ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு)
- 196 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
- ஒடிசாவில் மின்னல் தாக்கி 30 பேர் பலி; 36 பேர் காயம்
- தீப்பிடித்து விழுந்த காற்று பலூன்: அமெரிக்காவில் 16 பேர் உயிரிழப்பு?
- திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்
- கடவுள் மாற்றமோ ....!
- உதவி வேண்டும் - கைபேசியில் ஈகரை பார்க்க படிக்க எழுத
- என் வெட்கம்
- கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்
- அதிர்ச்சியளிக்கும் செய்தி: ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3 ஆயிரத்தை தாண்டியது
- இந்த வாழ்க்கை
- நான் யார் என்னை பற்றி
- மதியார் காதலை நினையாதே?
- நீயோ நீயோ ...!
- நெய்வேலியில் சூரிய சக்தி மின் நிலையத்துக்கு அடிக்கல்
- சிகரங்களை நோக்கி-வைரமுத்து பதிவிறக்க
- சுற்றுலா வளர்ச்சியில் சிறந்த மாநிலம்: மத்திய பிரதேசத்துக்கு தேசிய சுற்றுலா விருது
- நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்
- கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் மரணம்
- மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு
- அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க
- தொலைதூர விண்வெளி பயணம் மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு 5 மடங்கு அதிகம்
- மாயமான விமானத்தைத் தேட வருகிறது”சமுத்திர ரத்னாகர்’ ஆய்வுக் கப்பல்
- மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை
| அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு) Posted: 30 Jul 2016 04:13 PM PDT - - - நன்றி- தினமலர் |
| 196 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் Posted: 30 Jul 2016 04:07 PM PDT கிங்ஸ்டன்: இந்தியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்துவீசிய இந்திய அணியின் பவுலர் அஸ்வின் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்சில் 52.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்களில் ... |
| ஒடிசாவில் மின்னல் தாக்கி 30 பேர் பலி; 36 பேர் காயம் Posted: 30 Jul 2016 04:06 PM PDT புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 30 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிசாவில் பருவமழை தீவரமடைந்துள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒடிசாவின் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,ஆயிரம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் ... |
| தீப்பிடித்து விழுந்த காற்று பலூன்: அமெரிக்காவில் 16 பேர் உயிரிழப்பு? Posted: 30 Jul 2016 04:03 PM PDT டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டின் நகரத்தின்தென் பகுதியில் 16 பேருடன் வானில் பறந்த சூடான காற்று பலூன், தீடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. ஆஸ்டன் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் அருகே உயர் சக்தி மின் கம்பிகள் உள்ள விவசாய நிலம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காற்று பலூன் விபத்துக்குள்ளானதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. - ------------------------------- தினமலர் |
| திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல் Posted: 30 Jul 2016 03:49 PM PDT தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குறித்து தவறாகப் பேசியதால், திமுக எம்பி., திருச்சி சிவாவை அறைந்தேன் என்று, அதிமுக எம்பி., சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடை பெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் தமிழக எம்.பி.,க்கள் திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் தமிழகம் திரும்ப தில்லி விமான நிலையம் இன்று வந்துள்ளனர். அப்போது திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ... |
| Posted: 30 Jul 2016 02:48 PM PDT சரும மாற்றம் உருவ மாற்றம் கண்ட பொழுதிலும் காதல் மாற்றம் மட்டும் கடுகளவு கூட மாறவில்லையே ஏன் ....? இதற்கு பெயர் தான் கடவுள் மாற்றமோ ....! |
| உதவி வேண்டும் - கைபேசியில் ஈகரை பார்க்க படிக்க எழுத Posted: 30 Jul 2016 12:16 PM PDT கைபேசியில்(ஐபோன்) ஈகரை பார்ப்பது சற்று கடினமாக இருக்கிறது. பதில் அளிக்கும்பொழுது மேற்கோள் செய்ய முடியவில்லை, விருப்பம் தெரிவிக்க முடியவில்லை . Web Format க்கு திரும்ப செல்லும் வழி இருக்கிறதா? Chrome மற்றும் Safari யில் முயற்சி செய்தேன். |
| Posted: 30 Jul 2016 10:40 AM PDT - ஒரு மரத்திற்கு அது விட்டிருக்கும் இலைகளின் எண்ணிக்கை தெரியுமா? - வானம் என்ற கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் அபிலாஷை அதற்கு உண்டா? - மழை பெய்யும்போது என்ன நினைக்கிறது அது? தன் குழந்தைகளைப் பறிக்கும் கரங்களைப் பற்றி அதன் அபிப்பிராயம் என்ன? நிலாக் காய்வதில் அதற்கு சந்தோஷம் உண்டா? பறவைகளுக்கு என்ன சம்மதங்கள் அது அளித்திருக்கிறது? - எனக்குத் தெரியவில்லை வெட்கமாக இருக்கிறது எனக்கு - ---------------------------------- -சுந்தர ராமசாமி யாரோ ஒருவனுக்காக - கவிதை தொகுப்பிலிருந்து |
| கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள் Posted: 30 Jul 2016 10:40 AM PDT - கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் : – 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். 4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் ... |
| அதிர்ச்சியளிக்கும் செய்தி: ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3 ஆயிரத்தை தாண்டியது Posted: 30 Jul 2016 10:37 AM PDT - சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.43 உயர்ந்து, ரூ.3,004க்கு விற்பனை செய்யப்படுகிறது. சனிக்கிழமை காலை வர்த்தகத்தின் போது, 22 கேரட் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.344 உயர்ந்து, ரூ.24,040க்கு விற்பனையானது. 24 கேரட் தங்கம் விலை ரூ.46 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,214க்கும் விற்கப்படுகிறது. தங்கத்தைன் போல வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.52.40க்கும், 10 கிலோ வெள்ளி விலை ரூ.590 உயர்ந்து ... |
| Posted: 30 Jul 2016 10:35 AM PDT - – இந்த நிமிஷம் வரையிலும் இருந்தது போல் இனி என் வாழ்க்கை இராது என ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன் என்ன பயன்? என்னை நான் இகழ்ந்து கொண்டதைத் தவிர – நான் என் காலை வைக்க வேண்டிய படி எது? நான் குலுக்க வேண்டிய கை நான் அணைக்க வேண்டிய தோள் நான் படிக்க வேண்டிய நூல் நான் பணியாற்ற வேண்டிய இடம் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை – இப்படி இருக்கிறது வாழ்க்கை – ———————————— -சுந்தர ராமசாமி யாரோ ஒருவனுக்காக – கவிதை தொகுப்பிலிருந்து படம் – இணையம் |
| Posted: 30 Jul 2016 10:30 AM PDT பெயர்: ஹா.இக்தித்தார் அஹம்மது சொந்த ஊர்: தேரிழந்தூர்( கம்பர் பிறந்த ஊர் ) ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கல்வியை பற்றிய முக்கியத்துவ பதிப்பை தேடும்பொழுது ஈகரை பற்றி அறிந்தேன் பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது , கவிதை எழுதுவது , உடற்பயிற்சி , தற்காப்புக்கலை, தொழில்: இப்போதைக்கு பொது சேவகன் மற்றும் விவசாயம் பிற்காலத்தில் மக்களின் ஊழியன் (upsc) மேலும் என்னைப் பற்றி: அதிகமாக அதை பற்றி தான் ஓவ்வெருநாளும் அறிந்துகொன்டே இருக்கிரேன் தெரிந்ததும் கூறுகிறேன் |
| Posted: 30 Jul 2016 10:24 AM PDT நீ என்னை தூக்கி எறிந்துவிட்ட போதும் அவ்வப்போது தூக்கி நிறுத்தும் நினைவுகளுக்கு என்ன தெரியும் மதியார் காதலை நினையாதே என்று ...! |
| Posted: 30 Jul 2016 10:19 AM PDT மல்லியும் கனகாம்பரமும் சேர்ந்து மனக்கையில் முகர்ந்து பார்த்து கூச்சலிட்டேன் முத்தமிட்டது நீயோ என்று உரசும் மஞ்சள் தான் அரச்சு உஷ்ணம் தனை நான் மறக்க உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம் வருடிவிட்ட தென்றலாய் புல்லரிக்க வைத்தது நீயோ என்று ஏழு கடல் தாண்டி எல்லை மீறாது நினைவுகளை தட்டியெழுப்பி விட்டு செல்லும் செல்போன் சிணுங்களின் மூலம் ஏமாற்றி போனது நீயோ என்று இன்று வரை நீயோ நீயோ என்று எனக்கான ஏக்கங்கள் குறைந்து கொண்டே போனாலும் உனக்கான வாசிப்புகள் அதிகரித்துக் ... |
| நெய்வேலியில் சூரிய சக்தி மின் நிலையத்துக்கு அடிக்கல் Posted: 30 Jul 2016 09:03 AM PDT - நெய்வேலியில் சூரிய சக்தி மின்நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற என்எல்சி இயக்குநர்கள் (வலமிருந்து இடம்) செல்வக்குமார், சுபீர்தாஸ், ராக்கேஷ்குமார் மற்றும் ஊழியர்கள். ————- நெய்வேலியில் சூரிய சக்தி மின்நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி என்எல்சி நிறுவனம், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையை விரிவுபடுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம், நெய்வேலி, ... |
| சிகரங்களை நோக்கி-வைரமுத்து பதிவிறக்க Posted: 30 Jul 2016 08:50 AM PDT வணக்கம் நண்பர்களே வைரமுத்து வின் சிகரங்களை நோக்கி புத்தகம் மின் நூலாக " தமிழில் இது ஒரு படைப்பற்று இது ஒரு தமிழ் படைப்பு " - வைரமுத்து இணைப்பு இரண்டு நாள் மட்டும் செயல்படும் சிகரங்களை நோக்கி பதிவிறக்க |
| சுற்றுலா வளர்ச்சியில் சிறந்த மாநிலம்: மத்திய பிரதேசத்துக்கு தேசிய சுற்றுலா விருது Posted: 30 Jul 2016 08:23 AM PDT புதுடெல்லி: பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் பல்வேறு பிரிவுகளில் மத்திய சுற்றுலாத்துறை சார்பில் தேசிய சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2014-2015ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் டெல்லியில் வழங்கப்பட்டன. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இதில், சுற்றுலாத் துறையில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தியதில் சிறந்த மாநிலமாக மத்திய பிரதேசம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த பிரிவில் ... |
| நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Posted: 30 Jul 2016 07:36 AM PDT பெங்களூரு, கோவா, மராட்டியம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஓடும் மகதாயி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகள் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடக மனு தள்ளுபடி இந்தநிலையில் பெலகாவி, தார்வார், கதக், பாகல்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக மகதாயி நதியில் இருந்து கலசா–பண்டூரி கால்வாய் திட்டம் மூலம் மல்லபிரபா நதிக்கு 7.56 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு வர அனுமதி வழங்க கோரி நடுவர் மன்றத்தில் ... |
| கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் மரணம் Posted: 30 Jul 2016 06:51 AM PDT - பிரஸல்ஸ்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் (40) பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரில் இன்று மரணம் அடைந்தார். பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் தனது 4 நண்பர்களுடன் பெல்ஜியத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பெல்ஜியத்தில் உள்ள ... |
| மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு Posted: 30 Jul 2016 06:49 AM PDT நண்பர்களுக்கு வணக்கம். நம்மிடம் உள்ள நூல்களை நாம் மின்நூல்களாக செய்து வைத்துக் கொள்வதில் ஒரு வசதி என்னவென்றால். நாம் வாங்கும் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பேப்பர்கள் வண்ணம் மாறி, கரையான் அரித்து, பைண்டிங் சிதைந்து படிக்க முடியாமல் போய்விடும். எப்போதும் கிடைக்கும் நூல்கள் என்றால் பரவாயில்லை. சில அரிதான நூல்கள் திரும்பக்கிடைக்காது என்பதால். அவற்றை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தோ..அல்லது கேமரா மூலம் புகைப்படமாக எடுத்தோ..புத்தகத்தை பிடிஎப் முறையில் மாற்றி மின்நூல்களாக சேமித்து வைத்துக்கொண்டால்.அதற்கு ... |
| அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Posted: 30 Jul 2016 06:28 AM PDT அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம். அயல் மாநிலங்களில் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமிழ்ச் சங்கங்கள் அமைத்துத், தமிழ் வளர்ச்சிக்காக இயங்கி வருவது அறிந்தபோது மகிழ்வாக இருக்கிறது. அயல் மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ் படிப்பது என்பது வினாக்குறியாகவே இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய இழப்பே. நான் ஆசிரியர்பயிற்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணி செய்ததோடு, தமிழக அரசின் பாடத்திட்டங்களில் இயங்கியதில் பெற்ற பட்டறிவைக் கொண்டு மிக எளிமையாக நம் தமிழ் மக்கள் தமிழ் படிப்பதற்கான 32 ... |
| தொலைதூர விண்வெளி பயணம் மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு 5 மடங்கு அதிகம் Posted: 29 Jul 2016 11:30 PM PDT - நியூயார்க், கடந்த 1968-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டுவரை அமெரிக்கா நாசாவின் அப்பல்லோ விண்கலம் மூலம் சந்திரன் உள்ளிட்ட தொலை தூர விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது. 24 வீரர்கள் அதன் மூலம் விண்வெளி பயணம் சென்று வந்தனர். விண் வெளியின் வெகு தொலைவில் காணப்படும் கதிர் வீச்சுகள் மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக் கழக பேராசிரியர் மைக்கேல் டெல்ப் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அப்பல்லோ விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்று வந்த வீரர்கள் ... |
| மாயமான விமானத்தைத் தேட வருகிறது”சமுத்திர ரத்னாகர்’ ஆய்வுக் கப்பல் Posted: 29 Jul 2016 08:46 PM PDT - சென்னை அருகே மாயமான விமானத்தைத் தேடுவதற்கு மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறையின் "சமுத்திர ரத்னாகர்' கப்பல் ஒரு சில நாள்களில் வர உள்ளது. இதுகுறித்த விவரம்: சென்னை அருகே கடந்த 22ஆம் தேதி மாயமான ஏ.என்.32 வகை விமானத்தைத் தேடும் பணியில் கடந்த ஒரு வாரமாக எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் விமானத்தைத் தேடும் பணியில், மத்திய அரசின் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ஆராய்ச்சிக் கப்பல் சாகர்நிதியை விரைவில் ஈடுபடுத்தப்பட திட்டமிடப் பட்டுள்ளது. புவியியல் ... |
| மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Posted: 29 Jul 2016 08:42 PM PDT நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மரண தண்டனையை ஒழிப்பதற்கு அரசு விரும்பவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் வெள்ளிக்கிழமை பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், "குற்றங்களின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |