் 2 தேர்வில் போலியாக முதலிடம் பிடித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்ட மாணவி ரூபி ராய், சிறுமி என்பதால், அவரை சிறுவர்கள் காப்பகத்துக்கு மாற்ற பாட்னா மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மினிலாரிகளிலிருந்து கீழே விழும் கருங்கற்கள்

Posted: 04 Jul 2016 12:05 PM PDT

குமரி மாவட்டத்தில்  கல்குவாரிகளிலிருந்து மினிலாரிகளில்  ஏற்றிச் செல்லப்படும் கற்கள் சாலைகளில் விழுவதால் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: 23 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்கல்

Posted: 04 Jul 2016 12:04 PM PDT

நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 23 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டது.

யூரோ கோப்பை கால்பந்து:அரையிறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

Posted: 04 Jul 2016 12:04 PM PDT

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி தனது காலிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தைத் தோற்கடித்தது.

ஆற்றூர் பகுதியில் மதுக்கடையை மூடக்கோரி மனு

Posted: 04 Jul 2016 12:04 PM PDT

ஆற்றூர் பகுதியில் செயல்படும் 2 மதுக்கடைகளை மூடவேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகருக்கு ரூ. 223.50 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

Posted: 04 Jul 2016 12:03 PM PDT

நாகர்கோவில் நகருக்கு தினமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ. 223 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் நகராட்சி தலைவி மீனாதேவ்.

விம்பிள்டன் டென்னிஸ்:காலிறுதியில் ஃபெடரர்

Posted: 04 Jul 2016 12:03 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் சாம் கியூரி, குரோஷியாவின் மரின் சிலிச் உள்ளிட்டோர் காலிறுதிக்கு

நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டம்

Posted: 04 Jul 2016 12:03 PM PDT

நாகர்கோவில் நகர்மன்றக் கூட்ட அரங்கில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக உறுப்பினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கனடா ஓபன்: சாய் பிரணீத் சாம்பியன்

Posted: 04 Jul 2016 12:02 PM PDT

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றார்.

குமரி விவேகானந்த கேந்திரத்தில் அன்னபூஜை

Posted: 04 Jul 2016 12:02 PM PDT

விவேகானந்தரின் 114 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி குமரி விவேகானந்த கேந்திரத்தில் 26 டன் அரிசியை மலைபோல் குவித்து திங்கள்கிழமை அன்னபூஜை நடத்தினர்.

அருமனை அருகே சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பெண்ணிடம் பணம் பறித்த 3 பேர் கைது

Posted: 04 Jul 2016 12:02 PM PDT

குமரி மாவட்டம், அருமனை அருகே சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி வீடு புகுந்து பெண்ணிடம் பணம் பறித்த மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

Posted: 04 Jul 2016 12:02 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

குமரி அரசு பழப்பண்ணையில் மாங்காய் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

Posted: 04 Jul 2016 12:01 PM PDT

கன்னியாகுமரி அரசு பழப்பண்ணையில் திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த மாங்காய் ஏலம் இரண்டாவது முறையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

நிதிப் பற்றாக்குறையால் முழுமை பெறாத வடுவூர் உள்விளையாட்டு அரங்கம்

Posted: 04 Jul 2016 12:01 PM PDT

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடுவூரில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்கம் முழுமை பெற கூடுதலாக ரூ. 2 கோடி தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

நான்குவழிச் சாலைக்காக நிலம் வழங்கியோருக்கு  சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

Posted: 04 Jul 2016 12:00 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைப்பணிக்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டோருக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு உதவ வாய்ஸ் மெசேஜ்

Posted: 04 Jul 2016 12:00 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர் ஓட்டம்:இந்திய மகளிர் தேசிய சாதனை

Posted: 04 Jul 2016 12:00 PM PDT

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்று வரும் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 4ல100 மீ. தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தேசிய சாதனை படைத்துள்ளது.

தங்கு தொழிலுக்கு அனுமதி: சின்னமுட்டம் மீனவர்கள் வலியுறுத்தல்

Posted: 04 Jul 2016 11:59 AM PDT

தங்கு தொழிலுக்கு அனுமதி வேண்டி 200-க்கும் மேற்பட்ட சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை தொழில்முடக்கம் செய்தனர்.

வங்கதேச பயங்கரவாதத் தாக்குதல்டாக்காவில் பிரம்மாண்ட அஞ்சலிக் கூட்டம்

Posted: 04 Jul 2016 11:59 AM PDT

டாக்கா உணவகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்தியப் பெண் உள்ளிட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்தும் பிரம்மாண்ட நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜூபிடரின் சுற்றுப் பாதைக்குள் நுழைகிறது நாஸா விண்கலம்

Posted: 04 Jul 2016 11:58 AM PDT

சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான ஜூபிடரின் சுற்றுப் பாதைக்குள் அமெரிக்காவின் "ஜூனோ' விண்கலம் செவ்வாய்க்கிழமை நுழைகிறது.

ஃபுகுஷிமா அணு உலை விபத்து:இயல்பு நிலைக்குத் திரும்புகிறது பசிபிக் பெருங்கடல்

Posted: 04 Jul 2016 11:57 AM PDT

ஃபுகுஷிமா அணு உலை விபத்து காரணமாக பசிபிப் பெருங்கடலில் ஏற்பட்ட அணுக் கதிர் வீச்சு குறைந்து, தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேருந்துக்கு தீ வைத்தவருக்கு மரண தண்டனை

Posted: 04 Jul 2016 11:56 AM PDT

சீனாவில் பேருந்துக்கு தீ வைத்து 18 பேர் உயிரிழக்க காரணமாக இருந்தவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™