Tamil News | Online Tamil News |
- தி.மு.க., திட்டத்தை பின்பற்ற அ.தி.மு.க.,முடிவு: சட்டசபையில் தொகுதி நலனுக்கு முன்னுரிமை
- காஷ்மீரில், 'பெல்லட்' குண்டு பயன்படுத்துவது குறித்து...சாச்சை:மத்திய பாதுகாப்பு படையினர் மீது குற்றச்சாட்டு
- புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு?:அ.தி.மு.க., உள்ளாட்சி நிர்வாகிகள் விரக்தி
- தலித்களை கவர பிரதமர் 'டிப்ஸ்'களமிறங்கும் தமிழக பா.ஜ.,
- கார்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ரத்து குஜராத் அரசு அதிரடி முடிவு
- தி.மு.க., - எம்.பி.,க்கு அடி அ.தி.மு.க., - எம்.பி., ஆவேசம்
- வீட்டில் மது வைத்திருந்தால் குடும்பத்திற்கே சிறை:அதிரடி: பீஹாரில் புதிய மது விலக்கு சட்டம் வருகிறது
- ஆந்திரா, மத்திய அரசுகள் மீது தமிழக முதல்வர் ஜெ., அதிருப்தி: பாலாறு அணை விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என கோபம்
- குரு பெயர்ச்சியையொட்டி 'பதவி பெயர்ச்சி':அதிரடிக்கு தயாராகும் தி.மு.க., தலைமை
- ‛தொண்டனின் எதிர்காலத்தை சிந்திப்பேன்' கட்சியை காப்பாற்ற விஜயகாந்த் முயற்சி
- 196 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
- தீப்பிடித்து விழுந்த காற்று பலூன்: அமெரிக்காவில் 16 பேர் உயிரிழப்பு?
| தி.மு.க., திட்டத்தை பின்பற்ற அ.தி.மு.க.,முடிவு: சட்டசபையில் தொகுதி நலனுக்கு முன்னுரிமை Posted: 30 Jul 2016 07:44 AM PDT சட்டசபையில் பேசும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வருகின்றனர்; அவர்களை பின்பற்றி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் தொகுதி பிரச்னைகளை எடுத்து வைக்க துவங்கி உள்ளனர். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த முறை, 23 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் இருந்ததால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, சட்டசபையில் பேச அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் ஆளுங்கட்சியினர், தி.மு.க., தலைவரை கிண்டலடிப்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்வதும் வாடிக்கையாக இருந்தது. இதனால், ... |
| Posted: 30 Jul 2016 08:20 AM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வன்முறை சம்பவங்களை ஒடுக்க, மத்திய பாதுகாப்பு படையினர், 'பெல்லட்' என, கூறப்படும் சிறு குண்டுகளை பயன்படுத்துகின்றனர். அதனால், கிளாச்சியாளர்கள் அடக்கப்பட்டனரா, இல்லையா என்பதை விட, பெல்லட் குண்டுகளின் பயன்பாடு குறித்து, தேசிய அளவில் சர்ச்சையும், விவாதமும் எழுந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானியை, பாதுகாப்பு படையினர், சமீபத்தில் சுட்டு கொன்றனர். இதையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை ... |
| புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு?:அ.தி.மு.க., உள்ளாட்சி நிர்வாகிகள் விரக்தி Posted: 30 Jul 2016 08:29 AM PDT கட்சிக்கு புதியவர்களாக இருந்தாலும் பரவாயில்லை; உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியானவர்களை அடையாளம் காட்டுமாறு, உளவுத் துறைக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், உள்ளாட்சி பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும், அ.தி.மு.க.,வினர், தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். செல்வாக்கு:'வரும் அக்டோபரில், தமிழக உள்ளாட்சி தேர்தல் நடக்கும்' என, தமிழக நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே உள்ளாட்சி ... |
| தலித்களை கவர பிரதமர் 'டிப்ஸ்'களமிறங்கும் தமிழக பா.ஜ., Posted: 30 Jul 2016 08:31 AM PDT தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வரும் தலித் மக்களை, பா.ஜ., பக்கம் கொண்டு வர, பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, 'டிப்ஸ்' கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. மோடியை சந்திக்க விரும்பி, 'அப்பாயின்மென்ட்' கேட்கும் தமிழகத் தலைவர்கள் பலருக்கும் அவ்வப்போது, 'அப்பாயின்மென்ட்' கொடுத்து, அவர்களிடம், தமிழகத்தில் பா.ஜ.,வை வேகமாக வளர்த்தெடுப்பது குறித்து, நிறைய விஷயங்களை ஆலோசிக்கிறார். சிலரிடம், தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்ப்பதற்கு, தான் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் குறித்து சொல்லி, அதை செயல்படுத்த வலியுறுத்துகிறார். சமீபத்தில், தமிழகத்தில் இருந்து ... |
| கார்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ரத்து குஜராத் அரசு அதிரடி முடிவு Posted: 30 Jul 2016 09:48 AM PDT ஆமதாபாத்: குஜராத் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், கார் மற்றும் சிறிய வாகனங்களுக்கான கட்டணம், ஆக., 15ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. குஜராத்தில், முதல்வர் ஆனந்தி பென் படேல் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள வல்சாத் பகுதியில் நடந்த விழாவில், முதல்வர் ஆனந்தி பென் படேல் பேசியதாவது: குஜராத் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், ஆக., 15ம் தேதி முதல், பைக், கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் எதுவும், சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டாம். கனரக வாகனங்கள் மற்றும் வர்த்தக ரீதியில் இயக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே, சுங்கச்சாவடி ... |
| தி.மு.க., - எம்.பி.,க்கு அடி அ.தி.மு.க., - எம்.பி., ஆவேசம் Posted: 30 Jul 2016 10:28 AM PDT புதுடில்லி:டில்லி விமான நிலையத்தில், அ.தி.மு.க., -- எம்.பி., சசிகலா புஷ்பாவும், தி.மு,க., - எம்.பி., திருச்சி சிவாவும், மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா. அவர், டில்லியில் இருந்து, சென்னை செல்வதற்காக, 'ஜெட் ஏர்வேஸ்' விமானத்தில், டிக்கெட் வாங்கி இருந்தார். டில்லி விமான நிலையத்திற்கு வந்த அவர், அதே விமானத்தில் பயணம் செய்ய, அ.தி.மு.க, ராஜ்யசபா எம்.பி.,சசிகலா புஷ்பாவும் டிக் கெட் வாங்கி இருந்ததை தெரிந்து கொண்டார்.அதே விமானத்தில் பயணம் செய்வதை தவிர்க்க விரும்பிய அவர், விமானத்தில் ஏறாமல், ... |
| வீட்டில் மது வைத்திருந்தால் குடும்பத்திற்கே சிறை:அதிரடி: பீஹாரில் புதிய மது விலக்கு சட்டம் வருகிறது Posted: 30 Jul 2016 10:47 AM PDT பாட்னா:பீஹார் மாநிலத்தில் மது விலக்கு அமல் சட்டத்தில், முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி, ஒரு வீட்டில் மது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வீட்டில் உள்ள, ௧௮ வயது நிரம்பிய அனைவரையும் சிறையில் தள்ள முடியும்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, கடந்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடந்த போது, 'ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும்' என, நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்தார்; அதன்படி, ஏப்ரலில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், ... |
| Posted: 30 Jul 2016 11:03 AM PDT சென்னை:பாலாறு விவகாரத்தில், அனுமதியின்றி தடுப்பணைகள் கட்டியதை எதிர்த்து, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியும்; ஆந்திராவுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, மத்திய அரசை வற்புறுத்தியும் பலனில்லாமல் போனதால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக, எதிர்க்கட்சிகளுக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று, நீண்ட விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது குறை கூறி, எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்பியதால் கோபமடைந்து, அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டிய நிலைக்கு நேற்று அவர் தள்ளப்பட்டார். அதன் விபரம்:கடந்த, 1892ம் ... |
| குரு பெயர்ச்சியையொட்டி 'பதவி பெயர்ச்சி':அதிரடிக்கு தயாராகும் தி.மு.க., தலைமை Posted: 30 Jul 2016 12:14 PM PDT சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணமான, நுாற்றுக்கணக்கான தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளின் பதவியை பறித்து, அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க, கட்சி தலைமை தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்விக்கான காரணத்தை கண்டறிய, கட்சியின் தலைமை, மாவட்டம் தோறும், விசாரணைக் குழுவை அனுப்பி வைத்தது. அக்குழு தொகுதிதோறும் விசாரித்து, தன் அறிக்கையை கொடுத்துள்ளது.அந்த அறிக்கையில் உள் குத்து, வேட்பாளர்களுக்கு துரோகம், கட்சி பணத்தை தேர்தலுக்கு செலவு செய்யாதது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ... |
| ‛தொண்டனின் எதிர்காலத்தை சிந்திப்பேன்' கட்சியை காப்பாற்ற விஜயகாந்த் முயற்சி Posted: 30 Jul 2016 12:29 PM PDT 'இனி, கடைசி தொண்டனின் எதிர்காலம் வரை சிந்தித்து, கட்சியை நடத்துவது என் பொறுப்பு' என, தன்னை சந்திக்க வரும் கட்சியினரிடம், விஜயகாந்த் உருக்கமாக பேசி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணியில் இணைந்து, 104 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதோடு, கட்சி தலைவர் விஜயகாந்தே, 'டிபாசிட்' இழந்தார்.இதனால், அதிருப்தியடைந்த பலரும், மாற்று முகாம் தேடி ஓடினர். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், இடம் பெயர்ந்து விட்டாலும், மற்றவர்கள், விஜயகாந்தை நம்பியே உள்ளனர்.இப்படி ... |
| 196 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் Posted: 30 Jul 2016 01:06 PM PDT கிங்ஸ்டன்: இந்தியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்துவீசிய இந்திய அணியின் பவுலர் அஸ்வின் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்சில் 52.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் ஜெர்மைன் பிளாக்வுட் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். ... |
| தீப்பிடித்து விழுந்த காற்று பலூன்: அமெரிக்காவில் 16 பேர் உயிரிழப்பு? Posted: 30 Jul 2016 03:18 PM PDT டெக்சாஸ்:அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டின் நகரத்தின்தென் பகுதியில் 16 பேருடன் வானில் பறந்த சூடான காற்று பலூன், தீடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. ஆஸ்டன் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் அருகே உயர் சக்தி மின் கம்பிகள் உள்ள விவசாய நிலம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.காற்று பலூன் விபத்துக்குள்ளானதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட தகவலில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 31,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |